உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியா சமூக ஊடகங்களால் விசிறிவிடப்படும் பயங்கரவாதத்திற்கான உலகின் மிகப் பெரிய சோதனைக் கூடமாகவும் மாறிவருகிறது.

கணினி அறிவு பற்றிய தனது உலகளாவிய பார்வை, தனது பயோமெட்ரிக் அடையாளத் திட்டங்கள் பற்றி மிகவும் பெருமை கொள்ளும் இந்திய அரசாங்கம் சமயங்களில் ரேடியோகிராம் மூலமும் சில அதிகாரபூர்வமான தகவல் பரிமாற்றங்களை மேற்கொள்ளும். ஒரு ரேடியோ டிரான்ஸ்மிட்டரில் ஒருவர் அமர்ந்து ஒரு தகவலை அடிக்க, மற்றொரு இடத்தில், இவர் அனுப்பிய தகவல் உடனடியாகப் போய்ச் சேரும். இம்மாதிரியான ஒரு தகவல்தான் 2015 டிசம்பர் 31ம் தேதி, உத்தரப் பிரதேசத்தின் முஸாஃபர்பூர் மாவட்ட சிறைக் கண்காணிப்பாளருக்கு ‘அவசரம்‘ என்ற குறிப்போடு இந்திய உள்துறை அமைச்சகத்திடமிருந்து வந்தது.

அது விவேக் பிரேமி என்ற ஒரு கைதி பற்றியதாகும். உள்ளூர் நகைக்கடைக்காரரின் மகனான அவர் சமீபத்தில்தான் தனது 22வது பிறந்த நாளை சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் கொண்டாடி இருந்தார். 2015 கோடைக்காலத்தில் அவர் அருகில் உள்ள ஷாம்லி என்ற ஊர்க்காரரான 42 வயது முஸ்லீம் தொழிலாளியான முகமது ரியாஸ் என்பவரோடு மோதியிருந்தார். காரணம் ரியாஸ் ஒரு கன்றுக்குட்டியை வைத்திருந்ததுதான். அந்தக் கன்றை உள்ளூர் கசாப்புக் கடைக்காரரிடம் அவர் தரப்போகிறார் என்று பிரேமி குற்றம் சாட்டினார். பசுக்களைக் கொல்வது பல இந்துக்களின் கருத்தின்படி மகாபாவம், உத்தரப்பிரதேசத்தில் அது சட்டப்படி குற்றம் என்பதால் இது ஒரு பெரிய குற்றச்சாட்டு. விஷயம் பெரிதாகக் காரணம் பசுவதைக்கு எதிராக நீண்டகாலமாக வெறியுணர்வு இயக்கம் நடத்திவந்த இந்து தீவிரவாத இளைஞர் அமைப்பான பஜ்ரங் தள்ளின் உள்ளூர் தலைவராகவும் பிரேமி இருந்ததுதான்.

தனது தீவிரவாத கும்பல் துணையோடு, பிரேமி ரியாஸின் கைகளைப் பின்னால் கட்டி, அவரை ஷாம்லியின் நெரிசலான பஜார் தெரு வழியே இழுத்துச் சென்றார். பெரிய கூட்டம் கூடிவிட்டது. ஸ்மார்ட் போன்கள் தயாராக இருக்க. பிரேமி அந்த மனிதரை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெல்டினால் தாக்கி, அவர் மயங்கி விழும்வரை அடித்தார். வெறி பிடித்தவன் போல் ‘பசுக் கொலைகாரன்‘, ‘பசுக் கொலைகாரன்‘, ‘பசுக் கொலைகாரன்‘ என்று பிரேமி கத்தினார். அதற்குள்ளாக பஜார் முழுவதும் கூட்டம் கூடிவிட்டது. ரியாஸை பிரேமி சித்ரவதை செய்யும் காட்சி வாட்ஸ்அப், யூடியூப் மூலம் வேகமாகப் பரவிவிட்டது.

Now, WhatsApp powers the intel network of gau rakshaks | Meerut …

ஷாம்லியும், முஸாஃபர்பூரும் டில்லிக்கு வடக்கே இரண்டரை மணிநேரப் பயணத்தில் இருகக் கூடிய கரும்ப அதிகம் விளையும் ஓரளவிற்கு தொழிற்சாலைகள் உள்ள நகரங்கள். இந்தியாவில் அவை இரண்டும் அதிக தேசிய கவனம் பெற்றதில்லை. கவனம் பெறும் நேரங்கள் அனைத்துமே பெரும்பாலும் அங்கு நிகழும் மத மோதல்களுக்காகத்தான். 2013ல் இந்த இரு மாவட்டங்களிலும் ஏற்பட்ட இந்து முஸ்லீம் மோதல்களில் சுமார் 5 பேர் கொல்லப்பட்டார்கள். 50000 பேர் இடம்பெயர நேர்ந்தது.

பிரேமி இதே போன்ற பிரச்சனையை திரும்ப தூண்டி விட்டுவிடுவாரோ என்று அஞ்சிய உத்தரப்பிரதேச அரசாங்கம் – அப்போது ஒரு ஜனநாயக குடியரசுக் கட்சி அதிகாரத்தில் இருந்தது – நடவடிக்கை எடுக்க ஆரம்பித்தது. மாவட்ட அதிகாரிகள் பிரேமியை கைது செய்தார்கள். அவர் மீது பொது அமைதிக்கு பங்கம் விழைவிப்பவர்களை முன்னெச்சரிக்கையாக கைது செய்ய மாநில அரசுகளுக்கு அதிகாரம் அளிக்கும் தேசியப் பாதுகாப்புச் சட்டம் பாய்ந்தது. (பிரேமி மீது கலகம் செய்தல், உள்நோக்கோடு தீங்கு விளைவித்தல், அமைதியைக் குலைக்கும் நோக்கோடு அவதூறு பேசுதல் போன்ற குற்றங்களும் சுமத்தப்பட்டன. ரியாஸும் கால்நடை கடத்தல், கால்நடைகளைத் துன்புறுத்துதல் ஆகிய குற்றங்களுக்காக உடனடியாகக் கைது செய்யப்பட்டார்) பிரேமி பல மாதங்கள் சிறையில் இருந்தார்.

இப்போது, டில்லியிலிருந்து வந்த ரேடியோகிராம் மூலம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் மத்திய அரசாங்கம் உள்ளே நுழைந்தது. பஜ்ரங் தள்ளின் தெருக் கலகக்காரர்களுக்கும் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கும் ஒரே  தாய் அமைப்புதான். இந்த தீவிரவாத அமைப்பும், அரசியல் கட்சியும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பிலிருந்து உருவானவைதான்.

உள்துறை அமைச்சகம் பிரேமியை சிறையில் அடைக்கும் மாநில அரசின் முடிவை ரத்து செய்வதாகவும், அவர் மீது வேறு வழக்குகள் இல்லாவிட்டால், அவர் உடனடியாக சிறையிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்றும் அந்த ரேடியோகிராம் உத்தரவு கூறியது.

எனவே ,2016 ஜனவரி 15ம் தேதி  பிரேமியை மையமாக வைத்து மற்றொரு கூட்டம் முஸாஃபர்பூர் சிறை வாசலில் கூடியது. கடும் குளிரில் ஸ்வெட்டர் அணிந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் கூடினர். காற்றில் உள்ளூர் சர்க்கரை ஆலைகளிலிருந்து வரும் பிசுபிசுப்பான வாடை. எல்லோரும் கையில் ஜவ்வந்திப்பூ மாலைகள் உள்ள பிளாஸ்டிக் பைகளுடன் பரபரப்பாக பேசிக் கொண்டிருந்தார்கள். பலரும் செல்போனை நோண்டிக் கொண்டிருந்தார்கள்.  கூட்டத்தில் பாஜக மற்றும் பல்வேறு இந்து அமைப்புகளின் தலைவர்கள் இருந்தனர். குளிரையும் மீறி உற்சாகமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். 6.15க்கு சிறையின் இரும்புக் கதவுகள் திறந்ததும், பெரும் உற்சாகக் கூச்சல் எழுப்பினார்கள்.

I Have Learnt To Live With Death Threats' – Vivek Premi, Gau ...
I Have Learnt To Live With Death Threats’ – Vivek Premi, Gau rakshaks

கசங்கிய வெள்ளை உடையில் ஒரு இளைஞன் வெளியே வந்தான். ஆறரை மாத சிறை வாசத்தில் பெரிய தாடி வளர்ந்து விட்டது. முறுக்கிய மீசை. அவனது வட்டமான குழந்தைத்தனமான முகத்திற்கு ஒரு முதிர்ச்சியைத் தந்திருந்தது.

தங்களது மகிழ்ச்சியை கட்டுப்படுத்த முடியாது, அவரது கூட்டாளிகள் அவரை வாழ்த்த முண்டியடித்தனர். ஒருவர் ஒரு காவி பொன்னாடையைப் போர்த்தினார். நெற்றியில் திலகமிட்டார். ”தேகோ தேகோ கௌன் ஆயா, ஹிந்துவோ கா ஷேர் ஆயா” (பார், பார் யார் வந்தது, இந்துக் களின் சிங்கம் வந்தது) என்று கோஷமிட்டனர், அவர் மேல் பூக்களைத் தூவியபடி, தோளில் சுமந்து ஊர்வலமாகச் சென்றார்கள்.

பிரேமிக்கு திகைப்பும், பரபரப்புமாக இருந்தது. முதலில் அவர் அது ஏதோ திருமண ஊர்வலக் கூட்டம் என்று தான் நினைத்திருந்தார். அன்றிரவு வீடு வந்த சேர்ந்த்தும், தான் சிறையில் இருந்த காலத்தில் தனக்கு யாரெல்லாம் போன் செய்திருக்கிறார்கள் என்று பார்க்க ஒரு போன் வேண்டும் என்று குடும்பத்தினரிடம் கேட்டார்.  தனது படுக்கையறையில் உட்கார்ந்து லெனோவா ஏ 6000+ போனில் தனது சிம்மைப் போட்டார். போன் உயிர் பெற்றதும், பேஸ்புக்கில் நுழைந்தார்.

அவருக்கு சமூக ஊடகங்களில் எல்லாம் பெரிய அளவு ஆர்வம் கிடையாது. எப்போதாவதுதான்  தனது சகோதர்களுடன் மெசஞ்சரில் பேச பேஸ்புக்கைப் பயன்படுத்துவார். மற்றபடி அவர் வீதி நடவடிக்கையில்தான் ஆர்வம் காட்டுவார். ஆனால், பிரேமி பேஸ்புக்கில் நுழைந்தவுடன், ஆயிரக்கணக்கான மெசேஜ்கள் இறங்க ஆரம்பித்தன. ஆயிரக்கணக்கான அறிவிப்புகளும், வேண்டுகோள்களும் இருந்தன. அவர் எல்லா மெசேஜ்களையும் படிக்க விரும்பினார். ஆனால், அவை ஏராளமாக இருந்தன. அவர் எதுவும் செய்ய ஆரம்பிப்பதற்கு முன், போன் இயங்காமல் உறைந்து நின்றுவிட்டது.  அவர் மொத்தமாக போனை சுவிட்சு ஆஃப் செய்ய நேர்ந்தது.

பின்னர், அவர் வாட்ஸ்அப்பிலும், ட்விட்டரிலும் இதே போல ஆயிரக்கணக்கான மெசேஜ்கள் வந்திருந்ததைப் பார்த்தார். ட்விட்டரை எல்லாம் அவர் அதிகம் பயன்படுத்தியதே இல்லை.  எல்லாவற்றையும் படித்து, தனது புதிய புகழின் தன்மையை, அளவைப் புரிந்து கொள்ள அவருக்கு சில நாட்கள் ஆகின. ரியாஸை அவர் தாக்கியது இந்தியாவிலும், சமூக ஊடகங்களிலும் தேசியச் செய்தியாகி இருக்கிறது. பெரும்பாலானவர்கள் தன்னைக் காப்பாற்ற விரும்பியிருப்பதை பிரேமி அறிந்தார். இப்போது அவரை விடுதலை செய்யும் மோடி அரசின் முடிவால் அவர் திரும்ப தேசிய கவனம் பெற்றிருக்கிறார்.  ஒரே நாளில் தான் உத்தரப்பிரதேசத்தின் நடுத்தர வர்க்க இந்துக்கள் அனைவரும் அறிந்த நபராக ஆகிவிட்டதை, பலரும் தன்னைப் போன்ற நம்பிக்கை கொண்டவர்களாக இருப்பதை பிரேமி உணர்ந்தார். இந்துக்கள் ஆபத்தில் இருக்கிறார்கள், இந்தியாவை ஒரு முஸ்லீம் நாடாக மாற்ற முஸ்லீம்கள் ஓயாமல் சதி செய்து வருகிறார்கள் என்பவையே அந்த நம்பிக்கைகள். அவரது புதிய ரசிகர்கள் அவரிடமிருந்து இன்னும் அதிகமாக எதிர்பார்ப்பதாகத் தோன்றியது.

“இப்படித்தான் சமூக ஊடகங்களின் சக்தி எனக்கு அறிமுகமானது,” என்கிறார் பிரேமி. நேரடி நடவடிக்கை இல்லாதது என்பதால் ஆரம்ப காலத்தில் சமூக ஊடகங்களின் மீது நம்பிக்கை கொண்டிருக்கா விட்டாலும், இந்தத் தருணத்தைப் பயன்படுத்திக் கொள்வது என்று அவர் முடிவு செய்தார். விடுதலையான சில நாட்களில், அவர் ட்விட்டரில் வந்தார். “நான் திரும்ப வந்துவிட்டேன். எந்தத் தாயின் மகன் இனி பசுக்களைக் கொல்லத் துணிகிறான் என்று பார்க்கிறேன்,” என்று ட்விட்டினார். அடுத்த ஆண்டில் அவர் பஜ்ரங் தள்ளின் மாநிலப் பொறுப்பிற்கு பதவி உயர்த்தப்பட்டார்.

2012 முதல் 2018 வரை ஆறாண்டுகளுக்கு நான் தி இந்துவில்  பணிபுரிந்தேன். முதலில் நான் புதுடில்லியில் வேலை பார்த்தேன். என் வாழ்வின் பாதியை நான் அங்குதான் கழித்தேன். 2014 மே மாதம் நரேந்திர மோடி பிரதமரானதற்குச் சிறிது காலம் கழித்து நான் மேற்கு உத்தரப்பிரதேசத்திற்கு மாறுதல் பெற்றுச் செல்ல விரும்பினேன். காரணம், தலைநகரின் எல்லைக்கு அப்பால் உண்மையில் என்ன நடக்கிறது என்பதை நான் புரிந்துகொள்ள விரும்பினேன்.

Lok Sabha Elections 2019 Results: Total BJP Sweep, India Chooses ...

சிலகாலமாகவே தேர்தல்கள் மோடியின் வாய்ப்பைத் தான் காட்டிக் கொண்டிருந்தன. எனினும் பல இந்தியர்களுக்கு – குறிப்பாக பரந்த மனப்பான்மை கொண்ட, ஆங்கிலப் பத்திரிகைகளுக்கு – அவரது வெற்றி அதிர்ச்சியாக இருந்தது. எதிர்பாராத அளவிற்கு அமோக வெற்றி. மோடி கூட்டணி பெற்ற வெற்றியில் நாட்டை வெகுகாலம் ஆண்டு வந்த காங்கிரஸ் இருக்குமிடம் தெரியாமல் போனது. ஆனால், அதற்கும் மேலாக. அந்த வெற்றிக்குப் பின்னால் இருந்த உண்மையை ஏற்றுக் கொள்வது மிகவும் கடினமானதாக இருந்தது. பல ஆண்டுகளாகவே,  வரலாற்றில் மோடி ஒரு அதி தீவிர வலதுசாரி இந்து தேசியவாதியாகவே குறிப்பிடப்பட்டார். சிறுவயதில் ஆர்எஸ்எஸ் காக்கி சீருடை அணிந்ததிலிருந்து. அந்த தீவிர அமைப்பின் முழு நேர ஊழியராக பல ஆண்டுகள் இருந்தது, மத வெறுப்பு அலையின் மீது பாஜகவைக் கட்ட உதவுவது என்று அவரது வளர்ச்சிப் பாதை ஒருவித ஒத்திசைவைக் காட்டியது. பெரும்பாலும் அவர் 2002ல் குஜராத் முதலமைச்சராக இருந்ததன் மூலம் தான் அடையாளம் காணப்பட்டார். அந்த ஆட்சியில்தான் ஒரு மூன்று நாள் வெறியாட்டத்தில், அதைத் தொடர்ந்த பல மாத பதட்டத்தில். குறைந்தபட்சம் 790 முஸ்லீம்கள் கொல்லப்பட்டார்கள். சுமார் 250 இந்துக்களும் அந்த ரத்த வெள்ளத்தில் இறந்தார்கள்.

ஆனால் குஜராத்தில் தனது சமீபத்திய ஆட்சியின் போது, மோடி ஒரு பிரகாசமான, தொழில், தொழில்நுட்ப-உடோபிய ஆதரவான, 21ம் நூற்றாண்டின் உள்கட்டமைப்பு, சமூக ஊடகங்கள் பற்றியெல்லாம் உள்ளார்ந்து அறிந்துள்ள ஒரு மிதமான தலைவராக தனது பிம்பத்தை எப்படியோ மாற்றிக் கொண்டுவிட்டார். இந்திய, மற்றும் வெளிநாட்டு வாழ் மேட்டுக்குடியினர் இந்த பிம்பத்தை ஏற்றுக்கொண்டதாகத் தெரிந்தது. ஆனால் அதைவிட மிகவும் கலக்கம் தரும் விளைவு என்னவென்றால், பல கோடி இந்தியர்கள் அவரது பழைய பிம்பத்திற்காக – வெறிபிடித்த இஸ்லாமிய வெறுப்பிற்காக, பரந்த வாட்ஸ்அப் குழுக்களின் மூலம் அவரது கட்சியின் அடிமட்டத் தலைவர்கள் பரப்பிய சர்வாதிகாரமான சொல்லாடல்களுக்காக – உற்சாகமாக வாக்களித்திருப்பதுதான். டில்லியில் இதை நேருக்கு நேர் சந்திப்பது கஷ்டமாக இருந்தது. ஆனால், அதற்காக நான் வெகு தூரம் போக வேண்டியதாக இல்லை.

டில்லியின் எல்லையையொட்டி, 22 கோடி மக்கள் தொகையுடன் இருக்கும் உத்தரப்பிரதேசம் இந்தியாவின் அதிக மக்கள் தொகை உள்ள மாநிலமாகும். அதன் பெரிய பரப்பளவோடு, அது நாட்டின் கட்டுப்பாடற்ற, எதற்கும் அடங்காத ஜனநாயகத்திற்கு ஒரு முக்கியமான வழிகாட்டியாகத் திகழ்வதும் ஆகும். இந்த மாநிலம் இந்தியாவின் ‘இந்து பகுதியின்‘ மையமாகும். அதோடு சுமார் 4.3 கோடி முஸ்லீம்கள் வசிக்கும் மாநிலமும் ஆகும். நாட்டில் இங்குதான் அதிகமான முஸ்லீம்கள் வசிக்கிறார்கள். நான் சென்ற இந்த  மாநிலத்தின் வடமேற்கு மூலையில் மதவாத வன்முறை, வெறி குறிப்பாக சற்று அதிகமாக இருக்கும்.

உதாரணத்திற்கு, மோடி வென்ற அந்த கோடைக்காலத்தின் போது, இந்தி மொழி பத்திரிகைகளில் இந்தப் பகுதியின் ஒரு குறிப்பிட்ட கதை மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது. மீரட் நகரில் ஒரு முஸ்லீம் கும்பல் ஒரு இந்து இளம்பெண்ணைக் கடத்திச் சென்று ஒரு மதரஸாவில் வைத்து அவளை கூட்டு வன்புணர்ச்சி செய்து, இஸ்லாமிற்கு மதம் மாறக் கட்டாயப்படுத்தியதாக அந்த செய்தி பரவியது.  இது  இந்தியாவை இஸ்லாம் மயமாக்குவதற்காக இந்துப் பெண்களைக் காதலித்து உடலுறவு கொள்ளும், மிகவும் துணிகரமான ‘லவ் ஜிகாத்‘ என்று கூறப்பட்டது. இந்தக் கதை பரவியபோது. உத்தரப்பிரதேசத்தின் பாஜகவின் தீவிரமான நாடாளுமன்ற உறுப்பினரான யோகி ஆதித்யநாத் என்ற சாமியார், இந்த ‘லவ் ஜிகாத்‘தின் ஆபத்தைத் தான் தனது செய்திகளில் மையமாக்கினார்.

மீரட் தான் நான்  மாறுதல் பெற்றுச் சென்ற இடம். எனவே, நான் அங்கு போனதும், இந்த இளம்பெண்ணைத் தேடிச் சென்றேன். நான் அவளைக் கண்டுபிடுத்து விட்டேன். அவள் கூட்டு வன்புணர்ச்சி பற்றிய தனது புகாரைத் திரும்பப் பெற்றிருந்தாள். தனது பெற்றோர் தான் அவ்வாறு பொய் கூறுமாறு கட்டாயப்படுத்தியதாகக் கூறியிருந்தாள். உண்மையில் அவள் அந்த மதரஸாவில் ஆசிரியையாக இருந்தாள். ஒரு முஸ்லீம் இளைஞனுடன் காதல் ஏற்பட்டிருக்கிறது. அவன் இவளை மதம் மாறுமாறு ஒருபோதும் கட்டாயப்படுத்தவில்லை என்றாள் அவள். நெகிழ்ச்சியூட்டும் விதமாக, அவர்கள் திருமணம் செய்துகொண்டார்கள். நான் திருமணம் பற்றிய செய்தியை வெளியிட்டேன். ஆனால், பெரும்பாலான இந்திப் பத்திரிகைகள் தகவல்களைச் சரி செய்து வெளியிடுவதில் அக்கறை காட்டவில்லை.

மாறாக, அப்போது வேகம் பெற்று வந்த முஸ்லீம்கள் பற்றிய தவறான சித்தரிப்புகளைக் காட்டுவதில் அவை மாட்டிக் கொண்டன. அந்த ஜுன் மாதம் நடந்த ரியாஸ் மீதான பிரேமியின் தாக்குதல் இந்த தவிர்க்க முடியாத முடிவின் அறிகுறிதான்.

, by Humra Quraishi
Why the silence on ‘those’ rapes?

இந்த நேரத்தில், உலக அளவில் மோடி அதிகரித்து வரும் கொடூரமான முரண்பாடுகளின் மீது மிதப்பதைத் தொடர்ந்தார்.  2015 செப்டம்பர் இறுதியில் தனது டிஜிடல் இந்தியா பிரச்சாரத்தை முன்னெடுப்பதற்காக, சிலிகன் பள்ளத்தாக்கு சிஈஓக்களுடன் பரஸ்பரம் ஒருவரையொருவர் புகழ்ந்து கொள்ளும் பேச்சுவார்த்தைச் சுற்றுகளை அவர் நடத்தினார். இது அனைத்து இந்தியர்களுக்கும் கணினி சேவைகளையும். அதிவேக இணைய இணைப்பையும் தருவதற்கான திட்டமாகும்.  அமெரிக்காவில் இறங்கியதுமே, மோடி. இந்தியாவில் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக இருக்கும் ஒரே மாநிலமான ஜம்மு காஷ்மீரில் இணையத்தை மூன்று நாட்களுக்கு முடக்கினார். (ஒருவேளை, பின்னால் வரப்போகும் நீண்ட முடக்கத்திற்கான முன்னோட்டம் போலும்).

பின்னர், செப்டம்பர் 27 அன்று பாலோ ஆல்டோவின் திறந்தவெளி டவுன் ஹால் கூட்டத்தில், மார்க் ஜுக்கர்பெர்க், பேஸ்புக் போன்ற சமூகதளங்களை ஆர்வமாகப் பயன்படுத்துவதற்காக மோடியைப் பாராட்டினார். “உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் தலைவர், மற்ற உலக நாடுகளின் தலைவர்களுக்கெல்லாம், நாட்டு மக்களோடு எப்படி தொடர்பில் இருக்க வேண்டும் என்பதற்கு வழிகாட்டியாக இருப்பது மிகவும் பொருத்தமானது,“ என்றார். சமூக ஊடகங்களை, வெறுப்பூட்டும் பொய் செய்திகளைப் பரப்பப் பயன்படுத்துவதில் முன்னோடியாகத் திகழும் கட்சியைச் சேர்ந்தவரான மோடி புன்னகை புரிந்தார்.

மிகவும் பரவலாக வெளிவந்த மோடி இந்தியாவின் கும்பல் தாக்குதல் (lynching)  மறுநாளே நடந்தது. வடமேற்கு உத்திரப்பிரதேசத்தின் ஒரு கிராமமான பிசாராவில் ஒரு சிறுகும்பல் முகமது அக்லக் என்ற 52 வயது இரும்புத் தொழிலாளி வீட்டின் முன்பாக நள்ளிரவில் கூடியது. அவரது பக்கத்து வீட்டுக்காரர் அக்லக் ஒரு கன்றுக்குட்டியைத் திருடி, கொன்றதாகக் குற்றம் சாட்டியிருந்தார்.  யாரோ ஒருவர் இந்துக் கோவிலின் மைக் செட்டில் கிராமத்தின் இந்துக்களை எல்லாம் திரண்டு வருமாறு அழைத்தார்.  போலீஸ் வந்த நேரத்தில் அக்லக் அடிக்கப்பட்டு. செங்கற்களால் தாக்கப்பட்டு, கத்தியால் குத்தப்பட்டு இறந்து விட்டார்.  அவரது மகன் படுகாயமடைந்திருந்தார். நான் பிசாரா சென்றபோது.  சந்தித்த பல கிராமத்தினரும் அக்லக்கின் மரணம் ஏன் இத்தனை பெரிய பரபரப்பை ஏற்படுத்திவிட்டது என்று வியந்தார்கள். ஒரு கன்றும் இறந்ததாகச் சொல்லப்படுகிறதல்லவா?

மதவாத வன்முறை முழுவீச்சில் தொற்று நோய் போலப் பரவுவதை பின்தொடரும் எனது பணியில் அடுத்த மூன்றாண்டு காலத்தில் நான் பார்த்த எட்டு கும்பல் தாக்குதல்களில் அக்லக் சம்பவம்தான் முதல் சம்பவம். ஃபேக்ட் ஃபைண்டர் என்ற இந்திய அமைப்பு தொகுத்த வெறுப்பு சார் குற்றங்களின் தரவுகளின்படி, 2009 முதல் 2018 வரை சிறுபான்மையினருக்கு எதிராக 254 தாக்குதல்கள் பதிவாகியிருக்கின்றன. அவற்றில் 90 சதம் 2014ல் மோடி பதவிக்கு வந்த பிறகு நடந்தவை. மனித உரிமைக் கண்காணிப்பகத்தின் படி, 2015 மே முதல் 2018 டிசம்பர் வரை 12 இந்திய மாநிலங்களில், குறைந்தபட்சம் 44 பேர் பசு தொடர்பான வன்முறையில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இதில் 36 பேர் முஸ்லீம்கள்.  18ம் நூற்றாண்டு அமெரிக்காவில் வேர்பெற்ற லிஞ்சிங் என்ற சொல், 2015லிருந்து இந்திய மொழிகளின் ஒரு பகுதியாக மாறிவிட்டது.

இந்தத் தாக்குதல்களில் பஜ்ரங் தள் பெரிய அளவில் சம்பந்தப்பட்டிருந்தது. தாக்குதல்களை நேரடியாக நடத்துவதிலிருந்து.  தனது தனிப்பட்ட சமூக ஊடகங்களின் மூலம் அல்லது முன்னுதாரணமாகத் திகழ்வதாலும். பிரச்சாரத்தாலும் ஊக்குவிப்பது ஆகிய வழிகளில் தாக்குதல்களை ஒருங்கிணைத்தது.  பிரேமி ரியாஸை முரட்டுத்தனமாகத் தாக்கியதைத் தொடர்ந்து, அமைப்பின் பல இளம் தீவிரவாதிகளும் பிரேமியை புகழ் பெற வைத்த அதே போன்ற தாக்குதல்களை நடத்தி காணொளியாகப் பதிவு செய்தார்கள்.  பிரேமியின் விடுதலையும் ஒருவிதத்தில் இந்த இந்து வெறியுணர்விற்கு உதவியது.  இந்துத்வாவின் சேவைக்காகச் செய்யப்படும் வன்முறைக்கு தண்டனை கிடையாது என்ற எதிர்பார்ப்பை உறுதிப்படுத்தியது.

Bajrang Dal mulls forming Gau Raksha Dal in Udupi district ...

2015 முதல் 2018 வரையிலான காலகட்டத்தில் பஜ்ரங் தள் போன்ற பசு பாதுகாப்புக் கும்பல்களின் 14 வெறியுணர்வுக் கொலைகளை ஆய்வு செய்த மக்கள் உரிமைக் கண்காணிப்பகம், போலீஸ் ”ஆரம்பத்தில் சட்ட செயல்முறைகளை ஒதுக்கி. புலன்விசாரணையை காலம் தாழ்த்தியது அல்லது, இந்தக் கொலைகளுக்கு உடந்தையாக இருந்து, குற்றங்களை மறைத்தது என்பதைக் கண்டுபிடித்தது”. 2017 ஏப்ரலில் ராஜஸ்தானில் பஜ்ரங் தள் கும்பலால், முஸ்லீம் பால் விவசாயியான பேகலு கான் கொல்லப்பட்ட போது, நான் அங்கு சென்றேன். இதில் தாக்குதலைக் காட்டும் வீடியோக்கள், தன்னைத் தாக்கியவர்களைப் பெயர் குறிப்பிட்டு, இறந்தவர் தந்த மரண வாக்குமூலம், குற்றவாளிகளில் ஒருவரது ஒப்புதல் வாக்குமூலம் எல்லாம் இருந்தும் கூட, குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டார்கள். (ஒரு சட்ட ஓட்டையைக் காரணம் காட்டி வீடியோ ஆதாரத்தை சாட்சியமாக ஏற்க நீதிமன்றம் மறுத்தது).

மறுபக்கம் இந்த விஷயங்களை வெளிக் கொணர்பவர்கள் பெரிய பின்விளைவுகளைச் சந்திக்க நேர்ந்தது. 2017 செப்டம்பர் துவக்கத்தில், இந்து தேசியவாதிகளை பல ஆண்டுகளாக விமர்சித்து வந்த பத்திரிகையாளரான கௌரி லங்கேஷ், தனது வீட்டு வாசலில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். அடுத்த இரு வாரங்களில் என்னையும் சேர்த்து,  பல பத்திரிகையாளர்களுக்கு கொலை மிரட்டல்கள் வந்தன. எனவே, நான் இந்தியாவிலிருந்து சற்று விலகி இருக்கத் தீர்மானித்து அமெரிக்கா சென்றுவிட்டேன்.

நியூயார்க்கில் இருந்தாலும் நான் பிரேமி பற்றியே தான் நினைத்துக் கொண்டிருந்தேன். உத்திரப்பிரதேசத்தில் இருந்த போது, செய்திகளுக்காக அவரிடம் நான் ஓரிரு முறை தொலைபேசியில் பேசியிருக்கிறேன். பஜ்ரங் தள்ளில் அவரது வளர்ச்சி அசாதாரணமானது என்பதை நான் அறிவேன். 2017ல் மேற்கு உத்திரப் பிரதேசத்தில் அந்த தீவிரவாத இளைஞர் அமைப்பிற்கு அவர் தலைவரானார். ஷாம்லியில் அவரது படை மிகத் திறமையாக இயங்கியது.  அது ஒருபுறம் இணையம் மூலம் வெறுப்புப் பிரச்சாரத்தை மேற்கொண்டது. மறுபுறம் தெருக்களில் ரோந்து சுற்றி வந்து, முஸ்லீம்களைத் தாக்கியது. இந்த அமைப்பின் தலைவர்களின் வளர்ச்சியின் கட்டுத்திட்டத்தை வைத்துப் பார்க்கும் போது. விரைவில் மாநிலத்தில் பஜ்ரங் தள்ளின் தலைவராகவோ, துணைத் தலைவராகவோ அவர் ஆகிவிட வாய்ப்பு இருந்தது. இன்றைய இந்தியாவின் வலுவான சக்திகளான இந்து நடுத்தர வர்க்கத்தின் புகழ்ச்சி, சமூக ஊடகங்களின் பரந்த தளம். பாஜகவின் மௌனமான ஆதரவு எல்லாம் அவர் பக்கம் இருந்தன. நான் அவர் எப்படி இந்த அளவுக்கு வெற்றி பெற்றார், பஜ்ரங் தள் உண்மையில் எவ்வாறு இயங்குகிறது என்பதைப் புரிந்து கொள்ள விரும்பினேன்.

அவரை ஒரு நேர்காணல் செய்ய அவரிடம் அனுமதி கேட்பது என்று நான் முடிவு செய்த போது. என் பெயரே என்னை ஒரு முஸ்லீம் என்று காட்டிக் கொடுத்து விடும் என்பதால், அவர் என்ன பதில் சொல்வார் என்பது உறுதியாகத் தெரியவில்லை. ஆனால், அவர் என்னோடு பேச ஒப்புதல் தந்தார். எனவே நான் 2019ல் திரும்பவும் இந்தியா வந்தேன்.

அவர் சிறையிலிருந்து விடுதலையாகி மூன்றாண்டுகள் இருக்கும் வேளையில் ஒரு நாள் நான் அவரை ஷாம்லியில் தெருவில் சந்தித்தேன்.  சகஜமாகப் பேசும் பாவனையில், ”எப்படி இருக்கிறீர்கள்?“ என்றேன். அவர் கம்பீரமான மனிதர். நெற்றியில் பளீரென்று பெரிய பொட்டு. வலது காதில் சின்னதாக வெள்ளித் தோடு. நன்கு இஸ்திரி செய்யப்பட்ட வெள்ளை குர்தாவின் மேல் கையில்லாத சிவப்பு ஜாக்கெட்.  அடிப்பாகம் வெள்ளையாக இருந்த கறுப்பு ஷு.  ஆசாரமான இந்து வழக்கப்படி, பின்தலையில் குடுமி. சுற்றிலும், இளைஞர் பரிவாரம்.

பக்கத்தில் உள்ள உள்ளூர் பஜ்ரங் தள் அலுவலகத்தில் பேசலாம் என்று பிரேமி என்னை அழைத்தார்.  நம்பர் பிளேட்டில் இந்து ராஜ் என்று எழுதப்பட்ட அவரது 2008 ராயல் என்பீல்ட் புல்லட் கிளாசிக்கை அவருக்காக ஒரு இளைஞன் ஸ்டார்ட் செய்து தந்தான். மற்றொரு சீடன், “கூலிங் கிளாஸ் போட்டுக் கொண்டு, நெற்றித் திலகத்தோடு அவர் இந்த புல்லட்டில் வந்தால், பசுக் கொலைகாரர்கள் அப்படியே ஓடிப் போய்விடுவார்கள்,“ என்றான் பெருமை பொங்க.

The Rise of a Hindu Vigilante in the Age of WhatsApp and Modi | WIRED

முஸ்லீம்கள் நெருங்கமாக வாழும் பகுதியில் அச்சுறுத்துவது போல பஜ்ரங் தள் அலுவலகம் இருந்தது.  புல்லட்டிலிருந்து இறங்கிய பிரேமி, சிறை அதிகாரி சிறைக்கூடங்களைப் பார்வையிடும் தோரணையில் தெருவை இந்தப்பக்கமும், அந்தப்பக்கமும் பார்த்தார்.  பக்கத்தில் பலகாரக் கடை வைத்திருந்தவர் அவருக்கு வணக்கம் தெரிவித்தார். அவர் முகத்தில் அச்சம் வெளிப்படையாகத் தெரிந்தது. மற்ற கடைக்காரர்கள் எங்கோ வெறித்துப் பார்த்தார்கள். நாங்கள் அலுவலகப் படிகளில் ஏறும்போது, “அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. நான் அவர்களில் பலரை கவனித்திருக்கிறேன்,” என்றார் பிரேமி. “அடித்ததைத் தான் அவர் “கவனிப்பது” என்று குறிப்பிட்டார்.

பஜ்ரங் தள் அலுவலகங்கள் பலவும்  இந்து யாத்ரிகர்களுக்கான பழைய சத்திரங்களில் தான் இருக்கின்றன. அந்தக் கட்டிடங்கள் இந்துமத சேவைக்குப் பயன்பட வேண்டும் என்று சொல்லி, பஜ்ரங் தள் தலைவர்கள் அவற்றை ஆக்ரமித்துள்ளனர். அந்த இடம் சுமார் 80 ஆண்டுகள் பழமையானதாக இருக்கக் கூடும்..  ஆங்காங்கே சிமிண்டில் ஒட்டுப் போட்ட கட்டிடம். உள்ளே ஷாம்லி கிளையைச் சேர்ந்த ஆறு பஜ்ரங் தள் ஊழியர்கள் ஜமுக்காளத்தில் அமர்ந்து போன் பேசிக் கொண்டிருந்தார்கள். பிரேமி உள்ளே நுழைந்ததும் அவர்கள் “ஜெய் ஸ்ரீராம்” என்று கோஷமிட்டார்கள்.

அறையின் நடுவே இருந்த குஷனில் அமர்ந்த பிரேமி, தனக்கு புகழ் சேர்த்த இந்த அடிதடி பற்றி சுருக்கமாக கூறி அது பற்றி தனக்கு எந்த வருத்தமும் இல்லை என்றார். (“கசாப்புக்காரன் பசுவைக் கொன்றால், நாங்கள் அவனைக் கவனித்து விடுவோம் என்பதை நான் காட்ட வேண்டியதாக இருந்தது“). ஆனால், உத்தரப் பிரதேசத்தில் இப்போது பசுவதை பஜ்ரங் தள்ளிற்கு முன்னுரிமையான விஷயமாக இல்லை என்றார் அவர். ஏனெனில், புதிய பாஜக அரசு அதை கவனித்துக் கொள்கிறது.

2017ல் உத்தரப்பிரதேசத்தில் பாஜக வென்றது. “லவ் ஜிகாத்“ பற்றி மிரட்டல் விடுத்த தீவிரவாத சாமியாரான யோகி ஆதித்யநாத்தை முதல்வராக நியமித்தது. அவர் எருமைக் கறி ஏற்றுமதித் தொழில் மீது போரை அறிவித்தார். அதில் பெரும்பாலும் முஸ்லீம்களே ஈடுபட்டிருந்தனர். பசுவதைக் குற்றச்சாட்டுகளும் அவர்கள் மீது தான் சுமத்தப்பட்டன. அதிலிருந்து பல வதைக்கூடங்கள் மூடப்பட்டன.

எனவே. இப்போது ஷாம்லியில் பிரேமியின் சீடர்கள் லவ் ஜிகாத்திற்கு எதிரான போரில் கவனம் செலுத்துகிறார்கள். இலட்சம் மக்கள் வாழும் ஒரு நகரில் மிகக் குறைவான அளவில் நடக்கும் மாற்று மத காதல்களைக் கண்காணிப்பது நடைமுறையில் மிகவும் சிரமமான விஷயம். அதற்காக அவர்கள்  ஃபேஸ்புக், உளவாளிகளின் வலைப்பின்னல்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி மிக விரிவான கண்காணிப்புப் பணியைச் செய்கிறார்கள்.

இந்தக் கண்காணிப்புப் பணியின் சமூக ஊடகப் பகுதியை நிர்வகிப்பது ஒல்லியான, தாடி வைத்த இளைஞரான ஹிமன்சு சர்மா. அவர் முதுகுப்பக்கம் ஒரு தலையணையை வைத்து சுவரில் சாய்ந்து சப்பணமிட்டு உட்கார்ந்திருந்தார். ஃபேஸ்புக்கில் அவரும், அவரது குழுவும் பல நூறு குழுக்களில் ஊடுறுவி, ஆயிரக்கணக்கானவர்களை நண்பர்களாக்கிக் கொண்டதாகச் சொன்னார். அதன் மூலம் ஷாம்லியில் இந்துப் பெண்களுக்கு காதல் வலை வீசும் முஸ்லீம்களைத் தேடுவதாகச் சொன்னார். “நாங்கள் எந்த பயனாளர் அடையாளம் என்ன மாதிரியான கமெண்ட்டைப் போடுகிறது என்பது உள்ளிட்டு அனைத்தையும் கவனிப்போம்,“ என்றார் சர்மா. “அவர்கள் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்துவதில் வெளிப்படையாக இருப்பதால், எங்கள் வேலை எளிதாக இருக்கிறது. சமயங்களில் தாமும், தமது குழுவினரும், ஆண்களை இழுக்க, பெண் பெயரில் போலிக் கணக்குகளை பயன்படுத்துவதாகவும் அவர் சொன்னார். அவர் பேசிக் கொண்டிருக்கும் போதே, அவர் போனில் ஃபேஸ்புக் அறிவிப்புகளுக்கான ஒலி வந்து கொண்டே இருந்தது.

சர்மா பேசிக் கொண்டிருக்கும் போது. பிரேமியும் தனது போனில் நோண்டிக் கொண்டே இருந்தார். இந்த போன்தான் அவரது உள்ளூர் ஒற்றர் வலைப்பின்னலுக்கு முக்கியமானது. ஒரு இந்து பெண் ஒரு முஸ்லீம் ஆணுடன் சுற்றுவதாக சந்தேகப்பட்டால் இந்த ஒற்றர்கள் தகவல் தருவார்கள் என்றார் சர்மா. செக்யூரிட்டிகள், வாட்சமேன்கள், உணவகங்களில் வெயிட்டராக இருப்போர், சிறு உணவக உரிமையாளர்கள், ஹோட்டல்களில் துப்புரவுப் பணி செய்வோர் என்று பலரும் இந்தக் குழுவில் இருக்கிறார்கள் என்றார் பிரேமி. சாதாரண மக்களோடு மக்களாக இவர்கள் இருப்பதுதான் நாங்கள் சிறப்பாக செயல்பட உதவுகிறது. அவர்கள் தான் எங்கள் கண்கள் என்றார் பிரேமி.

Bajrang Dal Leader Vivek Premi Out of NSA Net – The Quint

சர்மாவிற்கு அருகில் அமர்ந்திருந்தவர்தான் குழுவில் வயதில் மூத்தவர். 42 வயதான ஜிதேந்திர ராணா என்ற அந்த வர்த்தகர் பிரேமியை வளர்த்து விட்டவராகத் தன்னைக் கருதிக் கொள்பவர்.  உத்தரப் பிரதேசத்தில் இப்போது பாஜக ஆட்சி என்பதால் வேற்றுமதக் காதல்கள் அத்தனை வெளிப்படையாக நடப்பதில்லை என்றார் ராணா. ஆனால் பஜ்ரங் தள் தன் ஒற்றர்களுக்கு எச்சரிக்கையாக இருப்பது முக்கியம் என்று சொல்லி வைத்திருக்கிறது. ”அவர்களைப் பார்த்தால் எங்களுக்குத் தகவல் கொடுங்கள். அவர்களை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.“

ஏதாவது ஒரு சம்பவத்தை உதாரணமாகச் சொல்லுங்களேன் என்று கேட்டதற்கு, பின்வரும் சம்பவத்தைச் சொன்னார்கள். 2018 அக்டோபர் மாத்தில் ஒரு நாள் காலை சர்மாவிற்கு ஒரு லவ் ஜிகாத் அவசரம் பற்றிய தகவல் ஒன்று ஒரு ஒற்றரிடமிருந்து வந்தது. உள்ளூர் ஹோட்டலில் அறை புக் செய்த ஒருஜோடி பற்றிய துப்பு. அங்கு சர்வராக இருக்கும் ஒற்றர் அந்த ஆள் முஸ்லீம் என்றும் அவனும், அவனது காதலியும் அடிக்கடி உடலுறவு வைத்துக் கொள்ள அந்த அறைக்கு வருவதாகவும்  சந்தேகித்தார்.

20 நிமிடத்தில், சர்மா, ராணா தலைமையில் ஒரு பஜ்ரங் தள் கும்பல் ஹோட்டல் வாசலில் கூடிவிட்டது. அந்த ஜோடி அறையை எடுக்க ஹோட்டலில் தந்திருந்த  அடையாளச் சான்றுகளைப் பார்க்க வேண்டும் என்று கும்பல் கூறியது. அந்த ஜோடியின் அறை வாசலில் சூழ்ந்து நின்று கதவைத் தட்டினார்கள். அந்த ஜோடி கதவைத் திறக்க மறுத்ததும், கதவை உடைப்பது என்று ஏகமனதாகத் தீர்மானித்தார்கள்.

