கொரானாவுக்கு எதிராக உலக நாடுகள் இன்னமும் போராடிக் கொண்டிருக்கும் வேளையில், சீனா அமெரிக்கப் பொருளாதாரத்தின் மீது ஒரு  பெரிய தாக்குதலைத் தொடுத்துள்ளது.  அதுதான் சீனா அறிமுகப்படுத்தியுள்ள ரென்மின்பி (e-RMB)என்ற  டிஜிட்டல் நாணயம்.

முதல் டிஜிட்டல் நாணயம்

ரென்மின்பி என்ற நாணயம் சீன நாட்டில் ஏற்கனவே புழக்கத்தில் உள்ள நாணயமாகும். இது சீன அரசின் மத்திய வங்கியான சீன மக்கள் வங்கியால் கட்டுப்படுத்தப்படுகிறது. இந்த நாணயத்தை டிஜிட்டல் வடிவத்தில் அண்மையில் சீனா வெளியிட்டுள்ளது.  இதுதான் பெரிய பொருளாதாரத்தில் புழக்கத்திற்கு விடப்படும் முதல் டிஜிட்டல் நாணயமாகும்.

The World’s First Digital Currency Will Put China Into The Driving …

டிஜிட்டல் நாணயத்தை வெளியிடுவது என்பது சீனாவின் நீண்டகால கனவாகும்.  இற்கு பல பத்தாண்டுகளாக டிஜிட்டல் நாணயத்தை உருவாக்க சீனா திட்டமிட்டிருந்தது. இதற்காக சீன அரசின் மைய வங்கியான சீன மக்கள் வங்கி, தீவிரமான பல முயற்சிகளை எடுத்தது. இப்போதுதான் சீனா அரசு டிஜிட்டல் நாணயத்தை உருவாக்கிப் பொருளாதார தளத்தில் சோதனையில் ஈடுபடுத்தியுள்ளது.

இந்த டிஜிட்டல் நாணயமும், சீனாவின் ஒரு பெரிய மத்திய வங்கியால் கட்டுப்படுத்துகிறது. ஒரு மத்திய வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் புழக்கத்திற்கு விடப்படும் உலகின் முதல் டிஜிட்டல் நாணயம் இதுதான் என்பது குறிப்பிடத் தக்கது. எனவே மத்திய வங்கியின் வரலாற்றின் இது ஒரு மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.  அது மட்டுமல்ல,  இது சீனாவின் பொருளாதார வரலாற்றில் ஒரு முக்கியமான நடவடிக்கையாகவும் கருதப்படுகிறது.

டிஜிட்டல் பரிமாற்ற பரிசோதனைகள்

சீனாவின் அரசாங்கம் தனது புதிய டிஜிட்டல் நாணயத்தை முதலில் நான்கு நகரங்களில் வெளியிட திட்டமிட்டுள்ளது. அதற்கான காலக்கெடுவையும் நிர்ணயித்துள்ளது.  ஷென்ஜென், சுஜோ, செங்டு, சியோங்கான் போன்ற சீன நகரங்களிலும், 2022 ஆம் ஆண்டில் பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் நடத்தவிருக்கும் பகுதிகளிலும் இந்த டிஜிட்டல் நாணயத்தை புழக்கத்தில் விடுவதற்கான தீவிரமான பரிசோதனைகளில் சீன அரசு இறங்கியுள்ளது. மேலும் பல நகரங்களின் நாணய அமைப்புகளில் இந்த டிஜிட்டல் நாணயம்  ஏற்றுக்கொள்ளப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

China gets first glimpse at sovereign digital currency after ...

அடுத்த மாதத்தில், இந்த நகரங்களில் உள்ள அரசு ஊழியர்கள் தங்கள் ஊதிய காசோலைகளில் ஒரு பகுதியையாவது தமது கைபேசிகளின் வழியாக டிஜிட்டல் நாணய பரிவர்த்தனை மூலம் பெற்றுக் கொள்ள தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சில அரசு ஊழியர்களும் பொது ஊழியர்களும்  மே மாதத்திலிருந்து தங்களது சம்பளத்தை டிஜிட்டல் நாணயத்தின் மூலம் பெற்றுக் கொள்ள இருக்கின்றனர்.

மேலும் சுனாவில் போக்குவரத்துக்கு மானியம் வழங்கவும் இந்த டிஜிட்டல் நாணயம் பயன்படுத்தப்படும் என்று ஒரு செய்தி கூறுகிறது. சியோங்கில் இந்த பரிசோதனை முயற்சி உணவு மற்றும் சில்லறை விற்பனையில் செலுத்தியுள்ளது. அமெரிக்க கம்பெனிகளான மெக்டொனால்டு மற்றும் ஸ்டார்பக்ஸ் உள்ளிட்ட வணிக நிறுவனங்கள் இத்தகைய டிஜிட்டல் நாணயப் பரிசோதனையில் ஈடுபட ஒப்புக் கொண்டதாகவும் சில செய்திகள் கூறுகின்றன. 2021 இல் சீனாவில் உள்ள அனைத்து நகரங்களிலும் டிஜிட்ட ல் நாணயத்தை புழக்கத்திற்கு விட திட்டமிட்டுள்ளது. இனி, சீன அரசு இப்போது டிஜிட்டல் நாணயத்தை புழக்கத்திற்கு விடவேண்டிய அவசியத்தையும் காரணங்களையும் பார்ப்போம்.

வர்த்தகப் போர்

அமெரிக்க டாலர் என்பது உலகப் பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்தும் மாபெரும் சக்தியாக இருந்து வருகின்றது.  உலகில் நடக்கும் பரிவர்த்தனைகளில் டாலர் மூலம் நடைபெறும் பரிவர்த்தனைகள்தான் அதிகம். 2019 இல் மட்டும் 90% அளவுக்கு பரிவர்த்தனை டாலரில் நடந்தது.  பிற நாடுகளின் வர்த்தகத்தின் மூலம் கிடைக்கப் பெற்ற அந்நிய செலாவணி கையிருப்பு சுமார் 60% டாலர் ஆகும்.  இதை சீன யென்னுடன் ஒப்பிடும் போது 2% மட்டுமே. இது போன்ற பரிவர்த்தனையில் நிகழும் போட்டியின் விளைவாக, அமெரிக்காவும் சீனாவும் பல ஆண்டுகளாக வர்த்தகப் பனிபோரில் ஈடுபட்டிருக்கின்றன.

பொருளாதார தடை என்னும் ஆயுதம்

China’s currency extends 2020 rally on easing trade angst …

அமெரிக்க நினைத்தால் ஒரு நாட்டின் மீது எந்தவிதமான பொருளாதார தடைகளை விதிக்க முடியும். அமெரிக்காவின் பரிவர்த்தனை நிபந்தனைகளுக்கு கட்டுப்படவில்லை என்றால் உடனே அந்த நாட்டின் மீது பொருளாதாரத் தடை என்ற ஆயுதத்தை பிரயோகிக்கும். பொருளாதார தடை விதிக்கப்பட்டால் அயல்நாட்டு வர்த்தக பரிமாற்றத்தில் டாலரைப் பயன்படுத்திக் கொள்ள முடியாத நிலை ஏறப்டும். இதனால் பாதிப்படைந்த நாடுகள் ஏராளம். ஈரான மீதான அமெரிக்கா பொருளாதாரத் தடைகள்  விதிக்கப்பட்டிருப்பதால் அந்த நாடு டாலர்களில் பரிவர்த்தனை மேற்கொள்ள இயலாது.

மாற்று நாணயத்திற்கான முயற்சிகள்

அமெரிக்க டாலரின் ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற வேண்டும் என்ற நோக்கில், ரஷ்யாவும் சீனாவும் இன்ன பிற நாடுகளும் பல ஆண்டுகளாக டாலருக்கு மாற்றான நாணயத்தை உருவாக்க பல்வேறு விதமான முயற்சிகளை எடுத்து வருகின்றன. உலகத்தின் பல நாடுகள் காகித பணத்திலிருந்து டிஜிட்டல் பணத்திற்கு மாறி கொள்ளும் எண்ணத்தில் இருக்கும்போது சீனா இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டுள்ளது.

Crypto-currencies and financial sector | The New Times | Rwanda

உலகத்தில் நடக்கும் எல்லா பரிவர்த்தனைகளில் அமெரிக்க டாலர்தான் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அமெரிக்காவுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் மட்டுமே அதன் டாலரை பெறமுடியும்.  அமெரிக்காவுடனான வர்த்தகத்தில் ஈடுபட்டு டாலரை பெறும் சீன நிறுவனங்கள் அவற்றை சீன மத்திய வங்கியில் யென்னுக்கு மாற்றிக் கொள்கின்றன. பின்னர் யென்னைப் பயன்படுத்தி பணியாளர்களுக்கு சம்பளம் கொடுப்பது போன்ற பரிவர்த்தனைகளில் ஈடுபடுகின்றன. இவ்வாறு சீன நிறுவனங்கள் மூலம் கிடைத்த அமெரிக்க டாலர்களை சீன மத்திய வங்கி கையிருப்பாக வைத்துக் கொள்கிறது. இந்த வகையில் 2020 மார்ச் மாதத்தில் சீனா மத்திய  வங்கியிடம் சுமார் 3 டிரில்லியன் அமெரிக்க டாலரை கையிருப்பாக வைத்துள்ளது.

சீனாவில் ஏற்கனவே உள்ள டிஜிட்டல் பரிவர்த்தனைகள்

டிஜிட்டல் நாணய பரிவர்த்தனைகள் சீனாவில் ஏற்கனவே பரவலாக நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன, இதன் மூலம், சீன வாடிக்கையாளர்கள் பலர் ஏற்கனவே சில டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு பழக்கப்படுத்திக் கொண்டுள்ளனர்.  அலிபாபா என்ற வர்த்தக நிறுவனம் தமது வாடிக்கையாளர்களுக்கு அலிபே (Alipay) என்ற டிஜிட்டல்  நாணயத்தை பரிவர்த்தனை செய்து வருகின்றது. டென்செண்டின் வெச்சாட்பே (WeChat Pay) என்ற நாணயமும் பரிவர்த்தனை புழக்கத்தில் உள்ளன. இந்த டிஜிட்டல் பரிவர்த்தனை ஏற்பாடு முற்றிலும் தனியார் நிறுவனத்தின் கட்டுப்பாட்டின் கீழ் மட்டும் இருக்கும். இதில் அரசின் தலையீடு இருக்காது.

weeBlog UK | Strategic expansion of the mobile payment and ...

2019 ஆம் ஆண்டில் கைபேசியை பயன்படுத்தி மட்டும் சுமார் 890 மில்லியன் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன. இந்த பரிவர்த்தனைகள் மூலம் கிடைத்த தொகை சுமார் 20 டிரில்லியன் ஆகும்.  சீனா இப்போது அறிமுகப்படுத்தியுள்ள டிஜிட்டல் நாணயம் அலிபேவுக்கும், வெச்சாபேவுக்கு போட்டியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.  ஆனால் மத்திய வங்கியின் கட்டுப்பாட்டில் அறிமுகப்படுத்தும் டிஜிட்டல் நாணயங்கள் மூலம் அரசு தனது கண்காணிப்பைச் செலுத்தமுடியும். மேலும் சட்ட விரோத பரிவர்த்தனைகளைத் தடுக்க முடியும் என்று சீன அரசு கருதுகிறது. மேலும் பரிவர்த்தனையின் மூலம் நடைபெறும் பணச் சுற்றோட்டத்தைக் கண்காணிக்கவும் முடியும் என்றும், வரி ஏய்ப்பு போன்ற விசயங்களையும் தடுக்க முடியும் என்றும் சீன அரசு கருதுகின்றது.

டிஜிட்டல் பரிவர்த்தனையின் பலன்கள்

இந்த டிஜிட்டல் பரிவர்த்தனை முயற்சி வெற்றிபெற்றுவிட்டால், இனி சீனா அமெரிக்காவைச் சார்ந்து இருக்க வேண்டிய அவசியம் இருக்காது.  வெளிநாட்டில் இருக்கும் ஏற்றுமதியாளரும் சீனாவிலிருக்கும் இறக்குமதியாளரும்  ஒருவருக்கு ஒரு வர் பரஸ்பரம் கணினி மூலம் இணையத்தைப் பயன்படுத்தி தகவல் பரிவர்த்தனை செய்து கொள்ள முடியும்.  ரென்மின்பி பரிவர்த்தனையை டிஜிட்டல் பணப்பையில் வைத்திருக்க முடியும். ஆனால் இருவருமே அதை திறக்க முடியாது.  பொருட்கள் டெலிவரி ஆகிவிட்டது என்று உறுதி செய்த பின்னர் ஏற்றுமதியாளருக்கு பணம் செலுத்தப்படுகிறது. இல்லையென்னால் அந்த பணம் இறக்குமதி செய்தவருக்கு திருப்பி அனுப்பப்படும்.

▷ Worldwide first: weeNexx AG merges cashback system with ...

அரசு கட்டுப்பாட்டில் இல்லாமல் தனியார்களின் கட்டுப்பாட்டில் இருப்பதால்,  இது பரவலாக்கப்பட்ட பயன்பாட்டில் இந்த பரிவர்த்தனையை செய்து கொள்ள முடியும். அது மட்டும் மல்ல. இந்த டிஜிட்டல் நாணயத்தின் பயன்படுத்தி அயல்நாட்டு வணிகப் பரிவர்த்தனையை அமெரிக்க டாலரின் தலையீடு இல்லாமல் செய்து கொள்ள முடியும்.

டாலரின் ஆதிக்கத்திற்கு பலத்த அடி

இது அமெரிக்காவுக்கு பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இத்தகைய டிஜிட்டல் நாணயம் புழக்கத்திற்கு வந்துவிட்டால், அந்த பரிவர்த்தனைகளில் அமெரிக்க மத்திய வங்கியின் தலையீடு செய்ய முடியாது. சீனாவின் டிஜிட்டல் நாணயம், அமெரிக்க பொருளாதாரத்திற்கு கடுமையான அச்சுறுத்தலாக அமையும் என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.  டிஜிட்டல் நாணயத்தை அறிமுகப்படுத்தியதன் மூலம் சர்வதேச பரிவர்த்தனைகளில் டாலரின் அதிகாரத்தை துடைத்தெறிய சீனா முடிவு செய்துள்ளது. சீனா இந்த முடிவு, திடீர் உலகின் மூலை முடுக்கெல்லாம் உலுக்கி கொண்டிருக்கிறது.  அமெரிக்க டாலர் சீன யுவானுக்கு எதிராக மோசமாக வீழ்ச்சியடையும் என்றும், அது உலக சந்தைகளைப் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. சீனாவின் இந்த டிஜிட்டல் பரிவரித்தனையை அமெரிக்க நிறுவனங்களே பரிசோதிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளன என்பது அமெரிக்காவிற்கு பல அடியாகக் கருதப்படுகிறது.

இனி பொருளாதார தடை விதிக்க முடியாது

What is China's digital currency plan? | Financial Times

டாலரின் ஆதிக்கம் இருக்கும்வரையில்தான்  அமெரிக்கா தனது தலையாய அதிகாரமான பொருளாதாரத் தடையை பிற நாடுகள் மீது திணிக்க முடியும்.  உலக அளவில், டிஜிட்டல் நாணயத்தின் புழக்கம் நடைமுறைக்கு வந்துவிட்டால்,  அமெரிக்கா பொருளாதாரத் தடை விதிக்கும் அதிகாரத்தை இழந்துவிடும். இந்த நேரத்தில் டிஜிட்டல் நாணயத்தின் பங்கு முக்கியமானதாக இருக்கும்.

அமெரிக்கா எப்படி எதிர்கொள்ளப்போகிறது

கொரானாவின் கொடும் தாக்குதலில் இருந்து இன்னமும் மீண்டு வர முடியாத சூழ்நிலையில், சீனாவின் புதிய டிஜிட்டல் நாணயத்தை அறிமுகப்படுத்தியிருப்பது அமெரிக்க பொருளாதாரத்தின் மீது ஒரு தீவிரமான பொருளாதார யுத்தத்தை தொடுப்பதற்கு ஈடானதாக உலக அரங்கில் கருதப்படுகிறது. சீன டிஜிட்டல் நாணயம் வெற்றிபெற்றுவிட்டால், உலகத்தின் ஆதிக்க சக்தியான அமெரிக்க பொருளாதாரத்திற்கு  இது மீட்டெடுக்க முடியாத, பெருத்தச் சேதத்தை விளைவிக்கும் என கருதப்படுகிறது. சீனாவின் இந்த நடவடிக்கைக்கு எதிராக ஒரு வேளை அமெரிக்கா முட்டாள்தனமாக செயல்பட்டால் இந்த பேரழிவைத் தரும் மற்றுமொரு உலகப்போருக்கு இட்டுச்செல்லும் என்று அச்சமும் நிலவுகிறது.

Reference

China starts major trial of state-run digital currency

Sudden Chinese decision shakes the corners of the entire world – spoindia

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *