திமுக உருவானது ஏன்? – மலர்மன்னன் | மதிப்புரை ம.கண்ணன்

திராவிட முன்னேற்றக் கழகம் உருவான வரலாறு குறித்து இந்நூலின் ஆசிரியர் பல்வேறு விவரங்களோடு விளக்கிக் கொண்டே செல்கிறார்.

திமுக உருவாவதற்கு மிக முக்கியமான மூன்று காரணங்களாக முன்வைக்கப்படுபவை
1)கருப்புச் சட்டை அணிவது குறித்து,
2)1947 ஆகஸ்ட் 15 சுதந்திர தின நாளை கருப்பு நாளாக கொண்டாட வேண்டும் என்று பெரியார் வலியுறுத்தியது.
3)பெரியார் அவர்கள் இளம் வயது மணியம்மையை திருமணம் செய்துகொண்டவை என முன்வைக்கப்படுகிறது.

திராவிடர் கழகம் உருவாக்கம்

திமுக என்பது நீதிக்கட்சி என்று முதலில் அழைக்கப்பட்டு பிறகு திராவிடர் கழகமாக மாறிய வரை ஒரு கட்சியின் இயல்பான பரிணாம வளர்ச்சி என்று சிலர் கூறுகின்றனர். அது எந்த அளவுக்கு சரி என்பது ஆய்வு செய்யப்பட வேண்டிய விஷயம்.

திராவிட இயக்கத்தின் முன்னோடியான, தென்னிந்திய மக்கள் சங்கத்தை சென்னையில் 1916ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30 பேர் கூடிய ஒரு கூட்டத்தில் சர் பிட்டி தியாகராயச் செட்டி, டாக்டர் டி.எம். நாயர் ஆகிய இருவரும் முன்னின்று நிறுவியபோது அவர்களின் நோக்கம் இந்து சமய எதிர்ப்பாக இல்லை.

இந்து சமூகத்தை பிராமணர், பிராமணரல்லாதார் என்ற இரு கூறுகளாகப் பிரித்து போட்டு பிராமணரல்லாதவர்களின் பிரச்சனையை ஒரு சமயப் பிரச்சினையாக இல்லாமல் சமூக பிரச்சினையாக பார்க்க வேண்டும் என்று வலியுறுத்தியது. மேலும் அவை பின்வருமாறு நோக்கங்களை விளக்கியது. தென்னிந்தியாவில் பிராமணரல்லாத அனைத்து சாதியினரும் கல்வி, சமூகம், பொருளாதாரம், அரசியல் போன்றவற்றில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்றும் அனைத்து ஜாதியினரும் நலன்களைப் பாதுகாப்பதற்கான கோரிக்கைகளை அரசாங்கத்துக்கு எடுத்துக்கூறும் பிரதிநிதியாக இயங்குவது என்றும் முன்மொழியப்பட்டது.

நாத்திகம்: துக்ளக்கின் ...

காங்கிரஸ் மகாசபையில் பிராமணர் ஆதிக்கம் அதிகம் இருப்பதாக குற்றம்சாட்டி பெரியார் அவர்கள் காங்கிரஸில் இருந்து விலகி 1925இல் சுயமரியாதைச் சங்கம் துவக்கி பின்னர் தனது சங்கத்தை ஜஸ்டிஸ் கட்சியுடன் இணைத்தார். சுயமரியாதை இயக்கம் என்ற பெயரில் பெரியார் துவங்கிய என்ற பெயரில் காங்கிரஸ் கட்சியையும் பிராமணர்களையும் வன்மையாக கண்டிப்பது பிரதானமாக நோக்கமாகக் கொண்டிருந்தார். இந்நிலையில் ஜஸ்டிஸ் கட்சியில் பிராமணர்களை இணைக்கலாம் என்ற கோரிக்கையை முன் மொழிந்த பொழுது அதை கடுமையாக எதிர்த்தார். அதற்குப்பின்னால் 1944 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27 ஆம் தேதி சேலத்தில் நடைபெற்ற நீதிக்கட்சியின் 16 வது மாநாட்டில் ஜஸ்டிஸ் கட்சி, திராவிடர் கழகம் என்ற பெயரில் செயல்பட அண்ணாதுரை வழிவகை செய்தார்.

பிராமணர் அல்லாதவர்களின் நலனுக்கான கட்சி என அறியப்பட்ட ஜஸ்டிஸ் கட்சி திராவிடர் கழகம் என்ற பெயரில் முற்றிலும் ஈவேரா அவர்களின் கட்டுப்பாட்டில் வந்த பிறகுதான் பிராமணர்களை முழுமூச்சுடன் எதிர்க்கும் கட்சியாக அது உருவெடுத்தது. ஈவேரா அவர்களது நாத்திக உணர்வின் காரணமாக அவரது பிராமண எதிர்ப்பு நாளடைவில் இந்து மத எதிப்பாகவும் பரிணாமம் அடைந்தது. பார்ப்பனியம் என்பதுதான் இந்து சமயம் என்ற கருதுகோளே அவரை இவ்வாறு இந்து மத எதிர்ப்பாளராக உருவெடுக்கச் செய்தது.

இந்நூலில் பல்வேறு விவரங்களை படிக்கும்பொழுது பெரியாருக்கும் அண்ணாவுக்கும் ஆன பண்புகளை புரிந்து கொள்ளும் அதே நேரத்தில் பெரியார் ஜனநாயகவாதியாக இல்லாமல் தான் நினைப்பதை செயல்படுத்துகிற நபராகவே முன்னிலைப்படுத்தபடுகிறார்.

1) கருப்பச் சட்டை அணிவது

திராவிடர் கழகம் உருவாக்கப்பட்டு பின் 1945 ஆம் ஆண்டு திருச்சியில் நடைபெற்ற முதல் மாநாட்டில் கருப்புச்சட்டை அணிந்தவர்களின் படை ஒன்றைத் தோற்றுவிக்க வேண்டும் என்ற எண்ணம் ஈ.வே.ரா அவர்களுக்கு உதித்ததும் அதற்கு தற்காலிக அமைப்பாளர்களை நியமித்து மாநாட்டில் தீர்மானம் முன்மொழிந்து, வழிமொழியப்பட்டு, முறைப்படி நிறைவேற்றப்பட்டது.

தென் சென்னை திராவிடர் கழகம்: தஞ்சை ...

திராவிடர் கழகத்தில் கருஞ்சட்டைப்படை அமைப்பு என்றுதான் ஈ.வே.ரா முதலில் அறிவித்திருந்தார். அண்ணா கூட கருஞ்சட்டைப்படை தீர்மானத்தை ஆதரித்து தனது திராவிடநாடு இதழில் கூட அண்ணா அவர்கள் வரவேற்று எழுதினார். ஆனால் நாளடைவில் ஈவேரா அவர்கள் திராவிடர் கழக உறுப்பினர்கள் அனைவரும் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள எந்த நேரமும் கருப்பு சட்டை அணிய வேண்டும் என்று வலியுறுத்தினார். அண்ணா அவர்களும் திராவிடர் கழகம் அமைத்திருப்பது கருஞ்சட்டைப் படை தவிர திராவிடர் கழகமே கருப்பு சட்டை அணிய வேண்டும் என்பதை அவர் ஏற்கவில்லை.

ஈவேரா அவர்கள் சொன்னதை கேட்டு கழகத் தொண்டர்கள் பலரும் கருஞ்சட்டை அணியத் தொடங்கினார்கள். கழக நிகழ்ச்சிகளின்போது மட்டுமல்லாமல் எப்போதுமே கருஞ்சட்டை உடன் காட்சியளிப்பது அவர்களுக்கு வழக்கமானது. ஆனால் அண்ணாவோ வெள்ளை நிறச் சட்டை அணிந்தபடியே கட்சி பொதுக் கூட்டங்களில் பங்கேற்றார்.

DMK is wearing a black shirt to protest against Prime Minister ...

