மக்களை முட்டாளாக்கி விடுவதைவிட தாங்கள் முட்டாளாக்கப்பட்டிருக்கிறோம் என்று அவர்களை நம்ப வைப்பது மிகவும் கடினம், நோய்த்தடுப்பு நிபுணர்களின் செயல்நெறி ஆலோசனைக் குழு (சேஜ்) எங்கே தவறியது?  – மைக் யீடன் ( தமிழில்: தா.சந்திரகுரு )C:\Users\Chandraguru\Pictures\2a77cf30a19bb42434c0fa56e6655baf.jpg

தாங்கள் முட்டாளாக்கப்பட்டிருக்கிறோம் என்று மக்களை நம்ப வைப்பதைக் காட்டிலும்  அவர்களை முட்டாளாக்கி விடுவது மிகவும் எளிதானது – மார்க் ட்வைன்

டாக்டர் மைக் யீடன் உயிர்வேதியியல் மற்றும் நச்சுயியலில் பட்டம் பெற்றவர். சுவாச மருந்தியல் ஆய்வை மேற்கொண்டு பிஎச்.டி பட்டம் பெற்றவர். முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக உலகின் மிகப் பெரிய மருந்து நிறுவனங்களில் புதிய மருந்துகள் குறித்த ஆய்வுகளை முன்னெடுத்துச் சென்றவர். ஃபைசர் நிறுவனத்தின் துணைத் தலைவராகவும், அந்த நிறுவனத்தில் அலர்ஜி மற்றும் சுவாசம் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு வந்த தலைமை அறிவியலாளராகவும் இருந்தவர். அந்த நிறுவனத்தை விட்டு 2011ஆம் ஆண்டில் வெளியேறிய டாக்டர் யீடன், தனது சொந்த பயோடெக் நிறுவனமான ஜியார்கோவை நிறுவினார். 2017ஆம் ஆண்டு அந்த நிறுவனம் உலகின் மிகப்பெரிய மருந்து நிறுவனமான நோவார்ட்டிஸுடம் விற்கப்பட்டது.

அறிமுகம்

பிரார்த்தனைகள் வழியாக கொள்ளை நோய்களிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியும் என்று கருதிய மறுமலர்ச்சி காலத்திற்கு முந்தைய மக்களிடமிருந்து நம்மை ‘அறிவியல் முறை’ பிரித்துக் காட்டுவதாகா இருக்கிறது. கொண்டிருக்கும் கருத்தில் உறுதியாக இருந்தால் மட்டுமே சிறப்பாகச் செயல்பட முடியும்.  கோட்பாட்டின் அடிப்படையிலே இருக்க வேண்டிய கண்டுபிடிப்புகள் அந்தக் கோட்பாட்டுடன் பொருந்திப் போகவில்லை என்றால், அந்தக் கோட்பாட்டை நாம் தவறுதலாகப் புரிந்து கொண்டிருந்ததாகவே பொருள்படும். அதுபோன்று எப்போதாவது வழிதவறிப் போய் விடுவதை ஏற்றுக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகின்ற போது, நியாயமான சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவை என்று தாங்கள் ஏற்கனவே கருதியவற்றிலிருந்து முற்றிலும் வேறான வழியில் திரும்பிச் செல்வதற்கு  நேர்மையான அறிவியலாளர்கள் எப்போதும் தயாராகவே இருக்கிறார்கள்.

ஏறத்தாழ 35 ஆண்டுகாலம் புதிய மருந்துகள் கண்டுபிடிப்பில் பல்வேறு குழுக்களை முன்னின்று நடத்தி, பல உயிரியல் துறைகளில் பயிற்சிகளைப் பெற்றவனாக இருக்கின்ற என்னிடம் அதுபோன்ற முரண்பாடுகளைக் கண்டறிவதற்கான திறமை இருப்பதாகவே கருதுகிறேன். தன்னுடைய ஆய்வுகள், வளர்ச்சிக்கான பட்ஜெட்டை சிறிய நாடு ஒன்றின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவிற்குக் கொண்டிருக்கும் மிகப் பெரிய ஆய்வு நிறுவனம் ஒன்றின் முக்கியப் பொறுப்பில் இருந்த மூத்த அறிவியலாளர் ஒருமுறை என்னிடம் ‘மிகவும் தளர்வாக இருக்கின்ற தரவுகளுக்குள்ளாகத் தெளிவற்று இருக்கின்ற வடிவங்களை மிகவும் சிரமப்படாமலே கண்டறிந்து கொள்ளக் கூடிய திறமை உங்களிடம் இருப்பதை நாங்கள் கவனித்திருக்கிறோம்’ என்று கூறினார். அவரது கருத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன். எனது சொந்த சிந்தனைகளிலேயே முரண்பாடுகள் இருப்பதை நான் சிலநேரங்களில் கண்டிருக்கிறேன் (பொதுவாக மற்றவர்கள்தான் அதைச் செய்கிறார்கள் என்பதையும் ஒப்புக் கொள்ள வேண்டும்). மற்ற சந்தர்ப்பங்களில் என்னுடைய முரண்பாடு மற்றவர்களுடைய அறிவியல் ஆய்வுகள் மீது இருக்கும். அதற்கானதொரு எடுத்துக்காட்டாக இப்போது நோய்த்தடுப்பு நிபுணர்களின் செயல்நெறி ஆலோசனைக் குழு (SAGE- சேஜ்) அமைந்துள்ளது.

சார்ஸ்-கோவி-2 வைரஸின் நடத்தை, மனித நோயெதிர்ப்பு மண்டலத்துடன் தனிமனித நிலையில் மட்டுமல்லாது மக்கள்தொகை நிலையிலும் அந்த வைரஸ் எவ்வாறு தொடர்பு கொண்டிருக்கிறது போன்றவற்றின் மீது சேஜ் அமைப்பு கொண்டிருந்த முற்றிலும் தவறான இரண்டு அனுமானங்கள் இன்றளவிலும் தொடர்ந்து வருவதாகவே நான் கருதுகிறேன். நீங்கள் ஒருவேளை சேஜ்-க்கு ஆதரவானவராக இருந்து அவர்களிடம் உள்ள இரண்டு அனுமானங்களையும் ஏற்றுக் கொண்டிருப்பவராக இருந்தால், ‘இந்த தொற்றுநோய் இப்போதுதான் ஆரம்பமாகி இருக்கிறது, ஏற்கனவே இறந்து போனவர்களுடன் சேர்த்து இன்னும் பலர் லட்சக்கணக்கில் இறந்து போகப் போகிறார்கள்’ என்று அவர்கள் கூறுவதை நம்புகிறவராகவே இருப்பீர்கள். அந்த நிலைமையில் இருக்கின்ற எவரொருவர் மீதும் என்னால் பரிதாபப்பட மட்டுமே முடியும். அரசியல்வாதிகளிடம் அவசியம் செய்ய வேண்டும் என்று கூறியதை, அவர்கள் செய்யவில்லை என்பதால் உங்களிடம் அது விரக்தியை ஏற்படுத்தியிருக்கக் கூடும்.

ஆனால் அதற்கு மாறாக, பொதுசுகாதாரம் குறித்த மிகக்கொடூரமான நிகழ்வாக இருந்த இந்த தொற்றுநோய் இங்கிலாந்தில் கிட்டத்தட்ட முடிந்து விட்டது என்று என்னைப் போன்று உறுதியாக நம்புகிறீர்கள் என்றால், சேஜ், அரசாங்கம், 99% ஊடகங்கள் என்று அனைவரும் சேர்ந்து, பல்லாண்டுகளுக்குப் பிறகு வந்திருக்கின்ற இந்த மிகப்பெரிய பொது சுகாதார நெருக்கடி நிலை இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்ற புனைகதையைப் பராமரித்து வருவதை விரக்தியுடன் அதிசயமாகவே காண்பீர்கள். இது குறித்து இதற்கு முன்பும் விரிவாக நான் எழுதியுள்ளேன் (யீடன் மற்றும் பலர், 2020). உண்மையாகப் பார்த்தால், இங்கிலாந்தில் 2020ஆம் ஆண்டில் ஏற்பட்டிருக்கும் (மக்கள்தொகைக்கு ஏற்றவாறு சரிப்படுத்தப்பட்ட) இறப்பு விகிதம் கடந்த 27 ஆண்டுகள் பட்டியலில் எட்டாவது இடத்திலேயே உள்ளது. இந்த வருடம் இறப்பு அளவு விதிவிலக்காக அதிகரித்து இருக்கவில்லை.

மிகவும் அலட்சியத்துடன் இருக்கின்ற சேஜ் அமைப்பு கலைக்கப்பட்டு, மறுசீரமைக்கப்பட வேண்டும் என்பதே என்னுடைய கருத்தாக உள்ளது. தேசிய அளவில் அதிகரித்து வருகின்ற நோய்ப்பரவலை மேலும் தக்கவைத்துக் கொள்ளும் அளவிற்கு இல்லாமல், வைரஸால் இன்னும் பாதிக்கப்படக்கூடிய மக்கள்தொகையின் அளவு மிகக் குறைவான அளவிலேயே இருக்கிறது. தொற்றுநோய் ஏற்கனவே முடிந்து விட்டது என்பதாகவே நாம் அதனைப் பொருள் கொள்ள வேண்டும். முறையாகச் செயல்படுகின்ற தேசிய சுகாதார சேவை (என்எச்எஸ்) மூலமாக அது எளிதாகக் கையாளப்படலாம். இதையெல்லாம் பார்க்கும் போது, நாடு உடனடியாக இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்றே தோன்றுகிறது.

C:\Users\Chandraguru\Pictures\NHS.jpg

பின்னணி

சேஜ் உறுப்பினர்கள் குறித்த விவரம் ஆரம்பத்தில் மிகவும் ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது. உறுப்பினர்கள் குறித்த விவரங்கள் இறுதியாகத் தெரிய வந்த போது, நான் அது குறித்து ஏமாற்றமடைந்தேன். உறுப்பினர்கள் அனைவரையும் பற்றிய முழுமையான விவரங்களைப் பார்த்த போது, மருத்துவ நோயெதிர்ப்பு நிபுணர்கள் என்று யாருமே அதில் இருக்கவில்லை. உயிரியல் பட்டம், நோயெதிர்ப்பு குறித்து முனைவர் பட்டத்திற்குப் பிந்தைய ஆய்வு தகுதி பெற்றவர்கள் என்று எவரொருவரும் அந்தக் குழுவில் இடம் பெற்றிருக்கவில்லை. மருத்துவர்கள் சிலர் இருந்தது உண்மைதான் என்றாலும், பெரும்பாலும் சமூகவியலாளர்கள், பொருளாதார வல்லுநர்கள், உளவியலாளர்கள், அரசியல் கோட்பாட்டாளர்கள் என்று மானுடவியல் புலத்தைச் சார்ந்தவர்களே உறுப்பினர்களாக இருந்தனர். மருத்துவ நோயெதிர்ப்பு நிபுணர்கள் ஒருவர்கூட இல்லை. மொத்தத்தில் மிகவும் தாராளமான எண்ணிக்கையில் ஏழு கணிதவியலாளர்கள் அந்தக் குழுவில் இருந்தனர். அவர்கள் மாடலிங் குழுவைச் சார்ந்தவர்களாக இருந்தனர். அவர்களுடைய அறிக்கைதான் கடந்த ஏழு மாதங்களாக மக்களைச் சித்திரவதை செய்வதற்கான காரணமாக அமைந்தது.

மாடல் என்ற வார்த்தையைக் கேட்கும் போதெல்லாம், உண்மையில் யாருக்கு மாடலை  உருவாக்குகின்ற விஷயங்கள் குறித்த நிபுணத்துவம் இருக்கிறது என்று கேட்பது மிகவும் முக்கியமானது என்பதை நான் இங்கே வலியுறுத்திச் சொல்ல வேண்டியதில்லை. மாடலை உருவாக்குபவர்கள் மிகுந்த ஆர்வத்துடன், புத்திசாலித்தனத்துடன் இருந்தாலும், அவர்கள் உயர்தர வல்லுநர்களாக இல்லாவிட்டால், அவர்களால் உருவாக்கப்படும் மாடலால் எந்தப் பயனும் இருக்கப் போவதில்லை. அவர்களால் உருவாக்கப்படுகின்ற மாடல்களிலிருந்தே எதிர்காலத்தைப் பற்றிய தகவல்கள் – கணிப்புகள் – வரும். எனவே நிபுணத்துவம் இல்லாதவர்களால் மாடல் கட்டமைக்கப்படும் என்றால், பிழையுடன் அந்த மாடலைத் தவறாகக் கட்டமைத்திருந்தாலும், அந்தப் பிழையை மாடலை வடிவமைத்தவர்கள் அறிந்திருப்பதற்கான வாய்ப்பு இருக்கப் போவதில்லை. இறுதி முடிவுகள் நிபுணத்துவம் தொடர்பான நடுநிலையுடன் இருந்தாலும், அவை பொருத்தமற்றவையாகவே இருக்கும். ஏன் அது அவ்வாறு இருக்கும் என்பதை நான் நன்கு அறிந்திருக்கிறேன்.

இப்போது மீண்டும் மறுமலர்ச்சி காலத்திற்கு முந்தைய மக்களிடம் திரும்பச் செல்லலாம். அந்தக் காலங்களில், ரத்தம் உறிஞ்சுகின்ற அட்டைகளைக் கொண்டு மருத்துவம் பார்த்தவர்கள் மிகவும் முக்கியமானவர்களாக இருந்தார்கள். நவீனயுகத்தின் மந்திரவாதிகளாகவே அவர்கள் பார்க்கப்பட்டார்கள். சுருக்கமாகச் சொல்வதென்றால், எதிர்காலத்தை முன்னறிவிக்கக்கூடிய தீர்க்கதரிசிகளாகவே அவர்கள் கருதப்பட்டனர்.

ஒருபுறம் சுவாச ஆய்வுகள், புதிய மருந்து கண்டுபிடிப்பு துறையின் துணைத்தலைவராக இருந்த போதிலும், எளிதில் எதையும் நம்புபவர்களாக, உயர்பதவியில் இருந்த நிர்வாகத்தினர் சில ஆண்டுகளுக்கு முன்பாக கொண்டு வந்த மாடல் வடிவமைக்கும் குழுவுடன் பணியாற்றுவதைத் தவிர எனக்கு வேறு வழியில்லாமல் போனது எனது துரதிர்ஷ்டமே. சில நோய்களின் செயல்முறைகள் குறித்த மாடலை உருவாக்க முடியும் என்று என்னிடம் அவர்கள் கூறினர்.  மாடல்களை உருவாக்குவதில் தங்களுக்கிருந்த நுண்ணறிவைக் கொண்டு, கடுமையான ஆஸ்துமா, நுரையீரல் ஃபைப்ரோஸிஸ் போன்ற நோய்களைக் கையாள்வதற்கான புதிய வழிகளை தங்களால் உருவாக்க முடியும் என்று அவர்கள் என்னிடம் கூறினார்கள். அதில் எனக்குச் சந்தேகம் இருந்தது. அவர்களுடன் பல நாட்களை நான் கழித்தேன். ‘இறுதி முடிவுகளின் மீது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய நோயாளிகளின் மருத்துவ நிலை குறித்த முக்கியமான உயிரியல் செயல்முறைகள் அனைத்தையும் உங்கள் மாடலுக்குள்  சேர்த்து விட்டீர்கள் என்பது உங்களுக்கு எப்படித் தெரியும்?’ என்று கேட்டேன். அவர்களிடம் பதில் ஏதும் இருக்கவில்லை. ‘முக்கியமான மாறிகளாக நீங்கள் வலியுறுத்துகின்ற ஒவ்வொரு மாறிக்குமான ஆரம்ப நிலை எவ்வாறானதாக இருக்கும் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்?’ என்றும் கேட்டேன். அதற்கும் போதுமான பதிலை அவர்களால் தர முடியவில்லை. அனுபவசாலியான எனது கருத்தை ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு, அவர்களுடன் சென்ற நான் ‘இது சரியாக இருக்குமா என்பது பல ஆண்டுகளானாலும் நமக்குத் தெரியப் போவதில்லை’ என்று கூறினேன். அதற்கும் மௌனமே அவர்களுடைய பதிலாக இருந்தது. அவர்களுடைய உதவியை அதிகம் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றாலும், என்னிடம் குறுகிய எண்ணம் எதுவும் இருந்திடவில்லை. எங்களுடைய அணியில் இருந்த பெரும்பாலும் கணிதவியலாளர்கள், கணினி புரோகிராமர்கள் புத்திசாலிகளாக, ஆர்வமுள்ளவர்களாக இருந்தனர். தங்களால் உதவ முடியும் என்றே அவர்கள் அனைவருமே உண்மையில் நினைத்தார்கள். அது என்னைப் பொறுத்தவரை மறக்க முடியாத பாடமாகவே அமைந்தது.

இம்பீரியல் கல்லூரியின் மாடலிங்கில் உள்ள குறைபாடுகள்

இம்பீரியல் கல்லூரியின் மாடலில் இருக்கின்ற மோசமான இரண்டு குறைபாடுகள் பற்றி இப்போது உங்களிடம் சொல்கின்றேன். மற்ற பலவீனங்களும்கூட அதில் இருக்கலாம் என்றாலும், சேஜ் நிலைமை இன்னும் மோசமாகப் போகிறது என்பதை விளக்குவதற்கு இந்த இரண்டு குறைபாடுகளாலான அனுமானங்கள் மட்டுமே போதுமானவையாக இருக்கின்றன. அறிவியலும், அனுபவத் தரவுகளும் அவர்கள் சொல்கின்ற கருத்துகளுக்கு முற்றிலும் மாறுபட்ட வேறொன்றையே கூறுகின்றன. மிட்லாண்ட்ஸின் தெற்கே அனைத்து இடங்களிலும் நடவடிக்கைகளை முற்றாக நீக்கி விடலாம் என்றே நான் நம்புகிறேன். எல்லா இடங்களுக்கும் அதுபோன்ற நடவடிக்கை பொருந்துவதாக இருக்கும் என்றாலும், தேவையில்லாத சச்சரவுகளுக்குள் நுழைவது எனது வாதங்களில் உள்ள நியாயங்களிலிருந்து முழுமையாக விலகி விடுவதாகவே இருக்கும்.

அந்த இரண்டு அனுமானங்கள் யாவை? அவை மிகவும் அடிப்படையானவை. உங்களை மீண்டும் வாசிக்க வைக்கும் அளவிற்கு வசீகரமானவை. அவற்றை வாசிப்பதற்கான பொறுமை இல்லையென்றால், கீழே கொடுக்கப்பட்டுள்ள இரண்டு விளக்கப்படங்களைப் பாருங்கள்.

முதலாவதாக சார்ஸ்-கோவி–2 என்பது புதிய வைரஸ் என்பதால், ‘மக்கள்தொகையில் அனைவரிடமுமே நோய்க்கு முந்தைய எதிர்ப்பாற்றல் இல்லாமலே இருந்தது’ என்று கருதுவதற்கு இம்பீரியல் குழு முடிவு செய்தது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ‘ஆரம்பத்தில் 100 சதவீத மக்களும் வைரஸால் பாதிக்கப்படக் கூடிய நிலைமையிலேயே இருந்தனர்’ என்பதாகவே அந்த அனுமானம் உள்ளது.

C:\Users\Chandraguru\Pictures\Chart 1 SAGE Predictions.jpg

இதைப் பொருட்படுத்த வேண்டியதில்லை என்றும், இது முக்கியமான விஷயம் என்பதைவிட அறிவியல்ரீதியான விவாதப் புள்ளி என்றும் நீங்கள் கருதினால் பரவாயில்லை. அது குறித்து சிந்திக்க வேண்டியது தேவைதானே? அது மிகவும் தேவை என்றே நான் கருதுகிறேன். வேறுமாதிரி அதைக் கருத வேண்டியதில்லை. இந்த முதல் அனுமானத்திற்கு நான் பிறகு திரும்பி வருகிறேன். அதற்கு முன்பாக அவர்களிடம் இருந்த இரண்டாவது மோசமான அனுமானமான, மக்கள்தொகையில் எத்தனை பேருக்கு ரத்தத்தில் ஆன்டிபாடிகள் உள்ளன என்பதை ஆய்வு செய்வதன் மூலமாக மக்கள் தொகையில் இதுவரை எத்தனை சதவீதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை மாடலை உருவாக்குபவர்களால் தீர்மானிக்க முடியும் என்றிருப்பதைக் காணலாம். அந்த எண்ணிக்கை சுமார் 7% ஆக இருக்கிறது. இந்த எண்ணிக்கை உண்மை என்றால், அவர்களுடைய  அனுமானம் முக்கியத்துவமற்றதாக இருக்க முடியாதல்லவா? ஆனால் வாசகர்களிடம் அது முக்கியமானது என்று தெரிவிப்பதற்கு நான் வருத்தப்படுகிறேன், ஏனெனில் அது உண்மையல்ல.

சூழ்நிலையில் உள்ள அனைத்து நுணுக்கங்களையும் விவரிக்காததால், அந்த விளக்கப்படத்தை கணிதரீதியாகச் சரியானது என்று கருத முடியாது. எடுத்துக்காட்டாக, இளம் குழந்தைகள் இந்த வைரஸால் மிக அரிதாகவே நோயுற்றிருக்கிறார்கள் என்பதையும், மோசமான நோய் கடத்திகளாகவே அந்தக் குழந்தைகள் இருக்கிறார்கள் என்பதையும் நாம் அறிந்திருக்கிறோம். அதுபோன்ற குழந்தைகளாக 0-11 வயதிற்குட்பட்டவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர், அதாவது ஒட்டுமொத்த மக்கள்தொகையில் 10% பேர் இருக்கின்றனர்.

C:\Users\Chandraguru\Pictures\Chart 2 Mike Yeadon.jpg

பருவவயதுக்கு வந்த தன்னார்வலர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வுகளிலிருந்தே நோய்க்கு முந்தைய எதிர்ப்பாற்றல் கொண்டவர்களைப் பற்றிய விவரங்கள் பெறப்படுகின்றன. நோய்க்கு முந்தைய எதிர்ப்பாற்றல் கொண்ட மக்கள்தொகை குறித்த மதிப்பீட்டில் எந்தவொரு குழந்தையும் சேர்க்கப்படுவதில்லை. ஆக அந்த விளக்கப்படம் 93% பாதிக்கப்படக்கூடியவர்கள் என்று சாஜ் கொண்டிருக்கும் நம்பிக்கை, மக்கள்தொகையில் வைரஸின் பாதிப்புக்குள்ளாகக் கூடியவர்களின் எண்ணிக்கை 40%க்கும் குறைவாக இருப்பதாகக் காட்டுகிற உலகின் சிறந்த விஞ்ஞானிகளிடம் உள்ள தரவுகளிடமிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருப்பதையே காட்டுகின்றது. அவ்வாறான மக்கள்தொகை ‘மந்தை நோய் எதிர்ப்பாற்றல் வரம்பு’ என்று அழைக்கப்படுகிற வரம்பிற்கு மேலேயே உள்ளது. ஆக இப்போது தொற்றுநோய் முடிந்து விட்டது. மிகச் சிறிய அளவிலே தன்னைத்தானே கட்டுப்படுத்திக் கொள்ளும் வகையில் இருக்கின்ற நோய்ப்பரவல் மிக விரைவிலேயே குறைந்து விடும்.

இரண்டு தவறான அனுமானங்கள்

மாடலை வடிவமைத்தவர்களிடம் உள்ள இரண்டு முக்கியமான அனுமானங்களும் தவறானவை என்பதற்கான அறிவியல்பூர்வமான ஆதாரங்களுக்குத் திரும்பி வருவதற்கு முன்பாக, அந்த தவறான அனுமானங்கள் நிலைநிறுத்தப்படுவதை அனுமதித்தால் கொள்கைகள் மீது ஏற்படுகின்ற விளைவுகளை இப்போது காணலாம்.

