கொரோனா கிருமியை அக்குபஞ்சர் என்ன செய்கிறது? விளக்குகிறார் மருத்துவர் எம்.என்.சங்கர்

கொரோனா கிருமியை அக்குபஞ்சர் என்ன செய்கிறது? விளக்குகிறார் மருத்துவர் எம்.என்.சங்கர்

நாடாளுமன்றம் ஏற்றுக்கொண்டுநீதிமன்றம் ஆணையிட்ட பிறகும் ஆயுஷ் அமைப்பில் அக்குபஞ்சர் முறையை இணைப்பது தாமதிக்கப்படுவதன் பின்னணியில் ஒரு சுயநல லாபி இருக்கக்கூடும் என்கிறார்முன்னணி அக்கு சிகிச்சையாளர் எம்.என்சங்கர்தமிழ்நாடு அக்குபஞ்சர் சங்கச் செயற்பாட்டாளரான இவர் கொழும்பு ராயல் இன்ஸ்டிடியூட்டில் முதுகலைப் பட்டமும்ஷாங்காய் பல்கலைக்கழகத்தில் மேம்பட்ட சிகிச்சை ஆய்வுப்பட்டமும் பெற்றவர்சென்னை தியாகராய நகரில் ‘ஹை க்யூர் அக்குபஞ்சர் சென்டர்’ மருத்துவ மையத்தை நடத்திவருகிறார்.  பேட்டி: அ.குமரேசன்

அக்குபஞ்சர்நோய்களைக் குணப்படுத்துகிற ஒரு மருத்துவ சிகிச்சை முறையா அல்லது நோய்களைத் தடுக்கும் வாழ்வியல் வழிகாட்டல் முறையா?

உடல், மனம், ஆன்மா என்ற மூன்றின் அடிப் படையில் உடலியலை அணுகுவது அக்குபஞ்சர். இது மருந்தில்லா மருத்துவம். உடலில் ஒரு நோய் ஏற்படுகிறது என்றால், அதை முறிக்கக்கூடிய மருந்தை உள்ளே செலுத்துவது என்பது இதில் கிடையாது. அக்குபஞ்சர் நோயை அமுக்குவது இல்லை. மாறாக, உடலில் இயற்கையாகவே இருக் கக்கூடிய நோய் எதிர்ப்பாற்றலைத் தீவிரப்படுத்தி நோயை வெளியேற்றுவது அக்குபஞ்சர்.

உடலின் அனைத்து அங்கங்களின் செயல்பாடுகளையும் இணைக்கிற புள்ளிகள் நாடியில் உள்ளன. சரியான புள்ளியில் அழுத்துவதன் மூலம், அல்லது அந்தப் புள்ளியில் நுண்ணிய ஊசியால் குத்துவதன் மூலம், குறிப்பிட்ட அங்கத்தின் செயல்பாடு முடுக்கிவிடப்படுகிறது. அது நோய்க்கூறை எதிர்த்துவெளியேற்றுகிறது. அன்றாட வாழ்க்கையில் உணவு, உறக்கம் போன்றவற்றை இயற்கைச்செயல்பாட்டுக்கு உகந்ததாக முறைப்படுத்திக் கொள்வதன் மூலம் இயல்பாகவே நோய் எதிர்ப்பாற்றலைப் பேண முடியும். ஆகவே இது வந்த நோயை வெளியேற்றும் மருத்துவ சிகிச்சையாகவும் இருக்கிறது, வருமுன் தடுக்கும் வாழ்வியல் வழிகாட்டலாகவும் இருக்கிறது.

உலகின் எந்தப் பகுதியில் இந்த மருத்துவ முறை உருவானதுதற்போது எத்தனை நாடுகளில் இது அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமாக இருக்கிறது?

இந்தியாவின் தொன்மையான பாரம்பரிய மருத்துவம்தான் இது. பொன் ஊசி மருத்துவம் என்று இதைக் குறிப்பிட்டிருக்கிறார்கள். சிறந்த ஆராய்ச்சி அணுகுமுறைகளோடு இங்கே வளர்ந்துவந்த இந்த மருத்துவம், போகர் காலத்தில் சீனாவுக்குச் சென்றது. அவர் அங்கே இதை அறிமுகப் படுத்தினார். அவருடைய சீடர்கள் பரவலாகக் கொண்டுசென்றார்கள்.இந்தியாவின் பல பாரம்பரிய மாண்புகள் பின்னுக்குத் தள்ளப்பட்டது போல, அக்குபஞ்சரும் மறைக்கப்பட்டது. இப்போது சீன மருத்துவம் என்றுசொல்லப்படுகிற அளவுக்கு நிலைமை மாறிவிட்டது. அங்கே சென்று இதனைக் கற்றுவருகிற நிலைமையும் ஏற்பட்டுவிட்டது. இதன் பின்னணியில், பிற்காலத்திய வணிகம் சார்ந்த மருந்து நிறுவனங்களின் ஆதிக்கம் இருந்தது. அரசு அதிகார அமைப்போடு அவர்களுக்கு செல்வாக்குஇருந்தது. அக்குபஞ்சர் உள்ளிட்ட மருத்துவ முறைகளைப் பாதுகாப்பதிலும், ஆராய்ச்சி, பல்கலைக்கழகம் போன்ற முறையான கல்வி ஏறப்டுகளைச் செய்வதிலும், அங்கீகாரம் வழங்குவதிலும் அரசுகளுக்கு இருந்த அலட்சியமும் இதில் சேர்ந்து கொண்டது.

உலக சுகாதரார நிறுவனம் நடத்திய ஒரு கருத்தரங்கில் அக்குபஞ்சர் பற்றிப் பேச நான் அழைக்கப் பட்டிருந்தேன். எனக்குத் தரப்பட்டிருந்த தலைப்பு, ‘சீனாவிலிருந்து வந்த அக்குபஞ்சர்’ என்பது. சரியாகப் பத்து நிமிடங்கள்தான் பேச வேண்டும். நான், இந்தியாவிலிருந்து வந்த அக்குபஞ்சர் என்று தலைப்பை மாற்றிக்கொண்டதோடு, பதின்மூன்று நிமிடங்கள் பேசினேன். அந்தக் கூடுதல் நேரத்தையும் அனுமதித்தார்கள், தலைப்பை மாற்றியதையும் ஏற்றுக்கொண்டார்கள். ஆனால், இப்போதும் அந்த நிறுவனத்தின் ஆவணங்களில் இதை சீனமருத்துவம் என்றுதான் அடையாளப்படுத்துகிறார்கள். இந்திய மருத்துவம் என்ற அடையாளத்தை நிறுவுவதற்காகத் தொடர்ந்து வாதாடியாக வேண்டியிருக்கிறது. சீனாவில் இது எவ்வாறு வளர்க்கப்பட்டதோ அதே போன்ற கொள்கையோடு, கல்வி, பொதுசிகிச்சை உள்ளிட்ட கட்டமைப்புகளை இங்கே ஏற்படுத்தப்படுத்துவதற்கும் வலியுறுத்த வேண்டியிருக்கிறது.

உலகில் இன்று 117 நாடுகளில் அக்குபஞ்சர் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவில் அக்குபஞ்சர் சிகிச்சை மேற்கொள்வதற்கு காப்பீடு வழங்கப்படுகிறது.

சீனாவின் கொள்கைகட்டமைப்புகள் என்று சொன்னீர்கள்அதை விளக்க முடியுமா?

சீனக் குடும்பங்களில் இது பண்பாட்டோடு இணைந்த ஒரு வாழ்வியல் முறையாகவே கடைப்பிடிக்கப்படுகிறது. பல்கலைக்கழகங்கள் கல்லூரிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆட்சிப் பொறுப்புகளில் இருப்பவர்கள் முதல் பொதுமக்கள் வரையில் அக்கு மருத்துவத்தை நாடுவது சர்வ சாதாரணம்.மாவோ தலைமையில் புரட்சிகரப் போராட்டங்கள் நடைபெற்றபோது, ஏராளமான தொண்டர் களுக்கு அடிப்படையான அக்குபஞ்சர் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. போராட்ட வீரர்களுக்கும் பொதுமக்களுக்கும் சிகிச்சை அளித்த அவர்கள் “பேர்ஃபுட் டாக்டர்ஸ்” (வெறுங்கால் மருத்துவர்கள்) அழைக்கப்பட்டார்கள்.

உலகத்தைக் உலுக்கிக்கொண்டிருக்கும் கொரோனாஅவ்வப்போது வந்து மிரட்டுகிற டெங்கு போன்ற பெருந்தொற்று நிலைமைகளை அக்குபஞ்சரால் கையாள முடியுமா?

நிச்சயமாக முடியும். நாடியின் குறிப்பிட்ட புள்ளியில் முடுக்கிவிடுவதன் மூலம் உடலே கொரோனா பாதிப்பை வெளியேற்றிவிடும், பாதிப்பு ஏற்படாமல் தடுக்கவும் முடியும். கொரோனா அச்சுறுத்தல் தொடங்கிய பிறகு எனது ஆலோசனைகளை நாடிவந்த பலருக்கும் தடுப்புக்கான சிகிச்சையை அளித்திருக்கிறேன். அவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள். அக்குபஞ்சர் மருத்துவர்கள் பலரும் இதைச் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள்.

தடுப்பூசி மருந்துகள் தேவையில்லைஅவை இயற்கைக்கு மாறானைவை என்றுஅக்கு சிகிச்சையாளர்கள் பலரும் சொல்கிறார்கள்உங்கள் கருத்து என்ன?

தடுப்பு மருந்துகள் கிருமியோடு மோதுகிற வேதிக் கூறுகளால் உருவாக்கப்படுகின்றன. ஒருமுறை உடலில் செலுத்துகிறபோது எதிர்ப்பாற்றல் வளர்ந்து, கிருமிகள் தொற்றுகிறபோது தடுத்துவிடுகின்றன என்பதே அதன் கோட்பாடு. அந்த அடிப்படையில் ஆராய்ச்சிகள், அதிகாரப்பூர்வ அங்கீகாரங்கள், மருந்து உற்பத்தி, மருத்துவர்கள் பரிந்துரை, கடைகளில் விற்பனை என்று மிகப் பெரிய நெட்வொர்க் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அதைத் தடுப்பதற்கில்லை.

அக்குபஞ்சர் சிகிச்சையில் மருந்துகளே தேவையில்லை. எந்தப் புள்ளியில், எத்தனை முறை அழுத்தம் தரப்படுகிறது, எத்தனை முறை ஊசி குத்தப்படுகிறது என்பதைப் பொறுத்து உடலின் இயற்கையான தடுப்பாற்றல் முனைப்புப் பெறுகிறது. உணவுப் பழக்கம் உள்ளிட்ட வாழ்க்கை முறைகளால் செயலிழந்திருந்த, அமுங்கிப் போயிருந்ததடுப்பாற்றலை உசுப்பிவிடுவதுதான் அக்கு சிகிச்சை. இதுதான் தடுப்பு.

உறுப்புகளில் ஏற்பட்டிருக்கக்கூடிய பாதிப்புகள் பற்றிய விவரங்களைத் தெரிவிக்கிற பரிசோதனைகளை அக்கு மருத்துவர்கள் பயன்படுத்திக் கொள்வது சிகிச்சை அளிப்பதற்கு உதவியாகத் தானே இருக்கும்?

நாடி பிடித்துப் பார்த்தே அந்தப் பாதிப்புகளைத் துல்லியமாக அறிய முடியும் என்கிறபோது பரிசோதனைகளும் அவற்றின் முடிவுகளும் எதற்கு? இந்தமருத்துவத்தைக் கற்றுக்கொண்டு ஈடுபடுகிறவர்கள் அவ்வாறு துல்லியமாகக் கண்டுபிடிக்கிறஅறிவையும் திறமையையும் வளர்த்துக்கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்.

பல பரிசோதனை முடிவுகள் முன்னுக்குப் பின்முரணாக வருகின்றன. எது சரியென்று யார் முடிவுசெய்வது? நோயாளியை ரிஸ்க் எடுக்க விடக்கூடாது அல்லவா? இப்படிப்பட்ட வணிக நோக்கங்களுக்கு இடமளிக்கக் கூடாது என்பதற்காக மட்டுமல்லாமல், உடல் இயக்கத்திற்கான நாடிப் புள்ளிகள் குறித்த அறிவியல்பூர்வமான புரிதல் இருப்பதே அடிப்படை என்பதாலும்தான், உண்மையான ஈடுபாட்டோடுஅக்கு சிகிச்சை அளிக்கிறவர்கள் பரிசோதனைகளுக்குப் பரிந்துரைப்பதில்லை.

To disinfect the germs of the disease Simple instructions Acupuncture Doctor idea || நோய் கிருமிகளை விரட்ட எளிய வழிமுறைகள் அக்குபஞ்சர் டாக்டர் யோசனை

இந்தியாவின் பாரம்பரிய மருத்துவ முறைகளுக்கான மையமாகிய ஆயுஷ் அமைப்பில் அக்குபஞ்சரை இணைக்கும் முயற்சிகள் எந்த அளவில் உள்ளனநாடாளுமன்றத்தில் இதற்கான முன்வரைவு நிறைவேற்றப்பட்டுநீதிமன்றம் ஆணை பிறப் பித்த பிறகும் ஏன் தாமதமாகிறது?

இதற்கான குழுவை அமைக்க நாடாளுமன்றம் வழிகாட்டியிருக்கிறது. குழு அமைப்பது இன்னமும் தாமதமாகிறது. நீதிமன்ற ஆணை நகல் தங்களுக்கு வரவில்லை என்று கூட அதிகாரிகள் சொல்கிறார்கள். ஒரு அதிகாரப்பூர்வ அமைப்பின் அலுவலகத்திற்கு நீதிமன்ற ஆணைநகல் வரவில்லை என்று சொல்வதை ஏற்க முடியுமா? இதன் பின்னணியிலும் சில சக்திகளின் ‘லாபி’ இருக்கிறதோ என்ற சந்தேகம்தான் ஏற்படுகிறது. மருந்துகள், தொழில்நுட்பக் கருவிகள் உற்பத்தி, வணிக முகமை, விற்பனை, பரிசோதனைக் கூடங்களின் தொழில், பரிந்துரைக்கிறவர்களுக்கு கமிஷன் என்ற வலையமைப்பு இதிலேயும் இருக்கக்கூடும் அல்லவா? மறுபடியும் நீதிமன்றத்தை நாடுகிற நிலைமை ஏற்படுவதற்குள், ஆயுஷ் அமைப்பில் அக்குபஞ்சர் இணைக்கப்பட்டுவிட்டது என்ற செய்தி வரவேண்டும் என்றே நாங்கள்விரும்புகிறோம்.

ஒருங்கிணைந்த மருத்துவமுறை என்றுஉருவாகுமானால் அதில் அக்கு சிகிச்சையும் இணைந்துகொள்ள முடியும்தானே?

இதை ஒரு தொழில் போட்டியாகக் கருதாத, அந்த நெட்வொர்க் பாதிக்கப்படுமே என்ற கவலை இல்லாத மனப்பான்மை இதர மருத்துவப் பிரிவுகளைச் சேர்ந்தோரிடமும் வேரூன்றினால் ஒருங்கிணைந்த மருத்துவம் மக்களுக்குக் கிடைப்பது சாத்தியமே. மருத்துவம் என்பது மக்களுக்கு சேவை செய்வதற்காகவே என்ற கண்ணோட்டத்துடன் பல அக்கு மருத்துவர்கள் இதற்கு ஆதரவாகவே இருப்பார்கள். ஒருங்கிணைந்த மருத்துவம் என்றால் என்ன என்ற தெளிவும் சம்பந்தப்பட்டவர்களால் உருவாக்கப்பட வேண்டும்.

அக்குபஞ்சர் முறைக்கு மக்களின் ஏற்பு எந்த அளவில் உள்ளதுஇதனைப் பரவலாக்குவதில் அரசிடமிருந்தும் சமுதாயத்திடமிருந்தும் அக்கு மருத்துவர்கள் எதிர்பார்ப்பது என்ன?

அங்கீகரிக்கப்பட்டுள்ள நாடுகளில் மக்கள் இந்த சிகிச்சையை நாடுவது இயல்பாகவே இருக்கிறது. இங்கே சரியான தகவல்கள் சென்றடையாத நிலையில், அக்கு பஞ்சர் என்ற சொற்களைக் கேட்டுவிட்டு, இது ஏதோ உடலில் பல இடங்களில் ஊசிகளால் குத்துகிற வேலை, இதனால் மிகுந்த வலிஏற்படும் என்ற தவறான எண்ணம் இருக்கிறது.மருந்துகள் இல்லாமல் நோயைக் குணப்படுத்துவது சாத்தியமா என்ற ஐயப்பாடும் இருக்கிறது. இந்த சிகிச்சையால் பலன் ஏற்படாமல் அலோபதி உள்ளிட்ட பிற மருத்துவ முறைகளுக்கு மாறிச் செல்கிறவர்கள் இருக்கிறார்களே என்று சுட்டிக்காட் டப்படுகிறது. உடற்கூறு சார்ந்த அறிவியலாக இதைப் புரிந்துகொள்ளாமல், அரைகுறையாகப் படித்துவிட்டு இதில் ஈடுபட்டிருக்கிறவர்களும் இப்படிப்பட்ட எண்ணங்கள் ஏற்படுவதற்கு ஒரு காரணம் தான்.

ஆகவேதான் முதன் முதலாக இதற்கு வருகிறவர்களிடம் இதன் அறிவியலை விளக்குவதையும் ஒரு முக்கியப் பணியாகச் செய்ய வேண்டியதேவை இருக்கிறது. மருத்துவருக்கு மட்டுமல்லாமல் நோயாளிக்கும் இந்தப் புரிதல் இருப்பது சிகிச்சையின் வெற்றிக்கு உதவும்.நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்து, நீதிமன்றமும் ஆணையிட்டுவிட்டதால் இந்தியாவிலும் இது அங்கீகரிக்கப்பட்டுவிட்ட மருத்துவம்தான். அங்கீகரிக்கப்பட்ட இதர மருத்துவ முறைகளுக்கு என்னென்ன சட்டப்பூர்வ ஏற்பாடுகளும் கட்டமைப்புகளும் இருக்கின்றனவோ அவற்றை அக்குபஞ்சருக்கும் ஏற்படுத்த அரசு முன்வர வேண்டும். ஆயுஷ் இணைப்பைத் துரிதப்படுத்த வேண்டும்.

சமுதாயத்தைப் பொறுத்தவரையில் தற்போதைய பெருந்தொற்றுக் காலத்தில் பலவகை மருத்துவங்களையும் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தை அக்குபஞ்சரிலும் காட்ட வேண்டும். எளிமையாக விளக்குகிற புத்தகங்களும், யூ டியூப் பதிவுகளும் நிறையக் கிடைக்கின்றன. அவற்றைப் பயன்படுத்திப் பயனடையலாம். இதில், அறிவியல் மனப்பான்மை உள்ள இயக்கங்களும் பங்களிக்க முடியும்.

நன்றி: தீக்கதிர்

அ. குமரேசன்

Show 1 Comment

1 Comment

  1. John Andrews

    Thank you Dr. Shankar for your efforts to promote and spread Acupuncture treatment in India ! Keep up your good work.!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *