நோய் கட்டுப்பாட்டு துறையின் உலக வித்தகர் ராஜ்பால் சிங் யாதவ் (𝐑𝐚𝐣𝐩𝐚𝐥 𝐒𝐢𝐧𝐠𝐡 𝐘𝐚𝐝𝐚𝐯)
தொடர் : 64 இன்றைய இந்திய விஞ்ஞானிகள் 100
ராஜ்பால் சிங் யாதவ் திசையன் சூழலியல் என்று அழைக்கப்படும் VECTOR ECOLOGY துறை சார்ந்த உலகம் அறிந்த விஞ்ஞானி ஆவார். வெப்ப மண்டல நோய்கள் குறித்த ஐ நா சபையின் உலக சுகாதார நிறுவனத்தின் ஆலோசனை விஞ்ஞானியாக பணிபுரிந்தார். பொதுவாக இந்த துறை முற்றிலும் புறக்கணிக்கப்பட்ட பொழுது ஜெனிவாவிலும் ஸ்விட்சர்லாந்தில்வும் நடந்த சர்வதேச மாநாடுகளில் மூன்றாம் உலக நாடுகளின் வெப்ப மண்டல நோய்களுக்கு ஐநா சபை பெரிய அளவில் உதவி செய்ய வேண்டும் என்று குரல் கொடுத்தவர் ராஜ்பால் சிங் யாதவ் அவர்கள்.
இந்தியாவின் தேசிய மலேரியா ஆராய்ச்சி நிறுவனம் NIMR மலேரியா கட்டுப்பாட்டுக்காக ராஜ்பால் சிங் யாதவ் அவர்களை தங்களுடைய ஆய்வின் முதன்மை விஞ்ஞானியாக இணைத்துக் கொண்டார்கள். NIMR ஆய்வு மையத்தில் வெக்டர் பியானோமிக்ஸ் என்னும் துறைகளில் மலேரியாலஜி தொடர்பான இவருடைய 28 ஆண்டு கால கடுமையான உழைப்பு இந்தியாவில் இருந்து மலேரியா நோயை முழுமையாக கட்டுப்படுத்த உதவியது.
ஒரு காலகட்டத்தில் உலகில் ஆண்டொன்றுக்கு மில்லியன் கணக்கான மக்களைக் காவு வாங்குகின்ற கொடிய நோயாக மலேரியா இருந்தது. மலேரியா கட்டுப்பாட்டுக்கான ஒருங்கிணைந்த அணுகுமுறைகளுக்கு முன்னோடியான மூன்று ஆய்வுக் கட்டுரைகளை டாக்டர் யாதவ் வெளியிட்டார். இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியப் பகுதிகளில் இருக்கும் மலேரியாவைப் பரப்புகின்ற கொசுக்களுக்கும் பிற இடங்களில் இருந்து பெறப்படுகின்றன கொசுக்களின் மாதிரிகளுக்கும் நிறைய வேற்றுமைகள் இருப்பதை அந்த குழு கண்டுபிடித்தது.
மலேரியா என்பது என்ன? இது கொசுக்களால் பரவுகின்ற ஒரு தொற்று நோய் ஆகும். மனிதனின் முதுகு எலும்புகளை இந்த நோய் பாதிக்கிறது மனித மலேரியா பொதுவாகக் காய்ச்சல் சோர்வு வாந்தி மற்றும் தலைவலி போன்ற அறிகுறிகளைக் கொண்டது ஆகும். கடுமையான சந்தர்ப்பங்களில் இது மஞ்சள் காமாலை நோயை ஏற்படுத்தும் பிறகு வலிப்பு ஏற்படும் மரணம் ஏற்படுவதற்குக் கொஞ்சம் நாட்களுக்கு முன் நோயாளி கோமா நிலையை அடைந்து விடுவார்.
மிகத் துரிதமாக செயல்பட்டால் ஒழிய இந்த நோயைக் குணப்படுத்துவது மிகக் கடினம். மலேரியாவைப் பரப்புகின்ற கொசுக்கள் அனோபிலிஸ் என்று அழைக்கப்படுகின்ற கொசுக்களில் ஒரு வகையைச் சேர்ந்தவை ஆணி கொசுக்கள் என்றும் சதுப்பு கொசுக்கள் என்றும் இவை அறியப்படுகின்றன. இது போன்ற கொசுக்கள் பிளாஸ்மோடியம் என்ற ஒட்டுண்ணினுடைய திசையன் விளைவுகள் ஆகும். இந்த கொசுக்கள் மனிதர்களுக்கு மட்டுமே மலேரியாவை ஏற்படுத்துவதில்லை மாறாக ஊர்வன இனத்தைச் சேர்ந்த விலங்குகளுக்கும் பாலூட்டிகளுக்கும் ஏன் பறவைகளுக்கும் கூட மலேரியாவைப் பரப்புகின்றன மனிதர்களுக்கு மிகவும் ஆபத்தான மலேரியா ஒட்டுண்ணியான பிளாஸ்மோடியம் ஃபால்சிபாரம் (Plasmodium falciparum) என்னும் வகையான மார்ஷ் கொசு உலகெங்கிலும் பரவியிருக்கும் ஒரு இனம்.
மலேரியா ஒட்டுண்ணி சிவப்பு ரத்த அணு உடன் இணைந்து மனிதனுக்குள் பாதிப்பை ஏற்படுத்துகிறது. உலகில் மலேரியா நோயைக் கண்டுபிடிப்பதற்கான ரத்தப் பரிசோதனை மிகவும் விலை உயர்ந்ததாக இருந்தது. ஆன்டிஜென் கண்டறியும் சோதனைகள் என்று அவை அழைக்கப்பட்டன. இந்தியாவில் இன்று மலேரியா நோய்க்கான அறிகுறிகளோடு வரும் ஒருவருக்கு ரத்த பரிசோதனை என்பது மிகமிக எளிய சாதனம் ஒன்றின் மூலம் நிகழ்த்தப்படுகிறது. இந்த சாதனத்தைக் கண்டுபிடித்து வழங்கியவர் டாக்டர் யாதவ் அவர்கள்.
மலேரியா எதிர்ப்பு மருந்துகள் அல்லது வெறுமனே ஆண்டி மலேரியல் மருந்துகள் என்பவை இன்னொரு முக்கியமான பிரச்சினை ஆகும் ஆய்வகத்தில் ஆண்டி பேராசிடிக் ரசாயன முறையில் இவற்றைத் தயாரிக்கிறார்கள். இந்தியாவில் அவற்றை பெரும்பாலும் இயற்கையாகவே தயாரிக்கிறார்கள். இதனால் இந்த மருந்துகளின் விலை இந்தியாவில் குறைவு. டாக்டர் யாதவ் அறிமுகம் செய்த முறை வித்தியாசமானது. இந்தியாவின் தேசிய மலேரியா தடுப்பு அமைப்பில் இரு வகையான மருந்துகளை அவர் அறிமுகம் செய்தார். ஒன்று சந்தேகத்திற்கு இடமான அல்லது உறுதிப்படுத்தப்பட்ட தொற்று உள்ளவர்களுக்கானது. இரண்டாவது நோய் சக்தி எதிர்ப்பு குறைவான அதே சமயத்தில் மலேரியா பரவும் பகுதிகளுக்குச் செல்பவர்கள் அங்கே வாழ்ந்தவர்கள் மலேரியா தடுப்பு என்கின்ற ஒன்றை மேற்கொள்கின்ற செயல்வீரர்கள் இவர்களுக்கானது.
மருத்துவ பூச்சியியல் வல்லுநரான டாக்டர் யாதவ் பொது சுகாதார பணியாளர்களுக்குப் பயிற்சி அளிப்பதில் முக்கிய பங்காற்றினார். இந்தியாவில் பொது சுகாதார அமைப்பு கட்டுமானம் என்பது மிக மிக அற்புதமான ஒரு விஷயம் ஆங்கிலேயர்களின் காலத்தில் உருவாக்கப்பட்ட இந்த பிரம்மாண்டமான அமைப்பைக் கட்டிக் காத்து இன்று வரையில் அதைப் பேணும் முக்கியமான தரவுகளை வழங்கிய பெருமை டாக்டர் யாதவை சேரும்.
டாக்டர் யாதவின் அடுத்த முக்கிய பங்களிப்பு டெங்குகாய்ச்சல் மற்றும் சிக்கன்குனியா வெடிப்புகளைக் கட்டுப்படுத்தும் குழுக்களுக்கு தலைமை தாங்கியது ஆகும் பூகம்பம் மற்றும் கனமழை காரணமாக பொது சுகாதார அவசர நிலைகள் பிறப்பிக்கப்பட்ட போதெல்லாம் இந்தியாவில் இந்த மருத்துவ அவசர நிலைகளைக் கண்காணிக்கும் குழுவில் தலைவராக இருந்து தன்னுடைய முக்கிய தேசிய சேவையை அவர் புரிந்து இருக்கிறார்.
விவசாய நிலங்களில் பூச்சி கொல்லிகளை அதிகம் பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய சுகாதார கதவுகளைக் குறித்த இவருடைய மூன்று முக்கிய ஆய்வுக் கட்டுரைகள் உலகத்தின் கவனத்தைப் பெற்றவை. பல வெப்ப மண்டல நோய்களை உருவாக்குவதற்கு இப்படிப் பயன்படுத்தப்படும் பூச்சி கொல்லிகள் வெக்டர் மூலம் பரவுகின்றன நோய் துறையில் பல சவால்களை ஏற்படுத்துகின்றன என்பது அவருடைய ஆய்வு முடிவு ஆகும் தற்போது அவர் உலக சுகாதார நிறுவனத்தின் பூச்சிக்கொல்லி மதிப்பிட்டுத் திட்டத்தை நிர்வகிக்கும் மேலாண்மை குழுவிற்குத் தலைமை தாங்கி வருகிறார்.
ராஜ்பால் சிங் யாதவ் 1958 ஆம் ஆண்டு ராஜஸ்தானில் அனந்தபூர் என்னும் ஊரில் பிறந்தார். ஜெய்ப்பூர் இல் உள்ள ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் 1977 ஆம் ஆண்டு இளம் கலை அறிவியல் பட்டத்தை உயிரியலில் பெற்றார். அதே பல்கலைக்கழகத்தில் விலங்கியல் துறையில் 1979 ஆம் ஆண்டு தங்கப் பதக்கத்துடன் எம் எஸ் சி பட்டம் வென்றார். அதற்காக அவருக்குக் கிடைத்த FELLOSHIP பயன்படுத்தி மணிலாவிலுள்ள பிலிப்பைன்ஸ் பல்கலைக்கழகத்தின் பொது சுகாதார கல்லூரியில் வெப்ப மண்டல தொற்றுநோய் குறித்த ஆய்வுகளில் ஈடுபட்டு இங்கிலாந்தின் லிவர்பூல் பகுதியில் லிவர்பூல் ஸ்கூல் ஆஃப் ட்ராபிக்கல் மெடிசன் என்னும் நிறுவனத்தில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டார். இந்தியா முழுவதும் மலேரியாவைக் கட்டுப்படுத்துவதில் இவர் ஆற்றிய பங்கிற்காக இந்திய மருத்துவ கழகத்தின் உயரிய கௌரவம் அவருக்கு வழங்கப்பட்டது.
கட்டுரையாளர்:
தொடரின் முந்தய கட்டுரையை படிக்க கிளிக் செய்யவும்: இந்தியாவின் நானோ உயிரியலாளர் சுப்பாராவ் காங்கி (Subba Rao Gangi)
ஆயிஷா இரா. நடராசன் எழுதிய நூல்களைப் பெற கிளிக் செய்யவும்: thamizhbooks.com
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
Pingback: இந்திய வானியல் இயற்பியலாளர் கரன் ஜானி