சீனாவில் டாங் வம்ச ஆட்சிக் காலத்தில் லூ சௌ என்ற பகுதியில் ஒரு சிற்றரசர் இருந்தார். அவரிடம் பணிபுரிந்த ஏராளமான பணிப்பெண்களில் ஹங் சீன் என்ற பெண்மிகவும் புத்திசாலி. அவளுக்கு எழுதப் படிக்கத் தெரியும். எல்லாக் கலைகளிலும் வல்லவள்.

ஒருநாள் சிற்றரசர் ஒரு விருந்து கொடுத்தார். அப்போது இசைக் கச்சேரி நடந்தது. கச்சேரியைக் கேட்டுக் கொண்டிருந்த ஹங் சீன் சிற்றரசரிடம் சென்று ”மேளம் வாசிப்பவனின் வாசிப்பில் ஒரு சோகம் தெரிகிறது. விசாரியுங்கள்,” என்றாள். சிற்றரசர் விசாரிக்க அவன் மனைவி உடல்நலக் குறைவாக இருப்பது தெரிந்தது. சிற்றரசர் அவனை உடனே வீட்டிற்கு அனுப்பி வைத்தார். பணிப்பெண்ணின் கூர்மையான கவனிப்புத் திறனைப் பாராட்டினார்.

சிறிது காலத்திற்குப் பிறகு பக்கத்து நாட்டு அரசனான வைப்பூ இவர்கள் நாட்டின் மீது படையெடுப்பதற்காக படை திரட்டுவதாக ஒற்றர்கள் சொன்னார்கள். லூ சௌவின் சிற்றரசர் அமைதியை விரும்புபவர். வர இருக்கும் படையெடுப்பை நினைத்து வேதனைப்பட்டு அவர் சரியாக சாப்பிடவில்லை. தூங்கவில்லை.

Chinese TV series increasingly popular in overseas markets ...

சிற்றரசருக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று  ஹங் சீன் முடிவு செய்தாள்.  அன்றிரவு தலைமுடியை இறுக்க கொண்டை போட்டுக் கொண்டு, தன் பெட்டியில் ரகசியமாக வைத்திருக்கும் மந்திர வாளை எடுத்து சில மந்திரங்களை முணுமுணுத்தாள். உடனே வானில் பறக்க ஆரம்பித்தாள். 

வைப்பூ நாட்டின் அரண்மனை கண்ணில் பட்டதும் அரசரின் படுக்கையறைப் பக்கமாக தரையிறங்கினாள். படுக்கையறையில் வைப்பூவின் சிற்றரசர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார். ஹங் சின் ஓசையின்றி அவர் தலைமாட்டில் இருந்த தங்க்க் கூஜாவை எடுத்துக் கொண்டு தனது நாட்டிற்குப் பறந்து வந்து விட்டாள்.

நேராக தனது சிற்றரசரின் படுக்கையறைக்குச் சென்றார். அங்கு சிற்றரசர் உறக்கம் வராது உலாவிக் கொண்டிருந்தார். ”அரசே ! இந்தக் கூஜாவை வைப்பூ அரசரின் மாளிகையிலிருந்து எடுத்து வந்துள்ளேன். நாள் இதை ஒரு தூதர் மூலமாக அவரிடம் திரும்பக் கொடுத்து விடுங்கள். போர் அபாயம் நீங்கிவிடும்,” என்றாள்.

சிற்றரசரும் அதுபோலவே அந்தக் கூஜாவை அனுப்பி வைத்தார். கூஜாவைப் பெற்றுக் கொண்ட வைப்பூ அரசர், தனது அரண்மனையில் தனது படுக்கையறையிலிருந்தே யாரும் அறியாமல் கூஜாவை எடுத்துச் செல்லும் திறமைசாலிகள் லூ சௌ நாட்டில் இருக்கிறார்களே ! நிச்சயமாக அவர்களை நம்மால் போரில் வெல்ல முடியாது என்று யோசித்தார். போர் முடிவைக் கைவிட்டார். சமாதானம் வேண்டி தூதரிடம் கடிதம் அனுப்பினார்.

போர் அபாயம் நீங்கி நாட்டில் அமைதி மீண்டும் நிலவியது பற்றி சிற்றரசரோடு ஹங் சின்னும் மகிழ்ந்தாள்.

ச.சுப்பாராவ்

தொடர் 1ஐ வாசிக்க

https://bookday.in/ilam-kudumbaththalaivi-series/

தொடர் 2ஐ வாசிக்க

https://bookday.in/the-youngest-girl-and-the-monster-a-scottish-tale/

தொடர் 3ஐ வாசிக்க

https://bookday.in/%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%ae%b4%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d/

தொடர் 4ஐ வாசிக்க

https://bookday.in/writer-s-subbarao-in-world-famous-child-stories-4/

தொடர் 5ஐ வாசிக்க

https://bookday.in/writer-s-subbarao-in-world-famous-child-stories-5/

தொடர் 6ஐ வாசிக்க

https://bookday.in/world-famous-american-children-stories/

தொடர் 7ஐ வாசிக்க

https://bookday.in/world-famous-childrens-stories-7-red-white-black-narmandi-story-s-subba-rao-in-tamil/

தொடர் 8ஐ வாசிக்க

https://bookday.in/world-famous-childrens-stories-series-8-by-s-subbarao/

தொடர் 9ஐ வாசிக்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *