உலகப் புகழ்பெற்ற சிறுவர் கதைகள் – 14: புல்லாங்குழல் கலைஞனின் வீரம் (ஜெர்மனியின் பிரான்கோனியா பகுதியின் கதை) – தமிழில் ச.சுப்பாராவ்

உலகப் புகழ்பெற்ற சிறுவர் கதைகள் – 14: புல்லாங்குழல் கலைஞனின் வீரம் (ஜெர்மனியின் பிரான்கோனியா பகுதியின் கதை) – தமிழில் ச.சுப்பாராவ்

 

பிரான்கோனியா பகுதியில் ஒரு புல்லாங்குழல் கலைஞன் இருந்தான். அவன் உற்சாகமான இளைஞன்.. ஊர்ஊராகச் சென்று புல்லாங்குழல் வாசித்து வாழ்ந்து வந்தான். ஒரு நாள் அவன் ஒரு கிராமத்தில் புல்லாங்குழல் வாசித்து முடித்த போது இருட்டிவிட்டது. இனிமேல் பயணம் செய்ய முடியாது என்று  விவசாயி ஒருவன் வீட்டில் தங்கினான். விவசாயி வீட்டில் இரவு உணவு சாப்பிடும்போது, ஜன்னல் வழியே நிலவொளியில் ஒரு பெரிய பாழடைந்த கோட்டை தெரிந்த்து.  இளைஞன் அந்த கோட்டையைப் பற்றி விவசாயியிடம் விசாரித்தான்.

வெகுகாலம் முன்பு அந்தக் கோட்டையில் ஒரு பிரவு வாழ்ந்தார் என்றும், அந்தப் பிரபு பெரிய கஞ்சன் என்றும், அவன் கஞ்சத்தனத்தால் திருமணமே செய்து கொள்ளவில்லை என்றும் விவசாயி கூறினான். அந்தப் பிரபு நிறைய பணம் சேர்த்து வைத்திருந்தானாம். அவன் இறந்த பிறகு அவனது உறவினர்கள் அந்தக் கோட்டைக்குள் போய் அவனது பணம், நகைகளைத் தேடினார்களாம். ஆனால் எதுவும் கிடைக்கவில்லையாம். எனவே, அந்த கிராமத்தினர், அந்தக் கோட்டையில் எங்கோ பெரும் புதையல் இருப்பதாக நம்புவதாகவும், அந்தப் பிரபுவின் ஆவி அந்தப் புதையலைப் பாதுகாப்பதாக நம்புவதாகவும் விவசாயி சொன்னான். பிரபுவின் ஆவிக்கு பயந்து யாரும் அந்தக் கோட்டைக்குச் செல்வதில்லையாம்.

நமது இசைக் கலைஞன் நல்ல வீரன். அவன் விவசாயி இந்தக் கதையைச் சொன்னதும், தான் கோட்டைக்குச் செல்ல ஆசைப்படுவதாகச் சொன்னான். விவசாயி வேண்டாம், போகாதே, உன் உயிருக்கே ஆபத்து என்று கெஞ்சினான். ஆனால் இசைக் கலைஞன் கேட்கவில்லை. விவசாயி வீட்டு வேலைக்கார்ர்கள் இருவரை இரண்டு அரிக்கேன் விளக்குகளோடு துணைக்கு அழைத்துக் கொண்டு கோட்டைக்குச் சென்றான். கோட்டை வாசலில் ஒரு விளக்கு எடுத்துக் கொண்டு. மற்ற விளக்கோடு அந்த இருவரையும் திரும்பிப் போகச் சொல்லிவிட்டான். கோட்டை வாசலிலேயே பெரிய மாடிப்படி இருந்த்து. அதில் ஏறிச் சென்றால் பெரிய கூடம். அதன் இரு புறமும் வரிசையாக  அறைகள். இளைஞன் முதல் அறையின் கதவைத் தள்ளித் திறந்து கொண்டு உள்ளே சென்றான். தன் விளக்கை அங்கிருந்த ஒரு பழங்கால மேஜை மீது வைத்து விட்டு, புல்லாங்குழலை வாசிக்க ஆரம்பித்தான்.  சற்று நேரம் கழித்து அவனுக்கு பசிக்க ஆரம்பித்த்து. அறையில் சுற்றும் முற்றும் பார்த்தான். ஒரு மேடையில் ஒரு பாத்திரத்தில் நிறைய சுண்டல் கடலை இருந்த்து. அருகிலேயே ஒரு டப்பாவில் உப்பு இருந்த்து. ஒரு ஜாடியில் தண்ணீர் இருந்த்து. அந்த மேடையில் ஒரு அடுப்பும் இருந்த்து. இளைஞன் தன் அரிக்கேன் விளக்கின் நெருப்பை வைத்து அடுப்பைப் பற்ற வைத்தான். பாத்திரத்தில் தண்ணீர் விட்டு, சுண்டல் கடலையையும், உப்பையும் போட்டு சுண்டல் தயாரித்தான். மேடையில் ஒரு மதுக்குவளையும் இருந்த்து. மதுவை அருந்தியபடி சுண்டலைச் சாப்பிட்டான். அப்போது மணி பன்னிரண்டு இருக்கும்.

அந்த சமயத்தில் அறைக்குள் கறுப்பாக, உயரமாக இருவர்கள் நுழைந்தார்கள். அவர்கள் ஒரு சவப்பெட்டியைச் சுமந்து வந்தார்கள். அதை அறை நடுவே வைத்து விட்டு வந்த வழியே சென்றார்கள். அவர்கள் போனதும், இளைஞன் சவப்பெட்டியைத் திறந்து பார்த்தான். உள்ளே சுருங்கிப் போன ஒரு கிழவனின் உடல் இருந்த்து. நரைத்த தலையும், நீண்ட நரைத்த தாடியுமாக பார்க்கவே பயங்கரமாக இருந்த்து. இளைஞன் அஞ்சவில்லை. அந்த உடலை வெளியே எடுத்து அடுப்பிற்கு அருகே உட்கார வைத்தான். சிறிது நேரத்தில் அந்த உடலில் கதகதப்பு ஏற அந்த உடலுக்கு உயிர் வந்த்து போல் கண் திறந்த்து. இளைஞன், உனக்கு பசிக்கிறதா? என்று சொல்லி தான் செய்திருந்த சுண்டலை குழந்தைக்கு ஊட்டுவது போல அந்தக் கிழவனுக்கு ஊட்டிவிட்டான். சுண்டலைத் தின்றதும், அந்தக் கிழவன் பலம் பெற்று விட்டது போல் இருந்த்து. கிழவன் எழுந்து நின்று என் பின்னால் வா என்றான்.

கிழவன் அந்தக் கூடத்தின் கடைசியில் இருந்த படிக்கட்டிற்கு அழைத்துச் சென்றான். அவன் அந்தப் பாழடைந்த படிகளில் இறங்க, இளைஞனும் பின்னாலேயே இறங்கினான். நீண்ட நேரம் இறங்கிய பின் ஒரு பாதாள அறை வந்த்து.

அந்த அறையில் ஏராளமான பொற்காசுகள் குவிந்திருந்தன. கிழவன் இளைஞனிடம், “இந்தக் குவியலை சரியாக இரண்டாகப் பிரிக்க வேண்டும். ஏதேனும் ஒரு குவியலில் அதிகமாக இருந்தாலும் உன்னைக் கொன்று விடுவேன்,“ என்றான். 

இளைஞன் புன்னகைத்தவாறே அறையில் இருந்த இரண்டு மேஜைகளை அந்தப் பொற்காசுக் குவியல் அருகே நகர்த்தினான். பிறகு இந்த மேஜையில் ஒன்று, அந்த மேஜையில் ஒன்று என்று வேகமாக பொற்காசுகளை போட ஆரம்பித்தோன். வெகுநேரம் கழித்து குவியலில் ஒரே ஒரு காசு மட்டும் மிஞ்சியது. ஒரு நிமிடம் யோசித்த இளைஞன் ஒரு கல்லை எடுத்து காசைசரியாக இரண்டாக உடைத்து, இரண்டு மேஜைகளிலும் போட்டான். உடனே அந்தக் கிழவன், இளைஞனே! நீ நல்ல வீரனும், புத்திசாலியும் ஆவாய். இந்தப் புதையல் நான் பேராசை கொண்டு சேர்த்து வைத்த்தாகும். என் பேராசை காரணமாக நான் நூறாண்டுகளாக இப்படி ஆவியாக அலைந்து கொண்டிருந்தேன். என்று ஒரு வீரமான இளைஞன் இந்தப் புதையலை இரண்டு சம பங்குகளாகப் பிரிக்கிறானோ அன்றுதான் நான் அந்த ஆவி உருவிலிருந்து விமோசனம் பெறுவேன். ஆனால் இங்கு வருபவர்கள் எல்லோரும் கடைசியில் பொறுமையின்றி, ஒரு காசை ஏதேனும் ஒரு மேஜையில் தூக்கிப் போட்டு விடுவார்கள். நானும் அவர்கள் கழுத்தை நெரித்துக் கொன்று விடுவேன். நீ வீரன் மட்டுமல்ல. நல்ல பொறுமைசாலி. அதனால் நானும் இன்று விடுதலை பெற்றேன். இதில் ஒரு மேஜையில் உள்ள காசுகளை நீ எடுத்துக் கொள். அடுத்த மேஜையில் உள்ளதை ஏழைகளுக்கு தானம் செய். நீ மகிழ்ச்சியாக வாழ்வாய்,” என்று வாழ்த்தி விட்டு மறைந்தான்.

இளைஞன் மகிழ்ச்சியாக புல்லாங்குழலை வாசிக்க ஆரம்பித்தான். இரவு இளைஞனுக்கு என்ன ஆனதோ என்று பயந்து கொண்டிருந்த விவசாயி புல்லாங்குழல் இசை கேட்டதும் மகிழ்ந்தான். கோட்டைக்கு வந்தான். இருவருமாக அந்தப் புதையலை மூட்டைகட்டி எடுத்து வந்தார்கள். கிழவன் சொன்னது போல, ஒரு பகுதியை ஏழைகளுக்கு தானம் செய்த இளைஞன் தன் பங்குப் புதையலை வைத்து சந்தோஷமாக வாழ்ந்தான்.

அந்தப் பழைய கோட்டை இருந்த இடத்தில் இப்போது ஒரு அழகான புதிய கோட்டை இருக்கிறது. அதுதான் புல்லாங்குழல் கலைஞனின் இப்போதைய இருப்பிடம்.

 

ச.சுப்பாராவ்

தொடர் 1ஐ வாசிக்க

https://bookday.in/ilam-kudumbaththalaivi-series/

தொடர் 2ஐ வாசிக்க

https://bookday.in/the-youngest-girl-and-the-monster-a-scottish-tale/

தொடர் 3ஐ வாசிக்க

https://bookday.in/%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%ae%b4%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d/

தொடர் 4ஐ வாசிக்க

https://bookday.in/writer-s-subbarao-in-world-famous-child-stories-4/

தொடர் 5ஐ வாசிக்க

https://bookday.in/writer-s-subbarao-in-world-famous-child-stories-5/

தொடர் 6ஐ வாசிக்க

https://bookday.in/world-famous-american-children-stories/

தொடர் 7ஐ வாசிக்க

https://bookday.in/world-famous-childrens-stories-7-red-white-black-narmandi-story-s-subba-rao-in-tamil/

தொடர் 8ஐ வாசிக்க

https://bookday.in/world-famous-childrens-stories-series-8-by-s-subbarao/

தொடர் 9ஐ வாசிக்க
தொடர் 13ஐ வாசிக்க
Show 1 Comment

1 Comment

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *