உலகப் புகழ்பெற்ற சிறுவர் கதைகள் – 10: புத்திசாலி மரியா (போர்ச்சுகல் நாட்டுக் கதை) – தமிழில் ச.சுப்பாராவ்

 

முன்னொரு காலத்தில் போர்ச்சுகல் நாட்டில் ஒரு வியாபாரி இருந்தார். அவருடைய மனைவி இறந்து போய்விட்டாள். அவர் தமது மூன்று மகள்களுடன் வாழ்ந்து வந்தார்.  கடைசி மகளான மரியா மிக அழகு மட்டுமின்றி, புத்திசாலியும் கூட. ஒரு முறை அந்த நாட்டின் அரசர் வியாபாரியைத் ஒரு அரசாங்க வேலையாக வெளியூர் சென்று வர வேண்டும் என்று உத்தரவிட்டார்.. வியாபாரிக்கு மகள்களை விட்டுவிட்டுச் செல்லத் தயக்கம்.இருந்தாலும் அரசருடன் செல்ல முடிவு செய்தார்.

புறப்படும் முன், தன் மூன்று மகள்களுக்கும் தலா ஒரு திருநீற்றுப் பச்சிலைச் செடி இருக்கும் தொட்டியைக் கொடுத்தார். ”நான் வெளியூர் சென்றிருக்கும் போது நீங்கள் யாரையும் வீட்டிற்குள் அனுமதிக்கக் கூடாது. நான் இல்லாத போது வீட்டில் நடந்தவை அனைத்தையும் இந்தச் செடிகள் என்னிடம் சொல்லிவிடும்,” என்றார்.

”நீங்கள் சொன்னபடியே நடந்து கொள்கிறோம், அப்பா,” என்றனர் மூவரும்.

வியாபாரி கிளம்பிச் சென்றதும். அரசரும், அவரது இரண்டு நண்பர்களும் வியாபாரியின் வீட்டிற்கு வந்தார்கள். அவர்கள் வந்ததும், மரியா தாங்கள் மூவரும் அவர்களுக்கு சிறிது மதுபானம் எடுத்து வருவதாகச் சொன்னாள்.

”வேண்டாம், சிரமப் படாதீர்கள்,” என்றார் அரசர்.

ஆனால், மரியா கொண்டுவருவதாகப் பிடிவாதம் செய்தாள். ஆனால் மதுபானம் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வராமல், பக்கத்து வீட்டிற்குச் சென்று, அவர்களிடம் தன் சகோதரிகளுடன் தனக்கு சண்டை என்றும், அன்றிரவு மட்டும் அவர்கள் வீட்டில் தங்கிக் கொள்வதாகவும் கேட்டுக் கொண்டாள். மறுநாள் காலையில் வீடு வந்தபோது, அப்பாவின் பேச்சைக் கேட்காததால் தன் சகோதரிகளின் செடிகள் வாடிப் போய்விட்டதைப் பார்த்தாள்.

அன்று மதியம் வீட்டிற்கு அடுத்தாற்போல் இருந்த அரசரின் தோட்டத்தில் அழகாகக் காய்த்திருந்த எலுமிச்சங்காய்களைப் பார்தத்  மரியாவின் சகோதரி, அவற்றைத் தனக்குப் பறித்துத் தருமாறு மரியாவிடம் கேட்டாள். மரியாவிற்கு விருப்பமில்லை. எனினும், சகோதரி திட்டுவாளே என்று தன் வீட்டு ஜன்னலிலிருந்து ஒரு கயிறு போட்டு. தோட்டத்தில் இறங்கி எலுமிச்சங்காய்களைப் பறித்தாள். அவளைப் பார்த்த தோட்டக்காரன் திருடன் என்று கத்தியபடி பிடிக்க வர, அவனைத் தள்ளி விட்டுவிட்டு கயிறு ஏறி வீடு வந்துவிட்டாள்.

மறுநாள் சகோதரி தோட்டத்தில் நன்கு பழுத்த வாழைப்பழங்களைப் பார்த்து அவை வேண்டும் என்றாள். விருப்பமின்றி மரியா கயிறு போட்டு தோட்டத்தில் இறங்கினாள். இந்த முறை அரசரிடமே மாட்டிக் கொண்டாள்.

Clever Maria Story in English | Story | English Fairy Tales ...

அரசர் விசாரித்த போது, மரியா புத்திசாலித்தனமாக உண்மையைக் கூறி விட்டாள். அவளைத் தண்டிப்பதற்காக, தன் பின்னால் வருமாறு கூறிவிட்டு, அரசர் முன்னே சென்றார். சிறிது தூரம் சென்றதும்,  அரசர் திரும்பிப் பார்த்தபோது மரியாவைக் காணவில்லை. அரசருக்கு பயங்கரமாகக் கோபம் வந்துவிட்டது.

பல மாதங்கள் ஆகிவிட்டன. இரு சகோதரிகளும் அரசரின் நண்பர்களைத் திருமணம் செய்து கொண்டு, பெண்குழந்தைகளைப் பெற்றெடுத்தார்கள். ஒரு நாள் மரியா ஆண்வேடத்தில் தன் சகோதரிகள் வீட்டிற்கு வந்தாள். யாருக்கும் தெரியாமல் குழந்தைகளை ஒரு கூடையில் வைத்து நிறைய மலர்களால் அவர்களை மறைத்தாள். பின்னர் அரண்மனைப் பக்கமாகச் சென்று, ”இந்த மலர்க் கூடையை யாராவது அரசரிடம் தர முடியுமா?” என்றாள்.

அரசரின் படுக்கையறையின் ஜன்னல் திறந்திருந்த்தால், அரசர் அவளது குரலைக் கேட்டார். கூடையை வாங்கி வர ஆளனுப்பினார். கூடையைத் திறந்து பார்த்தால் குழந்தைகள். மரியா ஏதோ தந்திரம் செய்கிறாள் என்பதை அறிந்தார். அவளை எப்படித் தண்டிப்பது என்று யோசனையில் இருந்த போது, வியாபாரி ஊர் திரும்பி விட்ட செய்தி வந்த்து. சரி, இப்போது பழி வாங்கலாம் என்று முடிவு செய்தார். வியாபாரி கல்லால் ஆன ஒரு மேல்கோட்டை மறு நாள் எடுத்து வர வேண்டும் என்றும், தவறினால் மரணதண்டனை என்றும் செய்தி அனுப்பினார்.

வியாபாரி தம் மகள்களைக் காண ஆவலோடு வந்தார். அவர்கள் தான் சொன்னபடி நடக்கவில்லை என்று அறிந்ததும் வருத்தமடைந்தார். அப்போதுதான் கல் கோட்டு கேட்டு அரசரின் உத்தரவும் வர நொந்து போனார்.

திடீரென்று வந்து அப்பாவைத் திகைக்க வைத்த மரியா, ” கவலை வேண்டாம், அப்பா. அந்த சாக்பீஸை எடுத்துக் கொண்டு, அளவெடுக்க வந்ததாகச் சொல்லி அரசரைப் பாருங்கள்,” என்றாள்.

அவள் அறிவில் நம்பிக்கை வைத்து வியாபாரியும் அதுபோலவே அரசரைச் சென்று பார்த்தார். அளவெடுக்க அரசர் ஒப்புக் கொள்ளவில்லை. ”அப்படியானால் கோட்டு தயாரிக்க முடியாது,” என்றார் வியாபாரி.

”சரி, கோட்டு வேண்டாம், உன் மகள் மரியாவை எனக்கு மணம் செய்து கொடு. நான் உனக்கு உயிர்ப்பிச்சை தருகிறேன்,” என்றார் அரசர்.

வீட்டிற்கு வந்த வியாபாரி அரசரின் புது கோரிக்கையை மகளிடம் சொல்லிப் புலம்பினார்.

”கவலை வேண்டாம் தந்தையே! என்னைப் போலவே ஒரு பொம்மை செய்யுங்கள். பொம்மையின் தலை ஆம், இல்லை என்பது போல் தலை ஆட்டும் படி ஒரு கயிற்றை இணைத்துத் தாருங்கள்,” என்றாள் மரியா.

அரசர் மரியா வந்தவுடன் ஒரு அறையில் அமர வைக்குமாறு சேவகர்களிடம் சொல்லியிருந்தார். அது போலவே அவர்கள் மரியாவை அந்த அறையில் அமர வைத்தார்கள். சேவகர்கள் வெளியே சென்றதும் மரியா உடன் எடுத்துச் சென்ற தன் உருவ பொம்மையை சோபாவில் அமர வைத்து விட்டு சோபாவின் பின் ஒளிந்து கொண்டாள். கையில் தலையை ஆட்ட வைக்கும் கயிறு.

அரசர் வந்ததும், ”மரியா, நலமா?” என்றார். பொம்மை தலையாட்டியது. அரசர் மரியா தன்னை ஏமாற்றியதைப் பற்றி கோபமாகப் பேசினார். அவர் பேசப் பேச பொம்மை தலையாட்டிக் கொண்டே இருந்தது. ”நீ பதில் பேசாமல் தலையை ஆட்டிக் கொண்டே இருக்கிறாயா? என்ன திமிர்?” என்று தன் வாளால் பொம்மையின் தலையைச் சீவினார் அரசர். அடுத்த கணம் கோபத்தில் இப்படிச் செய்து விட்டோமே என்று,” மரியா, தவறு செய்துவிட்டேன். உன்னைக் கொல்லாமல் விட்டிருந்தால் நான் உன்னை எவ்வளவு நேசித்தேன் என்பதை நீ காலப்போக்கில் புரிந்து கொண்டிருப்பாய்,” என்று கூறியவாறு அப்படியே கீழே சரிந்தார்.

மரியா சோபாவின் பின்னாலிருந்து எழுந்து வந்ததும், மரியா எவ்வளவு புத்திசாலி என்பதை அரசர் உணர்ந்தார். சில் நாட்களில் அவர்களுக்குத் திருமணம் நடந்தது. மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள்.

ச.சுப்பாராவ்

தொடர் 1ஐ வாசிக்க

https://bookday.in/ilam-kudumbaththalaivi-series/

தொடர் 2ஐ வாசிக்க

https://bookday.in/the-youngest-girl-and-the-monster-a-scottish-tale/

தொடர் 3ஐ வாசிக்க

https://bookday.in/%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%ae%b4%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d/

தொடர் 4ஐ வாசிக்க

https://bookday.in/writer-s-subbarao-in-world-famous-child-stories-4/

தொடர் 5ஐ வாசிக்க

https://bookday.in/writer-s-subbarao-in-world-famous-child-stories-5/

தொடர் 6ஐ வாசிக்க

https://bookday.in/world-famous-american-children-stories/

தொடர் 7ஐ வாசிக்க

https://bookday.in/world-famous-childrens-stories-7-red-white-black-narmandi-story-s-subba-rao-in-tamil/

தொடர் 8ஐ வாசிக்க

https://bookday.in/world-famous-childrens-stories-series-8-by-s-subbarao/

தொடர் 9ஐ வாசிக்க