Wire-tailed Swallow: Name Telling Birds Series Article by V Kirubhanandhini. பெயர் சொல்லும் பறவை 18 - கம்பிவால் தகைவிலான் Wire-tailed Swallow



கம்பிவால் தகைவிலான்

காற்றைக்கிழித்துப் பறந்துகொண்டே கண்ணுக்கு புலப்படாத சிறு பூச்சிகளை பிடித்து உண்ணும் இதன் மொத்த நீளம் 14 சென்டிமீட்டர், ஆனால் வால் மட்டும் 10 சென்டிமீட்டர் என்பதால் ஆங்கிலத்தில் இதனை Wire-tailed Swallow என்றும் தமிழில் கம்பிவால் தகைவிலான் என்றும் அழைக்கிறோம்.

Wire-tailed Swallow: Name Telling Birds Series Article by V Kirubhanandhini. பெயர் சொல்லும் பறவை 18 - கம்பிவால் தகைவிலான் Wire-tailed Swallow
Hirundo-smithii Image Credit: birdsofindia

சவுத் ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவின் தென் பகுதிகளில் காணப்படுகிறது. தமிழ்நாட்டில் குளிர்காலத்தில் பரவலாக காணப்படும். குறிப்பாக பிச்சாவரம் சதுப்புநிலம், நீலகிரி ஆகிய பகுதிகளில் பெருமளவில் காணலாம்.

கம்பிவால் தகைவிலான் வடக்கில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாக்கிஸ்தானிலும் இது தெற்கில் நீலகிரியில் மட்டும் இனப்பெருக்கம் செய்வதான குறிப்பு உள்ளது. நீர் நிலைகளுக்கு அருகில் சேற்றை சேகரித்து குடுவை போன்று வடிவமைத்து அதனுள் வேர்கள், முடிகள், இலைகள், கூழாங்கற்கள் போன்ற பொருட்களை நிரப்பி ஆண் பெண் இரண்டும் சேர்ந்து கூடுகள் கட்டுகின்றன. மூன்று அல்லது நான்கு முட்டைகள் இடுகின்றன.

களஆய்விற்கான பயணத்தில் 31 வயதிலேயே உயிரிழந்த நார்வே நாட்டை சார்ந்த தாவர சூழலியல் அறிஞர் கிறிஸ்டியன் சுமித் அவர்களின் பெயரால் smith அறிவியல் பெயரில் Hirundo-smithii என்று அழைக்கப்படுகிறது. கிறிஸ்டன் ஸ்மித் 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பகால நார்வே மருத்துவர், பொருளாதார நிபுணர் மற்றும் இயற்கை ஆர்வலர், குறிப்பாக தாவரவியலாளர். ஸ்மித் நோர்வேயின் டிரம்மனில் உள்ள ஸ்கோஜரில் பிறந்தார். பேராசிரியர் மார்ட்டின் வால் கீழ் கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் மற்றும் தாவரவியல் பயின்றார். ஜென்ஸ் வில்கன் ஹார்னெமனுடன் சேர்ந்து, நார்வேயின் பெரும்பகுதிகளில் பயணம் செய்தார் மற்றும் தாவரவியல் ஆய்வுகளையும் மேற்கொண்டார், ஜோகிம் ஃபிரடெரிக் ஸ்கோவ் மற்றும் மோர்டன் வோர்ம்ஸ்கோல்ட் ஆகியோரும் பயணத்தில் இணைந்தனர்.

Wire-tailed Swallow: Name Telling Birds Series Article by V Kirubhanandhini. பெயர் சொல்லும் பறவை 18 - கம்பிவால் தகைவிலான் Wire-tailed Swallow
கிறிஸ்டன் ஸ்மித் (17 அக்டோபர் 1785 – 22 செப்டம்பர் 1816) Image credit : digitaltmuseum

ஸ்மித் 1808 இல், பட்டம் பெற்று நார்வேயில் மருத்துவம் செய்யத் தொடங்கினார். கிறிஸ்டியானியாவில் புதிதாக நிறுவப்பட்ட ராயல் ஃப்ரெட்ரிக் பல்கலைக்கழகத்தில் தேசிய பொருளாதாரம் மற்றும் தாவரவியல் பேராசிரியராக 1814 ஆம் ஆண்டில், நியமிக்கப்பட்டார். இருப்பினும், ஐரோப்பாவில் தாவரவியல் பூங்காக்களின் வளர்ச்சிக்கும் தொடர்புகளை ஏற்படுத்துவதற்கும் அவர் வெளிநாட்டுப் பயணங்களைத் தொடங்கினார்.

அவரது முதல் பயணம் அவரை ஸ்காட்லாந்துக்கும் அங்கிருந்து லண்டனுக்கும் அழைத்துச் சென்றது, அங்கு அவர் பிரஷ்ய புவியியலாளர் லியோபோல்ட் வான் புச்சை சந்தித்தார். புச் எரிமலை கேனரி தீவுகள் மற்றும் மடீராவுக்குச் செல்லத் திட்டமிட்டார், மேலும் அனுபவமிக்க விஞ்ஞானியுடன் ஒரு பயணத்தில் பங்கேற்கும் வாய்ப்பை ஸ்மித் ஆவலுடன் பயன்படுத்திக் கொண்டார். இருவரும் பயணத்தை 1815 இல் தொடங்கினார்கள். அந்த ஆண்டு டிசம்பர் 8 அன்று அவர்கள் போர்ட்ஸ்மவுத் திரும்பினர், ஸ்மித் 600 வகையான தாவரங்களை கொண்டு வந்தார், அதில் சுமார் 50 வகை அறிவியலில் புதியவை. ஸ்மித்தின் புதிய இனங்களில் மிகவும் பிரபலமானவை அநேகமாக பைனஸ் கேனாரென்சிஸ், கேனரி தீவு பைன் ஆகும்.

புதிய தாவர இனங்களைக் கண்டுபிடித்ததோடு, புச்சில் இருந்து புவியியலைக் கற்றுக்கொண்ட ஸ்மித்தை, லண்டன் ராயல் சொசைட்டி அணுகியது, காங்கோ நதிக்கு மேற்கத்திய நைஜர் பேசின்களுடன் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்பதைத் தீர்மானிக்க கேப்டன் ஜேம்ஸ் ஹிங்ஸ்டன் டக்கியின் கீழ் ஒரு அறிவியல் பயணத்தில் பங்கேற்கச் சொன்னார். மற்றும் மத்திய ஆப்பிரிக்கா பயணத்தின் தாவரவியலாளர் மற்றும் புவியியலாளராக ஸ்மித் செயல்பட்டார். அவருக்கு உதவியாளராக டேவிட் லாக்ஹார்ட் இருந்தார்.

காங்கோ பயணம் பிப்ரவரி 1816 இல் தொடக்கத்தில் இருந்து மோசமாக சென்றது. நீராவி படகாக கட்டப்பட்ட “எச்எம்எஸ் காங்கோ” என்ற பயணக்கப்பலைப் பயன்படுத்தி ஆற்றில் பயணம் செய்வது தான் இயல்பு, இது இன்னும் ஆரம்ப நிலையில் இருந்தது. கப்பல் வழக்கமான பாய்மரங்களில் பொருத்தப்பட்டிருந்தாலும், கனமான கட்டுமானம் அதை தண்ணீரில் ஆழமாக உட்கார வைத்தது. அதனுடன் இணைந்த இலகுவான கப்பலான “டோரோதி” பயன்படுத்தப்பட்டது.

Wire-tailed Swallow: Name Telling Birds Series Article by V Kirubhanandhini. பெயர் சொல்லும் பறவை 18 - கம்பிவால் தகைவிலான் Wire-tailed Swallow
இறுதியாக பயணம் செய்த கப்பல் Image Credit: omnia

ஆனால் 160 கிமீ உள்நாட்டு வேகத்தில் நிறுத்தப்பட்டதால், கொங்கோ வழியாக mosquito-infested swamps என்ற சதுப்பு நில பகுதி வரை நடந்து சென்று ஆய்வுகளை மேற்கொண்டனர்

இந்த பயணம் ஆற்றில் 450 கிலோமீட்டர் வரை செல்ல முடிந்தது அதன் பின்னர் உணவு பற்றாக்குறை, அங்கிருந்த ஒரு சில மனிதர்களால் ஏற்பட்ட பிரச்னைகள் மற்றும் வெப்பமண்டல காய்ச்சல்கள் ஆகியவை தேடிசென்றவைகளை கண்டுபிடிக்காமலேயே பயணத்திலிருந்து திரும்பினர். ஆற்றில் கீழ் நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்த பொழுது வழியில், வெப்பமண்டல காய்ச்சல் ஸ்மித் அவர்களையும் தாக்கியதில் இறந்தே விட்டார். அப்பொழுது அவரது வயது 31.

கப்பலில் பயணித்த விஞ்ஞானிகள் மற்றும் கேப்டன் உட்பட 56 உறுப்பினர்களில் 18 பேர் இறந்தனர். அதில் பிழைத்த ஜோசப் கான்ராட் என்பவர் பல வருடங்களுக்கு பிறகு பயண அனுபவங்களில் உத்வேகம் அடைந்து அனுபவங்களையும், துன்பங்களையும் எழுதி Hear of Darkness என்ற புத்தகத்தை வெளியிட்டார்.

காய்ச்சலுக்கு முன்பு, ஸ்மித்தின் நாட்குறிப்பு மற்றும் தாவர மாதிரிகள் லண்டனுக்கு அனுப்பப்படுவதை கேப்டன் டக்கி உறுதி செய்தார். இச் செய்தியை படிக்கும் பொழுது இன்றைக்கு இருக்கும் மனிதர்களை ஒப்பிட்டு பார்த்தேன். என்னை மிகவும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. கப்பலின் கேப்டன் அப்பயணத்தின் முக்கியத்துவத்தை அறிந்துள்ளார், இவர்கள் சேகரித்த இயற்கை பற்றிய அறிவியல் தகவல்களின் பயனர்களை உணர்ந்து அனுப்ப வேண்டிய இடங்களுக்கு சரியாக அனுப்பி வைத்துள்ளார்.

இவர்களுடைய உழைப்பு வீண் போகவில்லை. பயணத்திலிருந்து அவரது சேகரிப்பில் 620 இனங்கள் இருந்தன, அவற்றில் 250 புதியவை என்று நிரூபிக்கப்பட்டன. அவர் விட்டுச் சென்ற பல நூல்கள் பின்னர் அவரது நண்பர் மார்ட்டின் ரிச்சர்ட் ஃப்ளோரால் வெளியிடப்பட்டன. கிரிஸ்டியா ஸ்மிதி என்ற பாம்பின் இனமும் கிறிஸ்டன் ஸ்மித்தின் நினைவாக பெயரிடப்பட்டது தான்.

நேற்று இவருடைய 234 ஆவது பிறந்தநாளில் இவரை பற்றி எழுதுவதில் மகிழ்ச்சியாக இருந்தாலும் இத்தனை பேர்கள் வாழ்க்கையையே இழந்து நமக்கு கொடுத்து சென்ற அறிவியல் தகவல்களை வைத்து படித்து பட்டங்கள் பெற்று சுயநல வாழ்க்கை வாழ்வதோடு மட்டுமில்லாமல் மிச்சம் மீதி இருக்கும் இயற்கையையும் அடுத்த தலைமுறைக்கு கூட வேண்டாம் நமது எதிர்காலத்திற்கே கூட விட்டு வைக்காமல் அழித்து கொண்டிருக்கிறோம் என்பது துயரமாகவே உள்ளது.

தரவுகள்

https://www.wikitree.com/wiki/Smith-203095
https://web.archive.org/web/20031229090451/http://humboldt.mpiwg-berlin.mpg.de/10b.sunding.htm
http://indianbirds.in/pdfs/IB4.1_SandilyanETAL_Kodiyampalayam.pdf

முந்தைய தொடரை வாசிக்க: 

பெயர் சொல்லும் பறவைகள் – முனைவர். வெ. கிருபாநந்தினி

பெயர் சொல்லும் பறவைகள் 2: ரிச்சார்டு நெட்டைக்காலி – முனைவர். வெ. கிருபாநந்தினி

பெயர் சொல்லும் பறவைகள் 3: பச்சைக்கிளி – முனைவர். வெ. கிருபாநந்தினி

பெயர் சொல்லும் பறவைகள் 4 (Green Cheeked Parakeet) – முனைவர். வெ. கிருபாநந்தினி

பெயர் சொல்லும் பறவைகள் 5 – லோட்டன் தேன்சிட்டு (Loten’s Sunbird) | முனைவர். வெ. கிருபாநந்தினி

பெயர் சொல்லும் பறவைகள் 6 – செட்டிகதிர்க்குருவி | முனைவர். வெ. கிருபாநந்தினி

பெயர் சொல்லும் பறவைகள் 7 – Yellow-eyed Pigeon | முனைவர். வெ. கிருபாநந்தினி

பெயர் சொல்லும் பறவைகள் 8 – Jerdon’s Nghtjar (பக்கி) | முனைவர். வெ. கிருபாநந்தினி

பெயர் சொல்லும் பறவைகள் 9 – நீலகிரி காட்டுப்புறா | முனைவர். வெ. கிருபாநந்தினி

பெயர் சொல்லும் பறவைகள் 10 – காட்டுக்கோழி | முனைவர். வெ. கிருபாநந்தினி

பெயர் சொல்லும் பறவைகள் 11 – பல்லாஸ் மீன் கழுகு | முனைவர். வெ. கிருபாநந்தினி

பெயர் சொல்லும் பறவைகள் 12 – காட்டுப் புள்ளிச் சிறு ஆந்தை (Forest owlet) | முனைவர். வெ. கிருபாநந்தினி

பெயர் சொல்லும் பறவைகள் 13 – பூனைப் பருந்து (Harrier) | முனைவர். வெ. கிருபாநந்தினி

பெயர் சொல்லும் பறவைகள் 14 – பழனி சிலம்பன் (Montecincla fairbanki) | முனைவர். வெ. கிருபாநந்தினி

பெயர் சொல்லும் பறவைகள் 15 – நாரை (Ardeola grayii) | முனைவர். வெ. கிருபாநந்தினி

பெயர் சொல்லும் பறவை 16 – ஆற்று ஆள்காட்டி (Vanellus duvaucelii) | முனைவர். வெ. கிருபாநந்தினி

பெயர் சொல்லும் பறவை 17 – காட்டுப் பஞ்சுருட்டான் (Blue-bearded Bee-eater) | முனைவர். வெ. கிருபாநந்தினி

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *