ஆடவனும் காரிகையே…

கரு சுமந்தவள் தாயாக இருக்கலாம்..
வளர்ந்த பின்னும்
அவள் பிள்ளையும் சேர்த்து மனதில் சுமப்பவன் அப்பன்.

சோறாக்கி அன்பு ஊட்டி இருக்கலாம் அக்காள்…
தவறு செய்யும் போது குட்டு வைத்து கட்டிக் கொள்பவன் சோதரன்..

பக்கம் பக்கமாக காதல் கசியலாம்..
புன்னகைத் துளியின் அதிர்வற்ற மௌனத்தில் ஆத்மார்த்த
காதல் சொல்பவன் காதலன் ..

பின்னாலிருந்து ஏற்றிவிடும் அன்புத் தோழியை விட
காயப்பட்ட சிறகுகளுக்கு ஆறுதல் பூசி சாய தோள் தருவது தோழன்…

அவதிப்படும் முதிர் தாய்க்காக கண்ணீர் விடும் தொலை தூரத்து மகள்
வேதனை கனத்தை மனதில் சுமந்து கண்ணீராகக் கூட சிந்தி விடாது நோய் களைய பாடுபடுபவன் அன்பு மகன்..

பெண்மைக்குள் ஊடாடும் சிவம் பனிமலை போல் என்றால்
ஆண்மைக்குள் ஒளிந்திருக்கும் சக்தி ஜீவநதியை போல…

மகளிருக்கான தினத்தில் பெண்களின் உயர்வுக்காக துணை நிற்கும் ஆண்களையும் கொண்டாடுவோம்..

கவிதை எழுதியவர்: 

து.பா.பரமேஸ்வரி
சென்னை.


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 One thought on “மகளிர் தின சிறப்பு கவிதை: ஆடவனும் காரிகையே…”
  1. அருமையான கவிதை.
    பெண்களுக்கு துணையாக இருக்கும் ஆண்கள் கொண்ட பட வேண்டியவர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *