நீயெல்லாம் திருந்த மாட்ட… – வில்லியம்ஸ்நீயெல்லாம் திருந்த மாட்ட…
————————————–
மொட்டை மாடிக்கு
வந்து விட்டாய்
ஆரம்பித்து விட்டது
தொலை தூரக்கல்வி
உன் கண்களென்னும்
விசைப்பலகையில்
கன்ட்ரோல் பி தொடுகிறாய்
என் இதயமென்னும்
ஏ 4 ஷீட்டில்
கவிதைகளாகப் பொலிகிறது
ஏறக்குறைய
மயக்க நிலையிலிருந்தன
தொகுப்பிலிருந்த கவிதைகள்
நீ உரக்க வாசித்த போது
குளுக்கோஸ் ஏறியது
கவிதைகளுக்கு மட்டுமல்ல
எழுதிய எனக்கும்தான்
உன் குறுகுறுப் பார்வையில்
என் இதயத்தின் திசுக்கள்
சுறுசுறுப்படைவது
அனாடமி அதிசயம்
அருகில் வரும்போது
நரம்பு மண்டலம் நடுங்குகிறதே
அதற்குப் பெயர்தான் காதலா?
பரிசோதனை முடிவில்
கரோனா நெகடிவ்
காதல் பாசிட்டிவ்

— வில்லியம்ஸ்

Image

உலக புத்தக தினத்தையொட்டி பாரதி புத்தகாலயம், புதிய கோணம், இளையோர் இலக்கியம் மற்றும் புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியிட்டுள்ள அனைத்து நூல்களுக்கு 25% சிறப்புக் கழிவு உண்டு. (23.04.2021 – 05.05.2021 வரை மட்டும்)