தேசியக் கல்விக் கொள்கையின் வரைவுத் திட்டத்தை எதிர்த்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கமும் ஆனந்தாயி கலை இலக்கியப் பயிலகமும் கொண்டுவந்த நாற்பதுக்கும் மேற்பட்ட கவிஞர்களின் தொகுப்பாக வெளிவந்த கவிதைத் தொகுப்புதான்
“முகமூடிககுள் மறைந்திருக்கும் கோரைப்பற்கள்”
தொகுப்பு – நா.வே.அருள்
தொகுப்பிலிருந்து…
தேசிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கையை
ஏன் எதிர்க்கிறோம்?
1 .அனைவருக்குமான கல்வி என்கிற அடிப்படையில் இந்த ஆவணம் இல்லை.கிராமத்து ஏழைக்குழந்தைகள் உயர் கல்விவரை நகர்வதை இது தடுக்கிறது.
2. குழந்தைகளுக்கான ஆரம்பக் கல்வி மூன்று வயது முதல் 7 வயதுவரை என வரையறுத்துள்ளது. ஆரம்பக் கல்வியை 5 வயதில் துவங்குவதற்கு பதிலாக 3 வயதில் விளையாட்டுப் பருவத்தில் துவங்குவது ஏன்?
3. அங்கன்வாடி மையங்களுக்கான நிதி குறைக்கப்பட்டுள்ளது. மேலும் குழந்தை வளர்ச்சி மையம் என உள்ள அங்கன்வாடிகளை ஒருங்கிணைந்த பள்ளிகளாக மாற்ற முனைவது, அதன் நோக்கத்தையே சீர்குலைத்துவிடும்.
4. கல்வி உரிமைச் சட்டத்தில் மாற்றம் கொண்டுவந்து, பழைய கல்வி முறைகளான குருகுலம், மதரசா, பாடசாலை முறை போன்ற புராதன கல்வி முறைகளை அறிமுகப்படுத்துவதை இந்த வரைவு முன்வைக்கிறது.
5. மும்மொழித் திட்டத்தை இந்த வரைவு முன்வைக்கிறது. இது இந்தித் திணிப்பு . .
6. மூன்று, ஐந்து, எட்டாம் வகுப்புகளில் தேசிய திறனறித் தேர்வுகள் நடத்த வேண்டும். அதில் தேர்ச்சியுறாத குழந்தைகளின் எதிர்காலம் என்னாகும்.?
7. சிறப்புக் குழந்தைகளுக்கென இதில் எதுவுமே குறிப்பிடப்படவில்லை
8. எட்டாம் வகுப்போடு பொதுக் கல்வியை முடித்துவிட்டு, 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை தங்கள் எதிர்காலப் படிப்புக்கான பாடங்களை தேர்வுசெய்து படிப்பதை இந்த வரைவு ஊக்கப்படுத்துகிறது. 13 வயதில் எட்டாம் வகுப்பை முடிக்கும் ஒரு மாணவனால் எப்படி எதிர்காலப் படிப்பைத் தீர்மானிக்க முடியும்?
9. National Testing Agency என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு, எல்லா கல்லூரி, பல்கலைக்கழக படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு நடத்தப்படும். அதன் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை இருக்கும் என்கிறது வரைவு
10. பாலி, பிராகிருதம், பெர்ஷிய மொழிகளை மேம்படுத்த புதிய அமைப்புகள் உருவாக்கப்பட்டு, அவற்றைக் கற்றுத் தரும் அமைப்புகளுக்கு நிதியுதவி அளிக்கப்படும் என்றும் சமஸ்கிருத மொழி ஊக்குவிக்கப்படும் என்றும் புதிய வரைவு கூறுகிறது. இது முழுக்க முழுக்க சமஸ்கிருதத்திற்கு மட்டும் முக்கியத்துவம் தரும் ஒரு கொள்கை.
11. தற்போது மருத்துவக் கல்லூரியில் இளங்கலை, முதுகலை படிப்புகளுக்கான சேர்க்கைக்கு நீட் தேர்வு இருக்கிறது. புதிய கல்விக் கொள்கை வரைவின்படி, எம்பிபிஎஸ் முடித்தவர்கள், தேசிய அளவிலான வெளியேறும் தேர்வு (Exit Exam) ஒன்றில் தேர்ச்சி பெற வேண்டும்.
12. இந்தப் புதிய கல்வி வரைவில் இருப்பதிலேயே மிகப் பெரிய அபாயம், ‘ஆர்எஸ்ஏ’ எனப்படும் ராஷ்ட்ரீய சிக்ஷா ஆயோக்தான். ” இது ஒரு சர்வாதிகார அமைப்பாக இருக்கப்போகிறது. சென்னைப் பல்கலைக்கழகம் துவங்கப்பட்டு 150 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. அவ்வளவு அனுபவம் வாய்ந்த கல்வி அமைப்பு அது. ஆனால், அங்கு ஒரு பாடத்திட்டத்தைத் துவங்க இந்த ஆர்எஸ்ஏவிடம் போய் நிற்க வேண்டுமென்றால் அது எவ்வளவு அபத்தமாக இருக்கும்?”
13. 1994ம் ஆண்டு இந்தியா கையொப்பமிட்ட காட்ஸ் ஒப்பந்தத்தின் நீட்சியே இந்தப் புதிய கல்விக் கொள்கை. அரசு வழங்குகிற சேவைகளில் தடையற்ற பன்னாட்டு வர்த்தகத்தை ஊக்குவிக்க வேண்டும் என்பதுதான், காட்ஸ் ஒப்பந்தத்தின் அடிப்படை. அந்த வரிசையில் கல்வியை சர்வதேசச் சந்தைக்குத் திறந்து விடுவதற்கான ஓர் ஒப்புதல் ஆவணம்தான் இந்தப் புதியக் கல்விக் கொள்கை.
Leave a Reply
View Comments