காடாறு மாதம் வீடாறு மாதம் என்பதுபோல் வாழ்பவர்கள் நாடோடிகள்.இன்றைய நவீன வாழ்க்கையில் வேலைக்காக தொடர்ந்து இருப்பிடத்தை மாற்றி கொண்டே இருக்கும் நம் வாழ்க்கையில்.இவர்கள் தங்கள் தலைமுறை தலைமுறையாக செய்து வரும் குல தொழிலுக்காக நாடோடி வாழ்வியலை இன்னும் தொடர்ந்து வருகின்றனர். குடுகுடுப்பைகாரர்கள், ஆடுமேய்ப்பவர்கள், பன்னிமேய்ப்பவர், சாட்டையடிகாரர்கள், பொம்மை விற்பவர், பெரம்பிலான நாற்காலிகள் செய்பவர், கடவுள் வேடம் போடுபவர்கள், சர்க்கஸ் கலைஞர்கள்,தோல் கூத்து கலைஞர்கள், இவர்கள் அனைவரும் நாடோடிகளே. இவர்களுடைய வரலாறு என்பது மதம் மற்றும் சாதியின் இறுதி வடிவமான குலத்தாலே இந்த வேலைகளை தொடர்ந்து தலைமுறை தலைமுறையாக செய்து வருகின்றனர்.

இவர்கள் விரும்பியே விரும்பாமலோ இந்த தொழில்களை செய்து வருகின்றனர்.காரணம் இந்த தொழில்கள் தங்களுக்காக கடவுளால் ஒதுக்கபட்டவை புனிதமானது என்ற மனபான்மையே காரணம். இதில் ஆடு மேய்ப்பவர்கள் கூட்டமாக ஓரே ஊரில் வசிக்கிறார்கள். இவர்கள் வாழும் உயர் சாதியினர் வைத்திருக்கும் ஆடுகளை மேய்க்க வருடம் முழுவதும் ஊர்ஊராக ஆடுகளோடு சுற்றுகின்றனர். இதற்காக ஆரம்பத்திலேயே ஒரு தொகையை பெற்று அதனை வீட்டில் கொடுத்துவிட்டு  வருகின்றனர். இதனால் வருடம் முழுவதும் வீடுகளுக்கு செல்லாமல் தோட்டங்களில் பட்டி போடுவதால் கிடைக்கும் சிறு தொகையினால் தங்களுடைய பசியை போக்கி கொண்டு தினமும் சராசரியாக 10கிலோ மீட்டர் தூரம் நடந்தே பயணிக்கின்றனர். திரும்பி பாதியில் வீடுகளுக்கு வர கூடாது அப்படி வரும்பட்சத்தில் பெற்ற பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும்.இதுதான் நவீன பண்ணை அடிமைதனம் குடுகுடுப்பைகாரர்கள் என்பவர்கள் ஊர்ஊராக சென்று இரவு வேளைகளில் குறி சொல்கின்றனர்.இவர்களில் தலைவர் என்ற ஒருவர் உண்டு இவரின் சொல்படிதான் அனைவரும் நடக்கின்றனர்.இவருடைய பேச்சை மீறும் பட்சத்தில் இவர்களுடைய சாதியில் இருந்து தள்ளி வைக்கபடுகின்றனர்.இவர்கள் குறிப்பிட்ட மாதங்களில் மட்டுமே தங்கள் ஊர்களுக்கு சென்று சிறிது நாட்கள் தங்கி விட்டு திரும்பவும் தங்கள் நாடோடிகளாக சுற்றுகின்றனர்.இதே போல் தான் தங்களுடைய தொழில்களுக்காக நாடோடிகளாக ஊர் ஊராக சுற்றுகின்றனர். இவர்கள் தங்களுடைய தொழில்களை தவிர வேறு எந்த தொழில்களையும் செய்வதில்லை. இன்றுவரை நாடோடிளின் இருப்பிடங்கள் என்பது சந்தைகளும்,சத்திரங்களும் தான்.

ஊசி, பாசி, பொம்மையெல்லாம் வீணாப்போச்சு... சாப்பாட்டுக்கே திண்டாடுறோம்”-  கலங்கும் நாடோடிகள்! |These tribal people are facing issues during lockdown

இவர்களுடைய வேலைகளில் பெரும்பாலும் வருமானம் இல்லாதாதல் அரை வயிற்றுடனேயே தூங்க செல்கின்றனர். இதில் இவர்களில் சிலர் தங்ளுடைய நிலைமையை மாற்றலாமென்றாலும் இவர்களுக்குண்டான பிரச்சனை என்னவெனில் முறையான அரசு ஆவணங்கள் ஏதும் இல்லாததால் இவர்கள் வேறு வேலைகளுக்கு செல்ல முடிவதில்லை படிப்பதற்கேசெல்ல முடிவதில்லை. இரண்டாவதாக ஓரிடத்தில் நிலைத்து இல்லாத காரணத்தால் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடிவதில்லை. இந்த காரணங்களால் திரும்பவும் அடுத்த தலைமுறையும் இதே வேலைகளை செய்கின்றனர். இவர்கள் தங்களுக்குள்ளேயே உட்சாதி திருமணம் செய்து கொள்வதால் இன்று வரை தங்களுடைய சாதியை உயிர்ப்புடன் வைத்திருக்கிறார்கள்.குழந்தை திருமணமும் இவர்களில் நடக்கிறது. இவை பெரும்பாலும் தலைவரே முடிவு செய்வார்என்பதால் இவை வெளி உலகுக்கு தெரிவதில்லை. இவர்கள் செய்கறார்கள் எனும் வாதம் இருந்தாலும் இவர்கள் இவ்வாறு வாழ்வதற்கும் சமூகத்திற்கும் பங்கு இருந்து கொண்டே இருக்கிறது. அதனால் தான் இவர்கள் இன்னும் இந்த வேலைகளில் இருந்து கொண்டே இருக்கிறார்கள்.

இவர்களுக்கு கல்வயறிவு இல்லையென்பதே இங்குள்ள பிரச்சனை. இந்த அறிவு தடுப்பு தான் இவர்களை திரும்பவும் அதே நிலைக்கு தள்ளுகிறது. அறியாமை தான் அவர்களுக்குள்ள பிரச்சனை.ஒரு வகையில் அவர்கள் சுதந்திரமானவர்களாக இருக்கலாம். ஆனால் அவர்களுடைய சுதந்திரத்தை அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்கு பயன்படுத்தமுடியாது. அனைத்து மனிதர்களின் நலன்களும் சமமாக மதிக்கபட்டால்தான் சமத்துவ சமூகம் உருவாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *