உலகம் முழுவதும் கோவிட் வைரஸ் எளிய மக்களின் வாழ்க்கையைப் புரட்டிக்கொண்டு இருக்கின்ற இவ்வேளையில் சீனப்பெருட்களின் பொருட்களின் எதிர்ப்பு எல்லையில் பதற்றம் போன்ற பிரச்சனை மேலும் பெரும் தாக்கத்தை இந்தியாவின் மீது வலுப்படுத்துவதாக உள்ளது. கடந்த ஜூன் 15ஆம் தேதி இந்திய-சீன எல்லையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இந்திய ராணுவத்தில் 20 வீரர்கள் உயிர் இழந்தார். அதற்கு முன்தாகவே இங்கு ஒரு கட்டமைக்கப்பட்ட கூற்று ஒன்று நிலவிக்கொண்டு இருந்தது “சீனப்பெருட்கள் புறக்கணிப்பு ” என்ற கோஷம் தான் அது. இந்நிலையில் எல்லையில் பதற்றம் போன்ற காரணங்களால் மத்திய அரசு 59 செயலிகளை தடை செய்வதாக அறிவித்தது. இந்த அறிக்கையில் தடை செய்யப்பட்டது சீனச்செயலிகள் என எங்கும் எதிலும் குறிப்பிடவில்லை.ஆனால் அந்த அறிக்கையில் இருக்கின்ற செயலிகள் அனைத்தும் சீனச்செயலி என்பதும் அது எந்த மாதிரியான பாதுகாப்பு அற்ற தன்மையை மக்களிடம் விளைவிக்கிறது என்று அரசிடமிருந்து எந்த அறிக்கையும் இல்லை . இது இப்படியிருக்க மத்திய அரசு தேச பாதுகாப்பு , இறையாண்மை, மக்களின் தரவு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் Section 67 IT Act (Blocking rules 2009) மூலம் தடைவிதிப்பதாகக் கூறுகிறது. இதே வேலையில் “சுயசார்பு” என்ற கோஷமும் எல்லோரிடத்திலும் உலவுகின்றது. இதை இந்திய நாட்டின் பிரஜையாக வரவேற்கிறேன். ஆனால் இது எந்த அளவிற்குச் சாத்தியம் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். இப்படி பயனர் தரவுகளைப் பாதுகாக்கவும், பொருளாதாரத்தை மேம்படுத்த உதவும் என்பதை விரிவாகக் கேள்வி எழுப்பாமல் சுயச்சார்பு என்பது எந்த பயனையும் ஏற்படுத்தாது. இவை வெவ்வேறு தளங்களில் பகுப்பாய்வுக்கு உட்படுத்தாமல் இப்படியான முடிவுகளை எடுப்பதும் சரியன்று. இப்படி பொருளாதாரம், தரவு பாதுகாப்பு , தொழில்நுட்பம் மற்றும் அரசியல் ஒன்றோடு ஒன்று சார்ந்து இயங்கும் நிலையில் உள்ளது என்பதை மறுக்கவும் முடியாது.
7 லட்சம் கோடி இறக்குமதி
உலகமயமாக்கல் கொள்கையை ஏற்றுக்கொண்டு இந்தியாவும் சீனாவும் ஓரே சமயத்தில் உலக அரங்கில் உற்பத்தியில் இறங்கின. ஆனால் இந்தியாவை ஒப்பிடும் போது சீனாவில் குவியும் அந்நிய முதலீடுகள் (Foreign Direct Investment) அதிகம். அதற்குக் காரணம் சீனா தனது அடிப்படைக் கட்டமைப்பைத் தொடர்ந்து வலுப்படுத்திக்கொண்டும், புதுப்பித்துக் கொண்டும் வந்துள்ளது. விளைவாக இந்தியாவில் பல்வேறு துறைகள் சீனாவைச் சாந்தே செயல்படுகிறது.
இந்தியாவில் தொழிற்சாலைகளுக்குத் தேவைப்படும் மூலப்பொருட்கள், மின்சார-மின்னுச் சாதனங்கள், ரசயணங்கள், உரங்கள், மருந்து -மாத்திரை தயாரிப்புக்கான மூலப்பொருட்கள், மருத்துவக் கருவிகள், மோட்டார் வாகன தயாரிப்புக்கான உதிரிப்பாகங்கள் , பிளாஸ்டிக், அழகு சாதனம் எனப் பெரிதும் சீனச்சந்தையை சார்ந்து உள்ளது. கடந்த நிதியாண்டில் மட்டும் இந்தியா சீனாவிடமிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மொத்த பொருட்களின் மதிப்பு சுமார் 7 லட்சம் கோடி! . இது இந்திய இறக்குமதியில் சுமார் 17%. இது அமெரிக்காவின் இறக்குமதி காட்டிலும் 2 மடங்கு ஆகும். இதைப் போன்றே இந்தியா சீனாவிற்கு ஏற்றுமதியாகும் பொருட்களின் மதிப்பு சுமார் ரூ. 2.3 லட்சம் கோடி. ஆகவே ஏற்றுமதியை காட்டிலும் இறக்குமதியில் இந்தியா சீனாவைச் சார்ந்து இருப்பது தெரிகிறது. அது மட்டுமின்றி இந்தியாவில் பயன்படுத்தும் பெரும்பாலான சுமார்ட் போன்கள் அதாவது 5ல் 4 சுமார்ட் போன் சீனச்சந்தைலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இதில் சுமார்ட் ரகங்கள் மட்டுமின்றி மின்னனு சாதனமான தொலைக்காட்சிப் பெட்டிகள், உரம் , மருந்து உட்பட எல்லா சந்தையும் ஒரு சார்பு நிலையில் தான் இப்போது வரை இயங்கிக் கொண்டு வருகிறது. இந்த வர்த்தக ரீதியான ஒப்பந்தம் கடந்த 2014ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கிடையிலான தொழில் -வர்த்தக உறவாகத் தொடங்கப்பட்டது. 2020ல் மட்டும் சீனா இந்தியாவில் சுமார் 2 லட்சம் கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளது. இந்தியர்கள் கணிசமாகப் பயன்படுத்தும் சுமார்ட்ப்போன்கள் மற்றும் செயலிகள் சீனாவினுடையது. அதாவது இந்தியர்களின் செயலிப்பயன்பாட்டில் 44% சீன நிறுவனங்களுடையது. சீனாவின் உலக ஏற்றுமதியில் இந்தியாவிற்கு அது தருவது வெறும் 6% , இந்தியாவிடமிருந்து அது வாங்குவது 1% , நிலைமை இப்படி இருக்கின்ற சூழ்நிலையில் மாற்று வழிகளை ஆராயாமல், அடிப்படைக் கட்டமைப்பை வலுப்படுத்தாமல் தொடர்ந்து பொதுத்துறைகளைத் தனியாரிடம் தாரை வார்க்கும் போக்கைக் கைவிடாமல் “சீனப் பொருட்கள் புறக்கணிப்பு” என்ற முழக்கம் சாத்தியம் இல்லை. இது ஒரு பக்கம் இருக்க கோவிட் காரணமாக பொது முடக்கத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் தார்ச்சாலைகளில் நடைப் பயணத்தில் சொந்த ஊரை நோக்கிக் கொண்டும் இறக்குமதி சார்ந்துள்ள தொழிற்சாலைகளும் மூடப்பட்டுள்ள நிலை மக்கள் வேலையில்லா நிலையும் ஏற்பட்டுள்ளது. இதற்கான மாற்றுத் திட்டத்தைத் தெரிவிக்காமல் சுயச்சார்பு பற்றிப் பேசுவது என்பது இப்போது இருக்கும் சூழ்நிலையில் எப்படி சாத்தியம்? இந்நிலையில் இந்த 59 செயலித் தடை பற்றி மக்களிடம் அடித்தட்டு மக்களிடம் பேச நேரமும், பலமும் இல்லை என்பதே உண்மை.
செயலித்தடையும் தாக்கமும்
இந்த 59 செயலித் தடை பற்றி விதித்த மத்திய அரசு தேசியப் பாதுகாப்பு, நாட்டின் இறையாண்மை, மக்களின் தரவுகளைப் பாதுகாத்தல் போன்ற காரணங்களால் தடையை விதித்துள்ளதாகக் கூறுகிறது. ஆனால் கேள்வியே இந்தந்த செயலிகளில் மட்டும் தான் பாதுகாப்பை உறுதிப்படுத்தவில்லை என்பதை எதன் அடிப்படையில் என்பதை விளக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் மற்ற அனைத்து செயலிகள் பாதுகாப்பை உறுதிபடுத்துகின்றதா என்பதும் கேள்வியே? Bytedance நிறுவனத்தின் செயலியான Tiktok 600 மில்லியன் டவுன்லோட்யை இந்தியாவில் உள்ளது. இதில் 130 மில்லியன் மக்கள் தினசரி பயன்படுத்தப்படுத்துகன்றனார். அதுமட்டுமல்லாமல் Camscan, UCBrowser போன்ற செயலிகளும் செயல்பாட்டில் உள்ளது. இதில் எல்லாம் பாதுகாப்பற்ற தன்மை உள்ளதாக தடைவிதத்திருக்கின்றனார். அது எந்தமாதிரி தரவுகளின் பாதுகாப்பை உறிதப்படுத்தவில்லை அல்லது தரவுகள் எப்படி கையாள்கின்றனர் என்பதை ஒரு முறையான அறிக்கை சமர்ப்பித்த இருக்க வேண்டும். ஆனால் அதற்கான பதில் இதுவரை இல்லை.
1 . இந்நிலையில் Tiktok போன்று பெரிதும் பயன்படுத்தியவர்களின் எண்ணிக்கை கணிசமாக சமூகத்தில் ஒடுக்கப்பட்ட, கீழ்சாதி என்ற சொல்லப்படுகின்ற மக்களாலும் , உழைக்கும் வர்க்கத்தினராலும் மற்றும் சுயச்சார்பு கலைஞர்களாலும் பயன்படுத்தப்பட்டு தங்களின் திறமைகளை வெளிக்கொணர ஒரு வாய்ப்பாக அமைந்தது. எங்கோ ஒரு குக்கிராமத்தில் முடங்கிருந்த கலைஞனும் இன்று சினிமா பிரபலங்கள் போன்று தங்களின் திறமைகளை யார் உதவியுமின்றி மக்களிடம் எடுத்து செல்கின்றனர் என்பது இணையம் தங்குதடையின்றி இருப்பதே காரணம். அதுமட்டுமல்லாமல் குறு மற்றும் சிறு வியாபாரிகள் தங்களின் பொருட்களை சந்தைப்படுத்துவம் பயன்படுத்தி வந்தனர்.
2. டில்லியில் வாழும் டிபேட்டியன் (Tibetian) அகதிகள் அவர்களுடைய உறவினர்களுடன் உரையாட wechat என்னும் செயலியைத் தான் சார்ந்துள்ளனர். டிபேட்டிலில் (Tibet) Facebook, WhatsApp போன்ற செயலிகள் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர்களுக்கும் இடர்பாடே.
3. கடந்த 10 வருடங்களாக இந்திய மாணவர்கள் சீனப்பல்கலைக்கழங்களில் சேர விண்ணப்பித்து வருகின்றனர். இப்படி மாணவர்கள் பல்கலைகழங்களுடன் உரையாற்ற இந்த செயலிகளைப் பயன்படுத்தி வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இப்படி எல்லா தரப்பினரும் பயன்படுத்தும் செயலிகளை முன் எந்தவித முன்எச்சிரிக்கையோ அல்லது அதற்கான தெளிவான விளக்கத்தையோ தராமல் தடை விதித்த இருப்பது என்பது பொது முடக்கத்தில் மேலும் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த தடை ஏற்கனவே ஒடுக்கப்பட்ட சமூகங்களை எவ்வாறு பாதிக்கும் என்பதைக் கருத்தில் கொள்ளாது ஏன் என்பதும் கேள்விக்குள்ளாகிறது. மேலும் இந்த செயலிகள் மூலம் கருத்து பகிர்வு மற்றும் தகவல்களைப் பரப்ப அனுமதிக்கும் பயன்பாடுகள் இந்திய அரசியலமைப்பு சட்டம் ஆர்டிகள் (Article 19(1) (a)) கீழ் பாதுகாக்கப்படுவதால் தடை அரசியலமைப்பையே கேள்வி எழுப்ப வாய்ப்புள்ளது.
சட்டமும் செயலித்தடையும்
சமீபத்தில் கேரளாவின் உயர்நீதிமன்றத்தின் ஃபஹிமா சீரின் ஒருவரின் இணைய அணுகலில் தலையிடுவது தனியுரிமைக்கான அவர்களின் அடிப்படை உரிமையை மீறுவதாக அங்கீகரித்தது.
இதைப் போன்றே உச்சநீதிமன்றத்தில் அனுராதா பஷின் இணையத்தைக் காலவரையின்றி முடக்குவது அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்வதுபோன்றது என்று தெரிவித்தார். இந்த தடையானது (Article 19(1) (a)) கீழ் பகுப்பாய்வுக்கு பிறகே ஜியோ பளாக் (Geoblock ) அமுல்படுத்திருக்க வேண்டும். ஜியோ பளாக் (Geographical block) என்பது ஒரு குறிப்பிட்ட எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒரு சில சேவை தொழில்நுட்பத்தைப் பாதுகாப்பு கருதி முடக்குவது. இந்த Geoblock பயனர் பயன்படுத்தும் Internet Protocol or Device கொண்டு செய்யப்பட்ட தளங்களை VPN (Virtual Private Network) அல்லது மேம்படுத்தப்பட்ட பயர்வால் (Advanced Technological Firewall) அணுகலைத் தடைவிதித்திருக்கிறது.
கருத்துச் சுதந்திரம் மற்றும் பேச்சு சுதந்திரம் என்பது எல்லோருக்கும் தங்குதடையின்றி எல்லோருக்கும் சமம். இதில் ஒரு சார்ப்பு அல்லது சமூக சூழ்நிலையில் மேல் உள்ளவர்களுக்கு மட்டும் என்பதை உடைக்கும். குறிப்பாக இந்தியா போன்ற டிஜிட்டல் கல்வியறிவு குறைவாக உள்ள இத்தருணத்தில் மக்களின் கருத்து சுதந்திரத்தையும், அவர்களின் விருப்பத்தையும் அறியாமல் இருப்பதும் ஒரு காரணம். அதே வேலையில் தரவுப் பாதுகாப்பு பற்றியும் தெளிவான வரைமுறைகளைச் செயலி நிறுவனங்களும் கையாள வேண்டும் என்று ஆர்டிகள் (Article 14) வலியுறுத்துகிறது.
உச்சநீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி புட்டசுவாமி கமிட்டி நவீன பல் கல்லூரி தொடர்பான தீர்ப்புகளின் மூலம் உரிமைகளைத் தனித்துவமான பார்க்க முடியாது என்கிறது. இதை ஓன்றோடென்று இணைக்கப்பட்ட சுதந்திரங்களின் வலை அமைப்பாகவே பார்க்கப்பட வேண்டும். ஜியோ பளாக் (Geoblock ) இணையத்தை அணுகுவதற்கான அடிப்படை உரிமையும் அதே சமயத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் இடமளிக்க வேண்டும் என்பதே இதன் பொருள்.
அத்தகைய கட்டுப்பாட்டை விதிப்பதன் அடிப்படையானது (Article 19 (2)) ( அதாவது பொது ஒழுங்கு, தேசியப் பாதுகாப்பு போன்றவையின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணிக்கையிலான நிபந்தனைகளில் ஒன்றாக என்பது ஒப்புக்கொள்ளத்தக்கது அவ்வாறாயினும்)அதே சமயம் அரசியலமைப்பு சுதந்திரங்களின் ஒன்றோடொன்று தொடர்புடைய தன்மை காரணமாக, இது Article 14 பிரிவின் கீழ் நியாயமானதாகவும் இருக்க வேண்டும். இதன் பொருள் ஜீயோ பிளாக் விதிக்கப்படும் விதம் தன்னிச்சையாக இருக்கக்கூடாது.
இதன்படி Article 14 குடிமக்களும் குடிமக்கள் அல்லாதவர்களும் இச்சட்டம் உரிமை சமம் என்கிறது. ஆகையால் பத்திரிக்கை தகவல் பணியகம் (The Press Information Bureau ) அறிவிப்பை Article 14 பிரிவின் கீழ் சமத்துவத்திற்கான உரிமையின் அடிப்படையில் இரண்டு தனித்துவமான உரிமைகோரல்களை எழுப்புகிறது.
1. சீனச்செயலிகளும் மற்ற இதர அமெரிக்க அல்லது யூரோப்பியம் செயலிகளும் (Facebook, Uber, WhatsApp) எப்படி வேறுபடுகின்றது.
2.அப்படி வேறு என்றால் அவை எந்தளவு பாதுகாப்பை உறுதிப்படுத்துகிறது. அப்படி வேறு இல்லை என்றால் ஏன் இந்த பாகுபாடு ஒரு சில செயலிகளுக்கு மட்டும் என்பதை தெளிவுபடுத்த வேண்டும். இதன் மூலம் வெளிநாட்டு நிறுவனம் தனது தரப்பில் தனது தரப்பிலான நியாயத்தை Article 226 கீழ் மனுக்கொடுக்கலாம் என்று கொல்கத்தா உயர்நீதிமன்றம் சமீபத்தில் உறுதிப்படுத்துகிறது.
இதன் மூலம் சீன மட்டுமல்லாது பிற செயலி உருவாக்கும் பங்குதாரர்களை ஓரே தளத்தில் வைத்துப் பார்க்க வேண்டும். இது அமெரிக்க அல்ல ஐரோப்பியன் தொழில்நுட்ப மற்றும் சேவையும் ,தரவு பாதுகாப்பின் தன்மையும், தரவுகளைக் கையாள்வதைத் தெரிவிக்க வேண்டும். இது இந்தியாவின் உள்நாட்டு இணையச் சேவை நிறுவனமான Reliance Jio உட்பட அனைவருக்கும் பொருந்தும் . ஏற்கனவே மேலே விளக்கப்பட்டுள்ளபடி சில செயலிகளை பாகுபாட்டின் அடிப்படையில் ஆதரிப்பதும், சிலவற்றை தடைசெய்வது என்பது இணையத்தை அணுகுவதைத் தன்னிச்சையாகவும் நியாயமற்றதாகவும் மாற்றுகிறது.
இந்த நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ள சிவில் உரிமைகளை விட புவிசார் தடுப்பு ( Geoblock) மூலம் இராஜதந்திர மற்றும் பாதுகாப்பு நலன்களை அடைய முற்படுகிறது, அல்லது சீவில் உரிமைகளைக் கணிசமாகக் குறைக்கிறதா என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும்.
தொழில்நுட்பமும் உலகமயமாக்கலும்
உலகமயமாக்கல் சூழ்நிலையில் தொழில்நுட்ப சேவையும், இணையச் சேவையும் தனித்துப் பார்ப்பது அல்லது தடைசெய்வது என்பதை விடுத்து அதற்கான சோதனை அல்லது முறையான வழிமுறைகளைப் பின்பற்ற ஒரு சரியான சட்டத்திருத்தை வரைப்படுத்தல் ஒன்றே நிலையான தீர்வை நோக்கிப் பயணிக்கும். செயலிகளை தடைசெய்வது என்பது ஒரு தற்கால தீர்வு மட்டுமே அது தரவை பாதுகாக்க எந்த அளவிற்கு உதவும் என்பதென்பதும் கேள்விக்குறியே? இந்தியாவில் தரவு பாதுகாப்பு என்பதற்கு எந்த தனிச் சட்டமும் இல்லை. அதனால் தடையை விடுத்து வலுவான தனிச்சட்டத்தை ஏற்படுத்தி தரவுகளைப் பாதுகாப்பதே சரியானது. எடுத்துக்காட்டாக மென்பொருளில் Bloatware என்றொரு செயலி உள்ளது. இந்த
Bloatware ஆனது பயனரின் தகவல்களைச் சேகரித்து மொபைல் தயாரிக்கும் நிறுவனத்திடம் தரவுகளை ஒப்படைக்கும். சுமார்ட் போன் நிறுவனங்கள் இந்த Bloatwareயை நாம் பயன்படுத்தும் சுமார்ட்
போன்களில் நிறுவப்பட்டே சந்தையில் விற்பனை செய்கிறது. இதைப் பயனர் அழிக்கவோ அல்லது செயலாற்றாமல் தடுக்கவோ முடியாது. இதன் மூலம் பெரும்பாலான தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது பொருளைக்
குறைந்த விலையில் கொடுக்கிறது. இந்த செயலி மூலம் பயனரின் தகவல்கள் அவர்களுக்குத் தெரியாமல் திருடப்படுவது நாம் அறியாத உன்மை. ஆகையால் தடை என்பது நிரந்தர தீர்வு ஆகாது. அதனால் தரவு பாதுகாப்பிற்கான வழிமுறைகளையும் உருவாக்குவதும், சோதனையுமே முன்னோக்கிய சமூகத்திற்கு இட்டுச் செல்லும் என்பதே நிதர்சனம்.
நாம் கண்காணிக்கப்படுகிறோமா என்பதை அடுத்த கட்டுரையில் பார்ப்போம்….
சிந்துஜா சுந்தர் ராஜ் Msc, M. Phil(CS) ,
கட்டற்ற மென்பொருள் ஆர்வலர்.