1946-ல் இல் தஞ்சை மாவட்டம் நீடாமங்கலத்தில் திராவிடர் மாணவர் கழக இரண்டாவது மாநில மாநாடு நடந்த போது அதில் கலந்து கொள்ள அண்ணாவை அழைத்திருந்தனர். அந்த மாநாட்டிற்கு அழைத்து செல்வதற்காக வந்தபொழுது அண்ணா வெள்ளை சட்டையுடன் தான் காணப்பட்டார். மாநாட்டிற்கு அழைத்துச் செல்ல வந்தவர் கருஞ்சட்டை அணிய வேண்டும் என்று வலியுறுத்தினார். அப்பொழுது கூட அண்ணா அவர்கள் கருப்பு சட்டை அணிய மாட்டேன் என்று கூறியுள்ளார். ஐயா மேடையில் இருக்கிற பொழுது கருப்புச்சட்டை அணியாதவர்கள் அங்கே மேடையில ஏறவே முடியாது என்று அழைத்துச் செல்ல வந்தவர் வலியுறுத்திய பொழுது அண்ணா அவர்கள் கோபமாக திருச்சி மாநாட்டில் என்ன தீர்மானம் போட்டோம், கருப்புச்சட்டை படை அமைக்க தானே உன்னை அதன் அமைப்பாளராக போட்டார்.

மேடைப் பேச்சாளரும் கருப்புச்சட்டை போடணும்னு தீர்மானம் போட்டுமா என்று கூறியுள்ளார். மேலும் இது கன்வென்ஷன் அல்ல கம்பல்சன்.  என்னிடம் கருப்புச்சட்டை இல்லை. வேண்டுமென்றால் மேடைக்கு வராமலேயே நான் இருந்து விடுகிறேன் என்றார். இறுதியாக அவரிடமே ஒரு கருப்புச் சட்டை வாங்கி அணிந்து கொண்டு மாநாட்டிற்கு செல்கிறார். அண்ணா கருஞ்சட்டை அணியாதது கட்சிக்குள் ஒரு பெரிய பிரச்சினையாக ஈ.வே.ரா கொண்டு வந்தார். கும்பகோணத்தில் நடைபெற்ற மாநாட்டில் பேசிய பெரியார் நம்மில் கருப்புச்சட்டை அணிய கூச்சப்படுகிறார்கள். வெள்ளைச் சட்டை அணியும் குள்ளநரிகள் என்று அவர்களை சொல்வேன் என்று கண்டனம் தெரிவித்து பேசியுள்ளார்.

2) ஆகஸ்ட் 15, 1947

 

முத்துக்குமார் த on Twitter ...

பெரியார் ஜூலை 27, 1947 விடுதலை நாளிதழில் சுதந்திர நாளை பிரிட்டிஷ்காரர்களுக்கு ஏஜெண்டாக, கையாளாக இருந்து வெள்ளையருடன் வடநாட்டு பிர்லா, பஜாஜ் கோஷ்டியினர் செய்துள்ள ஒப்பந்த ஆட்சியேயன்றி, சுய ஆட்சி என்று எந்த காங்கிரஸ் தலைவர்களால் கூற முடியுமா என்று எழுதிதுகிறார். மேலும் ஆகஸ்ட் 6ஆம் தேதி வெள்ளையருக்கும், காங்கிரஸ் க்கும் மேற்பட்ட ஓர் ஒப்பந்த ஆட்சிதானே ஒழிய, இந்திய மக்களுக்கு ஏற்பட்ட சுதந்திர ஆட்சியல்ல. இதன் பயனாய் இந்த நாட்டில் உள்ள காங்கிரஸ் அல்லாத மக்களுக்கும் நன்மை இல்லை என்று எழுதுகிறார். அண்ணா அவர்களும் ஆகஸ்ட் 15ஆம் தேதி இரண்டு நூற்றாண்டுகளாக இந்தியத் துணைக்கண்டத்தின் மீது இருந்த வந்த பழிச்சொல்லை, இழிவை நீக்கும் நாள். அது திராவிடருக்கும் திருநாள்தான். துக்கநாள் ஆகாது என்று ஆகஸ்ட் 10ஆம் தேதி திராவிடநாடு இதழில் எழுதுகிறார் உடனே அதற்கு அடுத்து ஈவேரா அவர்கள் ஆகஸ்ட் 15 துக்க நாளாக அனுசரிக்க வேண்டும் என்று திராவிடர் கழகத்தின் நிர்வாகத் தலைவர் தி.பொ. வேதாசலம் அவர்களால் விடுதலை நாளிதழில் அறிவிப்பு வெளிடப்படுகிறது அதேபோன்று அனைத்து கிளைகளுக்கும் கருப்பு பேட்ஜ் அணிய வேண்டும் வலியுறுத்தப்படுகிறது.

3) ஈ.வே.ரா மணியம்மையுடன் திருமணம்

ஜூலை 9, 1949 ஆம் ஆண்டு ஈவேரா, மணியம்மையை சட்டப் பூர்வமாக முறைப்படிப் பதிவுத் திருமணம் செய்து கொண்டார். மணியம்மையை திருமணம் செய்துகொண்ட சமயத்தில் மற்றவர்களுக்கெல்லாம் சடங்கு, சம்பிரதாயம் இல்லாமல், சட்ட அங்கீகாரமில்லாத சீர்திருத்தத் திருமணம் செய்து வைக்கும் ஈ.வே.ரா தமது விஷயத்தில் மட்டும் ஏன் சட்டப்படி செல்லுபடியாகும் பதிவு திருமணம் செய்து கொண்டார் என்ற கேள்வி எழுந்தது.

மணியம்மை உடன் திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவு எடுத்த பிறகு ஈவேரா அவர்கள் திராவிடர் கழகத்திற்கு எதிராக பார்க்கப்பட்ட ராஜாஜியை சந்தித்துப் பேசினார். அதை செய்தித்தாள் வழியாக கேள்விப்பட்ட உடனே அண்ணாதுரை உள்ளிட்ட மற்ற கழகத் தோழர்கள் கேள்வி கேட்கின்ற பொழுது அதற்கு ஈவேரா அவர்கள் விடுதலை நாளிதழில் என்னைப் பற்றி ஒரு ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறேன். அது முடிந்தவுடன் தீவிரமாக இறங்கி நடத்தப் போகிறேன். என்னைப் பற்றி, என் பெயரைப் பற்றி, என் நடத்தையைப் பற்றி உங்களுக்கு கவலை வேண்டாம். நீங்கள் எனக்கும், இயக்கத்துக்கும் உண்மையாய் நடந்து கொண்டீர்களா? என்பதைப் பார்த்துக்கொள்ளுங்கள். மற்றதை எனக்கே விட்டுவிடுங்கள் என்று எழுதுகிறார்.

 

மணியம்மையின் தந்தை ஈவே.ராமசாமியின் ...

பெரியாரும் மணியம்மையும்

அதற்கு அண்ணா ஹைதராபாத் நிஜாமுக்கு இருக்கவேண்டிய கவலை, ஆதினகர்த்தாக்களுக்கு ஏற்படவேண்டிய கவலை, பகுத்தறிவு இயக்கத் தலைவருக்கு ஏன் ஏற்படுகிறதோ தெரியவில்லை. வாரிசுமுறை எதற்கு? யார் செய்யும் ஏற்பாடு? எந்தக்காலத்து முறை? ஓர் இயக்கத்துக்கு வாரிசு ஏற்படுத்துவது என்பது ஜனநாயக முறைக்கு ஏற்றது தானா? அல்லது நடைமுறையிலே வெற்றி தரக் கூடியது தானா? திராவிடர் கழகம், அதற்கென உள்ளதாக கூறப்படும் சொத்து என்பது இன்னொருவருக்கு வாரிசு முறைப்படித் தரப்பட வேண்டிய அவசியம்தானா? என்று தனது திராவிடநாடு இதழில் எழுதுகிறார்.

பெரியார் அவர்கள் மணியம்மையை திருமணம் செய்துகொள்ள வேண்டாம் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்திய பொழுதும் ஈவேரா அவர்கள் அந்த விஷயத்தில் உறுதியாக இருந்தார். இவையே மிகப்பெரிய முரண்பாடு வருவதற்கு காரணமாக அமைந்தது. அண்ணா அவர்கள் 1949 ஆம் ஆண்டு செப்டம்பர் 18ஆம் தேதி திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கினார்.

முரண்பட்ட குணவியல்புகள்

ஜஸ்டிஸ் கட்சியிலிருந்து திராவிடர் கழகம் உருவாக்கிய பொழுது அண்ணா அவர்களே ஆங்கிலேய ஏகாதிபத்திய ஆட்சியினால் வழங்கப்பட்ட சர் பட்டங்களையும், பதவிகளையும் புறக்கணிக்க வேண்டும் என்று அண்ணா வலியுறுத்துகிறார். ஆனால் ஈவேரா அவர்களை தனது கழகத்திற்கு உள்ள் பிரமுகரிடம் இருந்து நிதி வருவது தடைப்பட்டு விடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. அதனால் அவற்றை வேண்டாம் என்றும் வலியுறுத்துகிறார். ஆனால் விடாப்பிடியாக அண்ணா அவர்கள் வலியுறுத்துகிறார். அதேபோன்று ஈ.வே.ரா தனது கட்சியில் இருந்து வெளியேறியவர்களை வசைபாடிக் கொண்டும், அவர்களை ஏளனமாக பேசிக் கொண்டே இருப்பார். கட்சியிலிருந்து வெளியேறிச் செல்பவர்களை பற்றி எதற்கும் ஈ.வே.ரா கவலைப்பட மாட்டார். ஆனால் அண்ணா அவர்களும் தன்னிடம் இருந்து வெளியே செல்பவர்களையும் அரவணைத்து பேசுகிற வழக்கம் உள்ளது. அதேபோல தன்னிடம் முரண்படுகிறவர்களை கோபமாகக்கூட பேசாமல் இனிய பண்போடு பேசும் பழக்கம் உள்ளது.

நாம் அண்ணாவை மட்டும் புதைக்கவில்லை...!

அண்ணாவும் பெரியாரும்

இறுதியாக வயது முதிர்ந்த பெரியார் அவர்கள் சீர்திருத்த கருத்துக்களை தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்த பொழுதும் வயது குறைந்த மணியம்மையை ஏன் திருமணம் செய்து கொண்டார் என்ற கேள்வி? முன்னே வருகிறது. அதேபோல திராவிடர் கழகத்தில் சடங்கு, சம்பிரதாயம் இல்லாத திருமணத்தை நடத்தி வைத்த பொழுது தன்னுடைய திருமணத்தை ஏன் பதிவு திருமணம் செய்து கொண்டார். அதேநேரம் அவர் முன்வைக்கும் காரணங்கள் ஒரு விமர்சனமாக இருக்கிறது.
இந்நிலையில் தான் இளைஞராக இருந்த அண்ணா தனது பேச்சாற்றலால் இளைஞர்கள் மத்தியிலும் செல்வாக்கு மிக்கவராக இருந்த பொழுது திராவிடர் கழகத்திலிருந்து வெளியேறி, திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பை உருவாக்குகிறார்.
திராவிடர் கழகத்தை உருவாக்கிய பொழுது தேர்தலில் போட்டியிடுவதிலை என்ற நிலைப்பாட்டை தான் எடுத்து இருந்தனர்.

ஆனால் பின்னர் மக்களிடம், இளைஞர்களிடம் இருந்த செல்வாக்கின் அடிப்படையில் மாநாட்டில் தேர்தலில் பங்கேற்பது குறித்து பொது வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மை அடிப்படையில் தேர்தல் பங்கேற்கலாம் என்ற முடிவு எடுத்து அதன் அடிப்படையில் தேர்தலில் பங்கேற்று வெற்றிபெற்று ஆட்சி அமைக்கின்றார். இப்படி இரண்டு மாறுபட்ட குணங்களோடு இருக்கின்ற ஈவேரா, அண்ணா அவர்களின் அரசியல் குணவியல்புகள் படி திமுக உருவானதாக கருத வேண்டிய எண்ணம் உருவாகிறது.

தி.மு.க. உருவானது ஏன்

திமுக உருவானது ஏன்?
ஆசிரியர்: மலர்மன்னன்,
வெளியீடு: கிழக்கு பதிப்பகம்,
பக்கங்கள்-160.

Image may contain: 1 person

ம.கண்ணன்
முனைவர் பட்ட ஆய்வாளர்,
மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்.