ஒரு நாள் ஒரு பேரரசரின் மூத்த மகன் ஒரு வயலில் தனிமையில் நடந்து சென்று கொண்டிருந்தான். அப்போது பனிக்காலம். வயல் முழுவதும் வெண்பனியால் மூடப்பட்டிருந்த்து. அப்போது ஒரு அண்டங்காக்கை பறந்து செல்ல, இளவரசன் அதை அம்பால் வீழ்த்தினான். பனியில் அந்த அண்டங்காக்கை ரத்தம் சிந்தியபடி வீழ்ந்த்து. பனியின் மின்னம் வெண்மை, காக்கையின் பளபளப்பான கறுமை, பொங்கும் ரத்த்த்தின் அடர்ந்த சிவப்பு மூன்றும் சேர்ந்து இளவரசன் கண்களுக்கு மிக அழகாகத் தெரிந்தன. அந்த நிறங்களின் சேர்க்கை அவன் மனதில் அப்படியே தங்கிவிட்டது.அந்த வண்ணங்கள் அவன் கண் முன் எப்போதும் நிரந்தரமாக மிதப்பது போன்று உணர்ந்தான். அதையே நினைத்துக்கொண்டிருந்தவன், தனக்கு மனைவியாகப் போகும் பெண் அந்தப் பனி போன்ற வெண்நிறமும், ரத்தம் போன்ற சிவந்த உதடுகளும், காக்கையின் நிறம் போன்ற கறுத்த கூந்தலும் உடையவளாக இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.

ஒரு நாள் இதைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்த போது, ஒரு குரல் அவன் காதில்,” இளவரசனே, நீ அதிசய நாட்டிற்குச் செல். அங்கே நாட்டின் நடுவே இருக்கும அடர்ந்த காட்டில் ஒரு ஆப்பிள் மரம் இருக்கும். அதன் பழங்கள் நீ இதுவரை பார்த்திராத அளவிற்கு அழகாக, மிகப் பெரியவைகளாக இருக்கும். அவற்றில் மூன்று பழங்களைப் பறித்துக் கொண்டுவா. எக்காரணம் கொண்டும் வழியில் பழங்களைப் பிய்த்துப் பார்க்காதே. வீட்டில் வந்து பிய்த்துப் பார்த்தால் நீ விரும்பும் வண்ணம் ஒரு அழகி உனக்கு மனைவியாக்க் கிடைப்பாள்,” என்றது.

இளவரசன் நாட்டிலிருந்து அதிசய நாடு மிக தொலையில் இருந்த்து. போகும் பாதையும் மிகவும் கடினமானது. இருந்தாலும், இளவரசன் துணிச்சலாக அங்கு பயணம் செய்தான். நிலத்தைத் தாண்டி, கடலைத் தாண்டி, அந்த நாட்டிற்குச் சென்று, காட்டினுள் அந்த ஆப்பிள் மரத்தைக் கண்டுபிடித்தான். அதிலிருந்து மூன்று நல்ல பழங்களைப் பறித்தான். இத்தனை கஷ்டப் பட்டு இங்கு வந்திருக்கிறோமே, இந்தப் பழத்தில் அப்படி என்னதான் இருக்கிறது என்று பார்த்து விடுவோம் என்ற ஆவலில், ஒன்றை அங்கேயே பிய்த்துவிட்டான். அதிலிருந்து அவன் கற்பனையில் கண்டது போலவே மிக அழகான ஒரு பெண் வெளியே வந்தாள். இளவரசன் அவளை ஆசையாகப் பார்த்தான். அவளோ அவனைக் கோபமாகப் பார்த்துவிட்டு, மாயமாய் மறைந்து போனாள்.

இந்த பெரிய ஏமாற்றம் இயல்பாகவே இளவரசனை வருத்தப்படச் செய்திருக்க வேண்டும். ஆனால், அவன் எப்போதும் உற்சாகமாக இருப்பவன். கையில்தான் இன்னும் இரண்டு பழங்கள் இருக்கின்றனவே, என்று அந்தப் பெண் மறைந்த்து பற்றி அதிகம் வருந்தவில்லை. நம்பிக்கையோடும். இனி மற்ற பழங்களைப் பிய்த்துவிடக் கூடாது என்ற உறுதியோடும், தன் நாடு திரும்பக் கிளம்பினான். ஆனால் அவனது பொறுமையின்மை அவனது மனஉறுதியை விட அதிகமாக இருந்த்து. இரண்டாவது முறையும் பழத்தைப் பிய்க்க ஆசை வந்த்து.

இந்த முறை அவன் கடலில் ஒரு கப்பலில் பயணம் செய்து கொண்டிருக்கும் போது, பழத்தைப் பிய்த்துப் பார்க்க ஆசை வந்த்து.  உடனே அவன் கப்பல் தளம் முழுவதும் ஒரு வலையை வைத்து மூடிவிட்டான். பின்னர், பழத்தைப் பிய்த்தான். இந்த முறையும் ஒப்பில்லாத அழகுடன் ஒரு பெண் பழத்திலிருந்து தோன்றினாள். அவளும் இளவரசனை வெறுப்பாகப் பார்த்துவிட்டு மறைந்து போனாள். இளவர்சனின் வலை எந்த வகையிலும் அவளை தடுக்கவில்லை. இரண்டு அனுபங்களாலும். இளவரசன் வேறு வழியின்றி பொறுமை காக்க முடிவு செய்தான்.

ஒரு வழியாக இளவரசன் தன் நாடு வந்து சேர்ந்தான். அரண்மனையில் மூன்றாவது பழத்தைப் பிய்த்தான். அதிலிருந்து, முன்னர் வந்த அழகிகளைவிட இன்னும் அழகான, இன்னும் நற்குணம் வாய்ந்த ஒரு பெண் தோன்றினாள். இளவரசன் உடனடியாக அவளை மணந்து கொண்டான். இருவரும் மிகவும் சந்தோஷமாக வாழ்ந்தார்கள்.

சிறிதுகாலம் கழித்து இளவரசன் அண்டைநாட்டோடு போர் புரிய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. மனைவியை விட்டுவிட்டு போர்க்களம் சென்றான். பெரிய ராணியான இளவரசனின் அம்மாவிற்கு தன் புது மருமகளைப் பிடிக்காது. மருமகளைக் கொண்டு, கண்டதுண்டாக வெட்டி அகழியில் வீசிவிட்டாள். பிறகு தனக்கு வேண்டிய ஒரு பெண்ணை இளவரசனின் மனைவியாக நடிக்கச் செய்தாள்.

ராணி மங்கம்மாள் - முழுகதை - Tamil Madhura

போரில் வெற்றி பெற்றுத் திரும்பிய இளவரசன் தன் மனைவி முற்றிலும் வேறு ஆள் போல் இருப்பதைப் பார்த்து திகைத்தான். ஆனால் அவனது அம்மாவோ, அவள்தான் அவனது மனைவி என்று உறுதியாக்க் கூறினாள். ஏதோ மாயத்தால் அவளது உருவம் இப்படி மாறிவிட்டது என்றாள். அவள் வந்த்தே ஒரு மாயத்தால் தானே, அதனால் மாயத்தால் உருவம் மாறவும் வாய்ப்பு இருக்கிறது என்று இளவரசன் சமாதானமடைந்தான்.

ஆனாலும், அவனால் அவனது மனைவியின் பழைய தோற்றத்தை மறக்க முடியவில்லை. மணிக்கணக்காக ஜன்னல் பக்கம் நின்று மணிக்கணக்காக வெறித்துப் பார்த்துக் கொண்டே இருப்பான்.

ஒருநாள் இப்படி பார்த்துக் கொண்டிருந்தபோது,  சிவப்பு, வெள்ளை, கறுப்பு நிற செதில்கள் கொண்டபெரிய மீன் ஒன்று அகழியில் நீந்திச் சென்றது. இளவரசன் அந்த மீனையே பார்ப்பதைப் பார்த்த புது மனைவி, பழைய மனைவியை நினைவு படுத்தும் எல்லாவற்றையும அழித்து விட வேண்டும் என்று நினைத்து அந்த மீனைப் பிடித்து வர உத்தரவிட்டாள். அதை சமைத்து சாப்பிட்டுவிட்டாள்.

சில காலம் கழித்து சிவப்பு, வெள்ளை, கறுப்பு மலர்கள் பூக்கும் ஒரு மரம் அவன் ஜன்னலுக்கு வெளியே வளர்ந்த்து. அந்த மரத்தை யார் வைத்தார்கள், அது என்ன வகை மரம் என்று யாருக்கும் தெரியவில்லை. உண்மையில் அது புது மனைவி சாப்பிட்ட மீன்களின் செதிலகளைத் தூக்கிப் போட்ட இடத்திலிருந்து வளர்ந்த்தாகும்.

அந்த மரத்தைப் பார்த்தாலே இளவரசனுக்கு மனநிம்மதியாக இருந்த்து. அதுவே புது மனைவிக்கு கோபத்தை ஏற்படுத்தியது. அவள் உடனே அந்த மரத்தை வெட்டி எரித்துவிட உத்தரவிட்டாள். சில நாட்களில்  மரத்தை எரித்த சாம்பல் பரவிய இடத்தில் சிவப்புக்கல் மாணிக்கங்கள், வெண்மையான முத்துகள், கறுப்பான கருங்காலி மரம் ஆகியவற்றால் ஆன அற்புதமான மாளிகை எழுந்த்து. இளவரசனுக்குப் பிடித்த மூன்று நிறங்களும் அழகாக்க் கலந்திருந்தன. இளவரசன் அந்த மாளிகையின் வாசலில் போய் நின்றான். அதன் கதவுகளைத் திறக்க முடியவில்லை. அது திறக்கும் வரை அங்கேயே நிற்பது என்று உஉறுதி செய்து கொண்டு நின்றான்.

பல நாட்களுக்குப் பிறகு அவனது உறுதிக்கு பலன் கிடைத்த்து. மாளிகையின் கதவுகள் திறந்தன. உள்ளே ஏராளமான அறைகள் இருந்தன. ஒவ்வொரு அறையாகப் பார்த்துக் கொண்டே வந்தான் இளவரசன். கடைசியில் இருந்த சிறிய அறை ஒன்றில் அவனது அன்பிற்குரிய மனைவி இருந்தாள். அவள் அவனது பொறுமைக்காக அவனை செல்லமாகத் திட்டினாள். இருந்தாலும், அவனது ஆழமான காதலுக்காக அவனை மன்னித்தாள்.

திரும்பவும் ஒன்று சேர்ந்த அந்த காதலர்களுக்கு அதன் பிறகு எந்தத் துன்பமும் நேரவில்லை. அவர்கள் நீண்ட காலம் சந்தோஷமாக வாழ்ந்தார்கள்.

ச.சுப்பாராவ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *