உலகெங்கிலும் பங்குச்சந்தைகள் ஊரடங்கு நீக்கப்பட்டு, மத்திய வங்கிகள்  பொருளாதாரத்துக்குள் பணத்தைக்கொட்டத்துவங்கியதும், அணிவகுத்து வருகின்றன. ஆனால் பொருளாதாரம் சீர்பட்டுக்கொண்டிருக்கவில்லை: அதற்குமாறாக, இன்னொரு பேரழிவை ஏற்படுத்தப்போகும் திடீர்த் தகர்வுக்கு,புயலுக்குமுந்தைய அமைதியைப்போல, இருக்கப் போகிறது.

உலகின் மிகப்பெரிய மத்திய வங்கிகள் இதற்கு முன் இல்லாத வகையில் எடுத்துள்ள நடவடிக்கைகளின் ஒருபகுதியாக முடுக்கிவிடப்பட்டு உலகெங்கும் உள்ள பங்குச்சந்தைகள் கடந்த சிலவாரங்களாக அணிவகுத்து வருகின்றன. அமெரிக்க ஐக்கிய நாடுகளில் S&P500 இந்த ஆண்டின் துவக்கத்தில் எந்த நிலையில் இருந்ததோ அந்தநிலைக்கு வந்துவிட்டது  இந்த அணிவகுப்பு, உலகம் முழுவதிலும் தற்போது எளிதாக்கப்பட்ட ஊரடங்குநடவடிக்கைகளோடு இணைந்து சந்தைகளின் போக்கை கவனித்துக்கொண்டிருப்போர்களிடம் பெருமளவுக்கு நல்ல நம்பிக்கைகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. துரதிர்ஷ்டவசமாக இந்தசித்திரம் எவ்வளவு இனிமையாக காணப்படுகிறதோ, அவ்வளவு இனிமையாக இல்லை.

பங்குச்சந்தைகளின் அணிவகுப்பு முதன்மையாக மத்திய வங்கிகளின் குறிப்பாக ஃபெடரல்ரிசர்வ்வங்கி,,எடுத்த நடவடிக்கைகளால் முடுக்கிவிடப்பட்டுள்ளன. ஃபெடரல் ரிசர்வ் வங்கி “QE infinity” யை- வேறு வார்த்தைகளில் சொல்வதானால், ’(மத்திய வங்கியால் புதிதாக உருவாக்கப்பட்ட பணத்தைக்கொண்டு) சொத்துக்களை வாங்குவதை, பொருளாதார சந்தைகளின் ஆபத்து கடந்துவிட்டது என்று திருப்தி அடையும் வரை, நிறுத்திக் கொள்ளாது’ என்று உறுதியளித்துள்ளது.

அதன்பிறகு, மற்ற சந்தைகளையும் ஆதரிக்கும் புதியசொத்துக்களை வாங்குவது மற்றும் பணபுழக்கம் என்ற எழுத்துச்சலுகை அங்கே இருந்துகொண்டிருக்கிறது.  வணிகத்தாள் நிதியளிக்கும் வசதி (Commercial Paper Funding Facility –CPFF)  முதன்மைச்சந்தை பெருநிறுவன கடன் வசதி,(Primary Market Corporate Credit Facliti PMCCF) இரணாடாம்நிலை பெரு நிறுவன கடன் வசதி,(Secondary Market Corporate Credit Facility –SMCCF) மூலம் ஃபெடெரேஷன்  இப்பொழுது தனியார் பெரு நிறுவணங்களின் கடன்க)ளை, அவற்றின் கடன் மதிப்பின்தன்மை பற்றி சிறிதளவு மட்டுமே கவனம் செலுத்தியும், அவற்றின் சுற்றுச்சூழல் தாக்கங்கள் பற்றியும், தொழிலாளர்களின் உரிமைகள் பதிவேடு பற்றியும் எந்தவித கவனமும் செலுத்தாமலும்  வாங்கிக்கொண்டிருக்கிறது அதேநேரத்தில் அரசு தானியங்கி சந்தைக்கான கடன்வசதியையும், மாணவர் கடன்களையும், நகராட்சி கடன் பத்திரங்களையும், சொத்துகளை அடிப்படையாகக் கொண்ட காலவரம்பு உத்தரவாதகடன் வசதி (Term Asset-BakedSecurities Loan Facility -TALF,(2008 பொருளாதார சிக்கலுக்குப்பின் முதலாவதாக பயன்படுத்தப்பட்டது) முதன்மை விநியோகிகள் கடன் வசதி(Primary Dealer Credit Facility-PCDF)   மற்றும் நடுத்தரகால கடன்வழங்கும் வசதி (Medium-term lending Facility –(MLF) ஆகியவற்றை    நிலைநிறுத்தியுள்ளது.

இந்தஒவ்வொரு திட்டத்தின் ( அவற்றில் பெரும்பாலானவை மிகவும் பரவலானவை) விவரங்களையும் புரிந்துகொள்வதைவிட மிகவும் முக்கியமானது, அவை எவற்றை குறிக்கின்றன என்பதை புரிந்துகொள்வதுதான்: அமெரிக்க ஐக்கியநாடுகள் அரசு, ஐக்கிய நாடுகளின் நுகர்வோர் , நிறுவனங்கள் மற்றும் மாநிலங்களின் கடன்களை, அவை நொடித்துப்போவதை தடுக்கவும், சொத்துக்களின் விலைகளை உயர்த்தவும் வாங்குவதில் தனதுவிருப்பத்தை காட்டுகிறது.

ஒருபக்கத்தில் இது சாதகமான ஒரு குறுகியகால நடவடிக்கைபோல காணப்படுகிறது – ஃபெடெரேஷன் தனிப்பட்ட, பெருநிறுவன, மாநில, மற்றும் நகராட்சிகள் நொடித்துப்போவது அதிகரிக்க எளிதில் அனுமதிக்கும் என்று எவரொருவரும் கருத்துதெரிவிக்கவில்லை. ஆனால் இது நவீனமுதலாளித்துவத்தின் இயல்பில் ஒரு மிகஆழ்ந்த நகர்வு என்பதை பிரதிபலிக்கிறது. அமெரிக்கஅரசு , அதன் உள்ளூர் தொழில்கள் மேலெழுந்துவருகையில்,  எவ்வளவு கடன்களை பெறுகின்றன என்பதோ, எந்த நோக்கத்துக்காக அந்தக்கடன்களை பயன்படுத்துகின்றன என்பதோ ஒரு முக்கியமான விஷயமல்ல –  சிக்கல்கள் வரும்போது அவை பிணையில் விடுவிக்கப்படும், என்று கூறுகிறது.

As another economic crisis looms, radicalism is the world's only hope

இந்த உலகெங்கிலும் மற்ற மத்தியவங்கிகளாலும்கூட அனுப்பபட்ட இந்தச்செய்தி யின் செயல்படுத்தும்தன்மை – மிகவும் ஆழமானது ஒருதொழிலை நடத்துவதில் ஆபத்துக்கள் சமூகமயமாக்கப்படுகின்றன, அதே நேரத்தில் அந்தத்தொழிலின் இலாபங்கள் தனியாரிடமே இருந்துவிடுகின்றன. நிறுவனங்கள் சுற்றுச்சுழலை மாசுபடுத்துவதில், ஊதியங்களை வெட்டிக்குறைப்பதில், இலாபத்தை குவிப்பதில் வரிகளைத் தவிர்ப்பதில் சுதந்திரமாக செயல்படுகின்றன. ஆனால் இவற்றில் ஏதேனும் எதிர்மாறாகப்போகுமானால், அவர்களால் இன்னும் அரசின் பிணையில் வெளிவந்து விடமுடியும். முதலீட்டாளர்கள் பாதுகாக்கப்படுகிறார்கள்: அதேநேரத்தில் பொதுமக்களும், இந்தப்புவிக்கோளமும் அத்ற்கான விலையைக்கொடுக்க வேண்டி யிருக்கிறது. நீண்டகாலப்போக்கில், புதிதாக உருவாக்கப்பட்ட பணத்தைக்கொண்டு சொத்துக்களை வாங்குவது (QE infinity) வீடுகள் உட்பட, சொத்துக்களின் விலைகளை உயர்த்திவிடும் – செல்வச்சமமின்மையை கிளறிவிட்டு.

உள்ளூர் பெரநிறுவனங்களை நிலை நிறுத்தவும், தனியார் சொத்துக்களைப் பாதுகாக்கவும் மத்திய வங்கிகள் எதைவேண்டுமானாலும் செய்ய விரும்புகின்றன என்பதை உணர்ந்துகொண்டதுதான் பங்குச்சந்தை அணிவகுப்பை முடுக்கி விட்டிருக்கின்றது. பணக்காரர்களும், அதிகாரம் நிறைந்தவர்களும், உண்மையான பொருளாதாரம் எவ்வளவு ஆழத்துக்கு வீழ்ந்தாலும் கவலை இல்லை: பொருளாதார சந்தைகளீ மீண்டும் மேலேகொண்டுவ்ர அரசு அங்கே இருக்கிறது என்பதை அறிந்திருக்கிறார்கள்.

இதற்கிடையில் சாதாரண நுகர்வோர் –பல சிறுதொழில்களைப்பற்றி சொல்லவேண்டி யதே இல்லை – உறைநிலையில் விடப்பட்டுள்ளார்கள். அதேநேரத்தில் வேலைகளின் எண்ணிக்கை கடந்தவாரத்தில் அமெரிக்காவில் ஆச்சரியப்படத்தக்கவகையில் சாதகமாக உள்ளது. இதுபற்றி கருத்து தெரிவிப்பவர்கள் உடனடியாக, இந்த எண்ணிக்கைகளில்  கண்கள்கூசும் ஒருதவறை கண்டுபிடித்துள்ளார்கள். : பெரும்பாலோர் வேலைவாய்ப்பின்மை, இதுவரை இல்லாத உச்சமாக, 200 இலட்சம் அளவில்- அமெரிக்க மக்கள் தொகையில் 20% அளவுக்கு உள்ளது என்பதை ஒத்துக்கொள்கிறார்கள். இங்கிலாந்தில் வேலை நியமனங்கள் தற்போது விடுப்புகால திட்டத்தால் பாதுகாக்கப்பட்டுள்ளன_ ஆனால் பெருமளவிலான இடைக்கால மதிப்பீடுகள் வேலைவாய்ப்பின்மை அதேஅளவை அடைந்துவிடும் என்று கருதுகின்றன.

சிறுதொழில்களுக்கு மான்யங்களும், கடன்களும் அளிக்கப்பட்டுள்ளன: ஆனால் இவை எப்போதும் தொடரும் என்பதைப்போல காணப்படவில்லை. மிக ஆழமான கட்டமைப்புபிரச்சனைகளின்மீது ஒட்டுசாந்தை அப்புவதைத்தவிர அதிகமாக எதையும் அவை செய்துவிடவில்லை.- கடந்த பன்னிரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக, இந்த உலகம் முழுவதிலும் பெருநிறுவனக்கடன்கள் மிகப்பெருமளவுக்கு அதிகரிப்பது நடந்துவருகிறது.

 

இந்தஆபத்து தாக்குவதற்குமுன், பலஉற்றுநோக்கர்கள் அமெரிக்க ஐக்கியநாடுகளின் பெருநிறுவனக்கடன்கள் நீர்க்குமிழிகளாக மேலெழுவதைக்கண்டார்கள்.- மேலும் இங்கிலாந்தும் இதில் தொலைவில் இல்லை. வங்கிகள் இங்கிலாந்தை, ”,மீண்டெழுவதற்கான கடன்கள்’ என்றழைக்கப்படுபவை முடிவுக்கு வரும்போது, 40% முதல் 50% வரையான நிறுவனங்கள் அவற்றை செலுத்தத்தவறிவிடும் என எச்சரித்தன.

சுருக்கமாக, பங்குச்சந்தை அணிவகுப்பு உண்மையான பொருளாதாரத்தின் கதியைப் பற்றி எதுவும் சொல்வதில்லை. ஒருபகுதியாக, உலகைச்சுற்றிலும் வீழ்ந்துவரும் சொத்துவிலைகளை நிலைநிறுத்த மத்தியவங்கிகள் எடுத்த கவனம் மிகுந்த முயற்சிகளால் அது முடுக்கிவிடபட்டது. ஆனால் ஒரு சிக்கலின் மத்தியில் பங்குச்சந்தைகள் அணிவகுப்பை காண்பது வழக்கமானதுதான்: கொள்கைகளை உருவாக்குபவர்கள் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் துணை –முதன்மை அடமானக்கடன்கள் திரும்பச்செலுத்தப்படாதது அதிகரித்துவந்தது என குறைத்துப்பேசியபோது. 2007ன் மத்தியில் பங்குச்சந்தைகள் அணிவகுத்தன,

இன்று வெடிக்கக்காத்திருக்கும் குண்டு அடமானக்கடன்கள் அல்ல: ஆனால், பெரு நிறுவனக்கடன்கள்தான். ஒருகுறிப்பிடத்தக்க பகுதி அமெரிக்க ஐக்கிய நாடுகளின் – உண்மையில் இந்த உலகத்தின்- தொழில்கள் திருப்பிச்செலுத்துவதை உடனடியாக நிறுத்திவிட்டால், ஃபெடெரேஷன்வங்கியால்கூட உலகப்பொருளாதாரம் உருகிவீழ்வதை காப்பாற்றமுடியாது. ஆனால் இதன்பொருள் அது முயற்சிக்காது என்பதல்ல.

இந்த ஆபத்து இறுதியாக ஒரு முடிவுக்குவரும்போது –அது மற்றும் ஒரு 9-12 மாதங்களை எடுத்துக்கொள்ளலாம்- அரசுகள் தங்கள் உள்ளூர் பொருளாதாரங்களில் குறிப்பிடத்தக்க சொத்துக்களின் பகுதிகளை சொந்தமாக வைத்திருக்கக்கூடும். அப்போது அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை, இந்த அதிகாரத்தைவைத்துக்கொண்டு என்ன செய்வது: அதை முந்தையநிலையிலேயே ஒன்றாக இருப்பதை துண்டுகளாக்கி பயன்படுத்துவது, அல்லது மேலும்நியாயமான, தாக்குதலின் விளைவுகளைத் தாங்கிபிடிக்கின்ற, மேலும்  நிலைத்து நிற்கின்ற பொருளாதாரமாக பயன்படுத்துவது என்பதே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *