கயிறு (Kayiru) – நூல் அறிமுகம்
கயிறு (Kayiru) என்ற சிறார் நூலினை எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணன் (Vishnupuram Saravanan) எழுதியுள்ளார். இந்நூலின் தலைப்புகளை சமீப காலமாக கயிறு புத்தகத்தை குறித்து நிறையத் தோழர்கள் எழுதுவதையும், பேசுவதையும் பார்க்க முடிந்தது. நெல்லை 8வது புத்தகத்திருவிழாவில் ஐந்து ரூபாய்க்கு இதை வாங்கினேன்.
இந்தப் புத்தகத்தின் முன்னுரையாக தந்தை பெரியார் எழுதிய வரிகளோடு இணைத்து செல்கிறது. எதையும் மனிதன் சுகந்திரமாக, ஆழ்ந்த சிந்தனையோடு அறிவியல் பூர்வமாக செய்ய வேண்டும். அப்போதுதான் மனிதன் அடுத்தகட்டதிற்கு நகர்ந்து செல்ல முடியும் என்று கருத்துகளை முன்வைத்து இந்தப் புத்தகம் துவங்குகிறது.
ஏன்?…எதற்கு.. என்று கேள்விகளோடு இருக்கும் புத்தகமாக விளங்குகிறது. கிராமங்களில் சிறுவயதில் நான் வாழ்ந்தபோது என்னுடைய நிகழ்வுகளை கண்முன் நிறுத்தியதாக இந்தப் புத்தகத்தின் வரிகள் நான் பார்க்கிறேன். அப்படி என்ன? என்று தோன்றலாம்.
பொதுவாக வீடுகளில் பண்டிகை காலங்களில் வாசல்படிகளில் கைகளால் மஞ்சள் பூசும் வழக்கம் இருந்தது. அதன்பிறகு மஞ்சள் பொடியை தண்ணீரில் கலக்கி வாசல் முன்பகுதியில் தெளித்துவிட்டு செல்வதும் வழக்கமாக இருந்தது. வீட்டின் வாசல் பகுதியில் மண் இல்லாமல் தட்டையாக இருக்க சாணம் தினமும் தெளித்து வருவதும் கிராமத்தில் நடந்ததை என்னால் புத்தகத்தில் உணர முடிந்தது.
திங்கள்கிழமை தொடங்கிய உரையாடல்கள் வெள்ளிக்கிழமை முடிகிறது. பள்ளிக் செல்லும் காலங்களில் சனிக்கிழமை எப்போது வரும் என்று காத்திருக்கும் காலங்கள் இருக்கும். ஆனால் இந்தப் புத்தகத்தில் ஒரு வாரத்தில் நடந்த நிகழ்வுகளை தொகுத்து எழுத்தாளர் எளிமையாக சிறுவர்களும் புரியும் அளவிற்கு எளிதாக எழுதியுள்ளார்.
“அம்மா… இங்கே பாரேன் .. சூப்பரா இருக்கு..” என்று வீட்டிற்குள் செல்லும் செழியன் மகிழ்ச்சியோடு அம்மாவிடம் சொல்லிக்கொண்டிருந்தான். அரசுப்பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் செழியன் கைகளில் மஞ்சள் கயிறு (Kayiru) ஒன்று கட்டிருந்தது.
அது எப்படி செழியன் கைகளில் வந்தது?
எதற்காக வந்தது?
செழியன் ஏன் கட்டிருந்தான்?
என்ற நிறைய கேள்விகளுக்கு பதில்தான் இந்தப் புத்தகத்தில் இருக்கும் கயிறு (Kayiru) என்ற சிறார் கதையாக அமைந்திருக்கிறது.
செழியனும், அம்பேத்துக்கும் தோழர்களாக வகுப்பில் படிக்கும்போது அங்கு எந்த பிரிவினையும் இல்லை. ஆனால் அவர்கள் சமூகத்தோடு பொதுவெளியில் செல்லும்போது சாதிய பாகுபாடுகள் மற்றவர்களிடம் இருந்து வரத்தான் செய்கிறது என்று எழுத்தாளர் நேரடியாக புத்தகத்தில் எடுத்துரைக்கிறார்..
தோழமை என்ற உணர்வு மனிதனின் மிகப்பெரிய சக்தியாக நான் பார்க்கிறேன். ஒடுக்கப்படும் மக்கள் எங்கு இருந்தாலும் அவர்களுக்காக போராட ஒரு தோழர் இருக்கதான் செய்வார். அதுபோல் அம்பேத்துக்காக தோழர் செழியன் என்ன செய்தார்? என்பதுதான் கதையின் முடிவாக இருக்கும்.
செழியன் செய்த விஷியத்தை பெருமையோடு நினைத்துக்கொண்ட அம்மா நெற்றில் அன்போடு ஒரு முத்தம் கொடுத்தது மிகவும் சிறப்பு. செழியனுக்கு ஒரு குலோம் ஜாமுன் காத்திருந்து கூடுதல் மகிழ்ச்சியோடு இனிப்பான முடிவாக நிறைவாக அமைந்தது.
ஒரு சில புத்தகத்தை வாசிக்கும்போது சில கருத்துகள் ஆழமான பேசிக்கொண்டு செல்வதுபோல் உணர்வு கிடைக்கும். இந்தப் புத்தகமும் எனக்கு அப்படி கிடைத்தது. இது சிறார் புத்தகமாக நான் பார்க்கவில்லை. ஒவ்வொரு மனிதனும் கடந்து வந்த வாழ்க்கையின் வரலாறுகளையும், பாகுபாடுகளையும் நினைவுப்படுத்தும் புத்தகமாக இருக்கிறது.
சென்னை புத்தகக் கண்காட்சியில் இலவசமாக கொடுத்ததாக தொலைக்காட்சியில் சொல்லும்போது எனக்கு பெரிதாக தெரியவில்லை. ஆனால் இப்போது படித்த பிறகுதான் புரிகிறது, இந்தப் புத்தகத்தில் முக்கியத்துவம்.
எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணன் (Vishnupuram Saravanan) அவர்களின் முற்போக்கான எழுத்திற்கு செவ்வணக்கம்.
நூலின் தகவல்கள் :
நூல் : கயிறு (Kayiru)
ஆசிரியர் : விஷ்ணுபுரம் சரவணன் (Vishnupuram Saravanan)
விலை – 5
பக்கம் – 15
வெளியீடு : ஓங்கில் கூட்டம் – பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு : 044 24332424
நூல் அறிமுகம் எழுதியவர் :
சு.வினோத்குமார்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.