விளக்கத்திற்காக சேஜ் முன்வைத்திருக்கின்ற முதல் அனுமானத்தை நாம் ஏற்றுக் கொண்டால், அந்த வரைபடம் இங்கிலாந்தில் உள்ள 100% மக்களைக் குறிப்பதாகவும், அவர்கள் அனைவருமே இந்த புதிய வைரஸால் பாதிக்கப்படுவார்கள் என்பதாகவும் இருக்கிறது. பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரும் தனக்கு அருகிலுள்ள பலர் மீது பாதிப்பை ஏற்படுத்துவதன் மூலம், எளிதாகவே அனைவரும் பாதிக்கப்படுவர். சேஜ் முன்வைத்திருக்கும் இரண்டாவது அனுமானத்தைப் பயன்படுத்தினால், இங்கிலாந்து மக்கள்தொகையில் 7% பேரின் ரத்தத்தில் ஆன்டிபாடிகள் உள்ளன (என்எச்எஸ், 2020 ஆகஸ்ட்) எனும் போது, சமீபத்திய சேஜ் குறிப்புகளில் (சேஜ், 2020 செப்டம்பர் 21) ‘இங்கிலாந்து மக்கள் தொகையில் 90%க்கும் அதிகமானோர் வைரஸால் இன்னும் பாதிக்கப்படக் கூடியவர்களாக இருக்கின்றனர்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளதை ஏற்றுக் கொள்வது தர்க்கரீதியாகச் சரியாகவே இருக்கும். நடைமுறை நோக்கங்களைப் பொறுத்தவரை, உண்மையில் 93% என்பது 100%க்கு மிக அருகிலேயே இருப்பதால், அவை இரண்டிற்குமிடையே பெரிய வித்தியாசம் எதுவும் இருக்கப் போவதில்லை. உடலில் இருக்கின்ற உயிர்வேதியியல் மூலக்கூறு ஒன்றை இன்னொரு மூலக்கூறாக மாற்ற உதவுகின்ற நொதி 7% அளவில் இருக்கும் என்றால், அது பெரிய அளவில் நோயாளியிடம் விளைவுகளை ஏற்படுத்தும் என்று யாராவது கூறினால், ஓர் அறிவியலாளராக நான் நிச்சயம் அதை எதிர்பார்க்க மாட்டேன். ஆனால் இதுதான் திரைக்குப் பின்னால் அரசாங்கத்திடமும், வானொலி மற்றும் தொலைக்காட்சி செய்திகளின் மூலம் நம் அனைவரிடமும் சேஜ் தெரிவிப்பதாக இருக்கிறது.

மிகக் குறைவான தொற்றுநோய்களிலிருந்து (47 லட்சம்) அதிக அளவிலான இறப்புகள் (43,000) ஏற்பட்டிருப்பதாக சேஜ் ஆலோசகர்கள் கூறுவதிலிருந்து, தொற்றுநோய் மூலம் ஏற்பட்டிருக்கின்ற இறப்பு விகிதம் 0.9% என்ற அளவில் இருப்பதை அவர்கள் ஏற்றுக் கொள்வதை அறிந்து கொள்ள முடிகிறது. ஆனால் இந்த துறையில் முன்னோடியாக இருக்கின்ற ஜான் ஐயோனிடிஸ், தன்னுடைய உலகளாவிய கணக்கெடுப்பின் விரிவான முடிவுகளை வெளியிட்டிருக்கிறார். நோயால் இறந்தவர்களின் விகிதம் (ஐ.எஃப்.ஆர்) குறித்த அவரது மதிப்பீடு 0.2% (ஐயோனிடிஸ், 2020) என்ற அளவிலேயே இருக்கிறது. இறப்பு குறித்த சேஜ் மதிப்பீடு பிப்ரவரி முதல் கீழ்நோக்கித் திருத்தப்படவில்லை. இந்தக் கட்டுரையைப் பொறுத்தவரை அது முக்கியம் இல்லை என்பதால், நான் அதை விட்டுவிடுகிறேன்.

இதுவரையிலும் புதிய தொற்றுநோயால் ஏற்படுகின்ற இறப்புகள் குறித்த மதிப்பீடுகள் எல்லா இடங்களிலும் எப்போதுமே மிகைப்படுத்தப்பட்டு இருந்திருப்பதாகவே வரலாறு இருக்கிறது என்பதை என்னால் நிச்சயமாகக் கூற முடியும். பாதிக்கப்பட்டவர்கள் குறைவாக இருப்பதாக நாம் கணக்கிடுகிறோம் என்றாலும், முன்னெச்சரிக்கை கொள்கையின் அடிப்படையில், எந்தவொரு அறிகுறிகளையும் காட்டாத அல்லது சிறிய அளவிலான அறிகுறிகளை மட்டுமே கொண்டிருக்கின்றவர்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டு தவறு செய்வதாலேயே இதுபோன்று அதிக அளவிலே இறப்பு விகிதம் கணக்கிடப்படுவது நிகழ்கிறது. சேஜ் திரும்பத் திரும்பச் செய்ததைப் போல – முன்னெச்சரிக்கை கொள்கைக்கு அதீத முக்கியத்துவம் தருவதால் பக்கவிளைவான ‘இணை சேதத்திற்கே’ வழிவகுத்துத் தரப்படும். மாடலுக்குள் இல்லாதவர்கள் முழுமையாகக் கழித்து விடப்படுவதாலும், அவர்களுக்கு எதுவுமே நடக்காது என்பதாலும், மாடலின் இறுதி முடிவுகள் மற்றும் கொள்கைகளின் விளைவாக அவர்களைப் பொருட்படுத்தத் தேவையிருக்காது. அதன் விளைவாக முன்னெச்சரிக்கை கொள்கை அச்சுறுத்துவதாகி விடுகிறது.

அந்த இரண்டு அனுமானங்களுக்குப் பதிலாகப் பயன்படுத்தப்பட வேண்டிய உண்மையான அளவுகள் என்று நான் நம்புகின்ற அளவுகளைப் பற்றி இப்போது கூறுகிறேன். அவை எவ்வாறு நிலைமையைத் தலைகீழாக மாற்றியமைக்கின்றன என்பதையும் நான் உங்களுக்குக் காட்டுகிறேன். நான் சொல்வது சரியென்றால், இந்த தொற்றுநோய் முற்றிலுமாக முடிவடைந்து சில வாரங்கள் ஆகிவிட்டது. ஏற்கனவே மிட்லாண்ட்ஸின் தெற்கே உள்ள அனைத்து இடங்களிலும் அது முடிவடைந்து விட்டது (வேல்ஸைத் தவிர்த்து – அங்கிருக்கிற நிலைமையைச் சொல்லக்கூடிய அளவிற்கு தொற்றுநோயின் பரிணாமத்தை நான் கண்காணித்திருக்கவில்லை).

ஏற்கனவே நான் கூறியதைப் போல, ஒரு கோட்பாட்டின் போதுமான தன்மையையும், அதன் முழுமையையும் உருவாக்கிய கணிப்புகள் உண்மையில் நடந்திருக்கின்றனவா என்பதை அறிந்து கொள்வதன் மூலம் சோதித்தறிந்து கொள்ள முடியும் என்பதால், நமது நிலைப்பாட்டின் மீதே முரண்படவும் முடியும். அந்தக் கணிப்புகள் இருக்கின்ற யதார்த்தத்துடன் பொருந்திப் போகுமானால், அறிவியலாளர்கள் அனைவரும், மிகச் சாதாரண மக்களும் ‘இந்த முரணான பார்வை சரியானதாக இருக்குமானால், நாம் செய்திருக்கிற அனைத்தையும் திரும்பப் பார்க்க வேண்டும் என்பதாக அர்த்தமல்ல’ என்று கருதத்  தொடங்குவார்கள் என்றே நான் நினைக்கிறேன். இதுவே என்னைப் பொறுத்தவரை நான் கொண்டிருக்கின்ற உண்மையான நம்பிக்கையாகவும், அதை நான் செய்வதற்கான ஒரே காரணமாகவும் இருக்கின்றது.

தவறாக இருக்கின்ற முதல் அனுமானம்

சேஜ்-இன் முதல் அனுமானம் இது ஒரு புதிய வைரஸ் என்பதால், மக்கள் தொகையில் யாருக்கும் நோய் எதிர்ப்பாற்றல் இருக்காது என்றும், ஆரம்பத்தில் 100% மக்களும் அதன் பாதிப்பிற்கு  ஆளாக நேரிடும் வகையிலேயே இருப்பார்கள் என்றும் இருப்பது நகைப்புக்குரியது என்றே நான் கருதுகிறேன். சார்ஸ்-கோவி-2 உண்மையில் புதியது என்றாலும், கொரோனா வைரஸ்களே முற்றிலும் புதியவை அல்ல என்பதால் அவர்களுடைய இந்த அனுமானம் நகைப்புக்குரியதாகவே உள்ளது. ‘முன்னோடிகள் இல்லாத வைரஸ்’ என்று எதுவுமே இல்லை. 2003இல் சார்ஸ், 2012இல் மெர்ஸ் (ஜு மற்றும் பலர், 2020) என்று சமீப காலங்களில் குறைந்தது இரண்டு புதிய கொரோனா வைரஸ்கள் பற்றி உங்களுக்கு நினைவில் இருக்கும். அவை உலக அளவில் பரவவில்லை என்றாலும் மரபணு வரிசை, தங்களுடைய கட்டமைப்பு மட்டத்தில் அவை இப்போதுள்ள புதிய சார்ஸ்-கோவி-2 வைரஸை மிகவும் ஒத்தவையாகவே இருக்கின்றன.

பிரபலமாகி இருக்கின்ற மோசமான கொரோனா வைரஸ்களை விட இன்னும் அதிகமான வைரஸ்கள் உள்ளன. இதுவரையிலும் (எனக்குத் தெரிந்தவரை) வானொலி, தொலைக்காட்சிகளில் மருத்துவ நிருபர்களோ அல்லது அறிவியல் பத்திரிகையாளர்கள் என்று அழைக்கப்படுபவர்களில் யாருமோ மிகச் சாதாரண தடுமனை உருவாக்குகின்ற நான்கு கொரோனா வைரஸ்களைப் பற்றி பேசவே இல்லை என்பதற்கான காரணம் எனக்கு விளங்கவில்லை. அறிவியல் ஆய்வுகளில் அதிக நேரத்தைச் செலவழித்து வருகின்ற மருத்துவர்கள், அறிவியலாளர்கள் இங்கிலாந்திலும், அவர்களால் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட மற்ற இடங்களிலும் குறைந்தபட்சம் நான்கு கொரோனா வைரஸ்கள் சுதந்திரமாக உலாவி வருவதை நன்கு அறிந்தே உள்ளனர். அந்த வைரஸ்கள் OC43, HKU1, 229E மற்றும் NL63 (ஜூ மற்றும் பலர், 2020) என்று அழைக்கப்படுகின்றன.

55 ஆண்டுகளுக்கு முன்பாக முதன்முதலில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ்கள், குறிப்பிட்ட பருவகாலத்தில் வருவதாக இருப்பதால் (காரணங்கள் முழுமையாக அறியப்படவில்லை), சில ஆய்வாளர்கள் ஆண்டுதோறும் அவற்றின் வருகை,  புறப்பாட்டைக் கண்காணித்து வருகின்றனர். கொரோனா வைரஸ்களுக்கே உரித்தானதாக, தனித்துவமானதாக ஸ்பைக் புரதம் இருந்தாலும், பெரும்பாலும் அந்த வைரஸ் குடும்பம் முழுவதிலும் அது இருக்கின்றது. ப்ரைமர்களைக் கொண்டு ஸ்பைக் புரதத்தைக் கண்டறிவதற்கான பி.சி.ஆர் சோதனைக்கான மாதிரியை ஒருவரிடமிருந்து எடுக்கும் போது, பிறிதொரு கொரோனா வைரஸால் ஏற்படுத்தப்பட்டுள்ள சாதாரண ஜலதோஷத்துடன் இருக்கின்ற எவரொருவரிடமும் சார்ஸ்-கோவி-2 இருப்பதாகக் கண்டறியப்படலாம் (செபீட் கண்டுபிடிப்பு தொழில்நுட்ப தரவுத்தாளைப் பார்க்கவும்). இந்த நான்கு கொரோனா வைரஸ்களாலேயே 25-35 சதவீதம் அளவிற்கு ஜலதோஷம் என்ற நோய் ஏற்படுகிறது (குப்தா, 2020). இந்த கொரோனா வைரஸ்களில் எவையொன்றாலும் ஏற்படுத்தப்படும் நோயின் அறிகுறிகள், மேல் சுவாசக் குழாய் தொற்று அல்லது சளி போன்று உங்களுக்குச் சாதராணமாக வருகின்ற நோய்த்தொற்றின் அறிகுறிகளைப் போன்றே இருக்கின்றன. லேசான தொற்று இருக்கும் சிலருக்கு இந்த அறிகுறிகள் மிகவும் குறைந்த அளவிலேயே உள்ளன. ஒரு சிலருக்கு மிகவும் கடுமையான ஜலதோஷம் வரலாம். அது சரியாவதற்கு சில வாரங்கள் ஆகலாம். பொதுவாக வயதில் இளையவர்களாக, ஆரோக்கியத்துடன் இருப்பவர்களிடம் இந்த வைரஸ்கள் சளியைத் தவிர வேறெந்த பிரச்சனையையும் ஏற்படுத்துவதில்லை என்றாலும், ஏற்கனவே நோய்வாய்ப்பட்டிருக்கின்ற, வயதான ஒரு சிலரிடம் அவை இறப்பை ஏற்படுத்துகின்றன.

