அதிக அபராத தொகையினால் அபரிமித மாசுக்கள் குறையுமா.?
– முனைவர் பா.ராம் மனோகர்
சமூக வளர்ச்சி பெற்று வரும் நிலையில் தொழிற்சாலை முக்கியகள் பெருக்கத்தின், பங்கினை தவிர்க்க இயலாது. ஆம்
புதிய உற்பத்தி பொருட்கள் உருவாக்கி, வணிகம் மேம்பாடு அடைந்து பொருளாதார நிலை தானே உயரவதும், நன்று. எனினும், தொழிற்சாலை வெளியிடும், கழிவுகள், நீர், நில, காற்று மாசுக்கள், உரிய முறையில், குறைக்க, தவிர்க்க அல்லது மறு சுழற்சி செய்வதும், தொழிற் சாலைகளின் நிர்வாகத்தின், பொறுப்பு ஆகும்.
ஆனால், அந்த பொறுப்பு முறையாக நிறைவேற்றப்படாதபோது, சமூக சுற்றுச் சூழல் பாதித்து, அங்கு வாழும் பொது மக்கள் நோய்கள் மூலம் அவதிப்படுவதை நாம் அனைவரும் நம் நாட்டில் கண்டு வருகிறோம். அரசுத் துறைகள் இதனை கண்காணிப்பு, தொடர்ந்து செய்து உரிய மேல் நடவடிக்கை எடுப்பதும் நாம் அறிந்த ஒன்று!.
இந்நிலையில், “குற்றங்களை குறைக்கவோ அதனை தடுக்கவோ, நீதி மன்ற செயல்பாடுகள், மாசு படுத்தும் நிறுவனங்களுக்கு உரிய அபராதங்கள் விதித்து வருவதும் சுற்றுச் சூழல் சட்டத்தின் அடிப்படையில் இயல்பு ஆகும். எனினும் அபராதம் விதிப்பு மட்டுமே, மாசுக்களை குறைத்து விடுமா!!? என்பதை பற்றிய சிந்தனை தரக்கூடிய சூழல் இன்றைக்கு நம் நாட்டில் உள்ளது. அதனை பற்றி சற்று சிந்திக்கலாம்!!
ஒரு மருத்துவமனை பொருளாதார ரீதியாக, சிறப்பாக வளர்ச்சி பெறுகின்றதென்றால், அங்கு நோயாளிகளின் கூட்டம் அதிகரித்து வருகின்றது, என்று மட்டுமே எடுத்து கொள்ள இயலும்!எனினும் ஒரு ஊர் நன்றாக இருப்பின் மருத்துவ மனைக்கு வளர்ச்சி இல்லை அல்லவா!!?
அந்த வகையில் மட்டுமே இன்றைய,இந்திய அரசு சுற்றுச் சூழல் துறை நிர்வாக செயல்பாடுகள், இருப்பதாக தெரிகிறது. ஆம்! மத்திய அரசின் சுற்றுச் சூழல் வனம் & பருவ கால மாற்றம் துறையின் சமீபத்திய சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) நிதியம், ENVIRONMENT (PROTECTION) FUND RULES, 2026, ஜனவரி, 15, 2026 ஆண்டு வெளியிடப்பட்ட அரசிதழ் அறிவிக்கை, 1986 ஆம் ஆண்டு, சுற்றுச் சூழல் பாதுகாப்பு சட்ட நடைமுறைகளை மரத்துப்போக செய்துவிட்டது. மேலும் நிதி ஆதாரம் மட்டும் குறிக்கோளாக இந்த சட்டம் வெளிப்படுத்திய நிலை தெளிவாகிறது.
சட்டத்தின் பிரிவுகள் 6 மற்றும் 25 ன் படி, குறிப்பாக 16 வது பிரிவு படி, இந்திய பொது நிதி கணக்கின் மூலம், ஒரு நிதியம் உருவாக்கப்பட்டுள்ளது. இது இந்திய பொது கணக்கு தணிக்கையாளர் அவர்களின் ஆலோசனைப் படி நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கையினால் நாடு முழுவதும், சுற்றுச் சூழல் குற்றங்களுக்கான அபராதம் மூலம் மாநில, தேசிய அளவில் ஒரே நிதியம் உருவாக்க
திட்டமிடப்பட்டது.
இந்த முறை மேலோட்டமாக பார்த்தால், மாசுப்படுத்தும் நிறுவனம், அவை தெரிந்தோ, தெரியாமல் இழைக்கும் குற்றங்களுக்கு அபராதம் செலுத்தும், நிலை இருப்பினும் சற்று தீவிரமாக நோக்கினால், அபராதம் மூலம் நிதி சேகரிப்பு மட்டுமே குறிக்கோளாக இருப்பது வருத்தம் அளிக்கிறது. காற்று சட்டம், நீர் சட்டம் சுற்றுச் சூழல் பாதுகாப்பு 1986 ஆகிய சட்டங்களின் அடிப்படையில் வசூல் செய்யப்படும் தொகை அனைத்தும் “சுற்றுச் சூழல் பாதுகாப்பு நிதியம் “கணக்கில் சேர்க்கப்படும். சுற்றுச் சூழல் சட்டம் பிரிவு 16(2) படி, நிறுவன இயக்குனர், அலுவலர், தனிப்பட்ட அபராத தொகையும் இந்த கணக்கில் வரவு வைக்கப்படும்.
எனவே நிதியின் வளர்ச்சி என்பது சூழல் குற்றங்கள், அதிகம் ஆவதை பொறுத்து அமைகிறது. இது சரியான நடைமுறை தானா!? என்று நாம் சிந்தித்து பார்க்க வேண்டும். அபராதம் மட்டுமே இந்த விதிப்படி குறிக்கோள் என்பது தெளிவாகின்ற நிலையில் மாசுபாடு, எவ்வாறு தடுக்க இயலும்!?. மேலும் ஒரு சுற்றுச் சூழல் அமைப்பு, மனித தாக்கங்களால் பாதிப்பு அடையும், நிலையில் அதன் மீள் கொணர்வு நிச்சயம் நடை பெறவும் வாய்ப்புகள் இல்லாமல் போகிறது. இவ்வாறு அபராதங்கள் மூலம் உருவாக்கப்படும் நிதி, சூழல் கண்காணித்தல், ஆராய்ச்சி மற்றும் பயிற்சி என்பதற்கு பயன்படுத்த எண்ணினாலும், அதுவும் அந்த சூழல் குறைபாடு பற்றி அறிய மட்டுமே உதவி செய்யும்.
இந்த நிதி செலவு, எந்த விதத்திலும் சுற்றுசூழல் மாசு குறைக்க, தடுக்க, அல்லது பாதிக்கப்பட்ட இயற்கை சூழல் மீள் உருவாக்கம் ஆகியவற்றிற்கு பயன்படுத்த எவ்வித வலியுறுத்தல் அல்லது வழிகள் கூறவில்லை என்பது மிகவும் வேதனை தரக்கூடியது. இதனால் தூய்மை காற்று, நீர் வி, நல்ல இயற்கை சூழல் மக்கள் பெறுதல் பற்றிய வாய்ப்புகள் மறுக்கப்படுகிறது.
மாசுப்பட்ட, சூழல், பற்றிய தொழில் நுணுக்க தரவுகள் மற்றும் தகவல்கள் மட்டுமே பெறப்பட்ட பின்னர், அபராதம் பற்றி மட்டுமே இந்த சுற்றுச் சூழல் பாதுகாப்பு சட்டம் , மாற்றம் வெளிப்படுத்திய நிலை உண்மையில் கண்டனத்துக்குரிய ஒன்றாகும். மாசு படுத்துப்பவர்கள் அபராத தொகையினால் உருவாகும் நிதி, மாசுபடுதல் பற்றிய நிர்வாக செலவுகள் செய்வதற்கு மட்டும் என்பது இங்கு உறுதியாக உள்ளது. மாசுப்படுத்தும் நிறுவனங்களிலிருந்து பெறப்படும் அபராத நிதியில் 75% சதவீத பங்கு மாநில அரசுக்கும், 25% சதவீதம் மத்திய அரசுக்கும் பிரித்து வழங்கப்படும்.. அந்த மாநில அரசின் 25%சதவீத தொகை நிரந்தர வைப்பு நிதியாக இருக்குமே தவிர்த்து, சூழல் மாசுப்பாட்டால் பாதிக்கப்பட்ட பகுதி சரிபார்க்க உதவி செய்வதில்லை.
அபராதம் நிதி BHARATH KOSH PORTAL இணைய வழியில் நிறுவனம் செலுத்தவேண்டும். இந்த தொகை செலவு CAG இந்திய பொது தணிக்கையாளர் மூலம் தணிக்கைக்கு உட்பட்டது. இந்த சுற்றுச் சூழல் பாதுகாப்பு சட்டம் 16 பிரிவு, 17 பிரிவு ஆகியவற்றில் மாற்றம் செய்து உருவாக்கப்பட்ட விதிகள்,16,பிரிவு தனியார் நிறுவனங்களின் நிதி அபராதம் பெறுவது மட்டுமே நோக்கம் ஆகும். 17 வது பிரிவு, அரசு
நிறுவனங்களுக்கு பொருந்தும். எனினும், முந்தைய தனியார் நிறுவனங்களுக்கு நிகராக வலுவாக இல்லை.
மொத்தத்தில் இந்த சட்டம், 16,17 பிரிவுகளின் விதிகள் பழைய 1986 சட்டத்திற்கு முரண் பாடாக இருப்பது தெளிவாக இருப்பதும் உண்மை!. இந்த நிதி மூலம் அலுவலர்கள், வெளிநாடு பயணம் போக அனுமதி இல்லை, மற்றும் அரசு கட்டிடம் கட்டுவது, மருத்துவ செலவு, வாகனம் வாங்குவது தடை ஆகிய நிபந்தனைகள் உண்மையில் வரவேற்க வேண்டிய ஒன்று ஆகும். எனினும் சுற்றுச் சூழல் செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்படுத்தும் நிறுவனத்திற்கு விதிக்கப் படும் அபராதம் மூலம் சுற்றுச்சூழல் துறை நிர்வாகம் செயல்பாட்டுக்கான நிதியாக இருப்பதும், இயற்கை சூழல் சரி செய்ய எவ்வித முயற்சி, விழிப்புணர்வு அல்லது சரி செய்ய கட்டாயப்படுத்துதல் இல்லாமல் ஒரு சுற்றுச் சூழல் பாதுகாப்பு சட்டம் மாற்றம் இருப்பது எவ்வாறு நியாயம் என ஏற்றுக்கொள்ள இயலும்!!?
பெரும் மாசு படுத்தும், தொழில் நிறுவனங்களுக்கு இந்த அபராதம், நிதி சேகரிப்பு முறை செயல்படுத்தும் நிலைஒரு புறம் இருக்கிறது. ஆனால், உள்ளூர் நிர்வாகம், குறிப்பாக ஊராட்சிநிர்வாகம் மூலம் மேற்கொள்ளும் திடக்கழிவு மேலாண்மை திட்டங்களின் செயல்பாடுகளில் தொய்வு இருக்கும் போது, அதனை கண்காணிப்பு செய்ய சட்டம் எந்த வழியில் உள்ளது என்பது ஒரு கேள்வி குறிதான்!.
அபராதம், மூலம் தண்டனை கொடுத்துவிட்டால், மாசுபாடு குற்றங்கள் குறைய வாய்ப்பு இருப்பதாக, வெளி தோற்றம் உள்ளது. ஆனால் நிதி சேகரிப்பு என்பது மட்டும் உண்மை, தொழில் நிறுவனங்கள் உற்பத்தி பொருட்கள் உருவாகும் நிலையில், கூடுதல் பிரச்சனை அதனால் ஏற்படும் மாசு பாடு, அது இயற்கையினை, உள்ளூர் மக்கள்பாதிக்கும் போது, ஆனால் அபராதம் கட்டிவிட்டு, மாசு பாதிப்பு பற்றி நிறுவனம் கவலை கொள்ள தேவையில்லை என்ற நிலை வந்துள்ளது.
இயற்கை மாசு அடைவதை தவிர்க்க, அல்லது மாசுபடுதலை குறைக்க மட்டும் மக்கள் நல அரசு திட்டங்கள் இருக்க வேண்டும் என்பது மட்டுமே பொதுமக்கள் எதிர்பார்ப்பு ஆகும்.சுற்றுச் சூழல் பாதுகாப்பு சட்டங்கள் நிதி பெருக்க கருவியாக மாற்றம் பெற்றிருப்பது மிகவும் வருத்தம் தரக்கூடியதாக உள்ளது.
எழுதியவர்:
– முனைவர் பா.ராம் மனோகர்
******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி
2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

