ஒரு புகைப்படம் என்னவெல்லாம் செய்யும்
– மா.ச.இளங்கோமணி
நம் வாழும் காலத்தில் அன்றாட நடவடிக்கைகள் பல நேரம் செல்போனில் புகைப்படங்களாக வேண்டப்பட்டவர்களால் மட்டும் எடுத்து வைத்து கொள்ளப்படுகின்றது. ஒரு சிலர்கள் விசேஷ காலங்களில் வெளியே எங்கேயாவது செல்லும்போது குடும்ப அமைப்பாக புகைப்படங்கள் எடுத்து வைத்துக் கொள்வதும் உண்டு. புகைப்படங்கள் ஒரு காலத்தில் மதிப்பு மிக்கதாக இருந்த நிலையில் போட்டோ ஸ்டுடியோ கடைகள் பெரு வணிகப்பெருக்கமாக அமைப்பில் வாழ்ந்த நிலையில் இன்று அதன் சுவடுகளாக எல்லோர் வீடுகளுக்குள்ளும் வந்துவிட்டது.
எல்லோருக்குமான புகைப்படங்கள் அவர்வர் வீட்டு செல்போன்களில் ரசனை மிக்க ஸ்டோரேஜ்களாக பாதுகாக்கப்படுவதுடன். நினைத்த போது பெரு மகிழ்வுடன் கண்டு கொள்ளப்படுகின்றது. வாழ்க்கை வட்டத்துக்குள் தன்னைத்தானே எடுத்துக் கொள்ளும் புகைப்படங்கள் எத்தனை பதில்களைச் சொல்கின்றது தெரியுமா? ஒரே ஒரு புகைப்படங்கள் கூட எந்த அசைவையும் செய்யாமல் கடந்து போவதில்லை. நம்மை ஒரு நிமிடம் நிற்க வைப்பதுடன் நமது நினைவை அள்ளி எடுத்து வந்து கொட்டிவிட்டு சென்று விடுகின்றது.
புகைப்பட உளவியல்
என் புகைப்படத்தின் மேல் எனக்கு இருக்கும் ஆக்கப்பூர்வமான உணர்வு எப்போதுமே ஆராதியான பிரியத்துடன் தான் இருக்கின்றது. இது எனக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் இருக்கின்ற நிகழ்வு தான். நம் முகத்தை நாம் புகைப்படத்தில் ரசிப்பது, நாம் தான் இந்த உலகத்தின் மொத்த அழகையும் கடன் வாங்கி வந்தது போல நினைப்பதும் உள்ளது. பிறர் அழகாக தெரிந்தாலும் அந்த நிமிடங்களைக் கடந்த பின் மறந்து போவோம்.
புகைப்படங்கள் பல்வேறு உளவியலை பறைசாற்றுவதை நாம் அறிந்து கொள்வதில்லை. ஒரு சிலரும் தன்னைத்தான் ரசிக்கும் குணம் இது எல்லோருக்கும் இருக்கும், பிறரை ரசிக்கின்ற குணம், இயற்கையை ஆர்ப்பரித்து ரசிக்கின்ற குணம், கலைஞனாக வாழ்கின்ற குணம் இப்படி வெவ்வேறு நிலைகளில் ரசித்தும் கலந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
காலம் பல கோலங்கள் என்பதைப்போல பல தோற்றங்களைக் கண்டறியும் இந்த உடம்பு, அழகுக்கும் அறிவுக்கும் எப்போதும் சாப்பாடு போடுவதில்லை. உள்ளுக்குள் இருக்கும் ஆசைகள் வெளியே பொத்து விரைந்து போடுவதால் ஆசைகளில் மாட்டிக் கொண்டு தவிக்கின்றோம். சில பேரின் மெளனம் அதிர்வைத்தரும். சில பேரின் ஸ்டேட்டஸ் வாழ்க்கையாக அமையும், குறியீடுகளாகப் பேசும். இப்படியும் போட்டோ வீடியோ படங்கள் வந்த வண்ணம் தான் இருக்கின்றது .
ஒரு புகைப்படம் என்ன செய்யும் என்பதை விட காலத்தின் சாட்சியாக நின்று அறிவுறுத்தும். நாம் தினமும் பார்க்கும் கண்ணாடி ஒரு வகையில் புகைப்படம் தானே. ஒருமுறை பல கேள்விகளைக் கேட்டு எழுதி வைத்துக் கொள்ளும் பழக்கம் நம்மிடையே இல்லை. குழந்தை பருவம், இளமை பருவம் நரைக்குடிய நிலை, முதுமை, கோபம், சிரிப்பு இது எப்போதும் அடையாளங்களாக அடையாளப்படுத்துவது மிக குறைவு தானே. இவ்வாறான புகைப்படங்களில் நாம் எவற்றை தவிர்த்து விடுகிறோம் என்பதை நாம் உணர்ந்துத் தான் பயணிக்கின்றோம்.
எல்லா புகைப்படத்தையும் நாம் புகைப்படமாகப் பார்ப்பதில்லை. சில படங்கள் நம்மை நாமே அறிந்து கொள்வதற்கு, மேலும் சில படங்கள் நம் உறவுகளைப் புரிந்து கொள்வதற்கு, மேலும் சில படங்கள் கனவுகளை காட்டுவதற்கும், மேலும் சில படங்கள் முன்னோர்களின் படங்கள் அவர்கள் இறப்பிற்கு பின் தெய்வங்களாக பூஜிக்கப்படுவதற்கும், கற்பனைக்கு எட்டாத பணியோடு வரையப்பட்ட தெய்வப் படங்க்கள் தெய்வங்களாக பாவிக்கப்பட்டு நம் வீட்டில் தெய்வங்களாக அருள்பாளிக்கின்றது. அதை நாம் பூஜிக்கவும் தவறுவதில்லை. இன்னும் சில படங்கள் விட்ட குறை தொட்ட குறையாகத் தொடர்ந்து கொண்டும் இருக்கின்றது. பல படங்கள் கனவுகளை தாண்டி தான் கடந்து போகிறது
ரசனையும் ரசிப்பும் இருக்கும் வரை படங்களும் காட்சிகளும் மாறப்போவதில்லை. புகைப்படங்கள் பெருகிக்கொண்டு தான் இருக்கும் புகைப்படங்கள் காலத்தின் கண்ணாடி
📚 எழுதியவர்:
✍️ – மா.ச.இளங்கோமணி
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