சாதாரண ஜலதோஷத்தை உருவாக்குகின்ற ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கொரோனா வைரஸ்களால் கடந்த காலங்களில் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், அந்த வைரஸ்களுடன் மட்டுமல்லாது அதனுடன் நெருங்கிய தொடர்புடைய வைரஸ்களுக்கு எதிராகவும் வலுவான நீண்டகால நோய் எதிர்ப்பாற்றலைக் கொண்டிருப்பார்கள் என்றே நான் நம்புகிறேன். உலகெங்கிலும் உள்ள பல உயர்தர ஆராய்ச்சி குழுக்களின் நம்பிக்கையாகவும் அது இருக்கிறது. அந்த வைரஸ்களுடன் நெருங்கிய தொடர்புடைய வைரஸாகவே இந்த சார்ஸ்-கோவி-2 உள்ளது. இந்த வைரஸ்களில் சிலவற்றிடம் இருக்கின்ற ஒற்றுமையைக் கவனியுங்கள்: மரபணு அளவில் சார்ஸ் வைரஸுடன் சார்ஸ்-கோவி-2 80% ஒத்திருக்கிறது. சாதாரண ஜலதோஷ கொரோனா வைரஸ்களின் ஒத்த துணைக்குழு சார்ஸ்-கோவி-2இல் இருக்கிற மரபணு வரிசையுடன் மிகவும் ஒத்த தன்மையைக் கொண்டுள்ளது (ஜூ மற்றும் பலர், 2020).

இந்த குறிப்பிட்ட தகவல் குறித்து ஆய்வு செய்து வருகின்ற அறிவியலாளர்களின் பல விவாதங்களை நான் கடந்து வந்திருக்கிறேன். சார்ஸ்-கோவி-2க்கு எதிர்வினையாற்றுகின்ற டி-செல்களை நோயெதிர்ப்பு நிபுணர்கள், ஒருபோதும் வைரஸை எதிர்கொண்டிருக்காத நோயாளிகளிடம் கண்டறிந்திருக்கின்றனர். மாறுபட்ட அளவில் சாதாரண ஜலதோஷ கொரோனா வைரஸ்களை எதிர்கொண்டவர்களிடம் இருக்கின்ற நோயெதிர்ப்பாற்றல், இந்த புதிய வைரஸுக்கு அவர்கள் எளிதில் பாதிப்பிற்குள்ளாவதை வரையறுப்பதில் தன்னுடைய பங்கைக் கொண்டிருக்கக்கூடும் என்று அந்த நிபுணர்கள் கருதுவதை நான் அவ்வாறான விவாதங்களில்மூலம் கண்டிருக்கிறேன். அதைப் போன்றதாகவே எனது உள்ளுணர்வும் உள்ளது. இத்தகைய தகவலைக் கொண்டு அரசாங்கத்திற்கு ஆலோசனை கூறுகின்ற யாரும் எதையுமே செய்யவில்லை என்பது எனக்கு ஆச்சரியத்தையே அளிக்கின்றது.

சாதாரண ஜலதோஷத்தை ஏற்படுத்தக் கூடிய கொரோனா வைரஸ்களில் ஏதேனும் ஒன்றால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள், இந்த தொற்றுநோயுடன் நெருங்கிய தொடர்புடைய வைரஸ்களுக்கு ஓரளவிலான எதிர்ப்பை – நோயெதிர்ப்பாற்றலை – கொண்டிருப்பார்கள் என்று எந்தவொரு சோதனையும் செய்யாமலேயே அனுபவமிக்க அறிவியலாளனாக என்னால் கணிக்க முடியும். இதுபோன்றுதான் நமது உடலில் உள்ளார்ந்த தகவமைப்பு நோயெதிர்ப்பு மண்டலமாகச் செயல்படுகின்ற மூலக்கூறு இயந்திரங்கள் செயல்படுகின்றன. இதுபோன்றதொரு நிலைமையை எதிர்பார்க்காமல் இருப்பது என்பது, பயன்படுத்துவதற்கேற்ற நம்பகமான மாடலை உருவாக்கிடத் தேவையான புரிதலின் பற்றாக்குறை அவர்களிடம் இருப்பதையே உண்மையில் காட்டுவதாக இருக்கிறது என்று நான் மீண்டும் கூறுகிறேன். இங்கே அனைத்து ஆதாரங்களையும் விவரிக்க நான் முயற்சிக்கப் போவதில்லை. அதை ஆராய விரும்புகின்ற  எவரொருவருக்கும் தேவைப்படுகின்ற விவரங்கள் எனது முந்தைய விரிவான கட்டுரையில் (யீடன் மற்றும் பலர், 2020) குறிப்பிடப்பட்டுள்ளன.

சுருக்கமாகச் சொல்வதென்றால், தங்கள் நாடுகளை வைரஸ் வந்தடைவதற்கு முன்பாகவே 20% – 80% என்ற அளவிலே (பொதுவாக 30%) சார்ஸ்-கோவி-2க்கு எதிரான டி-செல்களை தங்களுடைய ரத்தத்தில் கொண்டிருந்தார்கள் என்று ஐரோப்பா, அமெரிக்காவில் உள்ள பல ஆய்வுக் குழுக்கள் சுட்டிக் காட்டியிருக்கின்றன. முன்னணியில் இருக்கின்ற முதல் இரண்டு ஆய்வு இதழ்களில் ஒன்றான ‘சயின்ஸ்’ இதழில் மிகவும் அருமையான ஆய்வுக் கட்டுரை ஒன்று மிக அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட அந்த புதிய வைரஸை தங்களிடம் உள்ள நோயெதிர்ப்பு அமைப்பு அதற்கு முன்பாகப் பார்த்ததில்லை என்றாலும், சார்ஸ்-கோவி-2 நோய்க்கு முந்தைய எதிர்ப்பாற்றல் எத்தனை பேரிடம் இருந்தது என்பதை விளக்குவதாக அந்தக் கட்டுரை இருக்கிறது (மேட்டஸ் மற்றும் பலர், 2020). அந்த ஆய்வுக் கட்டுரை சாதாரண ஜலதோஷத்தை உருவாக்குகின்ற வைரஸின் துணுக்குகளைப் பயன்படுத்தி டி-செல்களைச் செயல்படுத்த முடியுமா என்பதை அறிவதையே தன்னுடைய முக்கிய நோக்கமாகக் கொண்டிருந்தது. அவர்கள் அதைச் செய்து காண்பித்திருக்கிறார்கள். தங்களுடைய கட்டமைப்பை சார்ஸ்-கோவி-2யுடன் பகிர்ந்து கொண்டு பொதுவானதாக இருந்த துணுக்குகளே அவ்வாறு டி-செல்களைச் செயல்படுவதில் மிகச் சிறந்த துணுக்குகளாக இருந்தன. ‘இதற்கு முன்பாக அவர்கள் சார்ஸ்-கோவி-2யை எதிர்கொண்டதில்லை என்ற போதிலும், சார்ஸ்-கோவி-2யுடன் நெருக்கமாக இருக்கின்ற வைரஸ்களிடம் ஏற்கனவே சிக்கி அதிலிருந்து மீண்டவர்களாக இருக்கின்றனர்’ என்று நான் அதை விளக்க விழைகிறேன். அதுபோன்ற சந்திப்புகளை ஒருபோதும் மறக்காத வகையிலேயே நோயெதிர்ப்பு அமைப்புகள் செயல்படுகின்றன. அது குறித்து நாம் எந்தவொரு சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை.

இது சரியானதுதானா என்று எந்தவொரு கேள்வியும் எழவில்லை. சில ஆண்டுகளுக்கு முன்னராகத் தடுப்பூசி போடப்பட்டு, பின்னர் தடுப்பூசியில் உள்ளவற்றிற்கு எதிராக இருந்த நபர்களில் காணப்பட்ட எதிர்வினைகளின் தன்மையை ஒத்ததாகவே அந்த எதிர்வினைகளின் தன்மை இருந்தது. நோயெதிர்ப்பாற்றல் நீடித்து இருக்குமா என்பதைக் கண்டறிவதற்காக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 2003ஆம் ஆண்டில் சார்ஸால் பாதிக்கப்பட்டவர்களிடம், 17 ஆண்டுகளுக்குப் பிறகும் அந்த வைரஸுக்கு எதிரான வலுவான டி-செல் எதிர்வினைகள் இருந்ததாகக் கண்டறியப்பட்டது (லு பெர்ட் மற்றும் பலர், 2020). 17 ஆண்டுகளுக்கு முன்பாக சார்ஸிலிருந்து மீண்ட அந்த நபர்கள், இதுவரையிலும் தங்களுடைய உடல்கள் பார்த்திராத புதிய வைரஸுக்கு எதிரான டி-செல் நோயெதிர்ப்பு செயல்திறனைக் கொண்டிருந்தனர். இது மற்றொரு அறிவியல் இதழான நேச்சர் இதழில் வெளியாகியுள்ளது. என்னுடன் பயிற்சியில் இருந்தவர்களுக்கு இது நிச்சயம் ஆச்சரியமளிப்பதாக இருக்காது. நோயெதிர்ப்பு மண்டலத்தில் உள்ளார்ந்த நோய் எதிர்ப்பாற்றல், ஆன்டிபாடிகள், டி-செல்கள் என்று பல பாதுகாப்பு வசதிகள் இருந்தாலும், அவற்றில் சுவாச வைரஸ்களுக்கான எதிர்வினைகளில் டி-செல்களே அதிக முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருப்பதாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளன. செல்களின் உட்புறத்திற்குள் செல்வதன் மூலம் வைரஸ்கள் தீங்கை விளைவிக்கின்றன. செல்களுக்குள் செல்ல முடியாத வகையில் மிகப் பெரிய மூலக்கூறுகளாக இருக்கின்ற ஆன்டிபாடிகளால் அவற்றைச் சென்றடைய முடியாது. உங்களுடைய உடல் குறிப்பிட்ட வழிமுறையால் வைரஸ் தொற்றுநோயை அங்கீகரிப்பதன் மூலமாக சமாளித்துக் கொள்கிறது. டி-செல்களே அந்த பாதுகாப்பு வழிமுறையின் மையத்தில் இருக்கின்றன.

சிலரிடம் சார்ஸ்-கோவி-2க்கு முந்தைய நோய் எதிர்ப்பாற்றல் குறிப்பிடத்தக்க அளவிலே இருந்தது – தொடர்ந்து இருந்து கொண்டிருக்கிறது – என்ற கூற்றின் மீதான சந்தேகங்களை சிலர் வெளிப்படுத்துவார்கள் என்பதை நான் அறிவேன். ஆயினும் மனித நோயெதிர்ப்பு மண்டலம் குறித்தும், சுவாச வைரஸ்களுக்கான நமது எதிர்வினைகள் குறித்தும் அறிவைக் கொண்டிருக்கும் எந்தவொரு அறிவியலாளரும் ‘இந்தத் தரவு முக்கியமானது’ என்பதை ஒப்புக் கொள்வார் என்பதில் உறுதியாக இருக்கிறேன். அதையே வேறு வழியில் ‘இதே கண்டுபிடிப்புகளை சுயாதீனமாகப் பெற்றிருக்கின்ற உலகெங்கிலும் உள்ள முன்னணி மருத்துவ நோயெதிர்ப்பு நிபுணர்களைப் புறக்கணித்து விட்டு, இந்த வைரஸுக்கு எதிரான நோயெதிர்ப்பாற்றல் யாருக்குமே இல்லை என்று கருதுவது பாதுகாப்பானது என்று நீங்கள் கருதுகிறீர்களா?’ என்று கேட்டால், அவர்கள் ‘இல்லை’ என்று வெறுமனே பதிலளிப்பார்கள்.