அந்த ஜோடி 20களின் மத்தியில் இருந்தார்கள். அந்த ஆண் உயரமாக, நல்ல வாட்டசாட்டமாக லேசான தாடியுடன் இருந்தான்.  அவன் சுதாரிப்பதற்குள், பஜ்ரங் தள் கும்பல் அவனை மடக்கிப் பிடித்தது.  ”அவனுக்கு கொஞ்சம் பிசியோதெரபி கொடுத்தோம்,” என்றார் ராணா. வன்முறைக்கு இப்படி ஒரு சொல்லைத் தான் பயன்படுத்தியதற்காக புன்னகை செய்தார். அலமாரி ஓரமாக நிறுத்தி அவன் சுன்னத் செய்திருக்கிறானா என்பதைப் பார்க்க உடைகளைக் கழற்றச் சொன்னார்கள். பின், கும்பல் அவனை போலீசிடம் ஒப்படைத்தது.

இவர்களுக்கு வியப்பூட்டும் விதமாக, அந்தப் பெண், அவன் தனது கணவன் என்றாள். அதை நிரூபிக்க அடையாள அட்டையையும் காட்டினாள். அது போலி அடையாள அட்டை என்று இந்தக் கும்பல் வாதிட்டது. ஆனால் அந்தப் பெண் பிடிவாதமாக நின்றாள். எனவே பிரேமி அவளது குடும்பத்தினரை அழைத்தார். அவர்களுக்கு அந்தப் பெண்ணிற்கு முஸ்லீம் பையனுடன் இருக்கும் உறவு தெரியாது. பின்னர் அந்தப் பெண்ணின் குடும்பத்தினர். அவளை வேலையை விட்டுவிட்டு, வீட்டிலேயே இருக்குமாறு கட்டாயப்படுத்தினார்கள் என்றார் சர்மா.

பின்னர் நான் அந்த ஹோட்டலில் இந்த சம்பவத்தை உறுதி செய்ய விசாரித்தேன். வரவேற்பறையில் இருந்த ஊழியர் எந்த விபரத்தையும் உறுதி செய்ய மறுத்தார். ஹோட்டலின் பெயரை நான் பயன்படுத்த மாட்டேன் என்று உறுதி கூறிய பிறகு, ”ஒரு லவ் ஜிகாத் பிரச்சனை. ஆட்கள் தங்க அறை தருவதுதான் எங்கள் தொழில். ஆனால், லவ் ஜிகாத்தை ஊக்குவிக்காமல் இருப்பது பற்றியும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்,“ என்றார்.

Rajasthan Dalit man lynched for 'affair' with Muslim women ...

ஒரு வெக்கையான சனிக்கிழமையன்று, ஷாம்லியின் ஒரு நீதிமன்றத்தைப் பார்ப்பதற்காக நான் பிரேமியின் உதவியாளர் சர்மாவுடன் சென்றேன். தனது ஒற்றர் ஒருவரை எனக்கு அறிமுகப்படுத்த முதலில் பிரேமி சற்று தயங்கினார். பின்னர் அவரது வலைப்பின்னலில் முக்கியமானவராக இருந்த ஒரு வழக்கறிஞரோடு நான் பேச ஏற்பாடு செய்தார். எல்லா மதக் கலப்புத் திருமணங்களும் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்படுவதால், இந்த வழக்கறிஞர் மிக முக்கியமானவராக இருந்தார். வழியெங்கும் சர்மா இந்த வழக்கறிஞரைப் புகழ்ந்தபடியே வந்தார்.

சிவப்பான வாசலைக் கடந்து, குறுகலான, வழக்கறிஞர்கள் சேம்பர்களை அடைந்தோம். குமாஸ்தாக்கள், போலீஸ், நூற்றுக்கணக்கான வழக்குதாரர்கள் என்று ஒரே கூச்சலும், குழப்பமுமாக இருந்தது. ஒருவழியாக நாங்கள் தேடிப் போனவரைக் கண்டுபிடித்தோம். உயரமாக, தாடி வைத்துக் கொண்டு, வெள்ளை சட்டை, கறுப்பு பேண்ட், கறுப்பு ஸ்வெட்டர், கறுப்பு ஷு அணிந்திருந்தார் அவர். அவர் பெயர் சச்சின் பால். எங்களைப் பார்த்துப் புன்னகைத்த அவர், தான் சில வேலைகளை முடிக்க வேண்டி இருப்பதால் எங்களைக் காத்திருக்குமாறு பணிவாக வேண்டினார். பின்னர் அந்த வளாகத்தின் மூலையிலிருந்த டீக்கடைக்கு அழைத்துச் சென்றார்.

ஷாம்லியில் மதக்  கலப்பு மணம் செய்து கொண்ட எத்தனை ஜோடிகள் தங்கள் திருமணத்தை பதிவு செய்துள்ளனர் என்று அவரிடம் கேட்டேன். ”ஐயா, எந்த ஜோடியும் தங்கள் திருமணத்தை பதிவு செய்து கொள்ளாதபடி நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். நாங்கள் அப்படிப்பட்ட  திருமணம் நடக்கவே விடமாட்டோம்,“ என்றார் அவர்.

பெரியதொரு  வழக்கறிஞர்கள் வலைப்பின்னலில் தாம் ஒரு அங்கம் என்றார் அவர். எந்த முஸ்லீம் ஆணாவது இந்து பெண்ணுடனான தனது திருமணத்தை பதிவு செய்ய நீதிமன்றத்தை அணுகினால், அந்த ஜோடி எப்போது நீதிமன்றத்திற்கு வரப்போகிறது என்ற தகவல் தனது அலுவலக ஊழியர் மூலமாகத் தனக்கு வந்துவிடும் என்றார் அவர். பிறகு அவர் செய்ய வேணடியதெல்லாம் உடனடியாக பிரேமி பரிவாரங்களுக்கு ஒரு வாட்ஸ்அப் செய்தி அனுப்ப வேண்டியதுதான். “அந்த ஜோடி நீதிமன்றத்திற்கு வரும் நாளில் பஜ்ரங் தளத் தொண்டர்கள் வாசலிலேயே அவர்களை கவனித்து விடுவார்கள்,” என்றார் அந்த வழக்கறிஞர். அப்படியென்றால் என்ன பொருள் என்று நான் கேட்ட போது, ” ஹோட்டலில் மாட்டிக் கொண்ட பையனுக்கு நடந்ததுதான் இவர்களுக்கும்,“ என்றார் அவர்.

இந்த வலைப்பின்னலில் இணையாத வழக்கறிஞர்களும் இப்போது மதக் கலப்பு மணங்களுக்கு உதவுவதை இப்போது தவிர்க்கிறார்கள். ”இந்த மாதிரியான வழக்குகளை எடுக்க எல்லோரும் அஞ்சுகிறார்கள். ஏனெனில், பஜ்ரங் தளத்தின் பெரும் கூட்டம் திரண்டுவிடும்,” என்றார் அவர்.

ஷாம்லியில்  பிரேமி மற்றும் அவரது கூட்டாளிகளுடனேயே நான் சுற்றிக் கொண்டிருந்தாலும், வேறொருவரை சந்திக்க விரும்பினேன். என் மனதில் எப்போதும் ஓடிக் கொண்டிருக்கும் ஒரு வீடியோக் காட்சியில் பார்த்திருந்த அவரை நேரில் பார்க்க விரும்பினேன்.

சட்டை கிழிந்து, வெற்று மார்போடு. அடிவாங்கி வீங்கிய முகத்தோடு, வலது கண்ணிலிருந்து வழியும் ரத்தம் தாடியை நனைக்க, முகமது ரியாஸ் அந்த நெரிசலான பஜார் பகுதியில் அநாதரவாக நிற்கிறார். பஜ்ரங் தளத்தினன் ஒருவன் அவரது கிழிந்த சட்டைக் காலரைப் பிடித்துக் கொண்டிருக்க, பிரேமி எந்த தயக்கமுமின்றி அவரை தனது பெல்ட்டால் விளாசுகிறார். களைப்படையும் பிரேமி ஒரு கணம் அடிப்பதை நிறுத்தி. ஆசுவாசம் செய்து கொண்டு, தனது சட்டைக் கையை மேலே ஏற்றிக் கொண்டு, இன்னும் வலுவாக அடிக்கத் தயாராகிறார்.

Image may contain: 10 people, people sitting and people standing

ரியாஸின் கைகள் பின்னால் கட்டப்பட்டிருப்பதால், அடிகளைத் தவிர்க்க அவரால் குனிந்து கொள்ளத்தான் முடிகிறது. பல ஸ்மார்ட் போன்கள் தன் திசையில் படமெடுப்பதைக் கவனிக்கும் பிரேமி, கேமராக்களைப் பார்க்க நிமிர்கிறார். அடிப்பதை நிறுத்தும்போது, ரியாஸ் பேச முடியாத அளவிற்கு அரை மயக்கத்தில் இருக்கிறார். தான் பசுக்களைக் கொல்ல நினைக்கவில்லை என்பதை விளக்க முயல்கிறார். கும்பலில் பிரேமிக்கு அருகில் நிற்கும் இளைஞர்கள் புன்சிரிப்போடு, ரியாஸைத் தாக்க தமக்கான வாய்ப்பிற்காகக் காத்திருக்கிறார்கள். அவர்களில் பொறுமையிழந்த ஒருவன், தன் சட்டையை மடித்து விட்டுக் கொண்டு, அடிக்க ஆரம்பிக்கிறான். அதோடு அந்த வீடியோ முடிகிறது.

2019 ஜனவரி 4ம் தேதி நான் ரியாஸை ஷாம்லியிலிருந்து பல மைல்கள் தள்ளி உள்ள அவரது பாழடைந்த ஒரே அறை கொண்ட வீட்டில் சந்தித்தேன். பூசாத செங்கற்களாலான எளிய வீடு. முப்பதுகளின் இறுதியில் இருக்கும் ஒரு பெண், விறகு அடுப்புடன் போராடிக் கொண்டிருக்கிறாள். இரண்டு பழைய மரக் கட்டில்கள் தான் வீட்டில் இருக்கும் ஒரே பர்னிச்சர். அதில் ஒன்றில் அவர்களது மூன்று குழந்தைகள் நெருக்கியடித்துக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்தார்கள்.

பிரவுன் ஸ்வெட்டரில், கழுத்திலிருந்த கம்பளி மஃப்ளர் தொங்க, ரியாஸ் அந்த அழுக்குத் தரையில் உட்கார்ந்திருந்தார். சிறிய ஒழுங்கற்ற தாடியுடன் சிந்தனையில் ஆழ்ந்த முகம். அடிவாங்கிய அந்த நாளை – அந்த நரக வேதனையான வலியை, அச்சத்தை, அவமானத்தை – பற்றிப் பேசுவது அவருக்கு மிகவும் துன்பகரமாக இருந்தது.

”அவை தான் என் வாழ்வின் கடைசி மணித் துளிகள் என்று நினைத்தேன்,“ என்றார் ரியாஸ். அடிப்பதை நிறுத்துங்கள். நான் தவறு ஏதும் செய்திருந்தால், போலீஸ் என்னைத் தண்டிக்கட்டும், என்று கெஞ்சினேன். ஆனால் அவர் அடிப்பதை நிறுத்தவில்லை. கொஞ்ச நேரத்தில் நான் மயங்கி விழுந்தேன்,” என்றார். ரியாஸ் ஒரு பீடியைப் பற்ற வைத்துக் கொண்டார். பல முறை பீடியை இழுத்துவிட்டு, ” நான் சட்டவிரோதமாக எதுவும் செய்யவில்லை,” என்றார். பின்னர் அவர் குரல் ஒரு கெஞ்சும் தொனிக்கு மாறியது.

”நான் இங்கு வசிப்பதை யாரிடமும் சொல்லி விடாதீர்கள். அவர்களுக்கு எதிராக நான் பேசினேன் என்று தெரிந்தால், என்னை பழிவாங்கி விடுவார்கள்,“ என்றார். ” அவர்கள் அதிகாரத்தில் இல்லாத போதே இதைச் செய்தார்கள். இப்போது ஆளும்கட்சியின் ஆதரவு இருக்கும் போது அவர்கள் என்ன செய்வார்கள் என்பதை நினைத்துப் பாருங்கள்,” என்றார்.

அவரது நெற்றியில் வியர்வைத் துளிகள் உருண்டன. இந்து வெறியர்கள் வெறியோடு திரிவதால், தான் ஷாம்லி பக்கம் செல்வதே இல்லை என்றார் அவர். தனது குடும்பம் நகர்ப்பக்கம் போவதையே தவிர்க்கிறது என்றார்.

இந்தியாவின் மக்கள்தொகையில் இந்துக்கள் 80 சதம். சுமார் 14 சதம் இருக்கும் முஸ்லீம்கள் கிட்டத்தட்ட எல்லா அம்சங்களிலுமே பின்தங்கிய சிறுபான்மையினராக இருக்கிறார்கள். மிக ஏழைகளாக, கல்வி அறிவற்றவர்களாக, இருக்கிறார்கள். சிறையில் அடைக்கப்படும் அபாயம் அதிகம். இந்துக்கள் போல் சுதந்திரமாக எங்கும் சென்றுவர முடியாதவர்களாக இருக்கிறார்கள். வாடகைக்கு வீடு கிடைப்பதில் உள்ள சிரமங்கள், தொடர்ந்து நிகழும் மத வன்முறைகள் காரணமாக அவர்கள் தனியான முஸ்லீம்கள் வாழும் பகுதிகளில் வாழ்கிறார்கள். இது அவர்களது பின்தங்கிய நிலையை மேலும் அதிகரிக்கிறது.

பின் எதற்கு பல இந்துக்களும் முஸ்லீம்களுக்கு மிருகத்தனமாக கை ஓங்கியிருக்கிறது, அவர்கள் இந்தியாவின் பெரும்பான்மை மதத்தை அழிக்கப் போகிறார்கள் என்று நம்புகிறார்கள்? என் வாழ்நாளிலேயே இந்த பொதுவான பார்வை மிகவும் கலக்கம் ஏற்படுத்துமளவு பரவலாகி உள்ளது. குறிப்பாக, பிரேமி எவ்வாறு இதை மிக ஆழமாக நம்புகிறார் என்பதை அறிய நான் விரும்பினேன்.

ஒரு நாள் பிரேமி என்னை மற்றொரு பஜ்ரங் தள் அலுவலகத்தில் சந்திக்குமாறு அழைத்தார். இதுவும் டில்லிக்கு வெளிப்புறத்தில், ஒரு முஸ்லீம் பகுதியில் ஒரு சத்திரத்தில் உள்ள அலுவலகம்தான். முதன்முதலாக அவரோடு நேருக்கு நேராக நீண்ட நேரம் பேசக் கூடிய வாய்ப்புள்ள ஒரு  சந்திப்பு. அவர் தயாராகும் வரை நான் சில நிமிடங்கள் காத்திருக்க நேர்ந்தது. எனக்கு எதிரே சுவரில் ஆர்எஸ்எஸ்ஸின் இரண்டாவது  தலைவரான மாதவ் சதாசிவ் கோல்வால்கரின் முழு அளவு படம்.

1925ல் துவக்கப்பட்ட ஆர்எஸ்எஸ் 1930களின் ஐரோப்பிய பாசிஸ இயக்கங்களை ஒத்தது ஆகும். கோல்வால்கர் தான்  முக்கியமான அறிவுஜீவியாக, சிற்பியாக அதை நிர்மாணித்தவர். வழக்கறிஞராக, துறவியாக, சிலகாலம் விலங்கியல் விரிவுரையாளராக இருந்தவரான அவர், இந்தியா என்றால் இந்துமதம், இந்து என்றால் ஒரு உயிரியல் இனத்தைச் சேர்ந்தவர் என்றில்லாமல், அவரது கலாச்சார, மதச் சாராம்சங்கள் இந்திய மண்ணில் இருந்து உருவானவை என்ற அர்த்தத்தில் என்று வாதிட்டவர்.

எம்.எஸ்.கோல்வால்கரின் வாழ்க்கையை ...

கோல்வால்கரைப் பொருத்தவரை, இந்திய மண்ணிலிருந்து தோன்றாத எந்த மதத்தையும் – இஸ்லாமோ, கிறிஸ்தவமோ அல்லது கம்யூனிசம் போன்ற ஒரு மதச்சார்ப்பற்ற நம்பிக்கையோ- பின்பற்றுபவர்கள் அந்தியர்கள். இந்த தேசத்தின், இனத்தின் உறுப்பினராக இருக்கும் உரிமையை இழந்தவர்கள். “இந்துஸ்தானத்தில் உள்ள அந்நிய இனங்கள் இந்து கலாச்சாரம், மற்றும் மொழியை ஏற்கவேண்டும், இந்து மதத்தை மதித்து, மரியாதை செய்யவேண்டும், இல்லாவிடில், எந்த உரிமையும் கோராமல், எந்த சலுகையும் இல்லாமல், எந்த முன்னுரிமைச் சலுகையும் இல்லாமல், ஏன் குடியுரிமைகளும் கூட இல்லாமல், கீழானவர்களாக இந்த நாட்டில் இருந்து கொள்ளலாம்,” என்று அவர் எழுதினார்.

ஜெர்மனியின் நாஜி உதாரணத்தால் தூண்டப்பட்ட அவர் ”அந்நியர்கள்” இது போன்ற நிபந்தனைகளை ஏற்க மாட்டார்கள் என்பதை அறிந்திருந்தார். முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள், கம்யூனிஸ்டுகள் ஆகியோர் ”நாட்டிற்குள்ளேயே இருக்கும் விரோத சக்திகள்,” என்றும், அவர்கள் ”அந்நிய படையெடுப்பாளர்களை விட தேசத்தின் பாதுகாப்பிற்கு மிகப் பெரிய அச்சுறுத்தல்,“ என்றும் கருதினார். அவர்கள் மதம் மாற அல்லது பணிந்து போக மறுத்தால், அவர்கள் நீக்கப்பட வேண்டும், ”தேசிய இனத்தின் விருப்பத்திற்கேற்ப இந்த நாட்டைவிட்டு வெளியேற நிர்பந்திக்கப் பட வேண்டும்,“ என்றார்.

பின்னாளில், நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தில்  மதச்சார்பின்மை, மத சுதந்திரம்  குறித்த கருத்துகளை சேர்த்த இந்திய விடுதலை இயக்கத்திலிருந்து ஆர்எஸ்எஸ் மிகவும் விலகியே இருந்தது. ஆர்எஸ்எஸின் முன்னாள் உறுப்பினரான நாதுராம் கோட்சே, ”விடாமல் தொடர்ந்து முஸ்லீம்களுக்கு வக்காலத்து வாங்குவதற்காக” காந்தியை கொலை செய்தபோது,  1948ல் புதிய அரசாங்கம் ஆர்எஸ்எஸை மொத்தமாக தடை செய்தது.

ஆனாலும், இந்த இந்து தேசியவாதிகளின் படை வளர்ந்துகொண்டேதான் இருந்தது. 1970களில் பல லட்சம் உறுப்பினர்கள் இருந்தார்கள். நிறைய துணை அமைப்புகளையும் அது உருவாக்கி விட்டது. எட்டு வயது சிறுவனாக மோடி ஆர்எஸ்எஸில் சேர்ந்தார். 1970களில் அது மீண்டும் தலைமறைவு இயக்கமாக மாறியபோது, அதில் ரகசியமாகப் பணியாற்றினார். மோடியின் அதிக சக்திவாய்ந்த, வெளிப்படையாகப் பேசக் கூடிய உள்துறை அமைச்சரான அமித் ஷாவும் இதுபோல ஆர்எஸ்எஸில் சிறுவயதில் சேர்ந்தவர்தான்.

1980ல் ஆர்எஸ்எஸ் பாரதிய ஜனதா கட்சி என்ற ஒரு புதிய அரசியல் கட்சியை உருவாக்கியது. தனது முதல் பத்தாண்டுகளில் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் இல்லாமல் இந்திய அரசியலில் ஒரு ஓரமாகத்தான் பாஜக இருந்தது. ஆனால், 80களின் பிற்பகுதியிலும். 90களின் முற்பகுதியிலும், கட்சியும், அதன் ஆர்எஸ்எஸ் கூட்டாளிகளும் இந்தியா முழுவதுமுள்ள இந்துக்களை ஈர்க்க ஒரு வழி கண்டுபிடித்து விட்டன. தங்களது செயல்பாட்டிற்கு ஒரு வழிமுறையாக உத்தரப் பிரதேசத்தின் அயோத்தி நகரில் இருக்கும் 16ம் நூற்றாண்டு மசூதியான பாபர் மசூதி மீது மட்டும் தமது கவனத்தைச் செலுத்தின.

இந்த குறிப்பிட்ட மசூதி, ராமர் பிறந்த இடத்தில் கட்டப்பட்டுள்ளது என்று நீண்ட காலமாக ஒரு கதை இருந்து வருகிறது. எனவே, ஆர்எஸ்எஸ் மசூதி இருக்கும் இடத்தில் ராமர் கோவில் கட்ட ஒரு இயக்கத்தை ஆரம்பித்தது. 1990ல் பாஜகவின் நிறுவனத் தலைவர்களில் ஒருவரான எல்.கே.அத்வானி குஜராத் கடற்கரையோரத்திலிருந்து அயொத்திக்கு பல மாதங்களுக்கு நீடித்த ஒரு யாத்திரையை மேற்கொண்டார். இது ஒரு அரசியல் யாத்திரையாகவும் இருந்தது. இதை பெருமளவு 40 வயதான நரேந்திர மோடி ஒருங்கிணைத்தார். ரதம் போல் வடிவமைக்கப்பட்ட காரில்  அத்வானி, இந்தியாவின் குறுக்கே பயணித்தார். வழியெங்கும் அடிக்கடி இந்து முஸ்லீம் கலவரங்களைத் தூண்டிக் கொண்டே சென்றார். தனது அயோத்தியா திட்டத்தையொட்டி, தவிர்க்க முடியாமல் வன்முறை ஏற்படும் போது பாதுகாப்பிற்காகவும், அடியாள் பலத்திற்காகவும், ஆர்எஸ்எஸ் பஜ்ரங் தள் என்ற இளைஞர் படையை அப்போதுதான் அமைத்தது.

OG Saffron on Twitter: "Look at the Gwalior Division. In the ...

இறுதியாக, 1992 டிசம்பர் 6ம் தேதி அயோத்தியா இயக்கம் தனது கிளைமாக்ஸை எட்டியது. அன்று சுமார் 150000 பேர் கொண்ட இந்துக் கும்பலின் பேரணி, போலீஸை மீறி, சில மணிநேரங்களில் பாபர் மசூதியை கைகளாலேயே இடித்துத் தள்ளியது.  நாடெங்கும் பெரும் இந்து – முஸ்லீம் கலவரம் வெடித்தது. ஆனால் அப்போது, – அயோத்தியா இயக்கம் தொடர்பான இந்து அடையாளத்தை வைத்து – பாஜக நாடாளுமன்றத்தில் இரண்டாவது பெரிய கட்சியாக இருந்தது. பல மாநில சட்டமன்றங்களை கையில் வைத்திருந்தது.

திடீரென்று இப்படி பாஜக ஒரு முக்கியமான அரசியல் கட்சியாகிவிட்ட நிலையில், யாருக்குமே பஜ்ரங் தள்ளிற்கு எவ்வளவு முக்கியத்துவம் தருவது என்பது தெரியவில்லை. 1997ல் அரசியல் விமர்சகர் பால் ரிச்சர்ட் பிராஸ் இந்தக் கும்பலை,“ ஒருவிதத்தில் பரிதாபகரமான, அதே சமயத்தில் ஹிட்லரின் ஆரம்பகால பேரணிகளுக்கு பாதுகாப்பளித்த நாஜி எஸ்ஏ கும்பலைப் போன்று அபாயகரமானது” என்று குறிப்பிட்டார். இந்த அச்சுறுத்தும், அதே சமயம் கண்டுகொள்ளாமல் ஒதுக்கித் தள்ளும் ஒரு பார்வைதான் பஜ்ரங் தள் பற்றி பல ஆண்டுகளுக்கு இருந்தது. 1999 ஜனவரியில் ஒடிசாவில் “ஜெய் பஜரங் தள்“ என்று கோஷம் போட்டுக் கொண்டு ஒரு கும்பல் ஆஸ்திரேலிய பாதிரியார் கிரஹாம் ஸ்டூவர்ட் ஸ்டேன்ஸும், அவரது புதல்வர்களும் தூங்கிக் கொண்டிருந்த வேனுக்கு தீ வைத்தது. அவரும், அவரது 10 வயது மகன் பிலிப்பும், 6 வயது மகன் திமோதியும் கருகி இறந்தார்கள். “வெளியில் திரியும் பைத்தியக்காரர்கள்“ என்ற தலைப்பில் இது பற்றி இந்தியா டுடே, “இந்துத்வா சார்புடைய பைத்தியக்கார குண்டர்கள்“ இதைச் செய்ததாக எழுதியது. பஜ்ரங் தள் ஒரு நாள் பிரதானம் பெறும் என்று அப்போது யாரும் நினைத்திருக்கவில்லை.

பிரேமி  என்னை சந்திக்கத் தயாரானதும், என்னை மொட்டை மாடிக்கு வரச் சொன்னார். மொடமொடப்பான ராணுவப் பச்சை பேண்ட், கழுத்து வரை ஜிப் போடப்பட்ட நேவி நீல ஜாக்கெட், கறுப்பு தோல் செருப்பில் இருந்தார். உட்கார்ந்திருந்த அவர் என்னையும் உட்காருமாறு சைகை செய்தார்.

சிறுவயதிலிருந்தே, பிரேமி இந்து தேசியவாத சூழலில் வளர்ந்திருப்பதை நான் அறிந்தேன். தீவிர இந்துத்துவா ஆதரவாளர்களான அவரது தாத்தா, பாட்டி ஆகியோரின் தாக்கம் அவரிடம் அதிகமாக இருந்தது. தாத்தா இந்து பாரம்பரிய தற்காப்புக் கலைகள் கற்றுத் தரும்  அகாரா என்ற ஒரு பயிற்சிப் பள்ளியை நடத்தி வந்தவர். பாட்டி ஆரிய சமாஜத்தின் மகளிர் அணியின் உள்ளூர் தலைவி. ஆரிய சமாஜம்  என்பது 1875ல் ஆரம்பிக்கப்பட்ட ஒரு இந்து மறுமலர்ச்சி இயக்கம். இது ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்களை, முஸ்லீம்களை இந்துவாக மதம் மாற்றியிருக்கிறது.

பிரேமி ஆர்எஸ்எஸ்ஸின் கல்விப் பிரிவு நடத்தி வந்த பள்ளிகளில் படித்து வளர்ந்தார். இப்பள்ளிகள் இந்தியாவின் மிகப் பெரிய தனியார் பள்ளிச் சங்கிலிகளில் ஒன்றாகும். இவை மாணவர்கள் மனதில் இந்துத்துவா கருத்துகளை விதைத்து, முஸ்லீம், கிறிஸ்தவர்கள் இந்தியக் கலாச்சாரத்திற்கு அந்நியமானவர்கள் என்று போதிப்பவை.  2006ல், 12 வயதான போது, பிரேமி உள்ளூர் பஜ்ரங் தள்ளின் அகாராவில் முறையான ஆயுதப் பயிற்சி, தற்காப்புப் பயிற்சி ஆகியவற்றையும் பெற ஆரம்பித்தார். அவருக்கு துப்பாக்கிகள் மீது ஒரு தீராக விருப்பம் ஏற்பட்டு விட்டது. “சிறுவயது முதலே எனக்கு கையில் துப்பாக்கி ஏந்துவது மிகவும் பிடிக்கும்,“ என்றார் அவர். விரைவிலேயே அவர் இந்து இளைஞர்களுக்கு துப்பாக்கி, வாள், கம்பு ஆகியவை கொண்டு தற்காப்புப்  பயிற்சி அளிக்கும் முகாம்களின் ஆசிரியர்களுக்கு பயிற்சி தருமளவிற்கு வளர்ந்தார். . இந்தப் பயிற்சி முகாம்கள் எல்லாம் சட்டவிரோதமானவை என்றாலும் கூட, இந்தியா முழுவதும், ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு பஜ்ரங் தள் இவ்வாறு பயிற்சி அளிக்கிறது.

ஆரம்பத்தில் இந்தியா முழுமையாக ஒரு இந்து தேசமாகத்தான் இருந்தது, பல நூற்றாண்டு முஸ்லீம் ஆட்சியின் கொடுமைகளால் அச்சுறுத்தப்பட்டு, இந்துக்கள் இஸ்லாமிற்கு மதம் மாற்றப்பட்டார்கள் என்று பள்ளியிலும், அகாராவிலும் அவருக்கு போதிக்கப்பட்டது. இந்துக்களை முஸ்லீம்கள் ஒடுக்குவது இப்போதும் தொடர்கிறது என்றும் அவர் கற்றார். “நாம் பிரிட்டிஷாரிடமிருந்து விடுதலை பெற்றிருக்கலாம். ஆனால் மதச்சார்பின்மை, கம்யூனிசம் ஆகிய கருத்துகளிலிருந்து விடுதலை பெறவில்லை. மதச்சார்பின்மை என்றால் என்ன? இந்து மதத்தைப் புண்படுத்துவது மட்டும்தான்,“ என்றார் அவர். இந்திய முஸ்லீம்கள் “லவ் ஜிகாத்“ ஆல் தூண்டப்படுவதாகவும் அவர் நம்ப ஆரம்பித்தார்.

18 வயதில் அவர் பஜ்ரங் தள்ளின் மாவட்டத் தலைவரானார். அது அவருக்கு நிறைய பொறுப்புகளைத் தந்தது. “எந்த ஒரு பகுதியிலும் முஸ்லீம்கள் அதிகமாக வாக்களித்து ஆதிக்கம் செலுத்தாத வண்ணம், தேர்தல் வாக்குச்சாவடிகளுக்குச் சென்று, பார்த்துக் கொள்வது, அவ்வாறு நடந்தால், அதைத் தடுக்க இளைஞர்களை திரட்டுவது, போலீஸ் இந்துக்கள் சொல்வதைக் கேட்கிறார்களா என்று கண்காணிப்பது, இந்துக்கள் போலீஸால் ஒடுக்கப்படுகிறார்களா என்று கவனிப்பது, இந்துமதச் சின்னங்களையும். கலாச்சாரத்தையும் யாராவது இழிவுபடுத்தினால் நடவடிக்கை எடுப்பது, எந்த ஒரு இந்துப் பெண்ணின் மானத்திற்கும் யாரும் பங்கம் விளைவிக்காமல் பார்த்துக் கொள்வது என்று பல பொறுப்புகள். ஆனால்  – 2015 ல் எல்லாம் மாறும் வரை – அவரது பார்வை முழுக்க அவரது சுற்றுவட்டாரத்திற்குள்ளாகத்தான் இருந்தது.

Bajrang Dal Activist Who Thrashed Muslim Man For Alleged Cow-Theft ...
Bajrang Dal Activist Vivek Premi,Thrashed Muslim Man For Alleged Cow-Theft, Likely To Walk Free After Centre Revokes NSA Charges

இப்போது நினைத்துப் பார்க்கும்போது, ரியாஸைத் தாக்கியது, அது அவருக்குத் தந்த அந்தஸ்து, புகழ் எல்லாமே தற்செயலாக நடந்ததாகத்தான் பிரேமி கருதுகிறார். எவ்வாறாயினும், பசு வதைக்காக ஒரு முஸ்லீமை அவர் தாக்கியது அது ஒன்றும் முதல் தடவை இல்லையே !.

இப்போது அவர் ஒரு மாநிலமட்டத் தலைவர். சுமார் 500க்கும் மேற்பட்ட வாட்ஸ்அப் குழுக்களில் தான் இருப்பதாக அவர் கூறினார். இவற்றில் அவர் நடத்தும், கண்காணிக்கும் ஏராளமான மாவட்ட அளவிலான குழுக்களும், மற்ற தீவிர  இந்துத்துவா தலைவர்கள் நடத்தும் தேசிய, சர்வ தேச அளவிலான குழுக்களும் அடக்கம். தனது போனின் மூலம் அத்தனை முனைகளிலும் இஸ்லாமிற்கு எதிராக நடக்கும் போரை அவர் தொடர்ந்து கண்காணித்து வருகிறார். லவ் ஜிகாத் என்பது அப்படிப்பட்ட பல முனைகளில் ஒன்றுதான். இந்து பகுதிகளில் உள்ள நிலங்களை, சொத்துகளை முஸ்லீம்கள் வாங்கி. இந்துக்களை விரட்டி, அந்தப் பகுதி முழுவதும் தாமே ஆக்கிரமிப்பது என்ற முஸ்லீம் சதியாக நம்பப்படும் “நில ஜிகாத்“திற்கு எதிராகவும் பஜ்ரங் தள்ளும், அதன் கூட்டாளிகளும் போராடி வருகிறார்கள். நடைமுறையில் இது முஸ்லீம்களை அவர்களது குடியிருப்புப் பகுதியிலிருந்து வெளியே வராமல் தடுக்கும் வேலைதான். சமயங்களில் இவர்களுக்குப் பிடிக்காத ரியல் எஸ்டேட் பரிவர்த்தனைகளை அச்சுறுத்தல் மூலம் நிறுத்தி விடுவார்கள்.

இந்தியாவில் முஸ்லீம்களின் மக்கள்தொகை அதிகரிப்பது என்பது மற்றவற்றை விட எப்போதுமே இவர்களின் மனதை ஆட்டிவைக்கும் ஒரு கவலை. இதை இந்துத்துவா தீவிரவாதிகள், “மக்கள்தொகை ஜிகாத்“ என்று குறிப்பிடுகிறார்கள். இந்து வலதுசாரிகளின் கற்பனையிலும், மீம்ஸ்களிலும், இந்துக்களின் எண்ணிக்கையை விட தம் எண்ணிக்கையை அதிகரிக்க முஸ்லீம்கள் தம்மால் இயன்ற அனைத்தையும் செய்கிறார்கள். நாட்டின் பல இடங்களில் அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். “மேற்கு வங்கத்தில் இந்து மக்கள்தொகையை விட முஸ்லீம் மக்கள்தொகை அதிகம்,” என்றார் பிரேமி. “தினமும், நாட்டின் ஏதோ ஒரு பகுதியில் முஸ்லீம் இளைஞர்கள் ஒன்றுசூடி, இந்துக்களை தாக்குகிறார்கள். அது பற்றி எனக்கு சமூக ஊடகங்கள் மூலம் தகவல் வருகிறது,” என்றார் அவர் என்னிடம்.

ஆனால் இந்தத் தகவல் உண்மையல்ல. ஒருவிதமான கூட்டு பிரமைதான். மிகச் சமீபத்திய மக்கள்தொகை கணக்கீட்டின்படி, மேற்குவங்கத்தின் மக்கள் தொகையில் முஸ்லீம்கள் 27 சதம் இருக்கின்றனர். இந்துக்கள் சுமார் 71 சதம். இந்தியா முழுக்க. முஸ்லீம் பிறப்பு விகிதம் – இந்துக்களை விட அதிகம் என்றாலும் – கடந்த முப்பதாண்டுகளில் இந்தியாவில் வேறு எந்தக் குழுவின் விகிதத்தை விட வேகமாக குறைந்து வந்துள்ளது.  இதுவரை இல்லாத அளவிற்கு இப்போது குறைவாக உள்ளது. 2100 வாக்கில் மக்கள் தொகையில் முஸ்லீம்களின் எண்ணிக்கை சுமார் 13 சதமாக இருக்கும் என்று மக்கள்தொகை ஆய்வாளர்கள் கணிக்கிறார்கள்.

மாலை ஆகிவிட்டது. பிரேமி தன் உதவியாளரிடம் சொல்லி, உள்ளூர் இனிப்பான பாலுஷாகியை வரவழைக்கிறார்.  நான் சாப்பிட்டுவிட்டு என் தட்டில் இருக்கும் இனிப்பை அந்த உதவியாளரை எடுத்துக் கொள்ளச் சொல்கிறேன். அவர் தயங்குகிறார். “எடுத்துக் கொள். ஒன்றும் பிரச்சனையில்லை. அவர் உன்னைக் கொன்று போடும் ரகத்தைச் சேர்ந்த முஸ்லீம் அல்ல,” என்கிறார் பிரேமி.

எனது பத்திரிகைப் பணி முழுவதிலும், நான் சென்ற பஜ்ரங் தள் அலுவலகங்கள் அனைத்திலுமே நான் ஒரு முஸ்லீம் என்பது ஒரு தடையாக இருந்தது. நான் எரிச்சலூட்டப்படுவது போல், குத்தப்படுவது போல், எனது எதிர்வினைகளுக்காக பரிசீலிக்கப்படுவது போல், சமயங்களில் லேசாக மிரட்டப்படுவது போல் உணர்ந்தேன். ஒரு கட்டத்தில் பிரேமியின் உதவியாளர் ஒருவர், எனக்குக் கேட்கும்படியான உரத்த குரலில் அருகில் நின்றவரின் காதருகில், இந்து மதத்திற்கு மீண்டும் திரும்புவது (கர் வாப்சி) பற்றி என்னிடம் கேட்க வேண்டும் என்று கிசுகிசுத்தார்.

INDIA Uttar Pradesh, three evangelical Christians arrested for ...

“வீடு திரும்புதல்” எனும் பொருள் படும் கர் வாப்சி எல்லா முஸ்லீம்கள், கிறிஸ்தவர்களையும் இந்துமதத்திற்கு மாற்றுவதற்கான முயற்சிக்கு வைக்கப்பட்டுள்ள பெயராகும். “இது முஸ்லீம் பிரச்சனைக்கு இறுதியான தீர்வாகும்” என்று இவ்விதமான ஒட்டுமொத்த மதமாற்றத்தைப் பற்றி ஒரு இந்துத்துவா அறிவுஜீவி கூறியிருந்தார்.

நாங்கள் மொட்டை மாடியில் பேசிக் கொண்டிருந்த அன்று, பிரேமி இந்தக் கருத்து முற்றிலும் நியாயமானது என்று விளக்க முயற்சித்தார். ”எல்லோருமே ஏதோ ஒரு காலத்தில் அவர்கள் இந்துக்களாக இருந்ததை ஒப்புக் கொள்ளவே செய்கிறார்கள். முஸ்லீம் அரசர்களால் கட்டாயத்தின் பேரில் அவர்கள் மதம் மாறியிருக்கிறார்கள்,“ என்றார் அவர். “இப்போது என்ன பிரச்சனை? இப்போது அவர்களைக் கட்டாயப்படுத்த யாரும் இல்லை. அவர்கள் இந்துமதத்திற்கு வந்துவிடவேண்டியதுதான்.“

இதற்கு என்ன சொல்வது என்று தெரியாமல் நான், “ம்ம்ம்“ என்றேன். இருவருக்குமிடையே ஒரு நீண்ட சங்கடமான மௌனம். நான் தலையைக் குனிந்தபடி, நோட்டில் முக்கியமான எதையோ எழுதுவதைப் போல் பாவனை செய்து கொண்டிருந்தேன். சிறிது நேரத்தில், பிரேமி தான் நேரடியாக நடத்திய கர் வாப்சியைப் பற்றிப் பேச ஆரம்பித்தார்.

2018 ஏப்ரலில், வெல்டராக வேலை பார்க்கும் தலித் இந்துவான பவன் குமார் இஸ்லாமிற்கு மதம் மாறிவிட்டார். இந்தத் தகவல் பஜ்ரங் தள்ளிற்கு வந்துவிட்டது. 20 நாட்களுக்குப் பிறகு, பிரேமியின் அடியாட்கள் குமார் வீட்டிற்குச் சென்றார்கள்.  அவரைச் சுற்றி நின்று கொண்டு, அவரது குல்லாவை கழற்றி எறிந்து விட்டு, உண்மையாகவே மதம் மாறிவிட்டாரா, முஸ்லீமாக தொடர்ந்து இருக்கப் போகிறாரா என்று கேட்டபடி அடிக்க, குத்த ஆரம்பித்தார்கள். குமார் இல்லை என்றார். பிறகு அவர்கள் ஒரு நாவிதரை அழைத்து அவரது தாடியை எடுக்கச் செய்தார்கள். கூட்டத்தில் இருந்த ஒருவர் அவரது நெற்றியில் திலகமிட்டார்.

பஜ்ரங் தள் தொண்டர்கள் சிலர் தமது போனை உயர்த்தி, அடுத்து நடக்க இருந்ததை வீடியோ எடுத்தார்கள். அந்த வீடியோ வேகமாகப் பரவியது. அது அந்த மனிதரை பிரேமி சுத்தப்படுத்தும் விரிவான சடங்கு ஒன்றைச் செய்வதைக் காட்டியது. அதில்,  ”இப்போது,  ‘எனக்கு எந்த முஸ்லீமுடனும் உறவு இல்லை, இனி நான் மசூதிக்குச் செல்ல மாட்டேன்,‘ என்று சொல்,” என்கிறார் பிரேமி. அச்சத்தால் நடுங்கிப் போனதில், குமார் அந்த வார்த்தைகளைத் திரும்பச் சொல்வது மிகவும் மெல்லிய குரலில் இருக்கிறது.

“தான் முஸ்லீமாக மாறிவிட்டதாக அவன் சொன்னதுமே. அவனை அப்படியே ஒடுக்கி நசுக்கி விட்டோம். முஸ்லீமாக மாற என்ன தைரியம் ! நான் அவனை திரும்ப இந்துவாக மாற்றி விட்டேன்.” என்று சொல்லி பிரேமி உரக்கச் சிரிக்கிறார்.  அவரது முன்பற்களுக்கு இடையே சின்னதாக ஒரு முக்கோண இடைவெளி இருக்கிறது. அவர் சிரிக்கும் போதெல்லாம் அதை நான் கவனித்திருக்கிறேன்.

இப்போது பிரேமி சீரியஸாகி விட்டார். “இங்கு வாழும் அனைவரையும் இந்துமதத்திற்கு மாற்றுவதுதான் எங்கள் நோக்கம். அது நடக்கும்,“ என்றார். “இன்று உங்களால் அதைப் பார்க்க முடியாது. ஆனால் ஒரு நாள் அது நிச்சயம் நடக்கும்,”  எங்களிடையே இம்முறை சற்று நீண்ட சங்கடமான மௌனம். மீண்டும், நான் எதையும் கேட்காதது போல் பாவனை செய்கிறேன். ”பாருங்கள். ஒருவேளை நான் மறைந்து விடலாம், ஆனால் இது கட்டாயம் நடக்கும்,” என்றார் அவர். பின்னர் அந்த ஜனவரியில் நான் முன் எப்போதையும் விட  என் சொந்த தேசத்திலேயே அந்நியன் போல் உணர்ந்தபடி, திரும்ப இந்தியாவை விட்டு வெளியேறினேன்.

அதிலிருந்து விஷயங்கள் இன்னும் மோசமாகத்தான் செய்தன. 2019 மே மாதம் மிகப் பெரிய வெற்றியடைந்து, மோடி இரண்டாம் முறை பிரமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மூன்று மாதங்களுக்குப் பிறகு, அவரது அரசாங்கம் ஜம்மு காஷ்மீரின் மாநில அந்தஸ்தைத் திரும்பப் பெற்றது, அந்த மாநிலத்தின் முஸ்லீம் பெரும்பான்மையினருக்கு, சுயாட்சியின் எல்லா வடிவங்களையும் பறித்தது.  மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் அந்தப் பகுதியைக் கொண்டுவந்ததும். அவர் அங்கு ராணுவத்தை அனுப்பினார். மாநிலத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களை சிறையில் அடைத்தார். இணையத்தை, கைபேசி சேவையை இம்முறை கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு முடக்கினார்.

Gau Rakshak Hindu PM Modi Shows Love for Cows - Raman Media Network

2019ல் நாட்டின் வருடாந்திர குற்றங்கள் பற்றிய அறிக்கையை வெளியிடும் போது, மோடியின் அரசாங்கம், பத்திரிகையாளர்கள் அல்லது மத சிறுபான்மையினர் மீதான வெறுப்புக் குற்றங்கள் குறித்த எண்ணிக்கையை வெளியிடவில்லை.  அதே சமயம். முஸ்லீம்களுக்கு எதிரான வெறுப்புக் குற்றங்களை ஆராயும் இரண்டு தரவுத்தளங்கள் இணையத்திலிருந்து மறைந்தன.

எல்லாவிதங்களிலும். பாஜகவின் இந்து தேசியவாதிகளின் இறுதி விளையாட்டின் வேகம் அதிகரித்து விட்டது. ஆனால் உத்தரப் பிரதேசத்தில் பிரேமி ஆழ்ந்த யோசனையுடன் காத்துக் கொண்டிருந்தார். 2019 ஆகஸ்ட்டில் பஜ்ரங் தள் மேலிடம் அவரை ஷாம்லியிலிருந்து தென்கிழக்கே மூன்று மணிநேர பயண தூரத்தில் இருக்கும் புலந்த்ஷாருக்கு அனுப்பி விட்டது. அங்கே அனுப்பப்பட்டது பிரச்சனை செய்வதற்காக அல்ல. சேதாரக் கட்டுப்பாட்டிற்காக.

