கூலி உழைப்பும் மூலதனமும். காரல்மார்க்ஸ். – ஏ.பகலவன்

கூலி உழைப்பும் மூலதனமும். காரல்மார்க்ஸ். – ஏ.பகலவன்

 

இதில் கூலி என்ற பகுதியை மட்டுமே சுருக்கமாக பதிவு செய்ய முயன்றுளேன். இதிலிருந்து மூலதனம் எப்படி உருவாகிறது என்ற பகுதிக்கு சென்றால் பதிவு மிக நீண்டு விடும். அத்தோடு கனதியான பகுதியாக இருப்பதால் மூலதனம் என்ற பகுதியை மறு பதிவில் கற்றுக்கொள்வோம்.

இந்த நூலானது மார்க்சின் மூலதனம் நூல் படிப்பதற்கு பெரும் உதவியாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டியதில்லை. இதில் கூலி எப்படி உருவாகி மூலதனம் ஆகிறது என்பதை மிகச்சிறந்த முறையிலும் சுருக்கமாகவும் எல்லோருக்கும் புரியும் விதமான முறையில் மிக எளிமையாகவும் மார்க்ஸ் விளக்கியுள்ளார் என்று கருதுகிறேன். இந்த நூலில் மகா ஆசான் மார்க்சின் நண்பர் எங்கெல்ஸ் சிறப்பான முன்னுரை கொடுத்துள்ளார். அதிலிருந்தும் சில கருத்துகளை இங்கே எடுதாள்வோமாக.

பண்டத்தின் மதிப்பு அதன் உற்பத்திச் செலவுக்குச் சமமானது. ஆனால் உழைப்பின் உற்பத்திச் செலவு என்பது என்ன?

இந்தக் கேள்விக்குப் பதிலளிக்கும் பொருட்டு பொருளியலாளர்கள் தர்க்கவாதத்துக்குக் கொஞ்சம் புறம்பாய்ச் சென்று மோசடி புரிய வேண்டியிருக்கிறது. துரதிருஷ்டவசமாய் உழைப்பின் உற்பத்திச் செலவைக் கணக்கிட முடியவில்லை, ஆகவே அவர்கள் அதற்குப் பதிலாய்த் தொழிலாளியின் உற்பத்திச் செலவை ஆராய முற்படுகின்றனர்.

இதைக் கணக்கிட்டுக் கூறிவிட முடியும். இது காலத்துக்கும் சூழ்நிலைக்கும் ஏற்ப மாறுபடுகிறது, ஆனால் சமுதாயத்தின் குறிப்பிட்ட ஒரு நிலையில், குறிப்பிட்ட ஒரு பிரதேசத்தில், குறிப்பிட்ட பொருளுற்பத்திக் கிளையில் இதுவும் ஓரளவு குறுகிய வரம்புக் களுக்குள்ளாகவேனும் குறிப்பிட்டுக் கூறக் கூடியதாகிவிடுகிறது.

இன்று நாம் முதலாளித்துவப் பொருளுற்பத்தியின் ஆதிக்கத்தில் இருந்து வருகிறோம். இதில் மக்களில் மேலும் மேலும் அதிகரித்து வரும் ஒரு பெரிய வர்க்கமானது கூலியைப் பெற்றுக்கொண்டு, உற்பத்திச் சாதனங்களது உடைமையாளர்களுக்காக – அதாவது கருவிகள், இயந்திரங்கள், மூலப் பொருள்கள், பிழைப்புச் சாதனங்கள் ஆகிய வற்றின் உடைமையாளர்களுக்காக – வேலை செய்தால் மட்டுமே வாழ முடிகிறது.

