Subscribe

Thamizhbooks ad

‘மேலான’ மனிதப் பிறவி வந்தபின் ‘கீழான’ குரங்கு நீடிப்பது ஏன்..? – அ.குமரேசன்

“பூமியின் அனைத்து உயிரினங்களிலும் உயர்வானது மனித இனம்.” –இந்தக் கருத்து உயிரினங்களின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டை ஏற்றுக்கொண்டவர்கள், எல்லா உயிர்களும் கடவுளால் படைக்கப்பட்டவையே என்று நம்புகிறவர்கள் ஆகிய இரு தரப்பிலும் பெரும்பாலோருக்கு இருக்கிறது.

அதன் காரணமாகவே, பரிணாம வளர்ச்சியை ஏற்றவர்கள், மிக மிகத் தொன்மையான ஆதி உயிரினங்களைச் சேர்ந்த ஒரு நுண்ணுயிரியிடம் வல்லமை வாய்ந்த மனிதகுலம் மண்டியிட்டது எப்படி என்று மலைத்துப்போய்க் கேட்கிறார்கள். படைக்கப்பட்டதாக நம்புகிறவர்கள், மகத்தான மனித சக்தி, அற்பமானதொரு நுண்ணுயிரிடம் தோற்று நிற்பதன் தத்துவம் என்ன என்று புரியாமல் தவிக்கிறார்கள். கடவுளையே முழுப்பொறுப்பாளியாக்கத் தயாராக இல்லாதவர்கள் கூட, மற்ற உயிரினங்கள் தோன்றி, மனிதர்களும் வந்த பிறகு அந்த ஆதி நுண்ணுயிரிகள் அழியாமல் இருப்பது ஏன் என்று குழப்பத்தோடு கேட்கிறார்கள்.

இத்தகைய மலைப்பையும் தவிப்பையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது கோவிட்-19 நோய்க்குக் காரணமான கொரோனாக்கிருமி.

Why cavemen took holidays in sunny Spain | World | The Times

“குரங்கிலிருந்துதான் மனிதன் தோன்றினான் என்றால் குரங்குகள் இன்னமும் நீடித்திருப்பது எப்படி? தற்போதுள்ள குரங்குகள் எப்போது மனிதர்களாக மாறும்?” -பரிணாம வளர்ச்சி பற்றிப் பேசுகிறவர்கள் எப்போதும் எதிர்கொள்கிற இந்தக் கேள்விகளைப் போன்றவைதான் கொரோனா நுண்ணுயிரி பற்றிய கேள்விகளும். உலகத்தைக் கலக்கிக்கொண்டிருக்கும் கொரோனாக்கிருமி பூமியின் ஆதி நுண்ணுயிரிகளது பரிணாமப் போராட்டத்தின் தொடர்ச்சிதான் என்று எடுத்துக்கூறுகிறபோது இக்கேள்விகள் கேட்கப்படுகின்றன. இப்படிப்பட்ட கேள்விகளைக் கேட்கிறவர்களின் பாராட்டுக்குரிய சிறப்புத் தன்மை என்னவெனில் அவர்கள் கேள்வி கேட்கிறார்கள் என்பதுதான்.

இதே கேள்விகளை தில்லி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு கல்லூரியில் அறிவியல் துறை ஆசிரியராகப் பணியாற்றும் சுதானு சத்பதி சந்தித்திருக்கிறார் போல. அவர் எழுதியுள்ள “மனிதக்குரங்குகள், மனிதர்கள், கோவிட்-19 பற்றி: பரிணாமத்தின் இல்லாத பாதை” (தி ஹிண்டு, மே 15) என்ற கட்டுரையில் சில சுவையான தகவல்களையும் கருத்துகளையும் நம் சிந்தனைக்குத் தருகிறார்.

சில ஆண்டுகளுக்கு முன் அவருடைய தம்பி, “மனிதக்குரங்குகளிலிருந்துதான் மனிதர்கள் தோன்றினார்கள் என்றால் மனிதக் குரங்குகளும் மற்ற குரங்குகளும் இப்போதும் வாழ்ந்துகொண்டிருப்பது எப்படி” என்று கேட்டதாகத் தெரிவிப்பதிலிருந்தே கட்டுரையைத் தொடங்குகிறார். ஒன்றிலிருந்து அதைவிட மேலான இன்னொன்று உருவான பிறகு தேவையற்றதாக எஞ்சியிருக்கிற முந்தையது மறைந்துவிடும் என்ற கருதுகோளிலிருந்து இத்தகைய கேள்விகள் புறப்படுகின்றன.

மூலக்கூறு உயிரிகள்

“உயிர்கள் ஒவ்வொன்றும் அடிப்படையில் இயற்பியல் விதிகளால் இயக்கப்படும் அணுக்களையும் மூலக்கூறுகளையும் (மாலிக்யூல்) கொண்டு அமைந்துள்ளன. அணுக்களும் மின்னணுக்களும் கொண்ட ‘செல்’ கட்டமைப்புகள் எல்லா உயிரினங்களுக்கும் அவற்றின் மிக அடிப்படையான நிலையில் பொருந்துவனவாகும். அப்படியானால் நாமறிந்த அடிப்படையான உயிரி என்பது செல் கட்டமைப்புதான் என்று சொல்லலாமா? ஆனால், செல் கட்டமைப்பு போன்று இல்லாத உயிரினங்களாக கிருமிகள் (வைரஸ்கள்) இருக்கின்றன. கொஞ்சம் தெளிவான வாக்கியத்தில் சொல்வதானால் அவை எளிய உணர்வுள்ள மூலக்கூறுகளாக உள்ளன. எண்ணெய்க்குள் (கொழுப்பு அடுக்கு) மூடப்பட்டிருக்கும் ஓர் அமிலத்தின் சில மூலக்கூறுகள் என்று எந்தவொரு கிருமியையும் அறிமுகப்படுத்தலாம்,” என்று எளிமையாக விளக்குகிறார் சுதானு.

மனித இனத்தின் வளர்ச்சி பற்றி ...

பரிணாம வளர்ச்சி பலவகை உயிரினங்கள் தோன்றுவதற்கு, அல்லது புதிய இனங்கள் உருவாவதற்கு இட்டுச்சென்றது. ஆயினும் அந்த ஆதி உயிரிகள் தொடர்ந்து இருக்கின்றன. அதற்கு முக்கியமான காரணம், அவை தங்களது வாழிடப் பிரச்சினையில் வெற்றிபெற்று வந்திருப்பதுதான் என்கிறார் அவர். அதாவது எல்லா உயிரினங்களுக்கும் முன்னோடியான ஆதி நுண்ணுயிரிகள் தங்களுக்கேற்ற, தாங்கள் தாக்குப்படித்து வாழக்கூடிய இடத்துக்கான போராட்டத்தில் வெற்றிபெற்றுள்ளன.

மனிதர்களில் ஒரு பகுதியினர் அந்தப் போராட்டத்தில் முழு வெற்றியடைய முடியாததால்தானே தங்களின் சொந்த இடம் நோக்கி நடக்கிறார்கள், அதிலும் முழு வெற்றிபெற முடியாததால்தானே சிலர் வழியிலேயே பட்டினியாலும் மாரடைப்பாலும் விபத்தாலும் மடிகிறார்கள்? அது பற்றிய சிந்தனை மனதை உறைந்துபோகச் செய்துவிடக்கூடும் என்பதால், முதலில் எடுததுக்கொண்ட பரிணாம அறிவியல் விவாதத்திற்கு வருவோம்.

கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிரிகள் முதல், உருப்பெருக்கியால் அவற்றின் உருவத்தைக் கண்டுபிடித்த மனிதர்கள் வரையில் எந்த உயிரினமாக இருந்தாலும் அதற்குத் தேவை ஒரு வாழிடம். நிலமாக, நீராக, தாவரமாக, விலங்கின் உடலாக என எதுவாகவும் அந்த வாழிடம் இருக்கலாம்.

ஒரே ஆற்றின் வெவ்வேறு இடத்தில்

பரிணாம அறிவியலில் “போட்டி சார்ந்த வெளியேற்றல் கொள்கை” என்றொரு விதி இருப்பதைத் தெரிவிக்கிறார் ஆசிரியர் சுதானு. எந்த இரண்டு உயிரினங்களும் ஒரே வாழிடத்தை கொண்டிருக்க முடியாது; ஒரே வெளியில் ஒரே நேரத்தில் ஒரே ஆதாரத்திற்குப் போட்டியிட முடியாது என்பது அந்த விதி. நீண்ட, போதுமான காலக்கட்டத்தில் ஒரு உயிரினம் இன்னொன்றை போட்டியில் முந்திவிடும், அந்த இன்னொன்றை அழித்துவிடும்.

அறிவியல் அறிவோம்- 17: எமனை இனி ...
மூலக்கூறு உயிரிகள்

இதற்கு எடுத்துக்காட்டாக எளிதான, எழிலான காட்சிக்கு நம்மை இட்டுச்செல்கிறார். ஒரு ஆற்றில் பல வகை மீன்கள் வாழ்கின்றன. அவற்றில் சில வகை மீன்கள் வேகமான நீரோட்டம் உள்ள பகுதியைத் தேர்ந்தெடுத்து வாழும். அதற்கேற்ப அவற்றின் உடலில், நீருக்குள் இருக்கும் பாறைகளையோ, தாவரங்களையோ பற்றிக்கொள்ளக்கூடிய அங்க அமைப்பு இருக்கும். சில வகை பெரிய மீன்கள் வேகம் குறைந்த நீரோட்டம் இருக்கிற ஆழப் பகுதியில் மட்டுமே இருக்கும். வேறு சில மீன் வகைகள் தண்ணீரின் மேல் வந்து விழுகிற இலைகளையும் பூச்சிகளையும் விழுங்கக்கூடிய வகையில் மேல்மட்டத்தில் சுற்றிவரும். கிட்டத்தட்ட ஒரே மாதிரியான உயிரினங்கள் ஒரே வாழ்விடப் பகுதியில் இணைந்து வாழ்கிற, ஆதாரங்களைப் பங்குபோட்டுக்கொள்கிற ஏற்பாடு இது.

உயிரின அறிவியலைப் பொறுத்தவரையில், ஒரு வாழிடம் பல்வேறு வகைகள் கொண்ட ஒட்டுமொத்த உயிரினத்திற்கும் உரியது என்றே பொதுவாகக் கூறப்படுகிறது. அதேவேளையில், குறிப்பிட்ட இன வகையிலேயே தனித்தனி உயிரிகளுக்கிடையே இருக்கக்கூடிய வேறுபாடுகள் காரணமாகவே வெவ்வேறு உயிரினங்களாகப் பிரிவது சாத்தியமாகிறது. தனித்தனி உயிரிகளுக்கிடையே வேறுபாடுகள் இருப்பதற்கு, மரபணு மட்டத்தில் அல்லது மூலக்கூறு மட்டத்தில் உள்ள வேறுபாடுகளும் காரணமாகும். ஆகவே, மரபணு வேறுபாடுகள் உயிரினங்களுக்கு இடையேயான வேறுபாடுகளுக்கு மட்டுமல்லாமல், அவற்றுக்குள்ளேயே இருக்கக்கூடிய வேறுபாடுகளுக்கும் காரணமாகின்றன என்கிறார் சுதானு.

மரபணுத் தகவல் கடத்தல்

எந்த உயிரினத்திலும் அதன் அடிப்படையான உடலியல் அமைப்பும் செயல்பாடும் தொடர்பான மரபணுத் தகவல் தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்பட்டு வருகிறது என்று பொதுவாக நாம் தெரிந்துவைத்திருக்கிறோம். பெருமளவுக்குப் பன்முகத்தன்மைகளோடு அந்த மரபணுத் தகவல் கடத்தப்படுவதற்கான தேவையை நிறைவேற்றும் வகையில் மரபணுவின் மூலக்கூறுகள் தொடர்ச்சியாகச் செயல்படுகின்றன. அதற்காகச் சூழல்களோடு கலப்பது, பொருத்திப் பார்ப்பது, உந்தித்தள்ளுவது என “முயன்றுகொண்டே” இருக்கின்றன என்கிறார் அவர். அதாவது மரபணுக்கள் எவ்வித மாற்றமும் இல்லாமல் தலைமுறைகளுக்குச் செல்வதில்லை, மாறாகப் புதிய கூறுகளோடு செல்கின்றன. ஆகவே, அவை காலங்கடந்துவிட்டதாகிவிட்டன என்றோ, ஆதி உயிரினங்களாக அதே தன்மைகளோடு அப்படியப்படியே தொடர்கின்றன என்றோ கருதுவது தவறு.

இதற்கு, ஒட்டுண்ணிகளை ஒரு நல்ல எடுத்துக்காட்டாகக் கூறுகிறார் ஆசிரியர். உடல் சார்ந்த சிக்கலான அமைப்பில் பழமையானதாகத் தோன்றினாலும் உண்மையில் அவை புதிய நிலைமைகளுக்கு ஏற்பத் தங்களைத் தகவமைத்துக்கொண்டே இருக்கின்றன. ஒரு மரபணு எவ்வளவுக்கெவ்வளவு எளிமையான உடலமைப்போடு இருக்கிறதோ, அவ்வளவுக்கவ்வளவு எளிதான முறையில் அது தனது இனத்திற்கு உள்ளேயே பல மாறுபட்ட வகைகளை உற்பத்தி செய்கிறது.

COVID-19 பிரதி மற்றும் முன் மருத்துவ ...

சிக்கலான உடற்கூறு கொண்ட விலங்குகளில் ஒன்றாகிய மனித இனத்தில், பொதுவான அமைப்புகள் எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருக்கின்றன. ஆயினும் மனித இனங்களுக்கு இடையேயே நிறம், உயரம், உடற்கட்டு, கண்கள் போன்றவற்றில் வெளிப்படையான மாற்றங்கள் இருக்கின்றன. தனித்தனி மனிதர்களுக்கிடையேயும் கை ரேகை போன்றவற்றில் நேரடியாகவும், மூளையின் சிந்தனை போன்றவற்றில் நுட்பமாகவும் மாறுபாடுகள் இருக்கின்றன. ஆதி மனிதர்களுக்கும் இன்றைய மனிதர்களுக்கும் இடையே முகத்தோற்றம் உள்ளிட்ட பெரும் மாறுபாடுகள் இருப்பது, வாழும் சூழலால் மட்டுமல்ல. மரபணுக்களின் அந்த விடா முயற்சியும், மனித இனங்களுக்கிடையே நடந்த கலப்பும் முக்கியமான காரணிகளாகும்.

ஆயினும், சிக்கலான உடலமைப்பு காரணமாகவே, நுண்ணுயிரிகளோடு ஒப்பிட்டால் மனிதர்கள் புதிய சூழல்களுக்குத் தாக்குப் பிடிக்க முடியாதவர்களாகவே இருக்கிறார்கள். ஆகவேதான், மூளையைப் பயன்படுத்தி, இருக்கும் சூழலைத் தங்களுக்குத் தோதாக மாற்றியமைக்கும் முயற்சியில் மனிதர்கள் சளைக்காமல் ஈபடுகிறார்கள். அதிலே வரலாறுகளை உருவாக்கும் வெற்றிகள், இழப்புகளை ஏற்படுத்தும் தோல்விகள் இரண்டுமே கிடைக்கின்றன.

குரங்குகளும் குதர்க்கங்களும்

தொடக்கக் கேள்விகளுக்கு இப்போது பதில் கிடைத்திருக்கும். ஒரு உயிரினத்திலிருந்து இன்னொன்று உருவாகிறது என்றால், மரத்தின் ஒரு கிளையிலிருந்து இன்னொரு கிளை பிரிந்து வளர்வது போன்றதுதான். புதிய கிளை வளர்ந்துவிட்டதால் பழைய கிளை மறைந்துவிடுவதில்லை அல்லவா? நுண்ணுயிரிகளும் குரங்கினங்களும் இன்னும் இருப்பதும் இப்படியாகத்தான்.

மனிதன், நிர்வாணத்தை எண்ணி ...

மொத்தத்தில் நாம் புரிந்துகொள்ள வேண்டியது – புதிய உயிரிகள் பரிணமிப்பதால் முந்தைய இனங்கள் காலாவதியாவதில்லை. அதை விட முக்கியமாகப் புரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால் – வல்லமை வாய்ந்த மேலான உயிரினம் தாங்களே என்று மனிதர்கள் இறுமாந்து இருந்துவிட முடியாது. இந்த “மேலான” என்ற எண்ணம்தான், சமுதாயத்திலும் ஊடுருவல் நடத்தி, “தாழ்வான” என்ற எண்ணத்தையும் கிருமியாய்ப் பரப்பியிருக்கிறது. குலம், மதம், சாதி, மொழி, பாலினம் என எதிலும் உயர்வு-தாழ்வு கருத்தியல்கள் மனிதர்களைச் சின்னாபின்னப்படுத்தி வந்திருக்கின்றன.

என்னென்ன போராட்டங்கள் வந்தாலும் இறுதியில் மனிதர்கள் வெல்வார்கள், எல்லா இயலாமைகளையும் மாற்றுவார்கள் என்பது வரலாற்றில் கவித்துவமானதொரு கனவு. இருக்கட்டும், கனவுகளும் கவிதைகளும் நம்மை இயங்கத் தூண்டும் ஊக்கிகளல்லவா? இந்தக் கவித்துவக் கனவு நனவாகிவிட்ட வரலாறு எழுதப்பட வேண்டுமானால் சமூக ஏற்றத்தாழ்வுகளை ஒழித்துக்கட்டிய சமத்துவ அத்தியாயத்திலிருந்து அதைத் தொடங்குவோம்.

நக்கீரன் கோபால் குடும்பத்திற்கு ...

அ. குமரேசன்

என் வலைப்பூ: அசாக்
http://asakmanju.blogspot.com

Latest

அத்தியாயம் 22: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

வேலைவாய்ப்பு - அடிப்படை உரிமை ஐஸ்லாந்து நாட்டுப் பெண்கள் 1975-ஆம் ஆண்டு அக்டோபர்...

பசுமைப் புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் நேர்காணல்

அஞ்சலி: எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் மறைவிற்க்காக மறு பிரசுரம் செய்யப்படுகிறது. நேர்காணல் : எம்.எஸ்.சுவாமிநாதன்...

தொடர் 37: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்

கிழக்கு ஐரோப்பிய சினிமா - ஹங்கேரிய திரைப்படங்கள்-2 சர்ரியலிஸ ஓவியக் கலையில்...

சாதிக் ரசூல் கவிதைகள்

1) VIP ---------- எந்த வேலையும் செய்யாத எனக்கொரு வேலை கொடுக்கப் பட்டிருக்கிறது எந்த வேலையும் செய்யாத என்னைக் கண்காணிக்கும் வேலையை நீயே தேர்ந்தெடுத்துக்...

Newsletter

Don't miss

சிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி

  கதைக்கு கால் இருக்கிறதா..?!  அப்பொழுது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்கள்...

பேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி

  சிறுகதையின் பெயர்: செங்கோட்டை பாசஞ்சர் புத்தகம் :  ஆசிரியர் : எழுத்தாளர் தாமிரா வாசித்தவர்:  பொன்.சொர்ணம்...

பேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34

  சிறுகதையின் பெயர்: பயம் புத்தகம் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் ஆசிரியர் : புதுமைப்பித்தன் வாசித்தவர்: முனைவர்...

பேசும் புத்தகம் | அறிஞர் அண்ணா *செவ்வாழை* | வாசித்தவர்: கி.ப்ரியா மகேசுவரி (ss 48)

சிறுகதையின் பெயர்: செவ்வாழை புத்தகம் : செவ்வாழை ஆசிரியர் : அறிஞர் அண்ணா வாசித்தவர்: கி.ப்ரியா...
spot_imgspot_img

அத்தியாயம் 22: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

வேலைவாய்ப்பு - அடிப்படை உரிமை ஐஸ்லாந்து நாட்டுப் பெண்கள் 1975-ஆம் ஆண்டு அக்டோபர் 24 ஆம் தேதி ஒரு மாபெரும் வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தினார்கள். உலகளவிலான பெண்ணுரிமைப் போராட்ட வரலாற்றில் இது முக்கியமான நிகழ்வு. பெண்களின்...

பசுமைப் புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் நேர்காணல்

அஞ்சலி: எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் மறைவிற்க்காக மறு பிரசுரம் செய்யப்படுகிறது. நேர்காணல் : எம்.எஸ்.சுவாமிநாதன் - சந்திப்பு : ப.கு.ராஜன் 4000 ஆண்டுகளில் நாம் கண்ட மகசூல் முன்னேற்றத்தை - 4 ஆண்டுகளில் சாதித்தோம் டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் அவர்களுக்கு அறிமுகம் ஏதும் அவசியமில்லை.சுதந்திர இந்தியாவின் வேளாண்மை வரலாற்றோடு இணைபிரியாததொரு பெயர்.இந்திய வேளாண்மை அறிவியல் ஆய்வுக் கழகத்தின் (ICAR) இன் தலைவர்,  மத்திய வேளாண்மை அமைச்சகத்தின் செயலாளர், திட்டக் கமிஷனின் துணைத் தலைவர், சர்வதேச அரிசிஆராய்ச்சிக் கழகத்தின் (IRRI) தலைவர் என அவர் வகித்த பொறுப்புகள் பல.பெற்ற விருதுகளையும், பரிசுகளையும் பட்டியலிட்டால் பக்கங்கள் போதாது; சுமார் 50 இந்திய,சர்வதேசப்...

தொடர் 37: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்

கிழக்கு ஐரோப்பிய சினிமா - ஹங்கேரிய திரைப்படங்கள்-2 சர்ரியலிஸ ஓவியக் கலையில் சால்வெடார் டாலி , ஹீரோனிமஸ் பாஷ் மற்றும் மார்க் சகல் என்பவர்கள் பகழ்பெற்றவர்கள். பாஸ் நெதர்லாந்து ஓவியர்....

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here