உலக அறிவியல் தின சிறப்பு கட்டுரை(World Science Day) : பிரபஞ்ச கடிகாரம் எப்போதிலிருந்து  காலத்தை பதிவுசெய்ய தொடங்கியது? - https://bookday.in/

உலக அறிவியல் தின சிறப்பு கட்டுரை

உலக அறிவியல் தின சிறப்பு கட்டுரை

பிரபஞ்ச கடிகாரம் எப்போதிலிருந்து  காலத்தை பதிவுசெய்ய தொடங்கியது?

ஆயிஷா இரா நடராசன்

காலம் மற்றும் வெளி குறித்த இரு கோட்பாட்டியல் நூல்களை சமீபத்தில் வாசிக்க நேர்ந்தது. இரண்டும் ஒன்றுக்கு ஒன்று முரண்படுகின்ற மாற்றுப் பார்வைகள் கொண்டவைகளாக இருந்தன. இயற்பியலின் பிரம்மாண்ட பிரபஞ்ச கேள்விக்கான விடை தேடும் பயணத்தில் இந்த நூல்களை வாசித்தது என்பது மிக அற்புத அனுபவமாகும். காலம் முன்னால் தோன்றியதா அல்லது பிரபஞ்சம் தான் வெளியோடு முன்னால் தோன்றியதா இது கோட்பாட்டியலுக்கு சவால் விடுகின்ற மிகப்பெரிய கேள்வியாகும் இரண்டு புத்தகங்களுமே இந்த கேள்விக்கு மிகவும் சுவாரஸ்யமான பதில்களைக் கொடுத்திருந்தன.

முதல் புத்தகம் லீ ஸ்மோலின் என்னும் அறிஞர் எழுதிய டைம் ரிபான் TIME REBORN என்கிற புத்தகம். ஏற்கனவே அறிஞர் லீஸ்மோலின் தி டிரபுள் வித் ஃபிசிக்ஸ் என்கிற புத்தகத்தின் மூலம் எனக்கு நன்கு அறிமுகமானவர். ஸ்டீபன் ஹாக்கின்ஸ் எழுதிய மிகப் பிரபலமான புத்தகம் THE BRIEF HISTORY OF TIME ஆகும். இந்த நூலில் பிரபஞ்சத்தின் ஒட்டுமொத்த வரலாறு காலத்தின் வரலாறுதான் என்று அவர் குறிப்பிடுகின்றார். ஆனால் நம் அனைவருக்கும் தெரியும் கடிகாரம் ஓடுவதை நிறுத்துவதே இல்லை.

உலக அறிவியல் தின சிறப்பு கட்டுரை(World Science Day) : பிரபஞ்ச கடிகாரம் எப்போதிலிருந்து  காலத்தை பதிவுசெய்ய தொடங்கியது? - https://bookday.in/

புதிர் நிறைந்த தத்துவார்த்த கேள்வி போல இது இருக்கலாம் ஆனால் உண்மையில்  காலம் என்பதை நினைக்கும் பொழுது நம்மால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியாது. காலம் முன்னோக்கி நகர்ந்து கொண்டே இருக்கிறது. ஒருபோதும் அது பின்னோக்கி நகர்வது கிடையாது. தற்போது நாம் இந்தக் கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும் பொழுதும் நீங்கள் அதை வாசித்துக் கொண்டிருப்பதற்கும் இடையில் காலம் கொஞ்சம் தூரம் ஓடி இருக்கிறது. நம்மைச் சுற்றி இருக்கக்கூடிய பொருட்கள் இடம் சார்ந்தவையாக இருப்பது போலவே எந்தவகையான அடிப்படையிலும் இயற்பியல் காலத்தை கணக்கீட்டில் சேர்த்துக்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை. அது ஏதோ இருக்கிறது என்பது போல தான் இதுவரை இயற்பியல் அதை நடத்தி இருக்கிறது.. இயற்பியலின் எந்த சமன்பாட்டிலும் காலம் முன்னோக்கி நகர்ந்து கொண்டிருக்கும். வேகம் நிறைந்த ஒரு தரவாக அறிவிக்கப்படவில்லை.

PHYSICAL REALITY என்கிறதன் எதார்த்தம் அறிவியல் நிரூபணங்கள் மற்றும் உண்மைகள் நிலையில் நாம் அவற்றை எவ்வாறு பிரதிநிதித்துவப்படுத்துகின்றோம் என்பதிலிருந்து நமக்கு சுயாதீனமாக உள்ளனவா என்கிற கேள்வியோடு தொடங்குகிறது. பருப் பொருள் புலன்கள் மற்றும் இயற்பியல் வெற்றிடம் அனைத்தும் ஒரு விளக்கத்தில் ஒன்றிணைந்துள்ளன என்பது சார்ந்தது அந்த கருத்து. ஆனால் இதில் காலம் ஏன் ஒரு தரவாகச் சேர்த்துக்கொள்ளப்படவில்லை என்பதுதான் இன்றைய விஞ்ஞானத்தின் கேள்வி.

இயற்பியல் யதார்த்தம் இயற்பியல் விதிகள் அல்லது இயற்பியல் மூலம் கட்டுப்படுத்தப்படும் ஒன்றாக உள்ளது. இது பொது யதார்த்தத்திலிருந்து வேறுபட்டது. இது புற நிலை அல்ல ஆனால் சாதாரண சமூக விளக்கம் எதற்கும் இது கட்டுப்பட்டது அல்ல. இயற்பியல் விதிகளை அடிப்படையாகக் கொண்ட இந்த கள எதார்த்தம் என்பது நிலை பெற்ற ஒரு இடத்தில் நியூட்டனின் விதிகள் அடிப்படையில் இயங்குகின்ற ஒரு சாதனமாக பிரபஞ்சத்தைப் பார்க்கிறது.. இந்த பிரபஞ்சம் தோன்றும் பொழுதே தனக்கு முன்னால் தோன்றிய விதிகளின் அடிப்படையில் உருவானது என்று இந்தப் பார்வை சொல்லுகின்றது.. பிரபஞ்சமே தோன்றாத பொழுது விதிகள் எப்படித் தோன்றியிருக்க முடியும் என்பதுதான் இன்றைய அறிவியலின் கேள்வி. விதி முன்னால் வந்ததா பிரபஞ்சம் முன்னால் வந்ததா என்கிற இடத்திற்கு இது அறிவியலை எடுத்துச் செல்கிறது.

பிரபஞ்சம் தோன்றிய நொடியிலிருந்து காலம் தொடங்கியதா அல்லது ஏற்கனவே தோன்றிய காலத்தில் பிரபஞ்சம் தோன்றியதா என்கின்ற அடிப்படையை தான் லீஸ்மோலின் தன்னுடைய புத்தகத்தில் ஆய்வு செய்கிறார்… இயற்பியல் எதார்த்தம் என்பது எந்த பார்வையாளர்களையும் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் தானாகவே மிக சரியாக விதிகளின்படி இயங்கிக் கொண்டிருக்கும் எதார்த்தம் ஆகும். யாருமே பார்க்காமல் கணக்கிடாமல் இருந்தாலும் சந்திரன் பூமியைச் சுற்றிக் கொண்டுதான் இருக்கும்..எனவே காலம் என்பதை எந்த கணக்கிலும் எடுத்துக் கொள்ளாமல் இந்த இயற்பியல் எதார்த்த விதிகள் இயங்குவதாக இன்று வரையில் நம்பப்படுகிறது டைம் ரிபான்புத்தகத்தில்  இத்தகைய அறிவியலைக் கோட்பாட்டு இயற்பியலாளர் லீஸ்மாலின் கேள்விகளுக்கு உட்படுத்துகிறார் நேரம் உண்மையானதா அல்லது அது ஒரு மாயையா. சமீப காலம் வரை இயற்பியல் பிந்தைய பார்வையை நோக்கி நகர்ந்தது ஆனால் ஸ்மாலின் சொல்வதைப் போல பிரபஞ்சத்தைப்பற்றிய ஆழமான புதிர் விடுவிக்கப்பட வேண்டும் என்றால் நேரம் என்பதைஎல்லா சமன்பாடுகளிலும் ஒரு தரவாக நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

கடிகாரங்கள் தொடர்ந்து இயங்குகின்றன.. பருவங்கள் மாறுகின்றன நமக்கு வயதாகப் போகிறது இதை எல்லாம் ஒரு மாயை என்று விஞ்ஞானம் எப்படி உறுதிப்படுத்த முடியும்? நியூட்டனின் ஈர்ப்பு விதி போன்ற நித்ய விதிகளால் இயற்கை நிர்வகிக்கப்படுகிறது என்ற எண்ணத்துடன் இந்த புத்தகம் தொடங்குகின்றது அனைத்தும் குறித்த கோட்பாடு என்கிற கனவு பிக் பேங் கின் உடனடி உருவாக்கத்தில் இருந்து வரலாற்றை விளக்க கூடியதாகும். காலம் இல்லாமல் இந்த வரலாற்றை எப்படி விவரிக்க முடியும் நேரம் முந்தைய ஒரு சட்டத்தை எடுத்துக் கொள்கிறது ஒரு பார்வையாளருக்கு ஒரே நேரத்தில் நடப்பது மற்றவர்களுக்கு வேறு வரிசையில் நடப்பதாகத் தோன்றலாம். இந்த விஷயத்தில் ஐன்ஸ்டீன் அற்புதமான ஒரு வேலையைச் செய்தார்.

சொல்லப்போனால் நியூட்டன் நிலையான உலகத்தைக் கற்பனை செய்தார் இயக்க விதிகளை நியூட்டன் அறிவித்திருந்தாலும் பூமியும் ஒன்பது கோள்களும் சூரியனை சுற்றுகின்றன என்று நாம் எண்ணுகின்ற பொழுது சூரியன் மையத்திலும் கோள்கள் அதை சுற்றிலும் நீள் வட்டப் பாதையில் சுழல்வதாக கற்பனை செய்கிறோம் சந்திரன் பூமியை சுற்றிவருவதும். அதேபோலத்தான் கற்பனை செய்யப்படுகிறது ஆனால் இந்த விஷயத்திற்குள் ஐன்ஸ்டீன் மிக அற்புதமாகக் காலத்தை இணைத்தார். அவரை பொறுத்தவரையில் நியூட்டன் கற்பனை செய்தது போல சூரிய மண்டலம் 2D புகைப்படமாக விளக்கப் பட முடியாதது. ஏனெனில் சந்திரன் பூமியை சுற்றும் பொழுதே பூமி சூரியனைச் சுற்றுகிறது அதே சமயத்தில் சூரியன் பால் வழி மண்டலத்தைச் சுழன்று வருகிறது எனவே மேல் நோக்கிய நகர்வு அனைத்தையும் எப்போதும் நகர்த்திக்கொண்டு ஒரு விசை போல தொடர்ந்து அனைத்தும் நகர்ந்து கொண்டிருக்கும் ஒரு வெளியை அழகாக ஐன்ஸ்டீன் கற்பனை செய்தார். இதுவே இயற்பியலின் நகரும் எதார்த்தம் ஆகும். இந்த எதார்த்தத்தில் ஐன்ஸ்டீன் முன்வைத்த நான்காம் பரிமாணம் காலம்.

காலமும் வெளியும் சேர்ந்து காலவெளி இன்னும் ஒரு தரவாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்பது ஐன்ஸ்டீனின் நிலைப்பாடு லீ ஸ்மாலீன் புத்தகம் ராயல் கல்வியகத்தில் லண்டனில் அவர் ஆற்றிய உரைகளால் தொகுக்கப்பட்டுள்ளது. புத்தகத்தின் முதல் பாகம் பிளேட்டோவில் தொடங்கி நியூட்டனிடம் முடிவடைகிறது. லீப்நிஸ்னுடைய தத்துவங்களையும் நியூட்டனுடைய இயற்பியலோடு அவரது மதக் கருத்துக்களையும் குறித்து விவரித்துக் கொண்டே காலம் குறித்து லிஸ்மோலின் முதல் பாகத்தில் உரையாற்றுகிறார் இரண்டாவது பாகம் இயற்பியலின் எதிர்காலம் குறித்து விரிவாக விவாதிக்கிறது காலம் என்பதை.. கணக்கில் எடுத்துக் கொள்ளும் பொழுது இயற்பியல் விதிகள் என்ன ஆகும் என்பதுதான் இரண்டாம் பாகத்தின் சுவாரஸ்யமான அம்சம் ஐன்ஸ்டீன் சொல்வது போல காலம் என்பது மனிதன் யோசிக்கின்ற ஆகக் கூடுதலான மாயை என்பதை ஏற்க முடியாது என்பது லி ஸ்மாலின் கருத்தாகும்.

இந்தச்சிக்கலை நோக்கி நமது கவனத்தைக் கொண்டு வருகின்ற இன்னொரு புத்தகம் ஜிம் பேக்காட் எழுதிய ஃபேர்வல் டூ ரியாலிட்டி..FAREWELL TO REALITY புத்தகம் ஆகும். ஜிம் பேக்காட் இயற்பியல் விஞ்ஞானி அல்ல அவர் ஒரு அறிவியல் எழுத்தாளர்.. ஆனால் இந்த புத்தகத்தை வாசிக்கும்போது நமக்குப் பல ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன அவர் கேட்டுக் கொள்ளும் அற்புதமான கேள்வி சர கோட்பாட்டாளர்களை பார்த்து WHY THIS TEORY என்று ஒரு விபரீத அத்தியாயத்தை எழுதுகின்றார். கற்பனையிலேயே சரக் கோட்பாடு இயற்பியலைக் கொன்றுவிட்டது என்பது இவருடைய பார்வை தேவதை கதைகளைப் போல விரிவடைகின்ற மாந்திரீக யதார்த்தவாத கோட்பாடுகள் எந்த அளவுக்கு நம்பிக்கை தர முடியும்.. என அவர் கேட்கிறார். ஒரு பிரபஞ்சம் பற்றியே ஆய்வுகள் நம்மை அரைகுறையாக நடுத் தெருவில் நிறுத்தியிருக்கும் பொழுது பல பிரபந்தங்கள் என்றும் 20,40 பரிமாணங்கள் என்றும் கற்பனாவாத இயற்பியல் விரிவடைகிறது என்று குற்றம் சாட்டுகிறார்.

உலக அறிவியல் தின சிறப்பு கட்டுரை(World Science Day) : பிரபஞ்ச கடிகாரம் எப்போதிலிருந்து  காலத்தை பதிவுசெய்ய தொடங்கியது? - https://bookday.in/

 

ஆனால் காலம் குறித்த கேள்விக்கு வரும்பொழுது சரக் கோட்பாடாக இருக்கட்டும் அல்லது இயற்பியலின் இன்றைய துகள் இயலாக இருக்கட்டும் இவைகளில் எதுவுமே  காலத்தை ஒரு தரவாக ஏன் எடுத்துக்கொள்ளவில்லை என்று இவர் கேட்கிறார். காலமற்ற கோட்பாடுகளை வீசி எறியுங்கள் குப்பையில் என்று இந்த புத்தகம் அறைகூவல் விடுக்கிறது. ரிச்சர்ட் ஃபைன்மேன் சொன்னதை போல ‘சர கோட்பாட்டாளர்கள்எதையும் முன் அனுமானிப்பது இல்லை கண்டுபிடிப்பதும் இல்லை அவர்கள் எப்போதும் ஒரு தரவை கையில் வைத்துக்கொண்டு அதற்கேற்ற பிரபஞ்சத்தை வடிவமைக்கத் துடிக்கிறார்கள். THEY DON’T MAKE PREDICTIONS ,THEY MAKE EXCUSES’ என்று ஜிம் பதறுகின்றார்.

ஜிம் சுட்டிக்காட்டுவது போல இந்த பிரபஞ்சத்தின் வரலாறு என்பது என்ன பிரபஞ்சம் முழுவதையும் கணக்கில் எடுத்துக் கொண்டாலும் அணுக்கள் தங்களை தாங்களே மறு வடிவாக்கம் செய்து கொள்வது என்கிற ஒரு வரியில் நாம் பிரபஞ்சத்தின் வரலாற்றை அடக்கிவிடலாம். எதிர்காலம் என்கின்ற ஒன்றைப் பற்றி தற்போது என்ன சொல்ல முடியும் என்ன சொல்ல முடியாது அது கணக்கீடு என்கிற ஒன்றால் மறு உருவாக்கம் செய்யப்படுகிறது எதிர்காலம் என்பது தற்காலத்தினுடைய ஏதோ ஒரு வகையில் வேறுபாட்டு நீட்சி ஆகும். என்பது ஜிம்மின் கருத்து.

நீங்கள் நினைப்பது போல இந்தப் பிரபஞ்சத்தைக் கணக்கிட்டு எதையும் அடைந்து விட முடியுமா ஏனெனில் இதில் நீங்களும் உள்ளே இருக்கக்கூடிய தரவுகளில் ஒன்றாக இருக்கிறீர்கள்.பிரபலத்தை விட்டு வெளியில் சென்று பிரபலத்தைப் பார்த்து அது இப்படி இருக்கிறது என்று பதிவு செய்யும் வாய்ப்பு உங்களுக்கு வழங்கப்படவில்லை எனவே இந்த பிரபஞ்சத்தின் முழு முழுமை என்கிற ஒன்றை ஆய்ந்து அறியக்கூடிய இடத்தில் ஒருபோதும் நீங்கள் இருக்க முடியாது. எனவே ஜிம்மின் அனுமானத்தின்படி காலம் நிலையானதாக இருக்கிறது.. வெளிதான் மாறுபாடு அடைகிறது. இது ஒருவகை பார்வை.

காஸ்மோலாஜிகல் தியரி எனப்படுகின்ற பிரபஞ்சக்கோட்பாடு நிறுவப்பட்டு ஏறக்குறைய 100 ஆண்டுகள் கடந்துவிட்டன இந்த முழு பிரபஞ்சத்தையும் அதனை கண்காணிக்கவும் நாம் உட்பட ஆய்வு செய்து ஒரு முழுமையான கோட்பாட்டை அடைவது என்பது குறித்த அனுமானங்கள் பொய்த்து விட்டன. பிரபஞ்சஅறிவியலை ஆய்வுக்கு உட்படுத்தும் பொழுது நாம் இந்த சிக்கலுக்குள் மாட்டிக் கொள்கிறோம் இந்த முழு பிரபஞ்சம் என்கிற அமைப்பை விட்டு வெளியே சென்று அதனை ஆய்வுக்கு உட்படுத்துவது நமக்கு சாத்தியமில்லை.. ஜிம் இன்னொன்றையும் சேர்த்துக் கொள்கிறார். உயிர்கள் தோன்றுவதற்கான அம்சங்கள் நிறைந்த பிரபஞ்சத்தின் பகுதிகளில் இருந்து மட்டும் தான் பிரபஞ்சம் குறித்த கேள்விகள் எழுகின்றன மற்றபடி அணுக்கள் தங்களை மறுவடிவமைப்பு செய்து கொள்கின்ற அந்த ஒரு விஷயம் மட்டும் தான் நிலையான விதியாகமில்லியன் கணக்கான நட்சத்திர கூட்டங்கள் என்று அழைக்கப்படும் பிரபஞ்சத்தில் தொடருகிறது.

எதுஎப்படியோ நமக்கு தெரிகிறது காலம் முன்னோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது. ஒரு சீரான வேகத்தில். நகர்கிறது.. ஒளியைப் போலவே காலம் நகர்கின்ற வேகம் ஒரு மாறிலியாக இருக்கலாம்.. இறுதியாக சொல்வதானால் காலம் முன்னோக்கி சென்று கொண்டே இருக்கிறது.. ஆனால் அது எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதுதான் தற்போது இயற்பியல் முன் இருக்கும் பிரம்மாண்ட கேள்வி.

 

கட்டுரையாளர் : 

உலக அறிவியல் தின சிறப்பு கட்டுரை(World Science Day) : பிரபஞ்ச கடிகாரம் எப்போதிலிருந்து  காலத்தை பதிவுசெய்ய தொடங்கியது? - https://bookday.in/

ஆயிஷா இரா நடராசன்

Click to Join WhatsApp Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Show 4 Comments

4 Comments

  1. Mrs. Jenny teacher

    Fantastic you read a lot you are presenting very curious matters to the readers time concept in physics is a very vast vast phenomena you have explained it very nicely even here school student can easily understand please write more on this subject

  2. Jenny teacher

    Fantastic article
    in a very vast subject
    you read a lot Sir
    and you are presenting it in a very curious way that even your school student will not miss
    time is a very vast subject in Physics please do write a lot like this.. on the cosmological theory – Jenny teacher

  3. RAJENDRA KUMAR

    அருமையான பதிவு ஐயா…. சரக் கோட்பாடு – விளக்க வேண்டும்.

  4. இராமநாததுரை.கு

    அருமை சார்
    சார்
    சரக்கோட்ப்பாடு என்றால் என்ன சார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *