“பேதில பொய்றுவ” –
( வாந்தி அல் பேதி எடுத்து மரணமடையக் கடவாய் – என்ற சாபம்)
இது பரணிமண்ணின் ஒரு வசவுச்சொல்.
இதன் வரலாற்றைப் பார்ப்பதற்கு முன்னர்.
கும்பமேளா பற்றியும் அறிவோம்.
இந்து வேத ஜோதிட இயலின்படி ஒவ்வொரு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பைசாகி மாதத்தில் சூரியனின் ஐந்தாவது கோளான வியாழன் கும்பம் ராசிக்குள் நுழையும்போது ஹரித்துவாரில் ( தற்பொதய உத்திரகான்ட் மாநிலத்திலுள்ளது ) கும்பமேளா நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.# எனப் பதிவுசெய்கிறது. 1759 ஆம் ஆண்டு எழுதப்பட்ட “சஹார்குல்சான்” ( “The Chahar Gulsan” ) என்ற நூல். கடைசிக் கும்பமேளா 2010 ஆம் ஆண்டு நடைபெற்று, அடுத்த கும்பமேளா 2021 ஆம் ஆண்டு நடத்தப்படவேண்டும் என்ற அறிவிப்போடு முடிந்தது.
1783 ஆம் ஆண்டும் ஹரித்வார் நகரில் கும்பமேளா கொண்டாடப்பட்டது. இந்தியப் புனிதப் பயணிகர்களோடு அரேபிய, ஆசிய, ஐரோப்பிய வணிகர்களுமாக சுமார் 10 லட்சம் முதல் 20 லட்சம் வரை மக்கள் அந்த மகாத் திருவிழாக் கொண்டாத்தில் பங்கேற்றனர் என்று பதிவுசெய்கிறது வரலாறு.
ஹரித்வார் கும்பமேளா
திருவிழாவின் முதல் நாளிலேயே காலராத் தொற்று ஏற்பட்டு, எட்டு நாட்களில் 20, 000 வரை மக்கள் மரணமடைந்தனர். ஆனால் 12 ஆம் நாள் விழா நிறைவுபெறும் நாளில் காலராத் தொற்றால் பாதிக்கப்பட்ட அனைவரும் குணப்படுத்தப்பட்டனர். எனவே ஹரித்வார் நகரத்திலேயே காலராத் தொற்றை உருவாக்கிய பேக்டீரியாக்களுக்குச் சமாதி கட்டப்ட்டது. இதைக் காலரா எபிடமிக் ( Epidemic ) என்கிறோம்.
இதிலிருந்துதான், தனக்குத் துரோகம் இழைத்தவர்களை “பேதில போய்ருவ” என்று சாபமிடுவது போன்ற வசவுச் சொல் உருவாக்கப்பட்டிருக்கலாம்.
இதே காலராத் தொற்று 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் தொடங்கி, சர்வதேசப் பெருந்தொற்றாக உருக்கொண்டுத் தொடர்ந்து 24 வருடங்களில் ( 1899 – 1913 ) The first Six Cholera Pandemic ஆகப் பெயர் பெற்று பெயருக்கேற்ப 1.5 கோடி மக்களை மரணமடைய வைத்துவிட்டு விடைபெற்றது. இப்பல்லாம் வாந்தி பேதி ஏற்பட்டால் தானே மருந்துக்கடையில் சொல்லி மருந்துவாங்கிக் குணம்பெறும் நிலைக்கு வந்துவிட்டோம்.
எனவே கரோனா வைரஸ் ( COVID 19 ) தொற்றையும் வென்று வெளிவருவோம்.
வரலாற்றின் பக்கங்களில், கரோனாவைவிடவும் வேகமாகப் பரவும் நோய்களும் இருந்திருக்கின்றன. அவைகளையும் வென்றிருக்கிறோம்.
கோவிட் – 19 ஐ போல, நம் வரலாற்றில் சர்வதேசப் பெருந்தொற்றுப் பாதிப்பாக அறிவிக்கப்பட்ட சில நோய் பாதிப்புகள், அவை ஏற்பட்ட ஆண்டு, அவை ஏற்படுத்திய மரணங்கள் போன்றவற்றின் விவரம்.
வருடம் – மரணங்கள் – வைரஸ் ( வரிசை 7 – மட்டும் காலரா பேக்டீரியா )
என்ற வரிசைப்படி.
ஆன்டனைன் பிளேக்
1.கி.பி 165 – 180 – மரணம் 50 லட்சம், ஆன்டனைன் பிளேக்( Antonine Plaque ) வைரஸ் –
ஜஸ்டினியன் பிளேக்
2. 541 – 542 – 3.5 கோடி. ஜஸ்டினியன் பிளேக். ( Plaque of Justinian ),
3. 735 – 737 – 10 லட்சம். ஜப்பானிய பெரியம்மை ( Japanese Smallpox ),
4. 1350 – 20 கோடி – ப்யூபானிக் பிளேக் ( The Black Death or The Pestinence, Great Bubonic Plaque ),
The Great Plaque of London
5. 1665 – 5.6 கோடி பெரியம்மை ( The Great Plaque of London),
6. இதே வருடத்தில் கோடைகாலத்தில் இதே பெரியம்மை 30 லட்சம் மரணங்கள்.
கொசுறு தகவல் : ( லண்டனில் பெருந் தீ – 1966 – The Great Fire of London ),
காலராத் தொற்று
7. 1899 – 1923 – 1.5 கோடி. காலராத் தொற்று – பாக்டீரியா ( The first Six Cholera Pandemic ),
8. 1855 – 59 – 1.2 கோடி ( இந்தியா மட்டும் சுமார் ஒரு கோடி )மூன்றாம் பிளேக் ( Third Plaque )
9. 1889 – 1900 – 1.5 லட்சம் ரஷ்யன் ஃப்ளூ ( Russian Flu or Asiatic Flu )
ஸ்பெய்ன் ஃப்ளூ
10. 1918 – 19 – 5 கோடி. ஸ்பெய்ன் ஃப்ளூ ( Spanish Flu ),
ஆசிய ஃப்ளூ
11. 1957 – 58 – 11 லட்சம் ஆசிய ஃப்ளூ ( Asia Flu) – the Influenca A ( H2N2 )
12. 1968 – 70 – 10 லட்சம், ஹாங்காங் ஃப்ளூ ( Hong Kong Flu )
13.1981 – 2.2 கோடி HIV / AIDS.
HIV – human Immunodeficiency Virus,
AIDS – Acquired Immune Deficiency Syndrome.
14. 2002 – சார்ஸ் – 774 ( SARS – Severe Acute Respiratory Syndrome ),
15. 2009 – 19 – பன்றிக்காய்ச்சல் – 2 லட்சம் ( Swine Flu ( H1N1 )
16. 2012 மெர்ஸ் வைரஸ் 27 நாடுகள்- 858 ( MERS – CoV )
17. MERS – Middle East Respiratory Syndrome, CoV – Corona Virus.
எபோலா வைரஸ்
18. 2014 – எபோலா வைரஸ் 11,323.
19. COVID 19.
இதுவரையில் உலகம் முழுவதிலும் 5.5 லட்சம் மக்களைப் பாதித்திருக்கிறது.
199 நாடுகளை அச்சுறுதேதி வரும் கரோனா வைரஸ் பாதிப்பானது உலக வரைபடத்தில் மீதம் வைத்திருப்பது அன்டார்டிக் கண்டத்தை மட்டும்தான்.
படம் 1.
“ல பெட்டி ஜர்னல் “(Le Petit Journal ( The Small Journal ) இதழில்
வெளிவந்த வரைபடம்.
Drawing of Death bringing the cholera,
2.Hand bill from the New York City Board of Health, 1832. The outdated public health advice demonstrates the lack of understanding of the disease and its actual causative factors.
– கடயநல்லூர் பென்ஸி முகநூல் பக்கத்திலிருந்து.