உலகப் புகழ்பெற்ற சிறுவர் கதைகள் – 15: மூன்று நாய்கள் (பிரான்ஸ் தேசக் கதை) – தமிழில் ச.சுப்பாராவ்

ஒரு ஆடுமேய்ப்பவருக்கு ஒரு மகளும்,ஒரு மகனும் இருந்தார்கள். அவர் இறக்கும் தறுவாயில் அவரிடம் மூன்று ஆடுகளும், ஒரு சின்ன குடிசையும்தான் இருந்தன. மரணப்படுக்கையில் இருந்த அவர் தம் குழந்தைகளை அவற்றை சம்மாகப் பிரித்துக் கொள்ளுமாறு சொல்லி, ஆசீர்வதித்து விட்டு இறந்துபோனார். அவரது இறுதிச் சடங்குகளைச் செய்தபின், மகனும், மகளும் யாருக்கு எது என்பது பற்றி பேசினார்கள். மகள், ” நான் குடிசையை எடுத்துக் கொள்கிறேன்,” என்றாள். மகன், ” அப்படியானால் நான் இந்த ஆடுகளை எடுத்துக் கொண்டு, உலகம் முழுவதும் சுற்றுகிறேன். எனது அதிருஷ்டத்தைப் பரிசோதிக்கிறேன்,” என்றான். பிறகு தன் சகோதரியைக் கட்டித் தழுவி விடைபெற்றுக் கொண்டு,  தன் ஊரை விட்டுப் புறப்பட்டான்.

அவனும் வெகு தொலைவான இடங்களுக்கெல்லாம் சென்று திரிந்தான். பல துன்பங்களை அனுபவித்தான். ஆனால் ஒரு முறை கூட அவனுக்கு எந்த அதிருஷ்டமும் கிடைக்கவில்லை. ஒரு நாள், மிக வருத்த்த்தோடு, சாலையோரமாக உட்கார்ந்திருந்தான். அப்போது மூன்று நாய்களோடு ஒருவன் அவன் முன் வந்து நின்றான். நாய்கள் மிகப் பெரியவைகளாக, பலமானவைகளாக, கருகருவென்று கருப்பாக இருந்தன.

”வீரமான இளைஞனே! உனக்கு விருப்பம் இருந்தால் என் நாய்களைப் பெற்றுக் கொண்டு, உனது அழகான ஆடுகளை எனக்குத் தருவாயாக!“ என்றான்.

அந்த வருத்த்த்திலும், இளைஞனுக்கு சிரிப்பு வந்த்து. ” உன் நாய்களை வைத்து நான் என்ன செய்வது? என் ஆடுகள் தாமாக மேய்ந்து கொள்ளும். ஆனால் நாய்களுக்கோ நான் உணவளிக்க வேண்டுமே,” என்றான்.

“என் நாய்கள் அபூர்வமானவை. அவை உனக்கு பெரும் அதிருஷ்டத்தைப் பெற்றுத் தரும். வேண்டியவற்றைத் தரும். இவற்றில் உள்ளதிலேயே சின்னதாக இருப்பதன் பெயர் உணவு. இரண்டாவதின் பெயர் கிழி. மூன்றாவதன் பெயர் இரும்பைக் கடி,” என்றான் அந்தப் புதியவன்.

அவன் கூறியதைக் கேட்ட இளைஞன். தன் ஆடுகளைத் தந்தான். பின் நாய்களைச் சோதிப்பதற்காக, ”உணவு” என்றான். குட்டி நாய் உடனே வேகமாக ஓடியது. சிறிது நேரத்தில் ஒரு பெரிய கூடை நிறைய சுவையான விலையுயர்ந்த உணவு வகைகளைக் கொண்டுவந்த்து. பண்டமாற்று முறையில் நான் லாபமடைந்த்தை நினைத்து மகிழ்ந்தவாறு இளைஞன் தன் பயணத்தைத் தொடர்ந்தான்.

சாலையில் ஒரு குதிரை வண்டியைப் பார்த்தான். அது முழுக்க கருப்புத்துணியால் போர்த்தப்பட்டிருந்த்து. இதை இழுக்கும் இரு குதிரைகளும் கருப்பத் துணியால் போர்த்தப்பட்டிருந்தன. வண்டியோட்டியும் துக்கத்தைக் குறிக்கும் கருப்பு உடையில் இருந்தான். வண்டிக்குள் மிக அழகான ஒரு பெண் இருந்தாள். அவளும் கருப்பு உடையில் இருந்தாள். அவள் அழுதுகொண்டிருந்தாள். இளைஞன் வண்டியோட்டியிடம் விசாரித்தான். அவன் சரியாக பதில் சொல்லவில்லை. சற்று அழுத்திக் கேட்டதும் பின்வருமாறு கூறினான் – “இந்தப் பகுதியில் ஒரு பெரிய டிராகன் இருந்து கொண்டு கொடுமை செய்து வருகிறது. ஊரார் அதோடு ஒரு ஒப்பந்தம் போட்டுக் கொண்டு, அதன் கொடுமைகளை ஓரளவு குறைத்திருக்கிறார்கள். அந்த ஒப்பந்தப்படி ஒவ்வொரு ஆண்டும் ஒரு அழகான பெண்ணை அதற்குத் தரவேண்டும். அது அந்தப் பெண்ணை ஒரே வாயில் விழுங்கிவிடும்.  நாட்டில் பதினான்கு வயதான பெண்கள் அனைவரின் பெயரையும் சீட்டு எழுதிப் போட்டு குலுக்கல் முறையில் ஒரு பெண்ணை தேர்ந்தெடுப்பது வழக்கம்.  இந்த ஆண்டு அப்படி தேர்ந்தெடுக்கப்பட்டது நாட்டின் இளவரசி. அதனால், அரசரும், நாட்டு மக்களும் மிகவும் சோகத்தில் உள்ளனர். ஆனால் டிராகன் மிகவும் கொடூரமானது என்பதால், இந்த பலி தருவதை நிறுத்த முடியாது”.

What are the original/unfortunate version of Disney movies? - Quora

இளைஞனுக்கு இளவரசியைப் பார்க்கப் பாவமாக இருந்த்து. அந்த வண்டியைத் தொடர்ந்தான். அது ஒரு உயர்ந்த மலைக்கு அருகே நின்றது. இளவரசி வேதனையோடு இறங்கி டிராகன் இருக்கும் இடம் நாக்கி மெதுவாக நடந்தாள். இளைஞன் அவள் பின்னால் போவதைப் பார்த்த வண்டியோட்டி இளைஞனைத் தடுத்தான். ஆனால் இனைஞன் அதை கண்டுகொள்ளவில்லை.

பாதி மலை ஏறியதும், அந்த டிராகன் பயங்கரமாக சத்தம் போட்டுக் கொண்டு தன் இரையை விழுங்க வந்த்து. அதன் வாயிலிருந்து நெருப்பு ஜுவாலைகள் வந்தன. உடல் முழுவதும் கத்தி போன்ற செதில்கள். கோரமான பற்கள். பாம்பு போன்ற கழுத்தில் பெரிய இறக்கைகள். அது இளவரசியை நெருங்கியதும், இளைஞன், “கிழி” என்று உரத்துக் கூவினான். அடுத்த நிமிடம்  அவனது இரண்டாவது நாய் அந்த டிராகன் மீது பாய்ந்த்து. பெரும் பலத்தோடு, வேகத்தோடு டிராகனைத் தாக்கியது. சிறிது நேரப் போராட்டத்திற்குப் பிறகு டிராகன் களைத்துப் போய் கீழே விழுந்து இறந்த்து. நாய் அதன் இரண்டு பற்களை மட்டும் மிச்சம் வைத்து விட்டு, அதை முழுவதுமாக தின்றுவிட்டது. அந்தப் பற்களை இளைஞன் தன் பாக்கெட்டில் போட்டுக் கொண்டான்.

மகிழ்ச்சியால் உணர்ச்சிவசப்பட்ட இளவரசி மயங்கி விழுந்தாள். இளைஞன் அவளது மயக்கத்தைத் தெளிவித்தான். அவள் அவனுக்கு நன்றி கூறினாள். தன் தந்தையை சந்தித்து பரிசு பெற்றுச் செல்ல அழைத்தாள்.

இளைஞன் தான் இன்னும் உலகத்தின் பல பகுதிகளைப் பார்க்க விரும்புவதாகச் சொன்னான். ஆனால் மூன்றாண்டுகளுக்குப் பிறகு அவளது நாட்டிற்கு வருவதாக வாக்களித்தான். பிறகு அவள் தன் நாடு திரும்ப, இளைஞன் எதிர்திசையில் தன் பயணத்தைத் தொடர்ந்தான்.

வண்டியோட்டியின் மனதில் ஒரு திட்டம் தோன்றியது. இந்த சம்பவத்தை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள விரும்பினான். வழியில் ஒரு நதியின் குறுக்கே சென்ற பாலத்தில் வண்டியை நிறுத்திய அவன், ” இளவரசி, உங்களைக் காப்பாற்றியவன் உங்கள் நன்றியைக் கூட ஏற்காமல் சென்றுவிட்டான். நீங்கள் கருணை கொண்டு, இந்த ஏழைக்கு உதவ வேண்டும். நான்தான் அந்த டிராகனைக் கொன்றேன் என்று தங்கள் தந்தையாரிடம் நீங்கள் சொன்னால், எனக்கு உதவியாக இருக்கும். நீங்கள் அப்படிக் கூற ஒப்புக் கொள்ளாவிட்டால், நான் உங்களை இந்த ஆற்றில் தூக்கி எறிந்துவிடுவேன். எல்லோரும் டிராகன்தான் உங்களைத் தின்றுவிட்டது என்று நினைப்பார்கள், என்றான். இளவரசி அழுது கெஞ்சினாள். பின்னர் அவன் சொல்வது போல் நடந்து கொள்ள ஒப்புக் கொண்டாள்.

அவர்கள் நாடு திரும்பியதும், மக்கள் அனைவரும் மகிழ்ந்தார்கள். அரசர் மகளையும், வண்டியோட்டியையும் கண்ணீர் மல்க கட்டியணைத்துக் கொண்டார். ”நீ என் மகளை மட்டுமல்ல, இந்த நாட்டின் அத்தனை இளம் பெண்களையும் காப்பாற்றி இருக்கிறாய். உனக்குத் தகுந்த பரிசாக என் மகளை உனக்கு மணம் செய்து தருகிறேன். அவளுக்கு வயது மிகவும் குறைவு என்பதால், திருமணம் அடுத்த ஆண்டு நடைபெறும்,” என்று அவனிடம் கூறினார்.

வண்டியோட்டி அரசருக்கு நன்றி தெரிவித்தான். அவன் இப்போது பிரபுவாக பதவி உயர்த்தப்பட்டான். இளவரசிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. ஓராண்டு முடியும் நேரம் வந்துவிட்டது. தந்தையிடம் இன்னும் ஓராண்டு திருமணத்தை தள்ளி வைக்கக் கோரினாள். அந்த இரண்டாம் ஆண்டும; முடிந்த்து. 

இளைஞன் மூன்றாம் ஆண்டு வருவேன் என்று சொல்லி இருப்பதால், அவள் மீண்டும் தந்தையிடம் ஓராண்டிற்கு திருமணத்தை தள்ளி வைக்க வேண்டினாள். ஓராண்டு முடிந்த்தும் நான் கூறிய மாப்பிள்ளையை கட்டாயம் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கண்டிப்பாகச் சொன்னார். அந்த ஆண்டும் முடிந்த்து. திருமணத்திற்காக நாடு முழுவதையும் அலங்கரிக்க ஆரம்பித்தார்கள்.

அப்போது ஒருநாள், மூன்று நாய்களோடு ஒருவன் அந்த நாட்டிற்குள் நுழைந்தான். நாட்டில் என்ன விசேஷம் என்று விசாரித்தான். டிராகனைக் கொன்று இளவரசியைக் காப்பாற்றிய வீரனுக்கு இளவரசியை மணம் முடித்துத் தரப் போகிறார்கள் என்று நாட்டு மக்கள் சொன்னார்கள்.

இளவரசியைக் காப்பாற்றியதாகச் சொல்பவன் ஒரு மோசடிக்காரன் என்றான் இளைஞன். அதைக் கேட்டுக் கொண்டிருந்த படைவீரன் ஒருவன் அவனை சிறையில் அடைத்துவிட்டான். சிறையில் அவன் வேதனையோடு உட்கார்ந்திருந்த போது  அவனது நாய்கள் ஊளையிடும் சத்தம் கேட்டது. உடனே அவள் தன்னால் முடிந்த அளவு சத்தமாக, “இரும்பைக் கடி” என்று கத்தினான். அடுத்த கணம் அவனது பெரிய நாய் எங்கிருந்தோ பாய்ந்து வந்து சிறைக் கதவின் கம்பிகளை ஏதோ குச்சியைக் கடிப்பது போல கடித்து உடைத்த்து. பின்னர் அவனைக் கட்டியிருந்த சங்கிலிகளையும் கடித்து உடைத்த்து. பின் இருவரும் வெளியே வந்தார்கள். வெளியே வந்த்தும் பசித்த்தால், அவன் ”உணவு” என்று சொன்னதும் குட்டிநாய் சுவையான உணவை ஒரு துண்டில் கட்டிக் கொண்டுவந்து தந்த்து. அந்த்த் துண்டில் அசர முத்திரை இருந்த்து.

உண்மையில் குட்டி நாய் உணவிற்காக அரண்மனை சென்ற போது இளவரசியைப் பார்த்து அவள் கையை அன்பாக நக்கிக் கொடுத்த்து. இளவரசி தனது துண்டில் உணவை வைத்து நாயிடம் கொடுத்து அனுப்பியிருக்கிறாள். பின்பு தன் தந்தையிடம் நடந்த்தைக் கூற அவர் அந்த நாய் எங்கே செல்கிறது என்று பார்த்து வர சேவகர்களை அனுப்பினார். அவர்கள் இளைஞனை அரசரிடம் அழைத்து வந்தார்கள். இளைஞன் தான்தான் டிராகனைக் கொன்றவன் என்று கூறி, டிராகனிக் பற்களை அரசரிடம் காட்டினான். அரசன் வண்டியோட்டியை இழுத்துவரச் சொன்னார். அவன் வந்து தன் தவறை ஒப்புக் கொண்டு, அரசரின் காலடியில் வீழ்ந்தான். அன்றே இளைஞனுக்கும், இளவரசிக்கும் திருமணம் நடந்த்து. 

இருவரும் நீண்ட நாள் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள். இளைஞன் படைவீர்ர்களை விட்டு தன் சகோதரியைத் தேடி அழைத்துவரச் செய்தான். அவளும் அவர்களோடு மகிழ்ச்சியாக வாழ்ந்தாள். ஒரு நாள் பெரிய நாய் தன் எஜமானரைப் பார்த்து, ” எங்கள் காலம் முடிந்துவிட்டது. இனி மேலும் நாங்கள் உங்களுக்குத் தேவையில்லை. பணமும் அதிகாரமும் வந்த்தும் நீங்கள் மாறிவிடுவீர்களோ, சகோதரியை மறந்து விடுவீர்களோ என்று பார்க்கவே இத்தனை காலம் உங்களுடன் இருந்தோம். ஆனால் நீங்கள் பணத்திற்கு மயங்கவில்லை. எப்போதும் போலவே இருக்கிறீர்கள். எனவே, நாங்கள் விடை பெறுகிறோம்,” என்றது. பிறகு மூன்று நாய்களும் சிறு பறவைகளாக மாறி வானில் பறந்து மறைந்தன.

ச.சுப்பாராவ்

தொடர் 1ஐ வாசிக்க

https://bookday.in/ilam-kudumbaththalaivi-series/

தொடர் 2ஐ வாசிக்க

https://bookday.in/the-youngest-girl-and-the-monster-a-scottish-tale/

தொடர் 3ஐ வாசிக்க

https://bookday.in/world-famous-childrens-stories-series-3-by-s-subbarao/

தொடர் 4ஐ வாசிக்க

https://bookday.in/writer-s-subbarao-in-world-famous-child-stories-4/

தொடர் 5ஐ வாசிக்க

https://bookday.in/writer-s-subbarao-in-world-famous-child-stories-5/

தொடர் 6ஐ வாசிக்க

https://bookday.in/world-famous-american-children-stories/

தொடர் 7ஐ வாசிக்க

https://bookday.in/world-famous-childrens-stories-series-7-by-s-subbarao/

தொடர் 13ஐ வாசிக்க
தொடர் 14ஐ வாசிக்க