உலகப் புகழ்பெற்ற சிறுவர் கதைகள் – 11: புத்திசாலி மனைவி (ஜெர்மன் தேசத்துக் கதை) – தமிழில் ச.சுப்பாராவ்

உலகப் புகழ்பெற்ற சிறுவர் கதைகள் – 11: புத்திசாலி மனைவி (ஜெர்மன் தேசத்துக் கதை) – தமிழில் ச.சுப்பாராவ்

 

ஜெர்மனி தேசத்தில் ஒரு விவசாயி இருந்தார். அவருக்கு ஒரு சிறு வீடு மட்டுமே இருந்தது. அவருக்கு புத்திசாலியான ஒரு மகள் இருந்தாள். ஒருநாள் மகள் விவசாயியிடம் அரசரிடம் சென்று சிறிது நிலம் கேட்டு வாங்கச் சொன்னாள். அரசரும் இவர்கள் ஏழைகளாக இருப்பதைப் பார்த்து புதர் மண்டிய ஒரு சிறு நிலத்தை அளித்தார். தந்தையும், மகளும் புதர்களை வெட்டி நிலத்தைத் திருத்த ஆரம்பித்தனர்.

நிலத்தை வெட்டித் திருத்தும் போது, ஒரு அழகான தங்க அம்மி கிடைத்தது.  ” அரசர் நமக்கு மிகவும் கருணையோடு இந்த நிலத்தைத் தந்திருக்கிறார். எனவே, அதற்கு நன்றி சொல்லும் விதமாக இந்த தங்க அம்மியை அவருக்குப் பரிசாகத் தரலாமா?” என்று விவசாயி தன் மகளிடம் கேட்டார்.

” நாம் இதைத் தந்தால் அரசர் இதற்கான குழவி எங்கே? என்று கேட்பார். நாம் இது மட்டும்தான் கிடைத்தது என்றால் நம்பமாட்டார். எனவே இதைத் தரவேண்டாம்,” என்றாள் மகள்.

ஆனால் தந்தை மகளின் பேச்சைக் கேட்கவில்லை. அம்மியை எடுத்துக் கொண்டு அரசரிடம் சென்றார். அரசர் தந்த நிலத்தில் கிடைத்ததாகவும், எனவே அந்த அம்மியை தனது பரிசாக அரசர் ஏற்க வேண்டும் என்றும் சொன்னார்.

அரசர் அம்மியைப் பார்த்துவிட்டு, இதோடு வேறு ஏதாவது கிடைத்ததா? என்று கேட்டார்.

”இல்லை,” என்றார் விவசாயி.

”இதன் குழவி எங்கே”, என்றார் அரசர். ” அம்மி இருந்தால் குழவியும் இருக்குமே. அதையும் கொண்டுவா”, என்றார்.

விவசாயி இதுமட்டும்தான் கிடைத்தது என்று சொன்னதை அரசர் நம்பவில்லை. குழவி தன்னிடம் வரும் வரை நீ சிறையில் இரு என்று சொல்லி, விவசாயியை சிறையில் தள்ளினார்.

சிறையில் விவசாயிக்கு உணவும், தண்ணீரும் கொண்டு வந்த காவலர்கள், விவசாயி, ” மகள் சொன்னதை நான் கேட்டிருக்க வேண்டும், அவள் சொன்னதைக் கேட்டிருந்தால் இந்த ஆபத்து வந்திருக்காது,” என்று புலம்பியதைக் கேட்டார்கள். விவசாயி எதையும் சாப்பிடாமல் இப்படிப் புலம்பிக் கொண்டே இருந்தார்.

விவசாயி இப்படிப் புலம்பிக் கொண்டிருப்பதை காவலர்கள் அரசரிடம் போய்ச் சொன்னார்கள். அரசர் விவசாயியைத் தன்னிடம் அழைத்து வரும்படி காவலர்களுக்கு உத்தரவிட்டார்.

விவசாயி வந்ததும், ” மகள் சொன்னதைக் கேட்டிருக்க வேண்டும் என்று புலம்பினாயாமே? உன் மகள் என்ன சொன்னாள்?, என்று அரசர் கேட்டார்.

” அரசருக்கு அம்மியைத் தரவேண்டாம். அம்மியைத் தந்தால் அவர் குழவி எங்கே என்று கேட்பார் என்று அவள் சொன்னாள்”, என்றார் விவசாயி.

” உன் மகள் இத்தனை புத்திசாலியா? நான் அவளைப் பார்க்க விரும்புகிறேன் என்று அவளிடம் சொல், ” என்றார் அரசர்.

George Hitchcock | Caldwell Gallery Hudson

மகள் அழைத்து வரப்பட்டாள். ” நீ மிகவும் புத்திசாலி போலத் தெரிகிறது. நான் உனக்கு ஒன்று சொல்வேன். நீ அதைச் செய்தாயானால் நான் உன்னை மணந்து கொள்வேன்,” என்றார் அரசர்.

”கூறுங்கள் அரசே?” என்றாள் அந்தப் பெண்.

” நீ உடையணியாமலும் வரக்கூடாது. நிர்வாணமாகவும் வரக் கூடாது. நடந்தும் வரக் கூடாது. சவாரியும் செய்யக் கூடாது. நடந்தும் வரக் கூடாது. சாலையில் இல்லாமலும் இருக்கக் கூடாது. அப்படி நீ இங்கு நாளை வந்தால் நான் உன்னைத் திருமணம் செய்து கொள்வேன்,” என்றார் அரசர்.

மறுநாள் அந்தப் பெண் தன் உடைகள் அத்தனையையும் அவிழ்த்தாள். தன் மேல் பெரிய மீன் வலையைப் போர்த்திக் கொண்டாள். இப்போது அவள் ஆடையும் அணிந்திருக்கவில்லை. ஆனால் நிர்வாணமாகவும் இல்லை. பக்கத்து வீட்டுக்கார்ரின் கழுதையை இரவல் கேட்டுப் பெற்றாள்.  தனது மீன்வலையை அதன் வாலில் கட்டினாள். கழுதை அவளை இழுத்துச் சென்றதால் அவள் நடக்கவும் இல்லை. சவாரி செய்யவும் இல்லை. வண்டிப் பாதையில் கழுதை இழுத்துச் செல்லும் போது அவள் தனது வலது கால் கட்டைவிரலை மட்டும் லேசாக சாலையில் ஊன்றிக் கொண்டாள். அதனால் அவள் சாலையில் இருப்பதாகவும் ஆனது. இவ்வாறாக அவள் அரண்மனை வந்ததும் அரசர் தான் சொன்னபடி அவள் வந்ததை அறிந்தார். அவளது தந்தையை சிறையிலிருந்து விடுவித்தார். அவளையும் மணந்து கொண்டார். 

ஒருநாள் அரசருக்கும் அவளுக்கும் சண்டை வந்துவிட்டது. கோபத்தில் அரசர், ”இனிமேல் நீ என் மனைவி இல்லை. உடனே இந்த அரண்மனையை விட்டு வெளியே போ. போகும் போது, என் கடைசிப் பரிசாக உனக்கு மிகவும் பிடித்த, சிறந்த ஒரு பொருளை இங்கிருந்து எடுத்துச் செல்லலாம்,” என்று சொல்லிவிட்டார்.

”தங்கள் உத்தரவு இது என்றால் நான் அதை ஏற்கிறேன். கடைசியாக என்னுடன் தாங்கள் குளிர்பானம் அருந்த வேண்டும்,” என்று கேட்டுக் கொண்டாள். அவள். அரசரின் பானத்தில் மயக்க மருந்தைக் கலந்து தந்தாள். பானத்தைப் பருகிய அரசர் மயங்கி விழுந்தார். உடனே அவள் தன் அந்தரங்க பணியாள் உதவியோடு அரசரை நல்ல மெல்லிய வெண்பட்டுத் துணியால் போர்த்தி, தனது பழைய சிறுகுடிசைக்குத் தூக்கிச் சென்றாள்.

அரசர் அன்று முழுவதும் மயக்கத்தில் இருந்தார். மயக்கம் தெளிந்து எழுந்ததும்., நான் எங்கே இருக்கிறேன் ? என்று குழம்பினார். யாரங்கே என்று சேவகர்களை அழைத்தார். ஒருவரும் வரவில்லை.

அப்போது அவரது மனைவி அவர் அருகில் வந்து, ” அரசே! நீங்கள் எனக்கு மிகவும் பிடித்த, சிறந்த ஒரு பொருளை எடுத்துக் கொண்டு செல்லலாம் என்று சொன்னீர்கள். இந்த உலகில் உங்களை விட சிறந்த, எனக்குப் பிடித்த பொருள் வேறு எதுவும் இல்லை. அதனால் தான் நான் உங்களை மயக்க மருந்து தந்து தூக்கிக் கொண்டு வந்துவிட்டேன்,” என்றாள்.

அவள் அன்பைப் பார்த்து அரசருக்கு கண் கலங்கிவிட்டது.” என் அன்பான, புத்திசாலி மனைவியே! இனி எப்போதும் நாம் பிரியவே கூடாது,” என்று அவளை அழைத்துக் கொண்டு அரண்மனை திரும்பினார். பின்னர் இருவரும் நீண்டகாலம் மகிழ்ச்சியோடு வாழ்ந்தார்கள்.

ச.சுப்பாராவ்

தொடர் 1ஐ வாசிக்க

https://bookday.in/ilam-kudumbaththalaivi-series/

தொடர் 2ஐ வாசிக்க

https://bookday.in/the-youngest-girl-and-the-monster-a-scottish-tale/

தொடர் 3ஐ வாசிக்க

https://bookday.in/%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%ae%b4%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d/

தொடர் 4ஐ வாசிக்க

https://bookday.in/writer-s-subbarao-in-world-famous-child-stories-4/

தொடர் 5ஐ வாசிக்க

https://bookday.in/writer-s-subbarao-in-world-famous-child-stories-5/

தொடர் 6ஐ வாசிக்க

https://bookday.in/world-famous-american-children-stories/

தொடர் 7ஐ வாசிக்க

https://bookday.in/world-famous-childrens-stories-7-red-white-black-narmandi-story-s-subba-rao-in-tamil/

தொடர் 8ஐ வாசிக்க

https://bookday.in/world-famous-childrens-stories-series-8-by-s-subbarao/

தொடர் 9ஐ வாசிக்க
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *