பெண்
வெள்ளைத்தாளும் ஒரு நிமிடம் பலவர்ணம் கொண்டது_ஏனோ “பெண் “ என்ற தலைப்பை பார்த்ததும்…
ஆரவாரம் இல்லாமல் வந்து விட்டோம் அழகான கருவறையின் முதல் வீட்டை விட்டு
மழலையாய்த் தவழ்ந்தோம், பேதையாய்ப் பள்ளிக்குச் சென்றோம்,பெதும்பையாய் வளர்ந்து விட்டோம்…
சற்று பொறுங்கள்,சட்டப் படிப்போ, பட்டப் படிப்போ போராடத் தயாராக வேண்டாமா???_
கிண்டலும், கேலியும், சீண்டலும் துரத்தும்
அரசு உத்தியோகமோ ? இல்லை அலுவலக உத்தியோகமோ ? போராட்டம் தொடங்கிவிடும் அல்லவா…
ஓய்வேயில்லை ஓட்டப்பந்தயத்தில் இறக்கி விட்டீர்கள்
வீராங்கனையாக அல்ல ஆணின் துணையாக …
எங்கள் பதவியும் மாறியது, பதற்றமும் கூடியது.
பத்துமாத வலியையும் பார்த்து விட்டோம்
பலதரப்பட்ட விமர்சனங்களும் கேட்டுவிட்டோம்
போதும் போதும் விமர்சிப்பவர்களே!!
நாளைய தலைப்பாகவும் நாங்கள் மாறுவோம்
நாட்டிற்கே தலைவியாகவும் மகுடம் சூடுவோம்….
வசை பாடியவர்களெல்லாம் வாழ்த்திப்பாடும் காலம் வெகுதொலைவில் இல்லை இங்கு யார் சொல்ல வேண்டும் எங்களின் எல்லை….
நித்தம் ஒரு சப்தம் கேட்கும் சப்தம் எல்லாம் சரித்திரமாகும்!
கவிதை எழுதியவர்:
ரசிகா
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
நாளைய தலைப்பு
நாட்டிற்கு தலைவி
சிறப்பான வரிகள் வாழ்த்துக்கள்