உலகம் போற்றும் இந்திய வண்ணத்துப்பூச்சியியல் நிபுணர் ஹரிஷ் கோன்கர் (Harish Gaonkar)
தொடர் 66 : இன்றைய இந்திய விஞ்ஞானிகள் 100
வண்ணத்துப் பூச்சிகள் குறித்த துறை, பூச்சி இயலிலேயே தனிப்பெரும் தொகுதியாக விளங்குகின்றது. இந்த துறையில் வல்லுநரை நாம் LEPIDOPTERIST என்று ஆங்கிலத்தில் அழைக்கிறோம். இந்த துறை குறித்த இந்திய நிபுணர் தான் ஹரிஷ் கோன்கர். மேற்குத் தொடர்ச்சி மலைகளின் பட்டாம்பூச்சிகளின் தொகுப்பை முற்றிலும் ஆய்வுசெய்து நம்முடைய தென்னிந்தியாவின் 330 வண்ணத்துப்பூச்சிகளின் இனங்களைப் பட்டியலிட்டு 1996 ஆம் ஆண்டு அவர் வெளியிட்டார்.
கர்நாடகாவிலுள்ள அனேஹள்ளி என்னும் ஊரில் 1946இல் அவர் பிறந்தார். பாங்கிகோட்லா என்னும் ஊரில் ஆனந்தஷ்ரம் உயர்நிலைப் பள்ளியில் தன் பள்ளிக் கல்வியை முடித்து விடுமுறையிலிருந்த பொழுது மைசூர் அரண்மனையின் தோற்றத்தில் இருந்த வண்ணத்துப்பூச்சிகளால் கவரப்பட்டார். தீவிரமாக வண்ணத்துப்பூச்சிகளின் அடிப்படை இனங்களைச் சேகரிக்கத் தொடங்கினார். பள்ளிக் கல்வி முடிந்து கல்லூரி போவதற்குள் ஆயிரக்கணக்கான வண்ண பூச்சிகளின் மாதிரிகள் அவரிடமிருந்த.
பொழுதுபோக்காக ஆர்வத்தோடு தொடங்கிய ஒரு விஷயம் கல்வியாக மாற்றுவதில் வியப்பென்ன ஹரீஷ் கோன்கரின் ஆர்வம் காரணமாக வண்ணத்துப்பூச்சிகள் குறித்து ஒரு கல்வி உலகில் எங்காவது இருக்கிறதா என்கிற தேடலை மேற்கொண்டு கல்லூரியில் சேராமலேயே இரண்டு ஆண்டுகள் இந்தியா முழுவதும் வண்ணத்துப் பூச்சிகளைத் தேடி அவர் பயணித்தார். பட்டாம்பூச்சிகளின் இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் லண்டனில் உள்ளது அங்கு ஒரு சாதாரண சான்றிதழ் கல்வியில் இணைந்து பிறகு அங்கேயே பிடிவாதமாகப் பல்லுயிர் தகவல் குறித்த பட்டப்படிப்பை முடித்தார்.
பட்டாம்பூச்சிகள் என்பவை பூச்சிகள் இனத்தின் லிபிடோ டைரோன் என்பதுதான் துணைப்பிரிவான RHOPALOCERA சேர்ந்த இறக்கைகள் கொண்ட பூச்சியினம் ஆகும். பெரிய பெரும்பாலும் பிரகாசமான வண்ண இறக்கைகள் மூலம் வகைப்படுத்தப்படுகின்றன இவை புவியில் 101 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றியவை என்பது விஞ்ஞானி ஹரீஷ் அவர்களின் கண்டுபிடிப்பாகும். பட்டாம்பூச்சிகள் நான்கு நிலை வாழ்க்கை சுழற்சியைக் கொண்டுள்ளன இவற்றைப் பற்றி நீங்கள் உங்கள் பள்ளி பாடத்தில் படித்திருப்பீர்கள். ஹலோமேடவாலஸ் வகைப் பூச்சிகளைப் போலவே தாவரத்தின் மீது முட்டையிடுகின்றன அவற்றின் முட்டைகள் பொரியும் பொழுது. கம்பளிப் பூச்சிகள் எனப்படும் லார்வாக்கள் உணவளிக்கின்றன. முழுமையாக வளர்ச்சி அடையும் பொழுது உரு மாற்றம் முடிவடைகிறது பியூபல் தோல் பிளவு படுகிறது. வயது வந்த பூச்சி வெளியே வந்து அது உலர தன்னுடைய இறக்கைகளை விரிவுபடுத்திப் பறக்கிறது
ஆனால் எல்லா வண்ணத் பூச்சி இனத்திற்கும் இது ஒரே போல நடப்பதில்லை என்பது. விஞ்ஞானி. ஹரீஷ் அவர்களின் கண்டுபிடிப்பாகும். மேற்குத் தொடர்ச்சி மலையின் பட்டாம்பூச்சிகளின் தொகுதியில் 16 வகையான பட்டாம்பூச்சிகள் இந்த வகையான சுழற்சியை அனுபவிப்பதில்லை என்பதை அவர் கண்டுபிடித்து வெளியிட்டிருக்கிறார் கோல்கர்பர்லி எனும் ஊரிலுள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் இது குறித்த ஆய்வுகளை அவர் மேற்கொண்டார்.. இந்த வகை விநோத பட்டாம்பூச்சிகள் இழைகளில் தங்கள் முட்டைகளை இடாமல் புதர்களின் உள்ளார்ந்த தரையில் தன்னுடைய முட்டைகளைப் பதிக்கின்றன.
பட்டாம்பூச்சிகள் அழகான உயிரினங்கள் மட்டுமல்ல நம்முடைய சூழலியலின் மிக முக்கியமாக வேலைகளை அவை செய்கின்றன சில வகை பட்டாம்பூச்சிகள் முக்கியமான மகரந்த சேர்க்கை விஷயத்தில் தேனீக்களைப் போல இல்லாமல் அவை மகரந்தத் துகள்களை வெகு தூரத்திற்கு எடுத்துச் சென்று விநியோகித்து தாவரங்களுக்கு உதவுகின்றன. அவற்றில் இந்தியாவின் பட்டாம்பூச்சிகள் தனித்தன்மை வாய்ந்தவை பெங்களூரு பன்னர் கட்டா உயிரியல் பூங்காவில் இந்தியாவின் முதல் வண்ணத்துப்பூச்சி பூங்கா அமைக்கப்பட்ட பொழுது ஹரீஷ் பெரும் பங்காற்றினார். வண்ணத்துப்பூச்சிகள் உங்களைத் தேடி வர வேண்டுமென்றால் அதற்குப் பொருத்தமான தாவரங்களை உள்ளடக்கிய இயற்கை சுற்றுச் சூழல் அமைய வேண்டும் அதேபோல புனேவில் ஆரண்யேஸ்வர கோவிலில் ஒரு பட்டாம்பூச்சி தோட்டம் உள்ளது 40-45 வகையான பட்டாம்பூச்சிகள் இங்கு உள்ளன இந்த பூங்காவின் சிறப்பு என்னவென்றால் இந்த வண்ணத்துப்பூச்சிகள் பொதுவாக இங்கு வருவதில்லை இந்த பூங்காவின் வடிவமைப்பு காரணமாக ஈர்க்கப்பட்டு அங்கு வண்ணத்துப்பூச்சிகள் வரத்தொடங்கி அங்கேயே தங்கிவிட்டன
உலக உணவு சங்கிலியின் போக்கை மாற்றிய பெருமைக்கு உரியவை தேனிகளை அடுத்து பட்டாம்பூச்சிகள் என்று அழைக்கப்படும் வண்ணத்துப் பூச்சிகள் தான் தமிழகத்தின் திருச்சியில் ஆசியாவின் மிகப் பெரிய பட்டாம்பூச்சி பூங்கா உள்ளது இந்த வண்ணத்துப்பூச்சி பூங்காவில் அறிஞர் ஹரீஷ் பட்டியலிட்ட பெரிய நீலப்புலி வண்ணத்துப்பூச்சி பலாவாகச் சுற்றித் திரிவதைப் பார்க்கலாம். இந்த வண்ணத்துப்பூச்சிக்கு ஒரு சிற்பம் அங்கே வடிக்கப்பட்டு உள்ளது 35 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பிரம்மாண்ட பூங்கா சூழலியல் மற்றும் உலக உணவு சங்கிலிக்கு வண்ணத்துப்பூச்சிகளின் பங்களிப்பு குறித்த பல முக்கிய அம்சங்களைப் பாடமாகக் கற்பிக்கும் இடமாக உள்ளது.
உலகில் உள்ள பட்டாம்பூச்சி இனத்தில் 65% இந்தியாவில் இருப்பதாக அறிஞர் ஹரிஷ் அவர்களின் கண்டுபிடிப்பு சொல்கிறது இந்தியாவில் மட்டும் 1500 வெவ்வேறு இனங்களைச் சேர்ந்த வண்ணத்துப்பூச்சிகள் உள்ளன. வண்ணத்துப்பூச்சிகளின் விஞ்ஞானியான ஹரிஷ் டென்மார்க்கில் கோபன்ஹேகனில் உள்ள பல்கலைக்கழகத்தின் விலங்கியல் அருங்காட்சியகத்தில் ஆயிரக்கணக்கான வண்ணத்துப் பூச்சிகளின் மாதிரிகளைச் சேகரித்து அங்கு தனக்கென்று ஒரு ஆய்வகத்தைக் கொண்டிருக்கிறார். இந்தியாவிற்கு அவ்வப்போது வருகை தரும் இந்த மாபெரும் விஞ்ஞானி மேற்குத் தொடர்ச்சி மலைகளில் தொடர்ந்து பயணித்து வண்ணத்துப்பூச்சிகளின் வாழ்க்கையைச் சிறப்புற ஆய்வுக்கு உட்படுத்தி உலகின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
இலங்கையில் இருந்து நம்முடைய மேற்குத் தொடர்ச்சி மலை வரையிலான பட்டாம் பூச்சிகளையும் தட்டாம்பூச்சிங்களையும் சேர்த்தே ஆய்வுக்கு உட்படுத்தி இந்த இரண்டு உயிரினங்கள் தொடர்பான பெயரிடுதல் எனும் பிரம்மாண்ட வேலையைச் செய்து 33 ஆண்டுகள் கடுமையாக உழைத்து அதற்குரிய தரவுகளை வெளியிட்டவர் விஞ்ஞானி ஹரிஷ். பட்டாம்பூச்சிகளுக்கு ஆங்கில பெயர்களை வழங்குவதற்கான தொடக்கம் பத்தொன்பதாம் நூற்றாண்டில் மத்தியில் கொண்டுவரப்பட்டது.
மோர்மோர்ங்கள் எனும் வகையிலான வண்ணத்துப்பூச்சி ஒருதார முறையை அடிப்படையாகக் கொண்டதாகவும் பாபுலியோ கலிக்ஸ் என்னும் வகை வண்ணத்துப்பூச்சி பலதார மணத்தைக் கொண்டது. இப்படிப் பல அரிய தகவல்களை நாம் விஞ்ஞானி ஹரிஷிடம் இருந்து பெறுகிறோம். இந்தியா பாகிஸ்தான் பூட்டான் பங்களாதேஷ் மற்றும் சிறிலங்கா ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய தெற்கு ஆசிய நாடுகளில் வண்ணத்துப்பூச்சிகளின் வாழ்க்கை குறித்த இவருடைய தீவிரமான ஆய்வுகள் இன்று உலகங்களும் முன்னுதாரணமாகப் பேசப்படுகின்றன என்பது நமக்குப் பெருமை.
கட்டுரையாளர்:
தொடரின் முந்தய கட்டுரையை படிக்க கிளிக் செய்யவும்: உலகம் போற்றும் இந்திய வானியல் இயற்பியலாளர் கரன் ஜானி (#Dr. Karan Jani)
ஆயிஷா இரா. நடராசன் எழுதிய நூல்களைப் பெற கிளிக் செய்யவும்: thamizhbooks.com
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
பட்டாம்பூச்சிகள் குறித்த ஆய்வை இலங்கையில் இருந்து நம்முடைய மேற்குத் தொடர்ச்சி மலை வரையிலான தட்டாம்பூச்சிங்களையும் சேர்த்தே ஆய்வுக்கு உட்படுத்தி இந்த இரண்டு உயிரினங்கள் தொடர்பான பெயரிடுதல் எனும் பிரம்மாண்ட வேலையைச் செய்து 33 ஆண்டுகள் கடுமையாக உழைத்து அதற்குரிய தரவுகளை வெளியிட்டு உலகத்திற்கே முன்னோடியாக சிறந்து விளங்கும் நமது விஞ்ஞானி ஹரிஷ் அவர்களின் உழைப்பு பிரமிக்கத்தக்கது. விஞ்ஞானி ஹரிஷ் அவர்களுக்கு உளமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
பெரும்பாலும் யாருமே அறிந்திறாத நம்நாட்டு பட்டாம்பூச்சி விஞ்ஞானியை நமக்கெல்லாம் அறிமுகப்படுத்திய முனைவர். ஆயிஷா.நடராசன் ஐயா அவர்களுக்கு அன்பு நிறை இனிய நல்வாழ்த்துக்கள்.
Pingback: உலகம் அறிந்த இந்திய கடல் ஆய்வாளர் அதிதி பந்த் - Book Day