Author, Retired Admiral, William H. McRaven was a central figure in U.S. who had made many operations successful from capturing Saddam Hussein to killing Osama bin Laden..
கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கு முன்பு மே17 அன்று, அட்மிரல் மெக்ரேவன் அவர்கள் டெக்சாஸ் மாநிலத்தின் ஆஸ்டின் நகரில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு நாளில், பட்டம் பெறும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக உரையாற்றிய சிறப்புரையே இந்நூல்..
பல்வேறு தரப்பட்ட மாணவர்களின் முன்னேற்றத்திற்கு வித்திட்டதோடு நில்லாது, இணையதளத்தில் youtube-ல் பதிவேற்றம் செய்யப்பட்டு உலகெங்கிலுமுள்ள பல மில்லியன் மக்களால் பாராட்டுக்களையும் பெற்றது அதன் பின்னரே அது இப்புத்தகமாக அச்சில் ஏறியது..
அட்மிரல் மெக்ரேவன் அவர்களின் தலைமைத்துவ பண்பு, அனைத்து நிலைகளிலும் உள்ள நபர்களுக்கு அதிகாரம் வழங்குவதையும், குழுவின் ஒவ்வொரு உறுப்பினரும் மதிப்புடன் நடத்தப்படுகிறார்கள் என்றும், பொறுப்புணர்வுடன் செயல்படுகிறார்கள் என்றும் உணரச் செய்யும் தலைமைத்துவ பண்பாளனுக்கான ஆகச்சிறந்த முன்மாதிரி என நூலாசிரியரை சொல்வது மிகையாகாது..
நம் வாழ்க்கையை மாற்றக்கூடிய சின்ன சின்ன விஷயங்கள் ஒருவேளை இந்த உலகத்தையே மாற்றும் என்னும் மைய புள்ளியிலிருந்து விரிக்கிறார் இந்நூலை ஆசிரியர்..
அட்மிரல், மெக்ரேவன் கடற்படையில் *Navy Seal training* ன் போது எடுத்துக்கொண்ட பத்து வகை பயிற்சிகளையே முன்வைத்து செல்கிறது இந்நூல்..
புத்தகத்தின் துவக்க உரையே ஒரு செயலை செய்து முடித்த திருப்தியோடு அந்த நாளை துவங்குங்கள் என்பதை,
If you want to change the world,
Start off by making your bed..
மெக்ரேவனின் சொந்த அனுபவக் கூறுகள் அவர் எழுந்ததும் தனது படுக்கையை சரி செய்து மற்ற வேலைகளை துவங்கி தனது பயிற்றுவிப்பாளரிடம் இருந்து பெற்ற பாராட்டுக்களுமே சிறந்த உதாரணங்கள்..
Make your bed and start your work இதற்கும் கூட 2003 ஆம் ஆண்டு சதாம் உசேன் உடன் தனக்கு உண்டான அனுபவங்களை பகிர்ந்து அதற்கான காரணத்தையும் முன் வைப்பது சிறப்பு..
*முன்வைத்த காலை பின் வைக்காதே*
இதில் மெக்ரேவனின் பயிற்றுவிப்பாளர், தன் பயிற்சியாளர்களுக்கு அளிக்கும் ஊக்கமூட்டும், ஆக்கபூர்வமான ஆலோசனைகள் அவரது பயிற்றுவிப்பாளர் மீது நமது நம்பிக்கையையும், மரியாதையையும் கூட்டுகிறது..
அது மட்டுமல்லாது ஒரு தலைமைத்துவ பண்பாளனுக்கான அடையாளத்தை வரைந்து செல்கிறது அழகாய்..
வாசிப்பினூடே எனக்கு சற்றே வித்தியாசமான அனுபவத்தை அளித்த பகுதி எதுவென்றால், அசவுகரியத்தையும், அவமானத்தையும் ஏற்படுத்தும் *Sugar Cookie Punishment*
Sugar Cookie Punishment ஐ
(*one of the punishments in Navy SEAL training* involves trainees getting wet in the ocean and rolling in the sand until covered head-to-toe)
பெறாமல் இருப்பதற்காக அத்தனை கடின பயிற்சிகளையும், எந்தவித குறைபாடும் இல்லாமல் சரியான, சீரான முறையில் வெளிப்படுத்தும் ஆசிரியர், மெக்ரேவனின் பயிற்றுவிப்பாளர் அவருக்கு அந்த தண்டனை அளித்து அதற்கான காரணத்தையும் சொல்வது, தலைமைத்துவ பண்பாளனாய் அவர் இருக்கும் பொறுப்பை பற்றி நம்மை நிதானிக்க வைக்கிறது..
The most interesting point I came across is,
*Dare greatly*
One of the initial skills every leader should possess which leads most successful personalities who dare to start their innovation and taste their fruits in a unique way..
Highlight of the book
Kindly watch the speech by the author McRaven at Texas university.. by clicking the below link
This book *Make your Bed* is also one of my TLMs
used to discuss while starting the unit 5 in 11th standard *The Convocation Address* by our former CM Arignar Annadurai..
Shall we try the book to taste the remaining chapters
📚 நூலின் விவரங்கள்:
| தலைப்பு | விவரம் |
| நூலின் பெயர்: | Make Your Bed |
| ஆசிரியர்: | வில்லியம் எச். மெக்ராவன் (William H. McRaven) |
| வெளியீடு: |
Penguin பதிப்பகம்
|
| விலை: | ₹.185 |
| அறிமுகம் எழுதியவர்: |
அ.சுகிர்தா
நெல்லை
|
******************************************************************************
புக்டே இணையதள எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் சந்திப்பு நிகழ்வு

2026 ஆம் ஆண்டில் ஜனவரி 8 முதல் 21 வரை 49வது சென்னை புத்தகக்காட்சி நடைபெற உள்ளது. ஆண்டுதோறும் புத்தக காட்சியில் சிறந்த நூல் அறிமுகம் எழுதுபவர்களுக்கான போட்டி, கதை சொல்லல் போட்டி, சிறுகதை போட்டி என நடத்தி சிறந்த படைப்புகளுக்கு தொடர்ந்து பரிசுகளை வழங்கி வருகிறது பாரதி புத்தகாலயத்தின் புக் டே இணைய இதழ். இந்த ஆண்டும் ஜனவரி 8 முதல் 18 வரை சென்னை புத்தக கண்காட்சியின் ஏதாவது ஒரு அரங்கிற்கு நேரடியாக வந்து தங்களுக்குப் பிடித்த ஏதாவது ஒரு புத்தகத்தை எடுத்து அதை நூல் அறிமுக கட்டுரையாக bookday24@gmail.com என்ற மெயிலில் அனுப்பி வைக்கவும். அதில் தேர்வாகும் சிறந்த அறிமுக கட்டுரைக்கு ரூ.10,000 மதிப்பிலான பரிசும், புத்தக கண்காட்சி அரங்கில் ஜனவரி 20 அன்று மாலை 5.30 மணியளவில் நடக்கும் புக்டே இணையதள எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் சந்திப்பு நிகழ்வில் பரிசும் வழங்கப்படும். இந்நிகழ்வில் திரைப்பட இயக்குனர், கவிஞர் சீனு ராமசாமி, எழுத்தாளர்கள் இந்திரன், ஆயிஷா நடராசன், உமர் பாரூக் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர் தோழர் ஜி. ராமகிருஷ்ணன், அரசியல் செயற்பாட்டாளர் தோழர் ஜி.செல்வா ஆகியோர் பங்கேற்க இருக்கின்றனர். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/ZqZv4x8HCrwkJKs56 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/ZqZv4x8HCrwkJKs56
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