அதற்கு முந்தைய குளிர்காலத்தில் யோகேஷ் ராஜ் என்ற உள்ளூர் பஜ்ரங் தள் மாவட்டத் தலைவர் – பிரேமியிடம் பயிற்சி பெற்றவர்தான் – தலைமையிலான ஒரு கும்பல் எல்லை மீறி விட, இது பொதுமக்களிடம் பெரிய சீற்றத்தை உருவாக்கி விட்டது.  பஜ்ரங் தள் கும்பல் போலீஸ் நிலையத்தைத் தாக்கி ஒரு காவல் ஆய்வாளரைக் கொன்றுவிட்டதாகக் கூறப்பட்டது.  இறந்த அதிகாரியான சுபோத் குமார் சிங் 2015ல் முகமது அக்லக் என்பவர் கும்பலால் தாக்கப்பட்ட வழக்கு விசாரணைக்குத் தலைமை தாங்கியவர். உள்ளூர் பாஜக தலைவர் ஒருவரின் மகன் உட்பட, தாக்குதலில் சம்பந்தப்பட்ட பலரையும் அவர் கைது செய்ததாகச் சொல்லப்படுகிறது. இப்போது, அதற்குப் பழிவாங்குவதற்காக அவர் கொல்லப்பட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.

புலந்த்ஷார் போலீஸார்  பஜ்ரங் தள் மாவட்டத் தலைவர் உட்பட கும்பலின் இரு இளம் தலைவர்களைக் கைது செய்தனர். பஜ்ரங் தள் பற்றி மோசமான செய்திகள் பத்திரிகைகளில் வர ஆரம்பித்தன. நிலமையைச் சீர் செய்து, சற்று கட்டுப்பாட்டைக் கொண்டு வந்து, உள்ளூர் பஜ்ரங் தள் இளைஞர்கள் எதையாவது செய்து  நிலமையை  மேலும் மோசமாக்கிவிடாமல் தடுப்பதுதான் பிரேமிக்குத் தரப்பட்ட பணி. ”எங்கள் தொண்டர்கள் தேவையில்லாத உற்சாகத்தைக் காட்டிவிடாமல் பார்த்துக் கொள்ளத்தான் நான் இங்கு அனுப்பப் பட்டேன்,“ என்று அவர் என்னிடம் கூறினார்.  அவர் அங்கு வந்து மூன்று வாரங்களில், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த இரு இளைஞர்களும் ஜாமீனில் விடுவிக்கப் பட்டார்கள்.

நான் சில வாரங்களில் இந்தியா திரும்பினேன். புலந்த்ஷார் போய் பிரேமியைச் சந்திந்தேன். அவர் அங்கு பொழுதுபோகாதது போல் இருந்தார். பசுவதைக் காரர்களை அடிக்காமல் இருப்பது என்னவோ போல் இருக்கிறது என்றார்.

உள்ளூர் பஜ்ரங் தள் அலுவலகத்தின் இருண்ட சின்ன அறையில் பிளாஸ்டிக் நாற்காலிகளில் அமர்ந்து நாங்கள் பேசிக் கொண்டிருந்த போது, பிரேமியைத் தேடி அறுபது வயதைக் கடந்த ஒருவர் வந்தார். அவர் ஓய்வு பெற்ற குமாஸ்தா. தனது குடியிருப்புப் பகுதிக்கு மாதம் ஒருமுறை வரும் சில கிறிஸ்தவ பிரச்சாரகர்கள் பற்றி பிரேமியிடம் சொல்ல வந்திருந்தார். அவரது உறவினர்கள் சிலர் இந்து மதத்தை விட்டு வெளியேறி விட்டனர். அதனால் அவர் மிகவும் வருத்தமுற்றிருந்தார். அந்த மதப் பிரச்சாரகர்களை பிரேமி கவனிக்க வேண்டும் என்று வேண்டினார். அவர் கிளம்பிச் சென்றதும் பிரேமி செய்தியைப் பரப்ப தன் போனை எடுத்தார். “தலித் பகுதிகளில் கிறிஸ்தவ மதமாற்றம் பற்றி புகார் வருகிறது. எச்சரிக்கையாக இருங்கள்,” என்று மாவட்ட பஜ்ரங் தள் தொண்டர்களுக்கு வாட்ஸ்அப் செய்தி அனுப்பினார்.

இதுதான் வாய்ப்பு என்று நான் சில நாட்களாகவே கேட்க யோசித்துக் கொண்டிருந்த ஒரு விஷயம் பற்றி அவரிடம் வேண்டுகோள் வைத்தேன்.  பிரேமியிடம் அவரது போனை நான் பார்க்கலாமா என்று கேட்டேன்.

சமீப மாதங்களாக, பாஜக மீம்ஸ் உருவாக்குவதற்கு தன்னிடம் உள்ள பெரிய அமைப்பு பற்றி மிகவும் பெருமையாக பேச ஆரம்பித்திருந்தது. 2018 செப்டம்பரில் கட்சியின் சமூக ஊடகத் தொண்டர்களிடம் உரையாற்றிய அமித் ஷா, உத்தரப்பிரதேசத்தில். பாஜக நடத்தும் ஒரு வாட்ஸ்அப் குழுவில் 32 லட்சம் பேர் இருப்பதாகக் கூறினார். “உண்மையோ, பொய்யோ, இனிப்போ, கசப்போ. மக்களுக்கு எந்த செய்தியைச் சொல்ல வேண்டும் என்றாலும். நம்மால் முடியும்,“ என்றார் அவர்.

Bajrang Dal Announces Nationwide Protest Against “Rising Jihadi ...

பல மாதங்களாக பிரேமி போனில் பிஸியாக இருப்பதை நான் கவனித்து வந்திருக்கிறேன்.  பல வருடங்களாக இந்து வலதுசாரியின் எழுச்சியில் வாட்ஸ்அப் எவ்வளவு முக்கியமானதாக ஆகிவிட்டது என்பது பற்றி கேள்விப் பட்டுக் கொண்டே இருக்கிறேன். ஆனால், வாட்ஸ்அப் என்பது ஒரு கறுப்புப் பெட்டி. பயன்படுத்துவோர் மட்டுமே பார்க்க முடிந்த ஒரு தனிப்பட்ட சேவை. பிரேமியின் வாட்ஸ்அப்பை சில நிமிடங்களுக்காவது.  பார்த்தால்தான் அவரும் அவரது கூட்டாளிகளும் இந்த உலகை எவ்வாறு பார்க்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடியும் என்று நினைத்தேன்.

நான் கேட்டதும் பிரேமி மிகவும் சங்கடப்பட்டார். ஆனால் கடைசியில் தனது போனை என்னிடம் தந்தார். அதில் உள்ள தகவல்களை அவர் சரியென்று சொன்னால் மட்டுமே எனக்கு அனுப்பிக் கொள்ளலாம் என்ற ஒரு நிபந்தனையுடன் தந்தார். அவர் உறுப்பினராக இருந்த பல நூறு குழுக்களில் ஒன்றிரண்டைத் தான் நான் பார்த்தேன். ஒன்று உள்ளூர் புலந்த்ஷார் பஜ்ரங் தள் குழு. அதில் பிரேமி பல ஆலோசனைகளையும், எச்சரிக்கைகளையும் சொல்லி ஒருங்கிணைத்து வருவதைப் பார்க்க முடிந்தது. மற்றது ஏராளமான மீம்ஸ்களும், பிரச்சாரங்களும் உள்ள ஒரு தேசியக் குழு.  அதில் பலவற்றை நான் பார்த்தேன். அதில் இருந்த ஒரு நீண்ட இந்தி செய்தி பின்வருமாறு –

இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் கூட காஷ்மீர் பள்ளத்தாக்கின் மக்கள்தொகையில் பாதி இந்துக்கள்தான். இன்று காஷ்மீரில் ஒரே ஒரு இந்து கூட மிச்சமில்லை. பத்தாண்டுகளுக்கு முன்பு கேரளாவின் மக்கள்தொகையில் 60 சதம் இந்துக்கள். ஆனால், இன்று அங்கு மக்கள்தொகையில் இந்துக்கள் வெறும் 10 சதம்தான். சிக்கிம், நாகாலாந்து, அஸ்ஸாம் போன்ற வடகிழக்கு மாநிலங்களில் இந்துக்கள் தினமும் கொல்லப்படுகிறார்கள், வெளியேற்றப்படுகிறார்கள். அல்லது மதமாற்றம் செய்யப்படுகிறார்கள்….ஆப்கானிஸ்தானில் இப்போது இந்துக்களே இல்லை. பாகிஸ்தானிலும், பங்களாதேஷிலும் இந்துக்கள் விரைவில் அபூர்வ ஜந்துக்களாகி விடுவார்கள். ஏன், இந்தியாவிலும் கூட, இந்துக்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. இதற்கு என்ன காரணங்கள்???? இந்தக் கேள்விக்கு இப்போதே நீங்கள் விடையளிக்காவிட்டால் ? எதிர்காலத்தில் நீங்கள் எதிர்வினையாற்றும் நிலையில் இருக்கமாட்டீர்கள்.

மற்றொரு செய்தி –

கேரளாவில் காஸர்கோடில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் குழந்தை பிறப்பு பற்றிய ஒரு புள்ளிவிபரம். இந்துக்கள் 37. கிறிஸ்தவர்கள் 12. முஸ்லீம்கள் 138. முஸ்லீம்கள் குழந்தைகளை உற்பத்தி செய்ய, இந்துக்கள் செல்வத்தை உற்பத்தி செய்கிறார்கள். ஆனால் அதே செல்வம் இந்த முல்லாக்களுக்காகப் பயன்படுத்தப் படுகிறது. இதுதான் இந்த நாட்டின் இந்துக்களின் கறுப்பு வரலாறுஜெய் இந்துத்துவா.

மற்றொரு பதிவு வேறொரு விளக்கத்தைத் தருகிறது. பல்வேறு வகையான கற்பிதமான ஜிகாத்துகளின் தோற்றம் பற்றிய தகவல்கள். அவற்றை அது வன் ஜிகாத், மென் ஜிகாத் என்று அடிப்படையில் இரண்டு முக்கியப் பிரிவுகளாகப் பிரிக்கிறது. வன் ஜிகாத்தில் மக்கள்தொகை ஜிகாத், லவ் ஜிகாத், நில ஜிகாத் என்று இப்போது நான் அறிந்துள்ள பல்வேறு வகைகளும், பிரேமி என்னிடம் இதுவரை சொல்லாத பல வகைகளும் இருக்கின்றன. இவையெல்லாம் எந்த அளவிற்கு முறைப்படுத்தப் பட்டுள்ளன என்று எனக்கு வியப்பாக இருந்தது.

என்றாலும், அந்தப் பதிவுகள் எல்லாம் காய்ச்சல் நேரத்துக் கனவுகள் போல் அர்த்தமற்று இருந்தன. காஸர்கோடு பிறப்பு விகிதம் பற்றிய எண்ணிக்கைக்கான ஆதாரத்தை என்னால் கண்டுபிடிக்கவே முடியவில்லை. சமீபகாலம் வரை காஷ்மீர் பள்ளத்தாக்கு இந்து பெரும்பான்மை இடமாக இருந்தது அல்லது இப்போது அங்கு இந்துக்களே இல்லை போன்ற கருத்துகளும் விபரீதமானவை. 1901ல் பிரிட்டிஷார் நடத்திய ஒரு கணக்கெடுப்பின்படி, அந்த சமவெளியிள் மக்கள்தொகையில் இந்துக்கள் 5.2 சதம். 2011 அவர்கள் 1.2 சதம்.

கிறிஸ்தவ பெண்களை குறிவைத்து லவ் ...

ஆனால், இந்த சமூக ஊடகத் தளங்கள் இந்து தீவிரவாதம் பற்றி ஒரு பெரிய மாயத்தோற்றத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும் கூட, அதைப் பரப்புவதற்கு அதிர்ச்சியூட்டும் வகையில் திறன்மிக்க உள்கட்டுமானத்தை உருவாக்கி வைத்துள்ளார்கள் என்பது மிகவும் உண்மை. இந்தியாவில் 40 கோடி வாட்ஸ்அப் உபயோகிப்போரும். 26 கோடி ஃபேஸ்புக் உபயோகிப்போரும் இருக்கிறார்கள். இரண்டிற்குமே இந்தியா மிகப் பெரிய சந்தையாக இருக்கிறது.  வெறுப்புப் பேச்சு, தவறான தகவல்கள் ஆகியவற்றிற்கு எதிரான அதன் சமூகத் தரங்களை (community standards) பாரபட்சமாக அமுல்படுத்துவதாக இந்தியாவில் ஃபேஸ்புக் மிகப் பெரிய கண்டனத்தை எதிர்கொண்டது. 2019ல் ஈக்குவாலிடி லாப்ஸ் என்ற ஒரு சுய உதவிக் குழுவின் அறிக்கை ஒன்று இஸ்லாமிற்கு எதிரான பதிவுகள் அதில் நீக்கப்படுவதில்லை என்று சுட்டிக்காட்டியது. குறிப்பாக ஒரு உதாரணம் காட்டவேண்டும் என்றால், ஏராளமான இந்திய ஃபேஸ்புக் பதிவுகள் மாயன்மாரின் ரோஹிங்க்யா முஸ்லீம் அகதிகளைக் குறிவைத்தன என்றது அந்த அறிக்கை. இந்த அகதிகள் ஏற்கனவே தங்கள் நாட்டில் சமூக ஊடகங்களால் தூண்டிவிடப்பட்ட ஒரு இனவொழிப்பினால் பாதிக்கப்பட்டவர்கள்.  இந்தியப் பக்கங்கள் இவர்களை “கரப்பான்பூக்சிகள்” என்று குறிப்பிட்டன. அவர்கள் இந்துக்களை கொன்று தின்பதாக ஒரு போலி வீடியோ  பதிவேற்றப்பட்டுள்ளது. இது ஃபேஸ்புக் சமூக தரங்களுக்கு முற்றிலும் மீறியதாகும்.

இரண்டு தளங்களுக்கும் உரிமையாளரான ஃபேஸ்புக்,  இந்தியாவில் பதிவுகளைப் பரிசீலிக்கும் தனது குழுவை தான் விரிவுபடுத்தி இருப்பதாகவும், தனது தரங்களுக்கு ஒவ்வாத  பதிவுகளை நீக்குவதில் முன்னேற்றம் கண்டுள்ளதாகவும் வயர் நிறுவனத்திடம் தெரிவித்துள்ளது. ஆனால் அதைவிட பிரபலமான தளமான வாட்ஸ்அப்பிற்கு அப்படியான சமூக தரங்கள் எதுவும் கிடையாது. அதன் அனைத்து தகவல்களும் சம்பந்தப்பட்ட இரு பயனாளர்கள் மட்டுமே பார்க்குமளவு ரகசியமானவை என்பதால், அது முழுக்க முழுக்க அதன் பயனாளர்களின் கைகளில்தான் உள்ளது.

சுமார் பத்து நிமிடங்கள் பார்த்துவிட்டு, அவரது போனை அவரிடம் திருப்பித் தந்தேன். அவர் சற்று கோபமடைந்தது போல் இருந்தது.

இப்போது அவரும்,பஜ்ரங் தள்ளும் எதில் கவனம் செலுத்தி வருகிறார்கள் என்று கேட்டேன். “சட்டவிரோதமாக குடியேறுபவர்கள் பற்றி,“ என்றார். இலட்சக்கணக்கான பங்களாதேஷிகள் இந்தியாவிற்குள் ஊடுருவி, நாடு முழுவதும் பரவி இருப்பதாகவும், இது பற்றி பஜ்ரங் தள் மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பதாகவும் அவர் கூறினார். “கடந்த 5 – 10 ஆண்டுகளில் ஒவ்வொரு நகரத்திற்கு வெளியிலும் சட்டவிரோதமாக முஸ்லீம் குடியிருப்புகள் உருவாகி இருப்பதை நீஙகள் கவனித்திருக்கிறீர்களா? இப்போது இது புதிது. அவர்கள் இதுவரை அந்தப் பகுதியில் வசிக்காதவர்கள்,“ என்றார் அவர். “இந்தியர் போன்ற தோற்றம் இல்லாத இவர்கள் போன்றோர் பற்றி நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்,“ என்றார்.  இந்திய முஸ்லீம்களின் எளிய குடியிருப்புகளைத்தான் அவர் குறிப்பிடுவது போல் இருந்தது.

“கவனமாகக் கண்காணிக்க வேண்டும். ஊடுருவல்காரர்களை அடையாளம் காண வேண்டும்,“ என்றார். “அவர்கள் நமது நாட்டைப் பிடித்த கரையான்கள். நமது வளங்களில் உயிர் வாழ்பவர்கள். கரையான்களைப் போல் அவர்களை ஒழிப்பது அவசியம்,“ என்றார். அவர் சொன்னது, ஏப்ரலில் மேற்கு வங்கத்தில் பாஜகவின் ஒரு தேர்தல் பேரணியில் அமித் ஷா பேசியதை ஒட்டியிருந்தது.. உள்துறை அமைச்சர்,  ” ஊடுருவல்காரர்கள் மண்ணில் வரும் கரையான்கள் போன்றவர்கள்,” என்று சொல்லியிருந்தார். ”பாஜக அரசு அந்த ஊடுருவல்காரர்களை ஒவ்வொருவராக எடுத்து வங்கக் கடலில் தூக்கி எறியும்,“

நாடு முழுவதும் ஊடுருவும் இந்த பங்களாதேஷிகளை அடையாளம் காண அரசாங்கம் நாடு முழுவதும் உள்ள குடிமக்களுக்கான ஒரு பதிவை நடத்த வேண்டும், அப்போதுதான் யார் உண்மையான இந்தியர்கள் என்று தெரியும் என்று அவர் சொன்னார்.

CAA protest: Improvement in Assam situation; train services ...

பிரேமி சொன்னதன் ஒரு வடிவம், ஏற்கனவே பங்களாதேஷ் எல்லையில் உள்ள வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் இருந்தது. கடந்த சில ஆண்டுகளாகவே, அந்த மாநிலத்தின் 3.3 கோடி மக்களை, பங்களாதேஷ் உருவான ஆண்டான 1971ற்கு முன் அவர்களோ, அல்லது அவர்களது முன்னோர்களோ இந்திய குடிமக்களாக இருந்ததற்கு ஆதாரம் அளிக்குமாறு அரசாங்கம் பணித்திருந்தது.  ஆனால், பல இந்தியர்களுக்கும் இதற்கான சரியான ஆவணங்களைத் தேடித் தருவதில் சிரமங்கள் இருந்தன.   இறுதியில், சுமார் 19 லட்சம் மக்கள் அந்தியர்களாகக் கருதப்பட்டார்கள். ஒருபுறம், அவர்களை அடைத்து வைக்க பிரும்மாண்டமான கூடங்களைக் கட்டிக் கொண்டே, மறுபுறம், அவர்கள் தங்கள் நிலை பற்றி மேல்முறையீடு  செய்ய 120 நாட்கள் அவகாசம் அளித்தது அரசாங்கம். பாஜகவின் நோக்கிலிருந்து பார்த்தாலும், இந்த முயற்சி ஒரு தோல்விதான். இந்த 19 லட்சம் மக்களில் பெருமளவு இந்துக்களும் இருந்தார்கள். இதனால் பாஜகவின் மாநிலத் தலைமை இந்த விஷயத்தில் தமக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று மறுக்க நேர்ந்தது.

ஆனால், அரசியலில் தனக்கு ஒரு  நல்ல எதிர்காலத்தை எதிர்பார்ப்பதாக என்னிடம் சொன்ன பிரேமி, இப்போதும் இந்தத் திட்டம் நாடு தழுவிய அளவிற்கு நடக்க வேண்டும் என்று விரும்பினார். ஏனெனில் அதன் மிகப் பெரிய குறைபாட்டை ஏற்கனவே சரிசெய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.

இதற்கு சில வாரங்களுக்குப் பிறகு, நவம்பர் இறுதியில், 2020ல் இந்தியா முழுக்க ஒரு தேசிய குடிமக்கள் பதிவேடு கொண்டு வரப்படும் என்று அமித் ஷா அறிவித்தார். பின்னர் டிசம்பர் 9 அன்று,  குடியுரிமைத் திருத்த மசோதா என்ற ஒரு மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்தார்.  பங்களாதேஷ், பாகிஸ்தான், அல்லது ஆப்கனிஸ்தானிலிருந்து சட்டவிரோதமாகக் குடியேறிய ஒருவர் இந்து, சீக்கியர், பௌத்தர், ஜைனர், பார்சி அல்லது கிறிஸ்தவராக இருந்தால், அவர் தமது இந்தியக் குடியுரிமையை விரைவாகப் பெற இந்த மசோதா வழிவகை செய்யும். வேறு வார்த்தைகளில் சொன்னால், முஸ்லீம்கள் மட்டும் தான் கவலை கொள்ள வேண்டும். மசோதா இரண்டே நாட்களில் நிறைவேறியது.

இந்த புது சட்டமும், தேசிய குடிமக்கள் பதிவேடும் சேர்ந்தால், இந்திய முஸ்லீம்களின் குடியுரிமையைப் பறிப்பது எளிதாகிவிடும் என்பதை மக்கள் உடனே புரிந்து கொண்டார்கள். மோடியின் ஆட்சிக்கு எதிராக எழுந்த முதல் மக்கள் போராட்டத்தில், தாராள மனப்பான்மை கொண்ட இந்துக்களும், மதச்சார்பற்ற இந்தியர்களும் பாஜக அரசாங்கத்தின் இந்த திட்டத்தின் பயங்கரத்தை எதிர்த்தார்கள். “கோல்வால்கரின் கனவு நினைவாகிறது,“ என்றது ஒரு தலைப்புச்செய்தி.  காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவரான சசி தரூர். இது “ தமது முன்னோர்கள் தம் உயிரைத் தியாகம் செய்து உருவாக்கிய இந்தியா என்ற கருத்தாக்கத்தின் மீதான மிகப் பெரிய தாக்குதல்,” என்றும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மீறுவது என்றும் கூறினார்.  சற்று நிலைகுலைந்து போன பாஜக. புதிய குடியுரிமைச் சட்டத்திற்கும், தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என மறுத்தது.   இவை இரண்டும் ஒன்றிற்கொன்று பொருத்தமானவை என்று அமித் ஷா திரும்பத் திரும்பக் கூறிவந்ததை அப்படியே மறுத்தது. அதே சமயம், மக்களை மொத்தமாக அடைத்து வைப்பதற்கான மையங்களைக் கட்டுவது நாட்டின் பிற பகுதிகளுக்கும் பரவியது.

.இந்த பிப்ரவரியில், குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து கொண்டிருந்த நிலையில் டொனால்ட் டிரம்ப் டில்லி வந்தார். டிரம்ப் வருகையையொட்டி, டில்லியின் வடகிழக்குப் பகுதியில் நடந்து வரும் ஒரு முஸ்லீம் காத்திருப்புப் போராட்டம் அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்று ஒரு உள்ளூர் பாஜக தலைவர் கோரினார். உடனே, 2002ல் மோடி முதன்முறை முதலமைச்சராக இருந்த போது குஜராத்தில் நிகழ்ந்த வன்முறையை நினைவூட்டும் வகையிலான ஒரு வன்முறையை இந்து தேசியவாதிகள் டில்லியில் நிகழ்த்தினர். ஊரெங்கும் சுற்றி வந்த இந்துக் கும்பல்கள் முஸ்லீம் வீடுகளைத் தாக்கின. அவர்களது கடைகளின் மீது குண்டுகளை வீசின. அவர்களைத் தாக்கின. அமித் ஷாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் டில்லி போலீஸ் சிசிடிவி கேமராக்களை உடைத்து நொறுக்குவது, கடுமையாக காயமடைந்து கிடக்கும் முஸ்லீம்களை தேசிய கீதம் பாடுமாறு கட்டாயப்படுத்துவது போன்ற வீடியோக்கள் வெளிவந்தன. 53 பேர் கொல்லப்பட்டார்கள். இவர்களில் பெரும்பாலானோர் முஸ்லீம்கள். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தார்கள். இதனிடையே ஒருசில மைல்கள் தூரத்தில் நடந்து கொண்டிருந்த அரசு விருந்தில் டிரம்ப் மோடியைப் புகழந்து கொண்டிருந்தார். கப்பற்படையின் இசைக்குழு இசைத்த எல்டன் ஜானின் “Can You Feel the Love Tonight“ ஐ ரசித்துக் கொண்டிருந்தார்.

Namaste Trump': 100,000 People Turn Out To Welcome U.S. President ...

நடப்பவற்றை நியூயார்க்கிலிருந்து கவனித்து வந்த என் மனதுள் என்னமோ பிசைந்தெடுக்கும் வேதனை.  என் தொழிலில் பெரும்பகுதியை நான் இந்தியாவின் மத வன்முறை பற்றிய செய்திகளை எழுதுவதில் கழித்தவன். ஆனாலும், மதமோதல்கள் எல்லாம் டில்லிக்கு வெளியே – குறைந்தபட்சம் டில்லியிலிருந்து ஓரிரு மணிநேரப் பயண தூரத்தில், தூசியும் புழுதியுமான முஸாஃபர்நகர், ஷாம்லி, அல்லது பிஷாரா மாதிரி இடங்களில் – தான் நடக்கும் என்று எப்போதுமே நினைத்து வந்தேன். இப்போது, தலைநகரோடு நான் எப்போதும் தொடர்புபடுத்திப் பார்க்கும் ஒரு பாதுகாப்பான உணர்வு போய்விட்டது. “ஜெய் ஸ்ரீராம்“ என்ற கோஷத்தோடு, ஒரு இந்துக் கூட்டம் ஒரு இளைஞனின் காலைப் பிடித்து இழுத்துச் செல்லும் வீடியோவைப் பார்க்கும்போது. முகமது அக்லக்கைத் தாக்கும் அந்தக் காட்சி எனக்கு மிகவும் தெரிந்த பகுதிக்கு அப்படியே இடம்மாறி விட்டது போல் இருந்தது.

அதிலிருந்து, என் குடும்பத்திற்கு என்ன நேருமோ, என் பெற்றோர் காவல் முகாமிற்கு அனுப்பப்படுவார்களோ என்ற அச்சம் என்னைத் துன்புறுத்துகிறது. தமது பெற்றோர்கள் இந்தியாவில் தான் பிறந்தார்கள் என்பதற்கான ஆவணங்களை என் பெற்றோரால் காட்ட முடியாது என்ற கவலை எனக்கு வந்து விட்டது. இதுவரை என் நாட்டைப் பற்றி உணராத வகையில் ஒரு வினோதமான, மிகவும் தனிப்பட்டதான, துரோகம் இழைக்கப்பட்டு விட்டதான உணர்வு எனக்கு ஏற்பட்டது. எந்த மதத்தினராயினும், அனைவரையும் பாதுகாக்கும் அதன் அரசியலமைப்பு உறுதிமொழியை இந்தியா உடைத்துவிட்டது.  எதுவும் எங்களைக் காப்பாற்ற முடியாது என்பதை முஸ்லீம்களாகிய நாங்கள் உணரத் துவங்கியுள்ளோம். மதச்சார்ப்பற்ற இந்தியா என்ற கருத்தாக்கத்தைப் போற்றும். பரந்த மனம் கொண்ட இந்துக்கள் கூட, இந்து பொதுப்போக்கு எந்த அளவிற்கு தீவிரமாக உள்ளது என்பதை, விவேக் பிரேமி போன்ற இந்துத்துவ சார்புள்ள ஒரு முரடன் இந்திய அரசியலின் மையத்தில் இன்று நிற்கமுடிகிறது என்பதை, இன்னுமே சரிவரப் புரிந்து கொள்ளவில்லை.  இந்த வருட ஆரம்பத்தில், பிரேமி பஜ்ரங் தள்ளில் தனது முழு நேரப் பணியை விட்டு விலகி, பாஜகவின் மாவட்டச் செயலாளராகி விட்டார்.

டில்லி வன்முறைக்குச் சில நாட்களுக்குப் பிறகு. ஒரு தேசிய இந்தி தொலைக்காட்சியின் செய்தித் தொகுப்பாளர் ஒருவர் பல்வேறு வகையான ஜிகாத்துகளின் அபாயங்கள் குறித்து விவாதிக்கும் நிகழ்ச்சி ஒன்று ஒரு மணி நேரத்திற்கு நடத்தினார். அதில் பல்வேறு வன் ஜிகாத், மென் ஜிகாத் வகைகளைக் காட்டும், பல காட்சிகளைக் காட்டினார். பிரேமியின் வாட்ஸ்அப்பில் நான் பார்த்த அதே காட்சிகள். நிலஜிகாத் என்ற ஹேஷ்டாக்குடன் முஸ்லீம்களால் ஆக்கிரமிக்கப்பட்ட கட்டிடங்களின் புகைப்படங்களை நேயர்கள் அனுப்பலாம் என்று அந்த செய்தித் தொகுப்பாளர் அழைப்பு விடுத்தார்.

இந்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் இந்தியாவில் தேசிய மக்கள்தொகை பதிவு – தேசிய குடிமக்கள் பதிவேட்டை உருவாக்குவதில் முதல்படி – துவங்குவதாக இருந்தது. ஆனால், மற்றொரு பயங்கரம் இந்த பயங்கரத்தை ஒத்திவைத்து விட்டது. மார்ச் 25 முதல் கோவிட் – 19 பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமலாகிவிட்டது. அந்த மாத இறுதியில், டில்லியில் ஒரு முஸ்லீம் மத அமைப்பு நடத்திய ஒரு சர்வதேச நிகழ்வில் கலந்து கொண்ட பலருக்கு கொரோனா தொற்று இருப்பதாகக் கூறப்பட்டது. உடனடியாக இந்தி மொழி சேனல்கள் இந்த அமைப்பினரை இந்தியா முழுவதும் வைரஸ் தொற்றைப் பரப்பும் தீவிரவாதிகளாகக் காட்ட ஆரம்பித்தன. இப்போது ட்விட்டரில் ஒரு புதிய ஹேஷ்டாக் பிரபலமாகிவிட்டது – #கொரோனாஜிகாத்.

– முகமது அலி (ட்விட்டர் பக்கம்: @hindureporter) புதுடில்லியிலும், நியூயார்க்கிலும் வசித்து வரும் எழுத்தாளர். நரேந்திர மோடி ஆட்சியில் இந்தியா என்ற நூலை எழுதி வருகிறார். ஈமெயில்: [email protected]

Courtesy: WIRED Magazine

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *