ஆகஸ்ட் 1 – 7 : உலக தாய்ப்பால் வாரம்
பரபரப்பாக எந்திர வாழ்க்கைக்கு நகர்ந்து கொண்டிருக்கும் நம் இந்திய மக்களுக்கிடையில் முறையான தாய்ப்பால் ஊட்டுதல் தாய், சேய் என இருவருக்கும் நல்லது என்ற விழிப்புணர்வு பெருபான்மையாக அனைவரிடத்திலும் சென்று அடைத்திருக்கிறதா? என்பது சந்தேகம்தான். ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதத்தில் முதல் வாரம் உலக தாய்ப்பால் வாரமாக கொண்டாடப்படுவது எல்லோருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தினமும் புதுப்புது தினங்களை உருவாக்கி கொண்டாடி தீர்க்கும் இன்றைய புது தலைமுறைகளுக்கு உயிரின் அடித்தளமாக விளங்கும், தாய்ப்பால் ஊட்டுதல் ஊக்குவிக்கும் வகையிலான உலக தாய்பால் வாரத்தை பற்றி தெரிந்து இருக்க வாய்ப்பில்லை.
இன்று முதல் நமது பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சென்றால் அங்கு உள்ள சுவர்களில் எழுதியுள்ள விழிப்புணர்வு விளம்பரங்களை அவசியம் கவனியுங்கள். அரசு மருத்துவமனைகளின் குழந்தை பிரிவில் உள்ள சுவர்களில் எல்லாம் இதைப் பற்றிய படங்கள் இடம்பெற்றிருக்கும். பிரசவ பிரிவில் உள்ள அனைத்து தாய்மார்களுக்குமே தாய்ப்பாலின் முக்கியத்தை பற்றிய விழிப்புணர்வு ஆலோசனைகள் அங்குள்ள செவிலியர்களோ அல்லது மருத்துவர்களோ கட்டாயமாக கொடுக்கின்றார்கள். ஆனால் நாம் இவையை கவனிக்காமல் சென்று இருப்போம்.
மக்களிடையில் தாய்ப்பால் ஊட்டுதலின் முக்கியத்துவத்தை கொண்டு சேர்ப்பதற்காக உலக சுகாதார அமைப்பும் (WHO) மற்றும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியமும் (UNICEF) உலக தாய்ப்பால் ஊட்டும் நடவடிக்கை காண உலக கூட்டணி (WABA) இணைந்து 1992 ஆம் ஆண்டில் தாய்ப்பால் ஊட்டுதல் வாரம் முதல் முதலில் ஓவ்வொரு ஆண்டும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இன்று 150 க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் இந்த தினத்தை அனுசரித்து வருகின்றனர். பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டும் உலக நாடுகளை கணக்கெடுத்து பார்த்தால், அதில் சிரோட்டியா, ருவாண்டா, ஸ்ரீலங்கா போன்ற நாடுகள் முன்னிலை பட்டியலில் வருகின்றனர். ஆனால் நமது இந்தியாவோ 78வது இடத்தில் உள்ளது. மக்களுக்கிடையில் இன்னும் தாய்ப்பால் பற்றிய முக்கியத்துவம் சென்றடையவில்லை என்பதையே இது குறிக்கிறது.
குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டுதலுக்கான விழிப்புணர்விற்காக ஒரு வாரம் அனுசரிக்கப்பட வேண்டுமா? இதற்கு எதற்கு இவ்வளவு முக்கியத்துவம் என்று நீங்கள் யோசித்தால் தாய்ப்பாலின் மகத்துவம் பற்றியும், தாய்ப்பால் ஊட்டுதலால் கிடைக்கும் நன்மைகள் பற்றியும், மேலும் அதன் பின்னணியில் உள்ள அறிவியல் விவரங்களை பற்றி அறிய வேண்டும்.
குழந்தை கர்ப்பத்தில் இருக்கும் பொழுதே அதாவது 12 முதல் 16 வாரங்களியே பிறக்கப் போகும் குழந்தைக்கான தாய்ப்பால் உற்பத்தி செய்யும் வேலையை தாயின் உடலில் தொடங்கிவிடும். தாய்ப்பால் என்பது பிறந்த குழந்தைக்கான “உணவு” மட்டும் தானே என்று கூறி புறம்தள்ளிவிட்டு போக முடியாது. ஒரு குழந்தையை நீங்கள் சரியாக முறையில் பாலூட்டுகிறீர்கள் என்றால் அந்தக் குழந்தையின் ஆரோக்கியத்தை அவன்/அவள் வாழ்நாள் முழுவதுமாக கொடுக்கிறீர்கள் என்று அர்த்தமாகும். இதன் பொருள் ஒரு குழந்தையின் ஆரோக்கியத்தை முதல் தீர்மானிப்பது சரியான முறையில் உள்ள தாய்ப்பால் ஊட்டுதல் தான்.
குழந்தை பிறந்து ஒரு மணி நேரத்துக்குள் தாய்ப்பால் கொடுக்க ஆரம்பிக்க வேண்டும். குழந்தை பிறந்த முதல் ஒரு வாரத்தில் வெளிவரும் தாய்ப்பால் பழுப்பு நிறத்தில் இருக்கும் இதை சீமை பால் (colostrum) என்று அழைக்கப்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை தரும் ஆன்டிபாடி (Antibody) அதிக அளவில் நிறைந்துள்ளது. பத்து மாதம் வரை கருவறையில் வளர்ந்து வெளிவரும் குழந்தைக்கு நம் சுற்றுச்சூழல் புதிதாக இருக்கும். காரணம் அதுவரை அம்மாவின் கர்ப்பப்பையில் இருக்கும் பொது குழந்தைக்கு தேவையான சத்துக்கள் ரத்தம் வழியாக அம்மாவின் உடம்பிலிருந்து சென்று கொண்டிருந்தது. இது போலவே குழந்தையின் கழிவுகள் அம்மாவின் ரத்தம் வழியாகவே வெளியேறிக் கொண்டிருந்தது. குழந்தைக்கு தேவையான அனைத்தும் அம்மாவின் உடலின் உதைவியோடு குழந்தைக்கு சென்று கொண்டிருந்தது. குழந்தை கருவிலிருந்து வெளிவந்த பிறகு குழந்தையின் உடல் நம் சுற்றுச்சுழலுக்கு தகுந்தாற்போல் தனியாக செயல்பட போகிறது. ஆகையால் குழந்தையின் வளர்ச்சிக்கு வெளி உலகில் உள்ள நோய் கிருமிகளோடு போராடுவதற்கான நோய் எதிர்ப்பு சக்தியும் மற்றும் ஊட்டசத்தும் தேவை. இதற்கு தாய்பால் தவிர மாற்று ஏதுமில்லை.
குழந்தை பிறந்து ஆறு மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். தண்ணீர் கூட கொடுக்க தேவை இல்லை. காரணம் தாய்ப்பாலில் 88% நீர்ச்சத்து அடைக்கியிருக்கிறது .
தாய்ப்பாலில் உள்ள சத்துக்கள் :
நீர்ச்சத்து
புரதம்
கார்போ ஹைட்ரேட்
வைட்டமின் B6
இரும்புச்சத்து
கால்சியம்
விட்டமின்- D
மக்னீசியம்
வைட்டமின்-C
நார்ச்சத்து
பொட்டாசியம்
கொழுப்பு
குறைந்தது ஆறு முதல் ஏழு மாதம் வரை ஆவது தாய்ப்பால் கட்டாயம் கொடுத்திருக்க வேண்டும். இதன் அர்த்தம் ஆறு மாதங்களுக்குப் பிறகு தாய்ப்பால் நிறுத்தி விடலாம் என்று அல்ல. ஆறு மாதங்களுக்குப் பிறகு இணை உணவுகளை சேர்த்துக் கொடுக்க ஆரம்பிக்கிறோம். தாய்ப்பாலுடன் சேர்த்து உணவையும் அறிமுகப்படுத்தும் காலம் இது. இணை உணவுகளுடன் இரண்டு வருடங்கள் தாய்ப்பாலும் தொடர்ந்து குழந்தைக்கு கொடுக்க வேண்டும். இதுதான் சரியான முறையிலான தாய்ப்பால் ஊட்டுதல். தாய்ப்பால் ஊட்டச்சத்து அளிப்பதோடு மட்டுமல்ல தாய்க்கும் சேய்க்கும் இடையில் உள்ள ஒரு பந்தத்தையும் உருவாக்கிறது. தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைகளுக்கு மட்டும் நன்மை இல்லை தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கும் நன்மைகள் ஏராளம்.
தாய்ப்பால் கொடுக்கும் முறைகள் :
தாய்ப்பால் ஊட்டுதலின் மூலம் தாய்க்கு ஏற்படும் நன்மைகள் :
– மார்கமாக புற்று நோய்களை குறைகிறந்து .
-கபப்பை சம்பந்தப்பட்ட புட்டு நோய்களை தடுக்கிண்டது .
– மனம் மற்றும் ரத்த அழுத்தத்தை குறைகிறது .
– பிரசவித்து பிறகு தாய் உடலில் மாற்றத்தை திரும்ப பெற செய்கிறது.
கட்டுரையாளர் :
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.