மார்ச் 8 மகளிர் தின சிறப்பு கட்டுரை
கற்கால பெண்கள், சங்க கால பெண்கள், நவீன இக்கால பெண்கள்
கற்கால பெண்கள்
பூமித் தாயாக போற்றப்படுபவள் பெண், புவியைப் பெண்ணாகவும் பொறுமைக்கு இலக்கணமானவளாகவும் காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறது. கற்காலம் தொட்டே பெண் என்பவள் வீரத்திலும் சிறந்து விளங்கினாள் என்பதில் ஐயம் ஏதுமில்லை.
குழந்தை பெற்ற தாய் மட்டுமே குகைகளில் சிசுக்களை கவனிப்பதற்கும் அவர்களை சீராட்டி பாராட்டி வளர்ப்பதிலும் கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டாள், மற்ற பெண்கள் ஆண்களுக்கு சரி நிகராக வேட்டைக்குச் சென்று உணவு சேகரிப்பதில் தங்களை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்டனர். குகைகளில் வாழ்ந்த ஆரம்ப காலம் முதல், பெண், குழந்தைகளை பேணி வளர்ப்பதில் திறமையானவள் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
பிள்ளைகள் எத்தனை தொல்லைகள் தந்தாலும் அவர்களை மடக்கி, அடக்கி பத்திரமாக பார்த்துக் கொள்ளும் பாங்கு நிறைந்தவளாக பெண் இருந்திருக்கிறாள் என்பது பல புத்தகங்களை படிப்பதில் இருந்து தெரிய வருகிறது .வேட்டைக்குச் செல்லும் பெண்கள் உடல் வலிமை நிறைந்தவர்களாக காணப்பட்டனர் அன்று, இன்றும், நாம் மல்யுத்த வீராங்கனைகள், பளுதூக்கும் பெண் வீராங்கனைகள் விளையாட்டுத்துறைகளில் அத்தனையிலும் பெண்கள் தங்கள் திறமைகளை நிரூபித்து வருவதை காணலாம். பெண் என்றாலே மனதால் வலிமை அதிகம் உடையவள் என்ற அசைக்க முடியாத முத்திரையை விட்டுத் தராமல் பெண்கள் வைத்துள்ளனர். ஒரு பெண் மனிதத் தன்மையுடன், மனிதனுக்குரிய இலக்கணத்துடன் வளர்ந்தாளானால் அவளின் வழி வரும் குழந்தைகளும் அதையே பின்பற்றுகின்றனர்.
சங்க கால பெண்கள்
படிப்பில் எத்தனை சிறந்தவர்களாக இருந்தனர் என்பதற்கு இன்றளவும் ஔவையார் தந்த பாடல்களே சான்று வரப்புயர என அரசனை ஒரு வார்த்தையில் புகழ்ந்து பாடுவதிலி ருந்து, அரசன், மக்கள், சமுதாய உயர்வு பற்றிய சிறந்த கண்ணோட்டத்தை ஒரு பெண்ணால் மட்டுமே கணிக்க முடியும்.
என்பதை புரிந்து கொள்ளலாம்.
அண்டை நாட்டு மன்னர்களுடன் ஒற்றுமையாய் இருப்பதற்கு அரசர்களுக்கு அறிவு புகட்டுவதிலாகட்டும் வான்குருவியின் கூடு வல்லரக்குத் தொல்கரையான் தேன்சிலம்பி யாவர்க்குஞ் செய்யரி தால் யாம்பெரிதும் வல்லோமே என்று வலிமை சொல வேண்டாம் காண் எல்லோர்க்கும் ஒவ்வொன்று எளிது இந்தப் புல்லிய புலனங்களுக்கும் சிறப்பானதொரு இடத்தை கொடுக்கும் உன்னத மனது பெண்களுக்கே உரியது. வான்குருவி ,வல்லரசு, கரையான், சிலம்பி இவர்களைப் புகழ்ந்து அனைவரும் ஒரு வகையில் உயர்ந்தவர்களே என்றுசொல்லும் மனப்பக்குவம், விட்டுக் கொடுக்கும் தன்மை போன்றவை பெண்களுக்குரிய சிறப்பம்சங்களாக விளங்குகின்றன. “சாதி இரண்டைத் தவிர வேறில்லை” நீதி வழுவாமல் ” இட்டார் பெரியோர் “இடாதார் இழிகுலத்தார்” என்று கூறும் தைரியமும், வீரமும் அன்றைய சங்க கால பெண்கள் அறிந்திருந்தனர் என்பதற்கு இந்த பாடல்கள் சான்றாகின்றன. தாயிற் சிறந்த கடவுள் இல்லை. உடல் அளவிலும், மனதளவிலும் குறைபாடுகள் கொண்ட குழந்தைகளை கவனிக்கும் பொறுப்பை தாய்மார்கள் எவ்வளவு சிறப்பாக ஏற்றுக் கொள்கிறார்கள் என்பது உலகம் அறிந்ததே .தாயின் வயிறு கர்ப்ப கிரகம்.
எத்தனை கோயில்கள் சென்று வழிபட்டாலும் தாயின் வயிறு, கருவறை. கடவுள் உறைந்து கிடக்கும் இடமாகவும் அந்த பெண் தெய்வத்தை பாதுகாப்பதன் மூலம் அந்த குலக்கொடி வேரூன்றி, துளிர்விட்டு, ஆலமரம் ஆகி, விழுதுகள் ஊன்றி, தன் வேர் பரப்பி நல்ல சமுதாயம் உருவாக வழி வகுக்கும் என்பதை இரண்டு வரிகளில் கூறிச் சென்ற அவ்வை போற்றப்படக்கூடியவரே .
முத்துலட்சுமி ரெட்டி (Muthulakshmi Reddy)
இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி போன்றோரின் விடாமுயற்சி மிகுந்த பெண்கள் ஏராளம் ஏராளம். மருத்துவ படிப்பு முடிக்கும் காலகட்டம் வரை தடங்கல்கள் நிறைந்த வகுப்புகளில் படித்து முடித்து பட்டம் பெறுவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. எத்தனை மன வலிமை கொண்ட பெண்ணாக மருத்துவ படிப்பில் ஜெயித்து காட்டினாள் என்பதை அவரை படித்து தெரிந்து கொள்ளலாம்.
சாவித்திரிபாய் புலே (Savitribai Phule)
படிக்காத ஒரு பெண் தன் கணவனின் மூலம் படிக்க தெரிந்து கொள்கிறாள், அக்கம் பக்கம் இருக்கும் பெண்களின் ஏளன நிலையை அறிந்து அவர்களுக்கு கல்வி அறிவை புகட்ட நாளொரு வண்ணம், கற்களால் தாக்குதல், விலங்குகளின் கழிவுகளால் தாக்குதல், மனித கழிவுகளால் தாக்குதல் அனைத்தையும் தாங்கி தான் எடுத்த முடிவான, ஏழை பெண்களுக்கு கல்வி கற்றுத் தரும் பொறுப்பை விட்டு விடாமல் ,அத்தனை துன்பங்களையும் எதிர்கொண்டு சாதித்துக் காட்டிய மன வலிமையை என்னவென்று போற்றலாம் .
பெண் ஆசிரியர்கள்
மீண்டும் கற்காலம் போல் இன்றைய சமுதாயம் பெண் ஆசிரியர்களால் , அதிகம் நிறைந்ததாக உள்ளது. மாணவச் செல்வங்களுக்கு பாடத்துடன் வாழ்வியலையும், கனிவுடன் கற்றுத் தரும் கள்ளமில்லா உள்ளம் கொண்டவர்களாக பெண் ஆசிரியர்கள் உள்ளார்கள் என்பதில் ஐயமில்லை. புன்னகை மாறாத முகமும் மாணவர்களின் உள்ளத்தை படிக்கும், ஊடுருவிச் சென்று அரவணைக்கும் திறனும் பெண்களுக்கே உரிய கலையாகும். பெண்கள் ஏற்றுக் கொள்ளும் ஒவ்வொரு செயலும் செவ்வனே முடிக்கப்படுகிறது என்பதற்கு அதிகப்படியான பெண்கள் வேலைக்கு செல்வதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.
என் தொப்புள் கொடியின் வேரை எனக்கு மிகவும் பிடிக்கும், அவளைப் போற்றி இதை கூறுவதில் பெருமிதம் கொள்கிறேன். என்னை இந்த உலகுக்கு தந்தவள். நிமிர்ந்த நன்னடை நேர் கொண்ட பார்வையில் செயல்படு என்று உலகை கையாளும் விதங்களை கற்றுத் தந்தவள் .இளம் வயதில், எந்த ஆணையும் தொட்டு பேசாதே, ஆண் பெண் இருவருமே கற்பில் சிறந்து விளங்க வேண்டும் என பாடம் சொல்லித் தந்தவள். மனம் வித்தியாசப்பட்டாலே களங்கம் என்பதை எட்டவைத்தவள். பல கதைகள் கூறி பண்பை வளர்த்தவள். என்னை உலகுக்கு தந்த அந்தப் பெண்ணை போற்றுவதில் பெருமிதம் கொள்கிறேன்.
உளவியல் மருத்துவர் ஷாலினி (Psychiatrist Dr.Shalini)
அவர்களின் ஆழ்ந்த கருத்துகள், அவரின் கல்வி புலமை,மனிதரை அலசி ஆராயும் அறிவுக்கூர்மை, பழந்தமிழ் இலக்கியம் முதல், தன்னை எக்காலத்துக்கும் ஈடு கொடுக்கும் பெண்ணாக அவர் வலம் வரும் திறமை ஆச்சரியப்பட செய்கிறது .பெண்– இதுதான் உலகத்தின், உயிரிகளின் தொடக்கம் . பெண் இல்லை என்றால் இவ்வுலகத்தில் உயிர்கள் இல்லை. இதுதான் இயற்கை நியதி .எந்த உயிரினத்திலும் அந்த உயிரினம் நிலைத்து நிற்க, அதிகமான பெண் உயிரியும் மிகக் குறைந்த ஆணுமே போதுமானது. எடுத்துக்காட்டாக பத்து பெண்கள் ஒரு ஆணை கொண்டு பத்து குழந்தைகளை பெற இயலும், ஆனால் பத்து ஆண்கள் ஒரு பெண்ண கொண்டு ஒரு குழந்தை தான் பெற முடியும் இதைக் கொண்டே நாம் கூற முடியும் உலகத்தில் பெண் எவ்வளவு முக்கியமானவள் என்று .மேலும் நாம் வாழும் இச்சமூகம் கூட பெண் வழி சமூகம் .
எந்த குடும்பத்திலும் குடும்ப தலைவனாக ஆண் இருந்தாலும் அவன் செய்யும் செயல்களில் பெரும்பான்மையானது அகுடும்ப தலைவியின் விருப்பத்திற்கு உரியது இதை புரிந்து கொண்டு நம் குடும்ப உறவுகளையே ஆராய்வோம். நம் குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான உறவு பெற்றோருக்கு அடுத்து வரும் உறவான தாய் வழி சொந்தங்களான மாமன் உறவே, இதிலிருந்து தெரிந்து கொள்வது இச்சமூகம் பெண் சமூகமே என்று. எந்த ஒரு வீட்டிலும் குடும்ப தலைவன் எவ்வளவு தான் தேர்ந்தவனாக இருந்தாலும் அக்குடும்பத்தை பொறுப்பாகவும், மரியாதைக்குரியதாகவும், ஒழுக்கத்திற்கு உரியதாகவும், பொறுப்புள்ள பிள்ளைகளை உருவாக்குவதிலும் ,அக்குடும்பப் பெண்ணே பெரும்பான்மை வகிக்கிறாள்.
குடும்பத்தின் வெற்றிக்கும் முன்னோடியாக அமைகிறாள். இவைகளில் அனைத்திலும் நாம் அறிவது உயிரினமாக இருந்தாலும் சரி அல்லது மனித இனமாக இருந்தாலும் சரி பெண் இல்லை என்றால் அந்த இனமே இல்லை எனலாம். இன்றைய காலகட்டத்தில் எல்லா துறைகளிலும் புகுந்து விளையாடும் பெண்கள் ஆட்டோ ஓட்டுவது, ரயில், பேருந்து, டிரக் டிரைவர், விமானம், கப்பலில் பெண்கள் குழு மட்டுமே இயக்குவது, ஆகாயத்தில் வலம் வருவது, பெண் இல்லாத இடங்கள் எதுவென்று கூற முடியுமா? அதிகபட்சமாக பெண்கள் வீட்டில் இருப்பதற்கு விரும்புவதில்லை, ஏதாவது ஒரு தொழிலில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு குடும்ப வருமானத்தை ஈட்டி அதிகப்படுத்துவதில் கவனம் செலுத்தவே விரும்புகின்றனர். இன்றைய படி, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் அதிக கவனம் செலுத்தாமல் நாட்டு நடப்பையும் அரசியலில் ஈடுபாடும் காட்ட தொடங்கியுள்ளனர் பெண்கள் என்பதில் ஐயமில்லை.
உலக நாடுகள்பெண்களை தன்னலம் கருதாத அடைத்து வைக்காமல் இருப்பதன் மூலம் எல்லா மக்களும் சுபிட்சமாக வாழும் நிலைக்கு பெண்களே காரணமாக அமைவார்கள் என்பதில் துளியும் சந்தேகமில்லை. பெண்களின் மனப்போக்கு உலகில் உள்ள உயிர்கள் அனைத்தும் சுதந்திரமாக வாழவும் அடக்குமுறைக்கு உள்ளாகாமல் இருக்க வேண்டும் என்பதே.
கட்டுரையாளர் :
மனோகரி குருநாதன்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.