இந்த உற்பத்தி முறையின் அடிப்படையில் தொழிலாளியின் உற்பத்திச்செலவானது. அவரை வேலை செய்யக் கூடியவராக்கு வதற்கும், வேலை செய்யும்படியான நிலையில் – மற்றும் முதிய வயது, நோய், அல்லது மரணம் காரணமாய் நீங்கிய பின் அவர் இடத்தில் ஒரு புதிய தொழிலாளியைப் பெறு அதாவது போதுமான எண்ணிக்கையில் தொழிலாளி குறிக்கோள் வர்ர்க்கப் போரட்டத்திலிருந்து தூர விலகி இருப்பதாய் தோன்றிய போதிலும் புரட்சிகரத் தொழிலாளி வர்க்கம் வெற்றிவாகை சூடாதவரை தோல்வியுறச் செய்யும் என்றும் சமூகத் சீர்திருத்தம் ஒவ்வொன்றும் பாடாளிவர்க்க புரட்சியும் பிரபுத்துவ எதிர்புரட்சியும் உலகப்ப்போர் ஒன்று நடத்தாதவரை பகற்கனவாகவே இருக்கும்.

முதலில் கூலி பற்றி மார்க்ஸ் திரும்பத்திரும்ப தனது எல்லா நூல்களிலும் ஒருவிடயத்தை கூறிவருகிறார். முதலாளித்துவ சமூக பொருளாதார அரசியலை புரிந்துகொள்ள இது மிக அவசியமானது.அதாவது கூலி என்பது என்ன­? அது நிர்ணயிக்கப்படுவது எப்படி?
தொழிலாளர்களிடம் “உங்களுக்குக் கிடைக்கும் கூலி எவ்வளவு கேட்டால், “என்னுடைய முதலாளியிடமிருந்து எனக்கு நாள் ஒன்றுக்கு ஒரு மார்க் கிடைக்கிறது” என்பார் ஒருவர்; “எனக்கு இரண்டு பார்க் கிடைக்கிறது” என்பார் வேறொருவர்; இப்படிப் பலரும் பல விதமாய்ப் பதில் கூறுவர்.
அவரவரும் ஈடுபட்டிருக்கும் வெவ்வேறு தொழில்களுக்கு ஏற்ப, வெவ்வேறு தொகைகளைக் குறிப்பிடுவர் குறிப்பிட்ட அளவு வேலையைச் செய்வதற்காக – உதாரணமாய், ஒரு கஜம் துணி நெய்வதற்காக, அல்லது ஓர் அச்சுப் படிவத்துக்கு வேண்டிய அச்சுகளைக் கோப்பதற்காக – தத்தமது முதலாளிகளிடமிருந்து இத்தொகைகளைப் பெறுவதாய்ச் சொல்வர்.

Wage Labour and Capital e-bog fra Karl Marx - 1230003433256 ...

பதில்கள் பல விதமா இருப்பினும், ஒரு விஷயம் குறித்து இவர்கள் எல்லோருமே ஒத்து கொள்வார்கள் : குறிப்பிட்ட உழைப்பு நேரத்துக்காக, அல்லது உழைப்பால் உற்பத்தி செய்யப்படும் குறிப்பிட்ட அளவு பண்டத்துக்காக முதலாளி அளிக்கும் பணத் தொகையே கூலி எனப்படுவது.
எனவே முதலாளி பணம் கொடுத்து இவர்களுடைய உழைப்பை வாங்குவதாய்த் தெரிகிறது. பணத்துக்காக இவர்கள் தமது உழைப்டை விற்கின்றனர். ஆனால் இது வெளித்தோற்றமே அன்றி உண்மையல்ல உண்மையில் நடப்பது என்னவெனில், பணத்துக்காக இவர்கள் முதலாளியிடம் தமது உழைப்புச் சக்தியை விற்கின்றனர். ஒரு நாள், வாரம் மாதம் இப்படி ஒரு கால அளவுக்கு இந்த உழைப்புச் சக்தியை முதலாளி தலைக்கு வாங்குகிறார். இப்படி அதை விலைக்கு வாங்கிய பிறகு
வரை யறுக்கப்பட்ட நேரத்துக்குத் தொழிலாளர்களை வேலை செய்ய “வைப்பதன் மூலம் அவர் அதை உபயோகித்துக் கொள்கிறார் இவர்களுடைய ஆடைய உழைப்புச் சக்தியை முதலாளி எவ்வளவு தொகை ‘கொடுத்து வாங்கினாரோ அதே தொகைக்கு – உதாரணமாய் இரண்டு

மார்க்குக்கு – அவர் இரண்டு இராத்தல் சர்க்கரை வாங்கியிருக்கலாம் அல்லது வேறு எந்த ஒரு பரிவர்த்தனைப் பண்டத்திலும்.

குறிப்பிட்ட ஓர் அளவை வாங்கியிருக்கலாம். இரண்டு இராத்தல் சர்க்கரை வாங்கு வதற்காக ” அவர் கொடுத்த இரண்டு மார்க் இரண்டு இராத்தல் சர்க்கரைக்குரிய விலை ஆகும்.
பன்னிரண்டு மணி நேர உபயோகத்துக்காக உழைப்புச் சக்தியை வாங்க அவர் கொடுத்த இரண்டு மார்க்குதான் பன்னிரண்டு மணிநேர உழைப்புக்குரிய விலை ஆகும்.

ஆக, உழைப்புச் சக்தியும் சர்க்கரையைப் போன்ற ஒரு பரிவர்த்தனைப் பண்டம்தான் முன்னது கடிகாரத்தைக்கொண்டு அளக்கப்படுகிறது. பின்னது துலாக்கோலைக்கொண்டு அளக்கப்படுகிறது.

தொழிலாளர்கள் தம்மிடமுள்ள பண்டமாகிய உழைப்புச் சக்தியை முதலாளியிடமுள்ள பண்டமாகிய பணத்துக்காகப் பரிவர்த்தனை செய்து கொள்கின்றனர். இந்தப் பரிவர்த்தனை குறிப்பிட்ட ஒரு விகிதத்தில் நடந்தேறுகிறது. இவ்வளவு நேரம் உழைப்புச் சக்தியை உபயோகித்துக் கொள்வதற்காக இவ்வளவு பணம். பன்னிரண்டு மணி நேர நெசவுக்காக இரண்டு மார்க். இரண்டு மார்க் என்பது, இரண்டு மார்க்குக்கு நான் வாங்கக் கூடிய ஏனைய எல்லாப் பண்டங்களையும் குறிப்பிடுகிறது அல்லவா?  ஆகவே, உண்மையில் தொழிலாளி தமது பண்டமாகிய உழைப்புச் சக்தியை எல்லா வகையான பிற பண்டங் களுக்காகப் பரிவர்த்தனை செய்துகொள்கிறார், குறிப்பிட்ட ஒரு விகிதத்தில் பரிவர்த்தனை செய்து கொள்கிறார்.

முதலாளி அவருக்கு இரண்டு மார்க் கொடுத்ததன் மூலம், அவருடைய ஒருநாள் உழைப்புக்குப் பரிவர்த்தனையாக இந்த அளவு இறைச்சியும், இந்த அளவு துணி மணியும், இந்த அளவு எரிபொருளும், விளக்கு வெளிச்சமும், இன்ன பிறவும் தந்துள்ளார். எனவே இரண்டு மார்க் என்பது பிற பண்டங் களுக்காக உழைப்புச் சக்தி பரிவர்த்தனை செய்து கொள்ளப்படும் விகிதத்தைக் குறிக்கிறது, அதாவது தொழிலாளியினுடைய உழைப்புச் சக்தியின் பரிவர்த்தனை மதிப்பைக் குறிக்கிறது.  ஒரு பண்டத்தின் பரிவர்த்தனை மதிப்பைப் பணமாய்க் கணித்துக் கூறுவோமாயின், அதுதான் அப்பண்டத்தின் விலை எனப்படுவது. கூலி என்பது உழைப்புச் சக்தியின் விலையைக் குறிக்கும் ஒரு தனிப் பெயரேதான்; சாதாரணமாய் இது உழைப்பின் விலை என்று அழைக்கப்படுகிறது: மனித ஊனையும் இரத்தத்தையும் தவிர வேறு இருப்பிடம் இல்லாத இந்த விசேஷ வகைப் பண்டத்துக்குரிய விலைதான் இது.

யாராவது ஒரு தொழிலாளியை எடுத்துக்கொள்வோம். உதரணமாய் ஒரு நெசவாளியை எடுத்துக்கொள்வோம். முதலாளி இந்த நெசவாளிக்குத் தறியும் நூலும் தருகிறார். இவற்றை வைத்துக் கொண்டு நெசவாளி வேலை செய்கிறார், நூல் துணியாய் மாற்றப்படுகிறது. முதலாளி இந்தத் துணியின் உடைமையாளராகி அதை விற்கின்றார், இருபது மார்க்குக்கு விற்பதாய் வைத்துக் கொள்வோம் நெசவாளிக்குக் கிடைக்கும் கூலியானது துணியில், இந்த இருபது மார்கில் அவருடைய உழைப்பின் உற்பத்திப் பொருளில் ஒரு பங்கையா குறிக்கிறது? இல்லவே இல்லை. துணி விற்பனை செய்யப்படுவதற்கு நெடுங்காலத்துக்கு முன்பே, ஏன் அது நெய்து முடிக்கப்படுவதற்கு நெடுங்காலத்துக்கு முன்பே, நெசவாளி தமது கூலியைப் பெற்றுக் கொண்டுவிடுகிறார்.

Karl Marx; Wage Labour and Capital | Socialist Worker | Ireland ...

ஆகவே முதலாளி இந்தத் துணியிலிருந்து தாம் பெறப் போகும் பணத்தைக்கொண்டு இந்தக் கூலியைத் தரவில்லை, ஏற்கெனவே தம் கையிருப்பிலுள்ள பணத்தைக் கொண்டுதான் தருகிறார். எப்படித் தறியும் நூலும் முதலாளியால் நெசவாளிக்குத் தரப்பட்டவையே தவிர, நெசவாளி உற்பத்தி செய்த பொருள்கள் அல்லவோ அதேபோல தமது பண்டமாகிய உழைப்புச் சக்திக்குப் பரிவர்த்தனையாய் நெசவாளி பெற்றுக் கொள்ளும் பண்டங்களும் அவர் உற்பத்தி செய்த பொருள்கள் அல்ல.

அவருடைய முதலாளியின் துணியை வாங்குவோர் யாரும் இல்லாமற் போய், அதை விற்க முடியாமற் போகக் கூடும். இந்தத் துணியின் விற்பனையிலிருந்து கூலியின் தொகையுங்கூட முதலாளிக்குக் கிடைக்காமல் போய் விடலாம். நெசவாளியின் கூலியுடன் ஒப்பிடுகையில் மிகவும் லாப கரமாய் முதலாளி இந்தத் துணியை விற்பனை செய்வதும் சாத்தியமே. இவற்றுடன் எல்லாம் நெசவாளிக்கு எந்தச் சம்பந்தமும் இல்லை.

முதலாளி தம்மிடமுள்ள செல்வத்தில், அதாவது தமது மூலதனத்தில், ஒரு பகுதியைக் கொண்டு நெசவாளியின் உழைப்புச் சக்தியை விலைக்கு வாங்குகிறார்; மூலப் பொருளாகிய நூலையும் உழைப்புக் கருவியாகிய தறியையும் எப்படி அவர் தமது செல்வத்தில் பிறிதொரு பகுதியைக் கொண்டு வாங்கியுள்ளாரோ அதே போல நெசவாளியின் உழைப்புச் சக்தியையும் வாங்குகிறார்.

இப்படி இவை யாவற்றையும் அவர் வாங்கிய பிற்பாடு – அவர் வாங்கியவற்றுள் துணியை உற்பத்தி செய்வதற்குத் தேவையான உழைப்புச் சக்தியும் அடங்கியிருக்கிறது – தமக்குச் சொந்தமான மூலப் பொருட்களையும் உழைப்புக் கருவி களையும் கொண்டே அவர் உற்பத்தி செய்கிறார். ஏனெனில் இந்த உழைப்புக் கருவிகளில் இப்பொழுது நமது அருமை நெசவாளியும் ஒரு கருவியாய் உண்மையில் உள்ளடங்கிவிடுகிறார்.

நெசவுத் தறியைப் பாலவே நமது நெசவாளியும் உற்பத்திப் பொருளிலோ, இப் பொருளுக்குக் கிடைக்கும் விலையிலோ பங்கு ஏதும் பெறுவதில்லை. ஆக, கூலியானது தொழிலாளி உற்பத்தி செய்யும் பண்டத்தில் தொழிலாளிக்குரிய பங்கு அல்ல, ஏற்கெனவே இருந்து வரும் படங்களில் எப்பகுதியைக் கொண்டு முதலாளி உற்பத்தித் திறனுள்ள ஓர் அளவு உழைப்புச் சக்தியைத் தனக்கு வாங்கிக் கொள்கிறாரோ, அப்பகுதியே கூலியாகும்.

உழைப்புச் சக்தி என்பது இவ்விதம் அதன் உடமையாளராகிய ஒரு கூலித்தொழிலாளி, மூலதனத்துக்கு பரிவர்த்தனைப் பண்டமாகும். ஏன் அவர் இதை விற்பனை செய்கிறார் உயிர் வாழ்வதற்காக.

ஆனால் உழைப்புச் சக்தியின் பிரயோகம், அதாவது உழைப்பு, தொழிலாளியினுடைய உயிர்ச் செயற்பாடாகும், அவருடைய வாழ்வின் புலப்பாடாகும். தேவையான பிழைப்புச் சாதனங்களைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு அவர் இந்த உயிர்ச் செயற்பாட்டை வேறொருவருக்கு விற்பனை செய்கின்றார். இவ்விதம் இந்த உயிர்ச் செயற்பாடு அவருக்குத் தாம் உயிர் வாழ்வதற்கு வகை செய்யும் ஒரு சாதனமாகிவிடுகிறது. உயிர் வாழும் பொருட்டு அவர் வேலை செய்கிறார். உழைப்பை அவர் தமது வாழ்வின் ஒரு பகுதியாகக்கூட கருதுவதில்லை, வாழ்வின் தியாகமாகவே கொள்ள வேண்டியிருக்கிறது.

Wage Labour and Capital

வேறொருவருக்குரியதாய் அவர் மாற்றித் தந்துவிட்ட ஒரு பரிவர்த்தனைப் பண்டம் அது. எனவே அவருடைய செயற்பாட்டின் உற்பத்திப் பொருள் அவருடைய செயற்பாட்டின் குறிக்கோளாய் இருக்கவில்லை. அவர் தமக்காக உற்பத்தி செய்துகொள்வது அவர் நெய்யும் பட்டல்ல, சுரங்கத்திலிருந்து அவர் வெட்டியெடுக்கும் தங்கம் அல்ல, அவர் கட்டியெழுப்பும் மாளிகை அல்ல. தமக்கு அவர் உற்பத்தி செய்து கொள்வது கூலிதான், பட்டும் தங்கமும் மாளிகையும் அவருக்குக் குறிப்பிட்ட அளவுள்ள பிழைப்புச் சாதனங்களாய் – உதாரணமாய்ப் பருத்தி ஆடையும் சில செப்புக் காசுகளும் நிலவறையில் ஓர் உறை விடமுமாய் – குறுகித் தேய்ந்துவிடுகின்றன.

பன்னிரண்டு மணி நேரத்துக்கு நெய்தோ, நூற்றோ, துளைத்தோ, கடைந்தோ, கட்டடம் கட்டியோ, மண் வெட்டியோ, கல் உடைத்தோ, சுமை தூக்கியோ, வேறு வேலை செய்தோ வரும் தொழிலாளி – தமது இந்தப் பன்னிரண்டு மணி நேர நெசவு, நூற்பு, துளைப்பு, கடைசல், கட்டுமான, மண்வெட்டு அல்லது கல் உடைப்பு வேலையைத் தமது வாழ்வின் புலப்பாடாகவா, தமது வாழ்வாகவா கருதுகிறார்?

இல்லை, மாறாக இந்தச் செயற்பாடு முடிவுற்ற பிறகுதான் உண்மையில் அவருக்கு வாழ்வு ஆரம்பமாகிறது; சாப்பாட்டு மேஜையில், மது விடுதியில், படுக்கையில் ஆரம்பமாகிறது. இந்தப் பன்னிரண்டு மணி நேர உழைப்பானது நெசவு, நூற்பு, துளைப்பு முதலான வேலைகளின் வடிவில் அவருக்குச் சிறிதும் அர்த்தமற்றவையே தான்; சாப்பாட்டு மேஜைக்கு, மது விடுதிக்கு, படுக்கைக்கு அவரை அழைத்துச் செல்லும் ஊதியம் என்ற முறையில்தான் இந்த உழைப்பு அவருக்கு அர்த்தமுடையதாகிறது.

பட்டுப் புழுவானது ஒரு புழுவாய்த் தொடர்ந்து ஜீவிக்கும் பொருட்டு நூற்றுக் கொண்டிருக்குமாயின், முழுக்க முழுக்க அத ஒரு கூலித் தொழிலாளி ஆகிவிடும். உழைப்புச் சக்தி எப்பொழுதுமே இப்படி ஒரு பரிவர்த்தனைப் பண்டாய் இருந்து வரவில்லை.

உழைப்பு எப்பொழுதுமே கூலியுழைப்பாய், அதாவது, சுதந்திர உழைப்பாய் இருந்து வரவில்லை/அடிமை தனது உழைப்புச் சக்தியை அடிமையுடைமையாளரிடம் விற்கவில்லை. காளை மாடு (தனது ஊழியத்தை எப்படி விவசாயிக்கு விற்பதில்லையோ அதே போல, அடிமை, அவனுடைய உழைப்புச் சக்தியும் அடங்கலாய், அடிமை யுடைமையாளனுக்கு என்றென்றுக்குமாய் விற்கப்பட்டுவிட்டவன். அவன் ஓர் உடைமையாளனிடமிருந்து இன்னொருவனுக்குக் கை மாறிச் செல்லக்கூடிய ஒரு பரிவர்த்தனைப் பண்டம்.

அவனே ஒரு பரிவர்த்தனைப் பண்டமானவன், ஆகவே அவனுடைய உழைப்புச் சக்தி அவனுடைய பரிவர்த்தனைப் பண்டமாய் இல்லை. பண்ணையடிமை தனது உழைப்புச் சக்தியில் ஒரு பகுதியை மட்டுமே விற்பனை செய்கிறான். நிலத்தின் உடைமையாளனிடமிருந்து அவன் கூலி பெறு வதில்லை; நிலத்தின் உடைமையாளன்தான் அவனிடமிருந்து கப்பம் பெறுவதாய்ச் சொல்ல வேண்டும். பண்ணையடிமை நிலத்துடன் இணைந்திருப்பவன்; இந்த நிலத்தில் விளையும் பொருள்களை அவன் இந்நிலத்தின் உடைமையாளனிடம் ஒப்படைத்துவிடுகிறான். சுதந்திர உழைப்பாளி இவ்வாறன்றி, தன்னை விற்பனை செய்து கொள்கிறான்;

ஆம், சிறுகச் சிறுக விற்பனை செய்து கொள்கிறான். நாள் தோறும் தன் வாழ்வில் எட்டு, பத்து, பன்னிரண்டு, பதினைந்து மணி நேரத்தை அதிக விலை தருகிறவனுக்கு, மூலப் பொருள்களுக்கும் உழைப்புக் கருவிகளுக்கும் பிழைப்புச் சாதனங் களுக்கும் உடைமையாளனாய் இருப்பவனுக்கு, அதாவது முதலாளிக்கு விற்பனை செய்து கொள்கிறான்.

Study Guide for Wage Labour and Capital

தொழிலாளி எந்த ஓர் உடைமை யாளருக்கோ, நிலத்துக்கோ உரித்தாகிவிடுவதில்லை; ஆனால் தொழி லாளியின் அன்றாட வாழ்வில் எட்டு, பத்து, பன்னிரண்டு, பதினைந்து மணி நேரம் அதை விலை கொடுத்து வாங்குகிறவருக்கு உரித்தாகி விடுகின்றது. தொழிலாளி தாம் வேலை செய்து வரும் முதலாளியிட மிருந்து தாம் விரும்பும் போது விலகி வந்துவிடலாம்.

முதலாளியும் தாம் நினைக்கும்போது தொழிலாளியை வேலையிலிருந்து நீக்கிவிடலாம்; தொழிலாளியிடமிருந்து அவருக்கு லாபம் கிடைக்காமற் போனதும், அல்லது எதிர்பார்க்கப்படும் அளவுக்கு லாபம் கிடைக்காமற் போனதும் அவர் தொழிலாளியை வேலையிலிருந்து நீக்கிவிடுகிறார். ஆனால் தமது உழைப்புச் சக்தியை விற்பனை செய்வதே பிழைப்புக்கான ஒரே ஆதாரமாய்க் கொண்டிருக்கும் தொழிலாளியால், தமது பிழைப்பைத் துறந்து கொண்டுவிடாமல், வாங்குவோரின் முழு வர்க்கத்திடமிருந்தும், அதாவது முதலாளித்துவ வர்க்கத்திடமிருந்து விலகி வந்துவிட முடியாது.

தொழிலாளி உரித்தாகியிருப்பது முதலாளித்துவ வர்க்கத்துக்கே அல்லது இந்த அல்லது அந்த முதலாளிக்கல்ல. தம்மை விற்பனை செய்துகொள்வதுதான், அதாவது இந்த முதலாளித்துவ வர்க்கத் தினினுள் வாங்குவோர் ஒருவரைத் தேடிக் கொள்வதுதான் தொழி லாளிக்குரிய செயலாகும்.

-இனி, மூலதனத்துக்கும் கூலியுழைப்புக்குமுள்ள உறவை மேலும் நெருங்கிச் சென்று ஆராயுமுன், கூலியை நிர்ணயிக்கும் மிகவும் பொதுப்படையான உறவுகளைச் சுருக்கமாய் எடுத்துரைப்போம். -கலியானது மேலே நாம் கண்டது போல குறிப்பிட்ட ஒரு பரிவர்த்தனைப் பண்டத்தின், அதாவது உழைப்புச் சக்தியின் விலை ஆகும்.

ஆகவே ஏனைய ஒவ்வொரு பரிவர்த்தனைப் பண்டத்தின் விலையையும் நிர்ணயிக்கும் அதே விதிகளால்தான் கூலியும் நிர்ணயிக்கப் படுகிறது. எனவே, ஒரு பரிவர்த்தனைப் பண்டத்தின் விலை நிர்ணயிக்கப் படுவது எப்படி என்பதே இங்குள்ள கேள்வி.

ஏ.பகலவன் முகநூல் பதிவிலிருந்து…

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *