உலகம் அறிந்த இந்திய வானியலாளர் சோமக் ராய் சௌத்ரி (Prof. Somak Raychaudhury)
தொடர் : 47 இன்றைய இந்திய விஞ்ஞானிகள் 100
ஒரு பல்கலைக்கழக துணை வேந்தராக இருந்து கொண்டே தனது வானியல் ஆய்வுகளை தொடர்ந்து கொண்டிருக்கும் இந்தியாவின் மிக பிரபலமான வானியல் இயற்பியலாளர் தான் சோமக் ராய் சௌத்ரி (Prof. Somak Raychaudhury). அசோகா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருக்கும் சோமக் ராய் சௌத்ரி பூனேவிலுள்ள வானியல் மற்றும் வானியல் இயற்பியலுக்கான பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மையத்தின் இயக்குனராகவும் பணியாற்றி வருகிறார். இங்கிலாந்திலுள்ள பர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் இவர் விஜயம் செய்யும் ஆராய்ச்சியாளராக இணைந்திருக்கிறார். பிரபஞ்ச விரிவாக்கம் பிரம்மாண்ட கருந்துளைகள் போன்றவற்றை குறித்த விஞ்ஞானி ராய் சௌத்ரியின் கண்டுபிடிப்புகள் இன்று உலகெங்கும் பேசப்படுகின்றன.
மிக பெரிய கருந்துளைகள் பற்றிய இவரது பங்களிப்பு பூவி ஈர்ப்பு லென்சிங் என்கிற தனிப்பட்ட துறையை தோற்றுவித்துள்ளது. பிரபஞ்சத்தின் கோள்கள் நட்சத்திரங்கள் நட்சத்திர கூட்டங்கள் இவையாவுமே முறைப்படி அமைக்கப்பட்டுள்ளன. உலகிலேயே உயர்ந்த இடத்தில் சூப்பர் கிளஸ்டர்ஸ் என்றழைக்கப்படும் பிரம்மாண்ட நட்சத்திர கூட்டங்கள் உள்ளன. இவை நூற்றுக்கணக்கான மெகா ஃபார் செக்ஸ் அளவீடு கொண்டவை. ஒரு ஃபார் செக்ஸ் அளவீடு என்பது 30.9 ட்ரில்லியன் கிலோமீட்டர்கள் ஆகும். இந்த பிரம்மாண்டமான அமைப்புகளை ராய் சௌத்ரி ஆய்வு செய்து வருகிறார். இந்த சூப்பர் கிலஸ்டர் நட்சத்திர கூட்டங்களுக்கு உள்ளே மேலும் மேலும் நூற்றுக்கணக்கான நட்சத்திர கூட்டங்கள் உள்ளன. இந்த ஒவ்வொரு நட்சத்திர கூட்டமும் நூற்றுக்கணக்கான மேலும் பல நட்சத்திர கூட்டங்களைக் கொண்டுள்ளன. இவற்றில் பில்லியன் கணக்கான நட்சத்திரங்கள் உள்ளே அமைந்துள்ளன. இந்த ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் கோள்களும் துணைக்கோள்களும் உண்டு. நமக்கு மிக அருகாமையிலுள்ள சூரியன் பால் வழி மண்டலம் என்றழைக்கப்படும் நட்சத்திர கூட்டத்தில் இருக்கும் 400 பில்லியன் நட்சத்திரங்களில் ஒன்று அப்படியானால் ராய் சௌத்ரினுடைய ஆய்வகம் என்பது எத்தனை பெரியது என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும். இந்த பால் வழி மண்டலத்தை நாம் லோக்கல் குரூப் என்று அழைக்கின்றோம். இந்த பிரமாண்ட நட்சத்திரக் கூட்டத்தில் 500 சிறிய நட்சத்திர கூட்டங்கள் உள்ளே உள்ளன. இந்த சூப்பர் கிளாஸ்ருக்குள் இருக்கும் ஒரு கோள பூமி என்பதாகும்.

இந்த நட்சத்திர கூட்டங்களுக்கோ அவற்றின் உள்ளே உள்ள நட்சத்திரங்களுக்கு இடையில் உள்ள இடைவெளி என்பது பிரம்மாண்டமாகும். உதாரணமாக ப்ராக்ஸிமா செஞ்சுரி என்கிற நம்முடைய சூரியனுக்கு அருகாமையிலுள்ள நட்சத்திரம் என்பது 40 ட்ரில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்த தூரத்தை நீங்கள் நடப்பது என்று முடிவு செய்தால் நடந்து அந்த நட்சத்திரத்தை அடைவதற்கு உங்களுக்கு 215 மில்லியன் ஆண்டுகள் ஆகும். பிறகு ராய் சௌத்ரி போன்ற வானியலாளர்கள் இவ்வளவு தொலைவில் இருக்கின்ற பொருள்களை எப்படி அறிந்து ஆய்வு செய்கிறார்கள். ஒருவர் நேரில் சென்று ஆய்வு செய்ய முடியாத ஒன்றை இத்தனை தொலைவில் இருந்து கொண்டு எப்படி துல்லியமாக அறிவிக்கிறார்கள். அதற்கு நூற்றுக்கணக்கான வழிமுறைகள் உள்ளன. அவற்றை நன்றாக அறிந்து ஆய்ந்து எந்த நட்சத்திரத்துக்கு எந்த வழி முறையை பயன்படுத்த வேண்டும் என்பதை தெளிவாக முடிவு செய்து அவர்கள் பணியாற்றுகிறார்கள்.
ராய் சௌத்ரி என்னும் வானியலாளரின் ஆய்வுத்துறை இந்த பிரபஞ்சம் எப்படி உருவாகி பரிணாம வளர்ச்சி கண்டது என்பது குறித்தது ஆகும் விண்மீன்களின் பரிணாம வளர்ச்சி ஐந்தாவது என்பதை ஆய்வு செய்வதோடு, மற்றும் அண்ட வலையில் சூப்பர் கிளஸ்டர் இழைகள் பற்றிய இவருடைய ஆய்வுகளும் உலகப் பிரசித்தி பெற்றவை. எக்ஸ் ரே தொலைநோக்கி ரேடியோ அலை தொலைநோக்கி அக சிவப்பு மற்றும் புற ஊதா கண்காணிப்புகளை பயன்படுத்துகிறார் சோமக் ராய் சௌத்ரி (Prof. Somak Raychaudhury). இத்தனையையும் பயன்படுத்த தெரிந்த உலக அளவிலான வல்லுநர் என்றால் ஒரு சிலரில் இவரும் ஒருவர் இந்த அனைத்து வகையான அமைப்புகளையும் பயன்படுத்தி விண்மீன்களின் மாற்றங்கள் அவற்றின் உள்ளூர் மற்றும் உலகளாவிய சூழலுடன் எவ்வாறு தொடர்புடையது என்பதை ராய் சௌதுரி புரிந்து கொண்டார். வானியல் தரவு செயலாக்கதிற்கான இயந்திர கற்றல் வழிமுறைகளை உருவாக்குவதிலும் அவர் ஈடுபட்டார். இந்த கருப்பொருட்கள் குறித்து சக மதிப்பாய்வு செய்யப்பட்ட அறிவியல் இதழ்களில் என்பதுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை அவர் வெளியிட்டார்.
நட்சத்திரங்கள் எப்படி உருவாகின்றன, அவை எப்படி பரிணாமம் அடைந்து இன்றைய நிலையை அடைந்தன.. பல வழிகளில் அவை உருவாகின்றன. நட்சத்திரங்கள் உருவாகும் பகுதிகளில் வாயு மற்றும் தூசியின் அடர்த்தியான மேகங்களில் இருந்து ஆரம்ப பிறப்பு நடக்கிறது. ஒரு நட்சத்திரம் உருவாகும் விதம் அதன் எதிர்கால அமைப்பையும் வாழ்க்கையையும் தீர்மானிக்கிறது. தனக்கு தானே சுருங்கி போதுமான அளவு வெப்பமடைந்தவுடன் அது தன் மையத்தின் ஹைட்ரஜனை ஹீலியமாக இணைக்க தொடங்குகிறது. இந்த காலகட்டத்தில் தான் அது முக்கிய வரிசை நட்சத்திரமாக மாறுகிறது. இதன் அடிப்படைகளை உலகிற்கு விளக்குவது தான் சோமக் ராய் சௌத்ரியின் கோட்பாடாகும். அவர் சிவப்பு ராட்சச நட்சத்திரங்களை ஆய்வு செய்தார். ஒரு நட்சத்திரத்தின் ஹைட்ரஜன் எரிபொருள் முழுவதும் தீர்ந்துவிடுவதால் அது விரிவடைந்து சிவப்பு நிறமாகி சிவப்பு ராட்ச நட்சத்திரமாக மாறுகிறது.
சோமக் ராய் சௌத்ரி ஆய்வுகள் சூப்பர் நோவா என்றழைக்கப்படும் அடுத்த வகை நட்சத்திரங்களை ஆய்வு செய்தது. ஒரு நட்சத்திரம் போதுமான அளவு பெரிதாக இருந்தால் அதனுடைய மையம் சரிந்து மீண்டும் எழுகிறது. அது ஒரு அதிர்ச்சி அலையை நட்சத்திர முழுவதும் உருவாக்குகிறது. ஒரு சூப்பர் நோவா நட்சத்திரத்தை வெடிக்கும் நட்சத்திரத்தின் மையப் பகுதியாக மாற்றி நியூட்ரான் நட்சத்திரம் அல்லது கருந்துளையாக அந்த நட்சத்திரம் மாறுவதற்கு இப்படியான செயல்பாடுதான் காரணம் என்பது சோமக் ராய் சௌத்ரி அவர்களின் கண்டுபிடிப்பு.
வானில் நட்சத்திரங்கள்ல் பேரழிவு என்பது மறுசுழற்சி முறையில் மீண்டும் சூப்பர்நோவாக்களை உற்பத்தி செய்யும் நிகழ்வாக எப்படி மாறுகிறது என்பது சோமக் ராய் சௌத்ரினுடைய மிக அதிசயமான முன்வைப்பு சூப்பர் நோவாக்கள் மற்றும் பிற நட்சத்திர நிகழ்வுகளின் பரு பொருள் எதிர்கால மூலக்கூறு மேகங்களை வளப்படுத்தி புதிய தலை முறை நட்சத்திரங்களை உருவாக்குகின்றன என்பது அவருடைய ஆய்வுகளின் முடிவாகும்.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் பொது சார்பியல் கோட்பாடு ஈர்ப்பு லென்ஸ் என்கிற ஒன்றை விவரித்தது. ஈர்ப்பு லென்ஸ் என்பது விண்மீன் திரள்கள் அல்லது ஒரு துகள் போன்ற வான் பொருள் ஆகும். இது பார்வையாளர்களை நோக்கி பயணிக்கும் பொழுது தொலைதூர மூலத்திலிருந்து ஒளியை வளைத்து விடுகிறது. ஈர்ப்பு லென்சிங் என்பதன் அளவு ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் பொது சார்பியல் கோட்பாட்டால் விவரிக்கப்படுகிறது.. இந்த விஷயத்தில் ஐன்ஸ்டீனின் சார்பியல் ஐசக் நியூட்டனின் இயற்பியலோடு இணைத்து ஒளியை துகள்களாக கருதி அதன் அடிப்படையில் ஐன்ஸ்டீன் வளையம் என்று அழைக்கப்படுகின்ற ஒன்று எப்படி உருவாகிறது என்பதை ராய் சௌதுரி (Prof. Somak Raychaudhury) தன்னுடைய மிகப் பிரபலமான ஆய்வுக் கட்டுரை ஒன்றில் விவரித்தார். தொலைவில் இருக்கும் ஒரு நட்சத்திரத்தை பார்ப்பதற்கு நீங்கள் தொலைநோக்கியை பயன்படுத்துவதாக வைத்துக் கொள்வோம். உங்கள் தொலைநோக்கிக்கும் நட்சத்திரத்துக்கும் இடையே இருக்கின்ற துகள்கள் ஒரு லென்ஸ் ஆக மாறி அந்த நட்சத்திரத்தின் ஒளியை வளைய வைத்து அல்லது வேறு விதத்தில் உருப்பெருக்கியோ உங்களுக்கு வழங்குவது தான் ஈர்ப்பு லென்ஸ் என்று அழைக்கப்படுகிறது.

சோமக் ராய் சௌத்ரி கொல்கத்தாவில் பிறந்தவர் புனித சேவியர் பள்ளியில் கல்வி கற்ற பொழுது மேற்கு வங்கத்தின் பள்ளி இறுதி பொதுத்தேர்வில் இரண்டாம் இடம் மாநில அளவில் பெற்று கல்லூரி ஸ்காலர்ஷிப் வழங்கப்பட்டவர். சென் சேவியர் கல்லூரியிலேயே இணைந்து இளம் கலை பட்டத்திற்கு இயற்பியலை எடுத்துக் கொண்டவர். அதன் பிறகு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் மிக பிரபலமான ட்ரினிட்டி கல்லூரியில் அவர் லக்ஸ் இன்னும் உதவித்தொகை பெற்று தன் உயர்கல்வியை முடித்தார். அங்கிருந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் சென்றார், அங்குள்ள சர்ச்சில் கல்லூரியில் வானியல் இயற்பியலில் தன்னுடைய முனைவர் பட்ட ஆய்வை அவர் மேற்கொண்டார். அங்கே அவருக்கு ஐசக் நியூட்டன் மாணவர் இன்னும் அந்தஸ்து வழங்கப்பட்டது.

தன்னுடைய முனைவர் பட்ட ஆய்வின்போதே அவர் ஸ்மித் பரிசை வென்று உலகின் கவனத்தை ஈர்த்தார். உலகெங்கிலும் உள்ள ஆறு வானியல் இயற்பியல் தொலைநோக்கி மையங்களை ஆண்டுதோறும் விஜயம் செய்யும் சோமக் ராய் சௌத்ரி தான் இந்தியாவில் இருந்துகொண்டு திரட்டிய தரவுகளை சரிபார்ப்பதற்கு தன் விஜயங்களை பயன்படுத்திக் கொள்கிறார். MASSACHUSETTS சந்திரா எக்ஸ் ரே ஆய்வுக் கூடத்தில் கிலஸ்டர் நட்சத்திரங்கள் என்றழைக்கப்படும் வானியலின் மிக முக்கியமான ஒரு நட்சத்திர கூட்டத்தை தொடர்ந்து ஆய்வு செய்து வரும் ராய் சௌதுரி உலக வானியலாளர்கள் பட்டியலில் முதல் ஐந்து பேரில் ஒருவராக வைத்து போற்றப்படுகிறார் என்பது நமக்கெல்லாம் பெருமை. சோமக் ராய் சௌத்ரி (Prof. Somak Raychaudhury) ஒரு விஞ்ஞானி மட்டுமல்ல அவர் ஒரு அற்புதமான பேராசிரியர் தலைசிறந்த வங்காள மொழி கவிஞர் என்பது குறிப்பிடத்தக்கது.
கட்டுரையாளர் :
தொடரின் முந்தய கட்டுரையை படிக்க கிளிக் செய்யவும்: உலகம் போற்றும் இந்திய தாவரவியல் நிபுணர் கே.எஸ் மணிலால் (K.S Manilal)
ஆயிஷா இரா. நடராசன் எழுதிய நூல்களைப் பெற கிளிக் செய்யவும்: thamizhbooks.com
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


Pingback: கே.என்.கணேஷ் (K.N.Ganesh)