அந்த வைரஸை அதுவரையிலும் பார்த்ததே இல்லை என்றாலும், மக்கள் தொகையில் கணிசமான அளவினர் (30%) சார்ஸ்-கோவி-2க்கு எதிரான டி-செல்கள் என்ற ஆயுதம் ஏந்தி தங்களைக் காத்துக் கொள்ளும் திறனுடனே 2020க்குள் நுழைந்திருப்பார்கள் என்பதற்குப் போதுமான ஆதாரங்களை வழங்கியுள்ளேன் என்றே நான் நம்புகிறேன். இந்த புதிய தொற்றிற்கு முன்னரே அவர்கள் ஜலதோஷத்தை உருவாக்குகின்ற கொரோனா வைரஸ்களில் ஒன்றால் பாதிக்கப்பட்டிருப்பர் என்றிருக்கும் நிலையில், ‘அனைவரும் பாதிக்கப்படுவார்கள்’ என்று சேஜ் அமைப்பு கருதுவது மிகவும் அப்பாவித்தனமானதாகும்.தவறான இரண்டாவது அனுமானம் 

இப்போது இரண்டாவது அனுமானத்திற்குத் திரும்ப வருகிறேன். சார்ஸ்-கோவி-2 நோயால்  இதுவரை 10%க்கும் குறைவான மக்களே பாதிக்கப்பட்டுள்ளதாக சேஜ் நம்புகிறது என்பதை இங்கே நினைவில் கொள்ள வேண்டும். அவ்வாறு அவர்கள் சொல்வதற்கு, ரத்த மாதிரிகளைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட நோய் குறித்த ஆய்வுகளில் நடத்தப்பட்ட கணக்கெடுப்புகளில் (என்.எச்.எஸ். 2020 ஆகஸ்ட்) வைரஸிற்கெதிராக ரத்தத்தில் ஆன்டிபாடிகள் இருப்பதாகக் கண்டறியப்பட்ட மக்கள்தொகை குறித்த விகிதமே முக்கிய காரணமாக இருக்கிறது. நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை குறித்த  நியாயமான கணிப்பு என்று அவர்கள் இதையே நம்புவார்கள் என்று நான் நம்பவில்லை. சுவாச வைரஸால் பாதிக்கப்பட்ட அனைவருமே ஆன்டிபாடிகளை உருவாக்க மாட்டார்கள் என்பதை நன்கு அறிந்திருப்பதாலேயே நான் இதைச் சொல்கிறேன். நோய்க்கு முந்தைய எதிர்ப்பாற்றல் கொண்டவர்களில் பலரும் பாதிக்கப்படுவதில்லை. உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அனைவருமே ஆன்டிபாடிகளை உருவாக்கியிருப்பார்கள் என்பதையும்,  சில சமயங்களில் அவை சில மாதங்களுக்குப் பிறகும் கண்டறியப்படலாம் என்பதையும் நாம் அறிந்திருக்கிறோம். ஆனால் வைரஸுக்கு எதிராக மிகவும் லேசான எதிர்வினை கொண்டவர்கள் ஆன்டிபாடிகளை உருவாக்கிடவில்லை. சிறிய அளவிலே ஆன்டிபாடிகளை உற்பத்தி செய்தவர்களிடம், அது பெரும்பாலும் சில வாரங்களுக்குள்ளே மறைந்துவிடும். அறிகுறிகள் இல்லாதவர்கள், லேசான அறிகுறிகள் மட்டுமே உள்ளவர்கள் பெரும்பாலும் ஆன்டிபாடிகளை உருவாக்குவதில்லை. ஆய்வு செய்த அனைவரின் ரத்தத்திலும் சார்ஸ்-கோவி-2க்கு எதிர்வினயாற்றுகின்ற திறன் கொண்ட டி-செல்கள் இருந்தன என்பது இங்கே குறிப்பிட்டுக் கூறத் தக்கதாக இருக்கிறது. ரத்தத்தில் வைரஸிற்கெதிரான ஆன்டிபாடிகள் இல்லை என்றாலும், டி-செல்கள் இருந்த அவர்கள் அனைவருமே வைரஸிற்கு நோயெதிர்ப்பு கொண்டவர்களாக மாறியிருந்தனர். உலக சுகாதார நிறுவனம் சமீபத்தில் தொற்று நோயால் 75 கோடி பேர் இதுவரையிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக மதிப்பிட்டுள்ளது. கிட்டத்தட்ட அவர்களில் யாருமே அந்த நோயால் மீண்டும் பாதிக்கப்படவில்லை என்பதாலேயே நான் இதைக் கூறுகிறேன். மிகமிகச்சிறிய எண்ணிக்கையிலானோர் மட்டுமே மீண்டும் பாதிக்கப்பட்டு இருப்பதாகத் தெரிகிறது. பல்வேறு நோயெதிர்ப்புக் குறைபாடுகளுடன் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் சிலர் இந்த 75 கோடி மக்களுக்குள் நிச்சயம் இருந்திருப்பார்கள் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அவர்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. ஆக மக்கள் மீண்டும் பாதிக்கப்படுவதில்லை என்பது உறுதியான உண்மையாக உள்ளது. அதுதான் பொதுவாக நடப்பது. இதைப் போன்றுதான் நமது நோயெதிர்ப்பு அமைப்பு செயல்படுகிறது. அது அவ்வாறு இருக்கவில்லையென்றால், இங்கே நம்மால் உயிருடன் இருக்க முடியாது. மேலும் கூடுதல் விவரங்களுக்கு புர்கெஸ் மற்றும் பலர் (2020) கட்டுரையைப் பார்க்கவும்.

நோய்த்தொற்றுக்குப் பிறகு ஆன்டிபாடிகளை உருவாக்குகின்றவகளிடம் நாம் மீண்டும் இப்போது திரும்புவோம். மருத்துவ நோயெதிர்ப்பு நிபுணர்களுக்கும், பாலூட்டிகளின் நோயெதிர்ப்பு அமைப்புகளைப் பற்றி நன்கு அறிந்திருப்பவர்களுக்கும் இதுவொன்றும் ஆச்சரியமாக இருப்பதில்லை. மெதுவான, சிக்கலான, ஆற்றல் அதிகம் தேவைப்படுகின்ற செயல்முறையின் மூலம் ஆன்டிபாடிகளை உருவாக்கும் வழியில் இளமையான ஆரோக்கியமான மக்கள் செல்லத் தேவையிருப்பதில்லை என்பதைக் கவனியுங்கள். வைரஸைத் தடுக்க நோயெதிர்ப்பு மண்டலத்தின் பிற ஆயுதங்களை, அதாவது உள்ளார்ந்த நோயெதிர்ப்பு அமைப்பை அவர்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர். அவர்களுடைய உடல்கள் உள்ளே நுழையும் நோய்க்கிருமிகளை கவனமாகக் கவனித்து, எதிர்காலத்திற்காக அவற்றை நினைவில் வைத்துக் கொள்ளும் வகையில் டி-செல்களைத் தூண்டுகின்றன. நோயால் பாதிக்கப்படும் இவர்களுக்கு ஆன்டிபாடிகள் வடிவில் எந்தவொரு தடயத்தையும் விட்டுச் செல்லாமல், வைரஸிடமிருந்து தங்களை விடுவித்துக் கொள்வது எளிதானது.

நாம் இதிலிருந்து தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் விகிதத்தைக் கண்டறிவதற்கான நம்பகமான வழிகாட்டியாக ஆன்டிபாடிகள் கொண்டவர்களின் எண்ணிக்கை சதவீதத்தை நம்புவது சேஜ் செய்திருக்கும் தவறு என்ற முடிவுக்கே வர முடியும். உண்மையில் இது மிகவும் மோசமான, செய்யப்படக் கூடாத பிழையாகும். சேஜ் உறுப்பினர்களிடம் போதிய திறமை இல்லாததாலேயே இவ்வாறு நிகழ்ந்திருக்கிறது. அவர்களிடம் ஏராளமான கணிதவியலாளர்கள் இருந்த போதிலும், களப்பணியிலிருந்து கிடைக்கின்ற தரவுகளை விளக்குவதற்கான சரியான அனுபவமுள்ளவர்கள் யாரும் இருக்கவில்லை என்று குறிப்பிடுவது வருத்தமளிப்பதாக இருந்தாலும் அதை நான் சொல்லியே ஆக வேண்டியுள்ளது. இவையனைத்திற்கும் பிறகு, இங்கிலாந்தில் தொற்றுநோய் அடைந்திருக்கும் முன்னேற்றம் பற்றி நம்மால் சொல்லக்கூடியது ஒன்றே ஒன்றுதான் – ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள மக்களின் எண்ணிக்கை அவர்கள் சொல்வது போல 7% அல்ல.

பாதிக்கப்பட்டிருப்பவர்கள் குறித்து நமக்குத் தெரியாதிருக்கின்ற இந்த எண்ணிக்கை குறித்த மதிப்பீட்டை அடைவது மிகவும் முக்கியம். சேஜ் கூறியிருப்பது சரி என்றால், மேலும் பாதிக்கப்படக்கூடிய வகையில் ஆபத்தில் உள்ளவர்கள் நான் சொல்வதைக் காட்டிலும் கூடுதலாக உள்ளனர் என்பதே சரியாக இருக்கும். எந்த அளவிற்கு உண்மையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ள எளிதான வழி எதுவும் இருக்கவில்லை. இருப்பினும், அதை மதிப்பீடு செய்வதற்கு மிகவும் சுயாதீனமான இரண்டு வழிமுறைகளை நான் பயன்படுத்தியுள்ளேன். ஒத்துப் போகின்ற மதிப்பீடுகளை அந்த இரண்டு வழிமுறைகளும் வழங்கியிருப்பதில் நான் நிம்மதியும், மகிழ்ச்சியும் அடைந்திருக்கிறேன்.

முழுமையாக நமக்குத் தெரிந்திருக்காத போது, சில நோக்கங்களுக்காக ஓரளவிற்கு அது குறித்த மதிப்பீட்டை ஏற்றுக் கொள்ளலாம் என்பது பொதுவாக இருக்கின்ற உண்மை. அந்த மதிப்பீட்டைச் செய்வதற்கு, சுயாதீனமாக இருக்கின்ற முறைகளைப் பயன்படுத்துவதே சிறந்த வழியாக இருக்கும். ஆதாரம் இல்லை என்றாலும், அந்த முறைகளில் ஒத்த முடிவுகளைப் பெறுவதே அந்த மதிப்பீடுகள் சரியானவை என்பதற்கான உறுதியான சான்றாக இருக்கும் என்று பொதுவாகக் கருதப்படுகிறது. மதிப்பீடுகளின் வலிமை கொண்டு கண்டறியப்படுகின்ற கணிப்புகள் சரியானவை என்றால், மதிப்பீடுகளும் சரியானவையாகவே இருக்கும். இந்த சந்தர்ப்பத்திலும் அது உண்மையாகவே இருப்பதால், தனிப்பட்ட முறையில் எனது மதிப்பீடு சரியானது என்ற நம்பிக்கை என்னிடம் அதிகமாகவே இருக்கிறது.

எத்தனை பேர் உண்மையில் பாதிக்கப்பட்டுள்ளனர்? 

தொற்று இறப்பு விகிதம் (ஐ.எஃப்.ஆர்  – IFR) என்பதிலிருந்து பின்னோக்கிச் செயல்படுவதே, சார்ஸ்-கோவி-2ஆல் பாதிக்கப்பட்டுள்ள மக்கள்தொகையின் அளவை மதிப்பிடுவதற்கான முதல் வழிமுறையாக இருந்தது. தொற்று இறப்பு விகிதம் என்பது முழுமையற்ற கருவியாக இருந்தாலும், மக்கள்தொகை குறித்து மிகச்சரியான குறுக்குவெட்டைப் பயன்படுத்தினால், புள்ளிவிவர ரீதியாக எத்தனை நோய்த்தொற்றுகள் ஒரு மரணத்திற்கு காரணமாகின்றன என்ற கேள்வியை அது எழுப்புகின்றது. இந்த தொற்று இறப்பு விகிதம் உலகெங்கிலும் உள்ள பல ஆய்வுக் குழுக்களால் கணக்கிடப்பட்டு வருகிறது. தொற்றுநோய்களின் போது ஒரு நகரத்தையே முழுமையாக சிலர் ஆய்வு செய்துள்ளனர். எனவே காலப்போக்கில் எத்தனை பேர் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்து அறிந்து கொள்ள வாய்ப்புள்ளவர்களாக அவர்கள் உள்ளனர். நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக சோதித்து அறியப்பட்டவர்களில் எத்தனை பேர் இறந்து போனார்கள் என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும்.

இதுபோன்ற ஆய்வுகளை சீராய்வு செய்து பார்க்கும்போது, ​​ தொற்று இறப்பு விகிதம் குறித்த நியாயமான மதிப்பீடு 0.2% (ஐயோனிடிஸ், 2020) என்றிருப்பதாகவே நான் நினைக்கிறேன். இந்த எண்ணை எளிமையாகப் புரிந்து கொள்வதற்கு, தொற்று இறப்பு விகிதத்தை 0.1% என்று கற்பனை செய்து பாருங்கள். அது 1000 பேரில் 1 நபர் தொற்றுநோய்க்குப் பிறகு இறந்து விடுவார் என்று சொல்வதைப் போன்றது. அதைக் கருத்தில் கொண்டு பார்த்தால், 43,000 இறப்புகள் என்பது (இங்கிலாந்தில் இதுவரையிலும் சார்ஸ்-கோவி-2ஆல் இறந்தவர்களின் எண்ணிக்கை) தொற்றுநோய்களால் 4.3 கோடிப் பேர் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்ற மதிப்பீட்டைத் தரும். தொற்று இறப்பு விகிதம் 0.2% என்றால், பாதிக்கப்பட்ட 500 பேரில் ஒருவர் இறந்து விடுகிறார் என்ற அளவில், சுமார் 2.15 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதைக் குறிக்கும். அதாவது மொத்தமுள்ள 6.7 கோடி மக்கள்தொகையில் தொற்று நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை 32 சதவீதமாக இருக்கும். இந்த மதிப்பீடு சற்று அதிகமாக இருக்கலாம் என்றாலும், சேஜ் முன்வைக்கின்ற 7% என்ற மதிப்பீட்டைக் காட்டிலும், உண்மையான எண்ணிக்கையுடன் மிக நெருக்கமாக இருக்கிறது என்றே நான் நம்புகிறேன்.

பாதிக்கப்பட்டுள்ள மக்கள்தொகையின் அளவை மதிப்பிடுவதற்கு மற்றொரு முறையும் உள்ளது. வேறுபட்ட அணுகுமுறையால் என்ன விளைகிறது என்பதைப் பார்க்க அது உதவும். அனைத்து தொற்றுநோய்களும் ஆன்டிபாடிகளை உருவாக்குவதில்லை என்று நான் முன்பே குறிப்பிட்டிருந்தேன்.  பாதிக்கப்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை 7% என்ற சேஜ்-இன் மதிப்பீடு மிகவும் குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது என்பதை நாம் உறுதியாக அறிந்திருக்கிறோம். மிகச் சமீபத்திய மாதங்களில் இந்த பிரச்சனை குறித்து அறிவியலாளர்கள் பலருடனும் நான் விவாதித்தேன். குறைந்தபட்சம் 7% பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்ற நிலையில், நாங்கள் இந்த 7% பேர் பெரும்பாலும் உடல்நிலை சரியில்லாதவர்கள் என்பதை ஏற்றுக் கொண்டோம். இந்த 7% பேரில் உள்ள ஒவ்வொருவருக்கும் மிதமான அறிகுறிகள் (விரைவிலேயே மறைந்து விடும் அளவிற்கு குறைந்த அளவு ஆன்டிபாடிகள் கொண்ட) அல்லது மிகக்குறைவான அறிகுறிகள் மட்டுமே கொண்டு இரண்டு அல்லது மூன்று பேர் தொடர்பில் இருந்திருப்பார்கள். அவர்களிடம் மிகக் குறைந்த அல்லது ஆன்டிபாடிகளே இல்லாத நிலைமை இருந்திருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். ரத்த பரிசோதனை கணக்கெடுப்புகளில், ஆண்டிபாடிகள் குறைவாக இருப்பதால், அவர்கள் அனைவரும் தவற விடப்படப்பட்டிருக்க வேண்டும் என்பதால், அந்த 7% எண்ணிக்கையை 21% முதல் 28% வரை (அடிப்படை மதிப்பீட்டிலிருந்து மூன்று அல்லது நான்கு மடங்கு) என்ற எண்ணிக்கைக்கு மாற்றிக் கொள்ள அது எனக்கு அனுமதி தருகிறது. எண்கள் குறித்த விளையாட்டாக இது இருந்த போதிலும், முறைப்படி சரியானது என்றே நான் கருதுகிறேன். ஏனெனில் தொற்று இறப்பு விகிதம் முறையின் மூலமாக கிடைத்த மதிப்பீட்டோடு இந்த எண்ணிக்கை மதிப்பீடு நன்கு பொருந்திப் போவதாகவே இருக்கிறது.

இதுவரை சார்ஸ்-கோவி-2ஆல் பாதிக்கப்பட்டுள்ள மக்கள்தொகையின் அளவு குறித்த சேஜ் மதிப்பீடு ஒட்டுமொத்தமாக அமெச்சூர்த்தனமாக மிகவும் குறைத்து மதிப்பிடுவதாகவும், உண்மையில் அது 25 முதல் 30 சதவீதம் இருக்கலாம்  என்று இரண்டு சுயாதீன முறைகள் மூலம் என்னால் உறுதியாகக் கூற முடியும் என்றே நான் நம்புகிறேன்.மறுபரிசீலனை

இதுவரையிலும் பார்த்தவற்றை மீண்டும் இப்போது மறுபரிசீலனை செய்து பார்க்கலாம். அனைத்து மக்களும் தொற்று நோயால் பாதிக்கப்படக் கூடியவர்களாக இருக்கிறார்கள் என்றும், இதுவரையிலும் 7% பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சேஜ் கூறுகிறது. உண்மையில் இது நம்பமுடியாத தகவலாகவே இருக்கிறது. சுவாச வைரஸ்களுக்கு எதிரான நோயெதிர்ப்பு நினைவுகள் குறித்த தளங்களில் இருந்து வருகின்ற அனைத்து முன்னோடிகளையும் அவர்கள் புறக்கணித்துள்ளனர். நோய்க்கு முந்தைய எதிர்ப்பாற்றலைக் கொண்டவர்களாக சுமார் 30% மக்கள் இருப்பதாகக் காட்டுகிற உலக முன்னணி மருத்துவ நோயெதிர்ப்பு நிபுணர்களின் தரமான ஆய்வுகள் பலவறை அவர்கள் பார்த்ததில்லை அல்லது புறக்கணிக்கவே செய்திருக்கிறார்கள். சிறு குழந்தைகளின் செல்கள் தங்களுடைய முதிர்ச்சியற்ற உயிரியல் செயல்பாடுகளால் ஏஸ்2 (ACE2) எனப்படுகின்ற ஸ்பைக் புரத ஏற்பியை குறைவாகவே உருவாக்குகின்றன. அதன் விளைவாக, அவர்கள் நோய்த்தொற்று ஏற்படாதவர்களாக இருக்கின்றார்கள். அவர்கள் அத்தகைய சிறுகுழந்தைகள் அடங்கிய பெரிய மக்கள்தொகையை ‘பாதிப்புக்குள்ளாகக் கூடியவர்கள்’ பட்டியலிலிருந்து முழுமையாக விலக்கி வைத்திருக்க வேண்டும். நோய்ப்பரவலில் அனைத்துக் குழந்தைகளும் பங்கேற்க மாட்டார்கள் என்று நான் கருதவில்லை. நிச்சயம், குறைந்தபட்சமாக மூன்றில் இரண்டு பங்கினர் அவ்வாறு இருக்கலாம் என்று நான் நம்புகிறேன். எப்படியிருந்தாலும் அது இங்கே பிரச்சனையாக இருக்கவில்லை.

ஆக மிகவும் முக்கியமான மாறியைப் பொறுத்தவரை சேஜ் முழுக்கத் தவறு செய்திருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது: நோய்க்கு முந்தைய எதிர்ப்பாற்றல் என்ற ஒன்று இருக்கவில்லை என்ற கருத்துடனே அவர்கள் இருந்திருக்கிறார்கள். பாதிக்கப்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை குறித்து கிடைத்திருக்கின்ற சான்றுகள் சுமார் 30% என்ற அளவைத் தெளிவாகச் சுட்டிக் காட்டுகின்றன (அதனுடன் மேலும் சில குழந்தைகளைச் சேர்த்தால், ஏறக்குறைய 40% பேர், தொழில்நுட்ப ரீதியாக நோய் எதிர்ப்பாற்றல் கொண்டவர்களாக இல்லாவிட்டாலும்  நோய்த் ‘தடுப்பு’ ஆற்றல் கொண்டவர்களாகவாவது நிச்சயம் இருப்பார்கள்).

வெறும் 7% பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற அவர்களின் நம்பிக்கையின் அடிப்படையிலான இரண்டாவது அனுமானத்தை தவறு என்று நான் முறையாக சுட்டிக் காட்டியிருப்பதாகவே நம்புகிறேன். நான் அவர்கள் முன்வைத்த மதிப்பீட்டை நிராகரிப்பதை மட்டும் செய்யவில்லை. அந்த மதிப்பீட்டை இரண்டு சுயாதீன முறைகளைப் பயன்படுத்தி ஒத்த மதிப்பீடுகளைப் பெறுகின்ற வகையில் மாற்றவும் முற்பட்டிருக்கிறேன். என்னால் பயன்படுத்தப்பட்ட அந்த இரண்டு வழிமுறைகளின்படி பாதிக்கப்பட்டுள்ளவர்கள் 7% பேர் அல்ல என்றும், அவர்கள் 25 முதல் 30 சதவீதம் அளவிலே இருக்கலாம் என்றும் கண்டறிந்துள்ளேன்.

இரண்டாவது அலை எங்கே?

கிடைத்திருக்கும் சான்றுகள் நம்மை எங்கே வழிநடத்திச் செல்கின்றன? தொற்றுநோய் இப்போதுதான் ஆரம்பமானது என்று சேஜ் வாதிடுவது நிச்சயமாக முட்டாள்தனமானது. மிகவும் மோசமான கருத்து என்று சாதாரண மக்களால்கூட அதைச் சொல்லிவிட முடியும். இது ஒரு சுவாச வைரஸ். ஆமாம்… இது புதிய வைரஸ். பருவகாலத்தில் வருகின்ற சராசரி இன்ஃப்ளூயன்ஸா நோயைக் காட்டிலும், சற்று அதிகமாக இறப்புகள் ஏற்படுவதைத் தவிர, மிகமோசமான ஆண்டுகளில் சாதாரண காய்ச்சலைக் காட்டிலும் இது ஒன்றும் மிகவும் ஆபத்தான நோயாக இருக்கப் போவதில்லை. இதற்கு முன்னால் வந்து போயிருக்கும் சுவாச வைரஸ்களைப் போலவே, இது வருகின்ற போது பலரும் உடல்நிலை சரியில்லாமல் போவார்கள். அதில் மிகவும் வயதானவர்கள், ஏற்கனவே நீண்டகாலமாக நோய்வாய்ப்பட்டிருப்பவர்கள் என்று சிலர் இறந்து போவார்கள். பின்னர் அந்த தொற்றுநோய் மறைந்து விடும்.

ஆனால் அதைப் போன்று இப்போது எதுவும் இன்னும் நடக்கவில்லை. ஏனெனில் இப்போது வந்திருப்பது முதன்முதலாக வந்திருக்கும் ‘சமூக ஊடகத் தொற்றுநோய்’ ஆகும். அதனாலேயே அது மறைந்து போகாமல் இன்னும் நீடிக்கிறது. தங்களுடைய உறவினர்களில் யாராவது ஒருவர் இந்த நோய்க்குப் பலியாகி இறந்து போகவில்லை என்றால், மக்கள் தங்களுக்குத் தெரியாத விஷயங்களில் பெரும்பாலும் ஒரு கணம் மட்டுமே ஆர்வத்துடன் இருப்பர். ‘மிகவும் ஆபத்தான புதிய வைரஸால் ஏற்பட்ட நெருக்கடியைக் காட்டிலும், வைரஸ்கள் பொதுவாக என்ன செய்யும் என்பது குறித்த விழிப்புணர்வு இல்லாததாலேயே இந்த முழு கோவிட் நாடகமும் நிகழ்ந்துள்ளது’ என்று டாக்டர் ஜான் லீ சமீபத்தில் கூறியுள்ளார் (லீ, 2020). உண்மையில் போதுமான அளவிற்கு டாக்டர் லீ சொல்லவில்லை என்றே நான் நினைக்கிறேன். அதிக அளவிலான அறிவியலாளர்கள், மாடல்களை உருவாக்குபவர்கள் என்று திறமையற்ற குழு ஒன்றின் பிடியில் பல மாதங்களாக நாம் சிக்கிக் கொண்டிருக்கின்றோம். இந்த காலகட்டத்தில், நமது சமுதாயத்தை அவர்கள் எண்ணற்ற வழிகளில் முற்றிலும் தவறாகவே வழிநடத்திச் சென்றுள்ளனர். ஆகவே நாம் இப்போது முகக்கவசம் அணிந்து சுற்றி வந்து கொண்டிருக்கிறோம்!

எடுத்துக்காட்டாக – ஆஸ்துமாவுக்கான சிகிச்சையாக நுரையீரலுக்குள் உள்ளிழுக்கும் மருந்துகள் சரியான இடங்களைச் சென்றடைவதில் நோயாளிகளுக்கு இருக்கின்ற நடைமுறைச் சிக்கல்கள் குறித்து அறிந்திருக்கும் நம்மில் பலர், சுவாச வைரஸ்கள் பரவுவதை இதுபோன்ற மெல்லிய துணிக் கவசங்கள் தடுக்காது என்பதை நன்கு அறிவோம் (மேகிண்டயர் மற்றும் பலர், 2015). ‘மருத்துவ ஆதாரங்களின் படிநிலை’ முறையில் ஒருவரின் தலையைச் சுற்றி நீராவி நகருகின்ற வீடியோவை உங்களிடம் காட்டுகின்ற ஒருவரால் நன்கு திட்டமிட்டு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனைகளின் முடிவுகளை மிஞ்ச முடியாது என்பதை யாரும் அறிந்திருக்கவில்லை என்றே தோன்றுகிறது.

தொற்றுநோய் இன்னும் மறைந்து விடாமல் இருப்பதற்கு, அது இன்னும் மறைந்து விடவில்லை என்று சேஜ் கூறுவதே முக்கியமான காரணமாக இருக்கிறது. ஆனால் நடைமுறையில் அது முற்றிலுமாக மறைந்து விட்டது. பல வாரங்களாக என்ஹெச்எஸ் அறக்கட்டளைகள் பலவற்றில் மரணங்களே நிகழவில்லை அல்லது மிகச்சிறிய அளவிலேயே நிகழ்ந்திருக்கின்றன. மிகச்சரியான ஆதாரங்களுடனான கோட்பாடே நிரூபிக்கக் கூடிய வகையிலான கணிப்புகளுக்கு வழிவகுத்துத் தரும் என்பதை நான் முன்பே குறிப்பிட்டிருக்கிறேன். அவற்றில் சிலவற்றை இன்னும் பாதிக்கப்படக்கூடிய மக்கள்தொகையின் சதவீதம், பாதிக்கப்பட்டுள்ள மக்கள்தொகையின் சதவீதம் குறித்து என்னுடைய மதிப்பீடுகளின் அடிப்படையில் நாம் ஆராயலாம்.

சேஜ் ஏற்றுக் கொண்டிருப்பதைக் காட்டிலும், அந்த விளக்கப்படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளவையே மிகவும் யதார்த்தமான மதிப்பீடுகள் என்று வெற்றிகரமாக நான் வாதங்களை முன்வைத்திருப்பதாக ஏற்றுக் கொண்டிருப்பீர்கள் என்றால், உங்களால் முக்கியமான வேறுபாட்டைக் காண முடியும். நோய்த்தொற்று ஏற்படக்கூடிய, நோய்ப்பரவலில் பங்கேற்று நோய்வாய்ப்பட்டு இறந்து போகக்கூடிய மீதமுள்ள மக்கள்தொகை இப்போது மிகக் குறைவாக, நிச்சயமாக 40%க்கும் குறைவாக – பெரும்பாலும் 30%க்கும் குறைவாகவே – இருக்கும். தொற்றுநோயால் பாதிக்கப்படக்கூடிய மக்கள்தொகையின் ஒரு பகுதி போதுமான அளவிற்கு – 35 சதவீத அளவிற்கு – குறைந்துவிட்டால், குறைவான அந்த மக்கள் தொகையால் தொடர்ந்து தொற்றுநோய் பரவலுக்கு உதவ  முடியாது (லூரென்கோ மற்றும் பலர், 2020 மற்றும் கோம்ஸ் மற்றும் பலர், 2020). தேசிய அளவில் அந்த நிலையிலேயே நாம் இப்போது இருக்கிறோம் என்று நான் நினைக்கிறேன். இதன் விளைவாக, தொற்றுநோய் குறைந்து மறைந்து விடும் (அடுத்த சுவாச வைரஸ் வரக்கூடும், அது ஒருவேளை தடுமன் காய்ச்சலாக (இன்ஃப்ளூயன்ஸா) இருக்கும்).

இதுவரையிலும் இதுபோன்றுதான் நடந்துள்ளது என்றே நான் நினைக்கிறேன். கணிப்புகளைப் பொறுத்தவரையில், தேசிய அளவில் இப்போது மக்கள்தொகையின் மிகக் குறைந்த சதவீதமே எளிதில் பாதிக்கப்படக்கூடியதாக இருக்கிறது என்பதே தொற்றுநோய் குறித்த எனது கருத்தாக இருக்கிறது. அதாவது கோவிட்-19இன் மற்றுமொரு பெரிய, தேசிய அளவிலான பரவலை நாம் மீண்டும் காண முடியாது. வைரஸ் அலைகள் மீண்டும் வரப் போவதில்லை. இரண்டாவது அலை என்பது ஒரு நூற்றாண்டுக்கு முன்பு முதலாம் உலகப் போரின் இறுதியில் வந்த இன்ஃப்ளூயன்ஸாவைப் பற்றிய தவறான புரிதலை அடிப்படையாகக் கொண்டதொரு கட்டுக்கதையைத் தவிர வேறில்லை.

பிராந்திய அளவிலான பரவல்கள்  

பிராந்திய அளவிலான, சுயமாகக் கட்டுப்படுத்திக் கொள்ளும் நோய்ப்பரவல்கள் சாத்தியமில்லை என்பதால் அவற்றை நாம் எதிர்பார்க்க முடியாது என்பதையே எனது முன்னோக்கு கருத்து சுட்டிக் காட்டுகிறது. நாடு என்பது மக்களைச் சரியான கலவையாகக் கொண்டுள்ள கிண்ணம் போன்று இருக்கவில்லை. வசந்த காலத்தில் சில பகுதிகள் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. ஆனால் அனைத்து இடங்களும் அவ்வாறு பாதிக்கப்படவில்லை.  வசந்த காலத்திலே மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த பகுதிகளில், இப்போது அதிக எண்ணிக்கையிலான பாதிப்புகள், இறப்புகள் இருக்காது என்பதாகவே மற்றொரு கணிப்பு உள்ளது. தொற்றுநோயின் வசந்த காலகட்டத்தில், தலைநகரத்தில் மட்டுமே ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான மரணங்கள் நிகழ்ந்தன என்று வெறுமனே லண்டனைச் சுட்டிக் காட்டி நான் கூறுவேன். இப்போது அங்கே தொற்று முடிந்துவிட்டது. நோய் எதிர்ப்பாற்றல் மிகவும் வலுவானது, நீடித்திருப்பது என்பதால் தொற்று நோய் அங்கே திரும்பி வருவதற்கான சாத்தியம் இருக்கவில்லை. வசந்த காலத்தில் இருந்ததை விட இப்போது ஒருவரைச் சுற்றிலும் நோயைச் சுமந்து கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருக்கும் என்பதால், லண்டனில் நடைபயிற்சி செய்கின்ற பாதிக்கப்படக்கூடிய ஒருவரை அந்த வைரஸ் சென்றடைவதற்கான வாய்ப்பு மிகக் குறைவாகவே இருக்கும். ஒரு கணம் நன்கு யோசித்துப் பாருங்கள். அந்த நிலைமைதான் லண்டனில் இப்போது நீடித்து வருகிறது. அதனால்தான் வசந்த காலத்தில் இருந்ததில் ஒரு சிறிய பகுதி அளவிலேயே மரணங்கள் நிகழ்கின்றன. எனது கணிப்புடன் இது நன்கு பொருந்திப் போகிறது. ஆனால் சேஜ் எதுவும் மாறவில்லை என்றே சொல்லும். அது மிகத் தெளிவாக உள்ளது.

https://lockdownsceptics.org/wp-content/uploads/2020/10/IMG_3762-2.jpg

தொற்றுநோயின் முதல் ஆறு வாரங்களில் நடந்த இறப்புகள்,

கடந்த ஆறு வாரங்களில் நடந்திருக்கும் இறப்புகளுடன் ஒப்பிடப்பட்டுள்ளன

என்னிடம் இன்னொரு கணிப்பும் உள்ளது. இப்போது நோய்ப்பரவல்கள் இருக்கும் இடங்களில், தனக்கான அடுத்த நபரை வைரஸ் கண்டுபிடிப்பது கடினம் என்பதால், வசந்த காலத்தை விட அவை மிக மெதுவாகவே பரவும். கிடைத்திருக்கக்கூடிய அனைத்து தரவுகளையும் (ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்கள், இறப்புகள்) சக ஊழியர்களுடன் சேர்ந்து நாங்கள் மிகவும் கவனமாக ஆராய்ந்தோம். அதிக பிழை, சிறிய இடக்கு (தவறான நேர்மறை முடிவுகள், மருத்துவமனையில் சேர்க்கையில் அத்தகைய அறிகுறிகள் இல்லாது கோவிட்-19 நோய் உள்ள நபர்களாக வரையறுக்கப்பட்டு சில நாட்கள் அல்லது வாரங்கள் கழித்தே சோதனையில் நேர்மறையானவர்கள் என்று முடிவு செய்யப்படுவது) போன்றவை இருந்த போதிலும், தேசிய அளவிலான நோய்ப்பரவல் அதிகரித்து வருகின்ற ஒவ்வொரு மாறிகளின் சாய்வு நிலை வசந்த காலத்தை விட மிகவும் குறைவாக, எனது முன்மொழிவில் எதிர்பார்க்கப்படுவதைப் போலவே இருக்கிறது (ரூமினேட்டர் டான் உருவாக்கி உள்ள படங்களைக் காண்க) என்பதை நாங்கள் கண்டறிந்தோம்.

https://lockdownsceptics.org/wp-content/uploads/2020/10/Screenshot-2020-10-16-at-01.28.54-1024x644.png

https://lockdownsceptics.org/wp-content/uploads/2020/10/Screenshot-2020-10-16-at-01.29.28-1024x687.png

இந்த வரைபடங்களிலிருந்து அறியப்படும் முக்கிய புள்ளியாக போக்கு கோடு உள்ளது. அதிகரித்து வரும் பாதிப்புகள் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கை இப்போது மெதுவாக அதிகரித்து வருவது வசந்த காலத்தை விட 4 மடங்கு மிகக் குறைவாகவே இருக்கிறது. இது நாம் இறுதி நிலைக்கு வந்து விட்டதை நிரூபிக்கவில்லை என்றாலும், அந்தக் கருத்துடன் ஒத்துப் போவதாகவே இருக்கிறது.

நோய்ப்பரவலில் பங்கேற்கக்கூடிய நபர்களின் விகிதம் வீழ்ச்சியடைந்து கொண்டே இருப்பதால், இறுதியில் மருத்துவமனையில் இருந்து குணமாகி வெளியேறுபவர்களின் எண்ணிக்கை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கையை விட அதிகமாக இருக்கும். பிராந்திய அளவிலான இந்த பரவல்கள் ஒவ்வொன்றிலும் பெரும்பாலும் கோடை கால பருவநிலையால், ஓரளவு கட்டுப்பாடுகளால் குறுக்கிடப்படுவதாக முதன்மை நிகழ்வின் குறைவான அளவுகளின் தொடர்ச்சியாக இருக்கின்ற), சில வாரங்களுக்குள் விளைவுகள் அதிகரித்து, குறையத் தொடங்கும் என்றே நான் எதிர்பார்க்கிறேன். தேசிய அளவில் அது பின்னர் முடிந்து விடும். ஏற்கனவே ஸ்பெயினில் (OWID) இதுபோன்று நடந்திருப்பதாகத் தெரிகிறது.

சேஜ் பயனற்றது என்று சொல்வதை விட மோசமானது என்றே சொல்லலாம்

சேஜிடம் நம்மிடம் சொல்வதற்கென்று பயனுள்ளதாக எதுவும் இருக்கவில்லை. தற்போது அமைக்கப்பட்டுள்ள சேஜ் அமைப்பில், பொருத்தமற்ற மாடல்களை வடிவமைக்கின்றவர்கள் அதிகமாக இருக்கின்றனர். நடைமுறை, செயலறிவு, சான்றுகள் அடிப்படையிலான அனுபவம் வாய்ந்த அறிவியலாளர்கள், குறிப்பாக மருத்துவம், நோயெதிர்ப்பு, பொதுவான நிபுணத்துவம் கொண்டவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் மிகமிகக் குறைவான எண்ணிக்கையிலேயே அந்தக் குழுவில் உள்ளனர். சேஜ் உடனடியாகக் கலைக்கப்பட்டு மறுசீரமைக்கப்பட வேண்டும் என்பதே எனது கருத்து. நான் இங்கே சுட்டிக்காட்டியுள்ளவாறு, மாடலை உருவாக்குவதற்குத் தேவையான அடிப்படைகளைக் கூட அவர்கள் புரிந்து கொண்டிருக்கவில்லை. அவர்களின் மாடல்கள் பெரும்பாலும் பயனற்றவையாக (லீ, 2020) இருப்பதாலும், அதை அவர்கள் அறிந்திருக்கவில்லை என்பதாலுமே நான் இதைச் சொல்கிறேன். இரண்டாவது வாய்ப்பைப் பெற அவர்களுடைய பங்கு மிகவும் முக்கியமானது. இப்போது தங்களுடைய மாடலைச் சரிசெய்திருப்பதாக அவர்கள் கூறினாலும், தங்களிடம் உள்ள சிந்தனையை திருத்திக் கொள்வதற்கான வாய்ப்புகள் அவர்களிடம் இருக்கவில்லை. நான் சுட்டிக் காட்டியுள்ள பிழைகளில் இருக்கின்ற திறமையின்மை, பொருத்தமற்ற ‘நடவடிக்கைகள்’ மூலமாக மறைமுகமாக இழைக்கப்பட்டிருக்கும் தவறுகளால், தவிர்க்கக்கூடிய கோவிட்-19அல்லாத காரணங்களால் ஆயிரக்கணக்கான மக்களின் உயிர்கள் பறிபோயிருப்பது முற்றிலும் மன்னிக்க முடியாத செயலாகும்.

அவர்கள் இந்த நாட்டிற்கு ஏற்படுத்தி இருக்கின்ற சேதங்களைக் கண்டு ஒரு தனிநபராக நான் ஆத்திரமடைகிறேன். தனியாக நம்மால் நிர்வகிக்க முடியாத உயிருடன் தொடர்புடைய விவகாரங்களைக் கையாளுவதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அல்லது நியமிக்கப்பட்டுள்ளவர்களிடம் இருந்து அதிக அளவிலான நேர்மையை, திறனை நாம் கோரிப் பெற வேண்டும். சேஜ் யாராலும் மறுக்கமுடியாத அளவிற்கு திறமையற்றதாக அல்லது நேர்மையற்றதாகவே இருக்கிறது. தனிப்பட்ட முறையில் நான் ஒரு சில சேஜ்  உறுப்பினர்களை நன்கு அறிவேன். அவர்களில் ஒருவரைத் தவிர (பெயர் குறிப்பிடவில்லை) அனைவரும் என்னை நன்கு ஏமாற்றி விட்டார்கள் என்பதே எனக்கிருக்கும் குறையாகும். நோபல் விருது பெற்ற அறிவியலாளர்கள் மூவரிடமிருந்து மிகவும் துல்லியமாக வழங்கப்பட்ட ஆலோசனைகளை நன்கு தெரிந்தே அவர்கள் மறுத்தனர். அந்த அறிவியலாளர்கள் சேஜின் மாடல் முறை மிகுந்த பிழையுடன் இருப்பதாகத் தெரிவித்திருந்தனர். ஆவணங்கள் எதிலும் அது பதிவு செய்யப்பட்டிருக்கவில்லை என்றாலும், அறிவியல் சமூகத்தில் உள்ள அனைவரும் அதை நன்கு தெரிந்தே வைத்திருக்கின்றனர். சேஜ் அளித்த, ஆதாரமற்ற பதில்கள் அவதூறானவையாகவே இருந்தன. அவர்களுடைய பதில்கள் எதிலுமே எனக்கு நம்பிக்கை இல்லை. உங்களுக்கும் இருக்க வேண்டியதில்லை.

C:\Users\Chandraguru\Pictures\djwmch9l5otrnrzp_1601992641.jpeg

தடுப்பூசிக்கான தேவை இல்லை

இந்த தொற்றுநோயை நீக்க தடுப்பூசிகள் தேவையே இல்லை. தடுப்பூசிகளைப் பற்றி இதுபோன்று முட்டாள்தனமாகப் பேசப்படுவதை இதற்கு முன்பு ஒருபோதும் நான் கேள்விப்பட்டதே இல்லை. நோயின் ஆபத்தை எதிர்கொள்ளத் தேவையில்லாதவர்களுக்கு தடுப்பூசி போடத் தேவையில்லை. கோடிக்கணக்கான உறுதியான, ஆரோக்கியமான மக்களுக்கு மனித உடல்களில் விரிவாகச் சோதிக்கப்படாத தடுப்பூசியைப் போடுவதற்கான திட்டம் இதுவரையிலும் உருவாக்கப்பட்டிருக்கவில்லை. 30 ஆண்டுகள் மருந்துத் துறையில் கழித்த எனக்கு அது நன்கு தெரியும். இன்னும் இதுபோன்ற வேறு நகர்வுகளும் உள்ளன. தடுப்பூசியை மறுக்கின்றவர்களை காலவரையற்ற வீட்டுக் காவலில் வைக்க வேண்டும் என்று அறிக்கையொன்று அறிவுறுத்துகிறது (மெல்லோ மற்றும் பலர், 2020). சில நாடுகளில், ‘தடுப்பூசி குத்திக் கொள்ளவில்லை (ஜப்) இல்லை என்றால் வேலை (ஜாப்) இல்லை’ என்ற பேச்சு அடிபடுகிறது. ஒட்டுமொத்த மக்களுக்கும் தடுப்பூசி போடுவதை மேற்பார்வையிடுவதற்கான வேலைக்கான விளம்பரங்கள் என்ஹெச்எஸ் வேல்ஸில் வெளியிடப்பட்டுள்ளன. இதுபோன்ற எந்தவொரு திட்டமும் முற்றிலும் தேவையற்றதாகவே இருக்கின்றது. எந்தவிதமான வற்புறுத்தலையும் பயன்படுத்திச் செய்யும் போது, அது சட்டவிரோதமானதாகவே இருக்கும். முழுமையாக தகவலறிந்த பிறகு, உரிய சம்மதத்துடன் செய்தால் மட்டுமே, அதுவும் சமூகத்தில் மிகவும் தொற்றுநோயால் பாதிக்கப்படக் கூடியவர்களாக இருப்பவர்களுக்கு வழங்கப்பட்டால் மட்டுமே தடுப்பூசியை முன்கூட்டியே பயன்படுத்துவதை என்னால் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும். என்னைப் பொறுத்தவரை மற்ற திட்டங்களும் தங்களைப் பற்றிய மோசமான எண்ணங்களையே தூண்டி விட்டுள்ளன. தொற்றுநோய் குறித்து இதுவரை செய்து வந்ததைப் போலவே, இவற்றையும் நான் நிச்சயம் கடுமையாக எதிர்ப்பேன்.

நான் தொற்றுநோயியல் நிபுணர் அல்ல. கணிதவியலாளரும் அல்ல. இருப்பினும், நான் சோதனை மருந்துகளை அடையாளம் கண்டு அவற்றை உருவாக்குவதற்காக அமைக்கப்பட்ட பெரிய நிறுவனங்களில் குறிப்பிடத்தக்க பொறுப்புகளை வகித்துள்ள, மிகவும் அனுபவம் வாய்ந்த அறிவியலாளர். அனுபவம், கற்பனை, புத்திக் கூர்மை ஆகியவற்றின் ஒவ்வொரு பகுதியையும் அவ்வப்போது பயன்படுத்தி பெரிய முடிவுகளை நான் அப்போது எடுக்க வேண்டியிருந்தது. புதிய கருத்துகள், அறிவைக் கொண்டு புதிய பகுதிகளுக்குள் விரைவாக நுழைய என்னால் முடிந்திருக்கிறது. முடிந்த அளவிற்குத் திறமையான நபர்களுடன் பணியாற்றி அவர்களுடன் எப்போதும் ஒத்துழைப்பவனாகவே நான் இருந்திருக்கிறேன். புதிய மருந்துகள் கண்டுபிடிப்பில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இதையே நான் மீண்டும் மீண்டும் செய்து வந்திருக்கிறேன். புதிய உயிரி தொழில்நுட்ப நிறுவனங்களை உருவாக்குகின்ற, மிகவும் மாறுபட்ட நோய்கள், புதிய சிகிச்சை அணுகுமுறைகளைக் கையாளும் வாடிக்கையாளர்களுக்கு இன்றுவரையிலும் அறிவுரை வழங்கி வருகிறேன்.

என்னுடைய இந்தப் பின்னணி மற்றவர்களுடைய முன்மொழிவுகளை, அனுமானங்களை மதிப்பிடுவதற்கும், அடிப்படையான அறிவியலைக் கொண்டு சிக்கல்களைச் சமாளிப்பதற்கும் எனக்கு மிகச் சிறந்த முறையில் உதவியுள்ளது என்று நான் பெருமையுடன் சொல்லிக் கொள்கிறேன். சார்ஸ்-கோவி-2யும் அவற்றில் ஒன்றாக இருக்கிறது. நான் இதுவரை செய்து வந்த பணிகளிலே மிக முக்கியமானதாக அது இருக்கிறது.

References

Yeadon et al (2020). “How Likely is a Second wave?” Lockdown Sceptics, September 7th 2020. Updated September 8th 2020.

NHS (Aug 15 2020).

SAGE minutes (September 21st 2020), Summary of the effectiveness and harms of different non-pharmaceutical interventions.

Burgess, et al. (2020). “Are we underestimating seroprevalence of SARS-CoV-2?“, BMJ, September 3rd 2020

Ioannidis, J. (2020). “Global perspective of COVID‐19 epidemiology for a full‐cycle pandemic“, European Journal of Clinical Investment, October 7th 2020

Zhu, et al (2020). “From SARS and MERS to COVID-19: a brief summary and comparison of severe acute respiratory infections caused by three highly pathogenic human coronaviruses“, Respiratory Research, August 27th 2020

Cepheid Innovation Technical Datasheet (Xpert Xpress SARS-CoV-2), page 32.

Gupta, S. (2020). “Matt Hancock is wrong about herd immunity“, Unherd, October 14th 2020

Mateus et al (2020) “Selective and cross-reactive SARS-CoV-2 T cell epitopes in unexposed humans“, Science, October 2nd 2020

Le Bert et al (2020). “SARS-Cov-2 specific T cell immunity in cases of Covid19 and SARS and uninfected controls“, Nature, July 15th 2020

Lee, J (2020). “The fatal mistake which led to lockdowns“, The Spectator, July 11th 2020

Macintyre et al (2020). “A cluster randomized trial of cloth masks compared with medical masks in healthcare workers“, BMJ Open, April 22nd 2015

Lourenco et al (2020). “The impact of host resistance on cumulative mortality and the threshold of herd immunity for SARS-CoV-2“, MedRxIV, October 1st 2020

Gomez et al (2020). “Individual variation in susceptibility or exposure to SARS-CoV-2 lowers the herd immunity threshold

https://lockdownsceptics.org/what-sage-got-wrong/