உலகம் போற்றும் இந்திய வேதி பொறியியல் துறை விஞ்ஞானி முகமது காஜா நசீருதீன் (Mohammed Khaja Naseeruddin)
தொடர் : 43 இன்றைய இந்திய விஞ்ஞானிகள் 100
மூலக்கூறு பொறியியல் என்பது இன்றைய இருபத்தோராம் நூற்றாண்டின் மிக முக்கியமான ஒரு வேதித் துறை ஆகும் இந்த வேதித் துறையின் வித்தகர் இந்தியாவின் முகமது காஜா நசிருதீன்.. தற்போது பரவலாக பயன்படுத்தப்பட்டு வரும் LED என்று அறியப்படும் ஒளி உமிழும் டயோட்கள் முகமது காஜா நஜீமுதீன் இந்த உலகிற்கு கொடுத்த அறிவியல் கொடையாகும்.. சூரிய மின்கலங்களின் நவீன தயாரிப்புகளான சாய உணர்திறன் கொண்ட சூரிய மின்கலங்களை உருவாக்குவதிலும் உலக அளவில் பெயர் பெற்றவர் நம்முடைய இந்திய விஞ்ஞானி முகமது காஜா நசீருதீன்.
இவர் ஆந்திராவில் உள்ள தும்பூர் எனும் கிராமத்தில் 1957 ஆண்டு பிறந்தார். ஹைதராபாத்தில் பள்ளிக் கல்வியை முடித்து உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் வேதியியல் பாடத்தில் இளங்கலை பட்டமும் முதுகலை பட்டமும் பெற்றார். அதே பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வுக்காக மூலக்கூறு வேதியியலை எடுத்துக்கொண்டார். இரண்டு ஆண்டுகள் உஸ்மானியா பல்கலைக் கழகத்திலேயே விரிவுரையாளராக அவர் பணியாற்றினார். பின்னர் நம் இந்தியாவில் பாவ்நகர் என்னும் ஊரில் இருக்கும் மத்திய உப்பு மற்றும் கடல் வேதி ஆராய்ச்சி நிறுவனத்தில் சேர்ந்தார். ஸ்விட்சர்லாந்தில் உள்ள எக்கோல் பாலிடெக்னிக் (ECOLE POLYTECHNIQUE FEDERALE DE LAUSANNE) எனும் மிகப் பிரபலமான அறிவியல் ஆய்வு நிறுவனத்தில் அவர் 1987 ஆண்டு இணைந்தார். இது ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் போன்ற அறிஞர்கள் ஒரு காலகட்டத்தில் இணைந்து பணியாற்றிய அற்புத கல்வி நிறுவனம் ஆகும்.

PEROVSKITE என்று அழைக்கப்படும் சாய உணர்திறன் கொண்ட சூரிய மின்கலங்கள் குறித்த ஆராய்ச்சி தான் இவருடைய முதல் படிநிலை.. DYE- SENSITIZED SOLAR CELL என்பவை மெல்லிய படல சூரிய மின்கலன்களின் வகை ஆகும்.. சூரிய மின்கலன்கள் மிகவும் செலவு பிடிப்பவை.. இன்று இந்தியாவில் மத்திய அரசு வீடுகளில் சூரிய மின்கலம் அமைப்பவர்களுக்கு மானியம் வழங்கும் திட்டம் ஒன்றை அறிமுகம் செய்து இருப்பதை நாம் அறிவோம்.. ஆனால் அறிஞர் நசிருதீன் கண்டுபிடித்து கொடுத்து இருக்கும் சூரிய மின்கலங்கள் மிகவும் விலை மலிவானவை.. இவற்றை வீட்டில் பயன்படுத்துவதற்கு எத்தகைய மானியமும் தேவையில்லை.. இது ஒருவழிக் கடத்தியை அடிப்படையாக கொண்டது புகைப்பட உணர்திறன் கொண்ட நேர்மின் முனை மற்றும் ஒரு எலக்ட்ரோலைட் கொண்ட ஒளி மின்னழுத்த வேதியியல் அமைப்பு நசுருதீன் கண்டுபிடித்த சூரிய மின்கலம். 1991 ஆம் ஆண்டு அவர் கண்டுபிடித்து அதற்கான உரிமமும் பெற்றார்.
சாய உணர்திறன் கொண்ட மெல்லிய சூரிய மின்கலன்கள் பல கவர்ச்சிகரமான அம்சங்களை கொண்டுள்ளன வழக்கமான ரோல் பிரிண்டிங் நுட்பங்களை பயன்படுத்தி உருவாக்குவது எளிது, இது அரை நெகிழ்வானது ஆகும். இது கண்ணாடி அடிப்படையிலான அமைப்புகளுக்கு பொருந்தாத பல்வேறு பயன்பாடுகள் ஐ வழங்குகின்றது. தனக்கு தானே மின்சாரத்தைத் தயாரித்துக்கொள்ளும் சிறு பொருட்களை மிக எளிதில் இவற்றைக் கொண்டு உருவாக்க முடியும் இப்போது விண்வெளிக்கு அனுப்பப்படும் பெரும்பாலான செயற்கை கோள்களில் இந்த வில்லைகள் மின் தயாரிப்புக்காக பொருத்தப்படுகின்றன. இந்த ஒரு கண்டுபிடிப்பதற்காக உலக அளவிலான அங்கீகாரம் அறிஞர் நசீருதீன்னுக்கு வழங்கப்பட வேண்டும் என்பது பலரது கருத்து.

முகம்மது நசிருதீன் LIGHT EMITING DIODES என்றழைக்கப்படும் LED .. மின் பல்புகளை வழங்கிய விஞ்ஞானிகளில் ஒருவர். LED எவ்வளவு சிறிதாக வேண்டுமானாலும் தயாரித்துக் கொள்ளக்கூடிய எளிமையான ஒளி உமிழும் சாதனம் ஆகும் இது ஒரு குறைக்கடத்தி சாதனம்.. அதாவது மின்னோட்டம் இதன் வழியாக பாயும் பொழுது இது ஒளியை வெளியிடுகிறது. குறை கடத்தியிலுள்ள எலெக்ட்ரான்கள் மற்றும் எலெக்ட்ரான் துளைகளுடன் மீண்டும் இணைந்து ஃபோட்டான்கள் வடிவத்தில் ஆற்றலை வெளியிடுகின்றன. இத்தகைய அமைப்புகளின் ஒளியின் நேரம் போட்டான்களின் ஆற்றலுடன் தொடர்புடையது. இந்த குறைகடத்தின் பேண்ட் இடைவெளியை கடப்பதற்கு எலெக்ட்ராங்களுக்கு தேவையான ஆற்றலால் அதன் ஒளி தீர்மானிக்கப்படுகிறது. LED வெப்பத்தை வெளிப்படுத்தாது. எனவே பூவி வெப்பமடைதலுக்கு அற்புத தீர்வாக நாம் இப்போது பெருமளவு LED வகை பல்புகளை ஆதரிக்கின்றோம்.. இவற்றை சிறந்த முறையில் தயாரிப்பதற்கான ஒரு மின்னோட்ட சமன்பாட்டை அறிஞர் நசிருதீன் கண்டுபிடித்து வெளியிட்டார்.
LED-களின் மின்னழுத்தத்திற்கு உணர்திறன் அளவை தீர்மானிப்பதில் அவர் பங்குகொண்டார். அவை வெளியிடும் வெளிச்சம் அவற்றின் மின்னழுத்த வரம்புக்கு தொடர்புடையது. அவற்றின் வரம்பு மின்னழுத்தத்திற்கு மேல் மின்னழுத்தம் இருக்க வேண்டும். மற்றும் அவற்றின் ஒளி மதிப்பீட்டிற்கு கீழ் மின்னோட்டத்துடன் வழங்கப்பட வேண்டும் என்பது நசிருதீன் முக்கியமான கண்டுபிடிப்பாகும். பயன்படுத்தப்பட்ட மின்னழுத்தத்தின் ஒரு சிறிய மாற்றத்துடன் தற்போதைய மற்றும் வாழ்நாள் மாற்றத்தை பொருத்துதல் மின்னோட்டம் ஒழுங்குபடுத்தப்பட்ட விநியோகமாக மாறுவதற்கு காரணமாகிறது. பாரம்பரிய ஒளி உமிழும் விளக்கு போல் அல்லாமல் LED-கள் மிகக்குறைந்த மின்சாரத்தைப் பயன்படுத்துகின்றன. டயோடின் முன்னோக்கி திசையில் மின்னழுத்தம் பயன்படுத்தப்படும் பொழுது மட்டுமே எல்ஈடி ஒளிரும் மின்னழுத்தம் தலைகீழ் திசையில் பயன்படுத்தப்பட்டால் அங்கே மின்னோட்டம் இல்லை. அது ஒளியை உமிழாத தலைகீழ் மின்னழுத்தம் முன்னோக்கிய மின்னழுத்தத்தை விட அதிகமாக இருந்தால் அது உடனடியாக தானே சேதமடைந்து மின்சாரத்தை மிச்சப்படுத்தும். இந்த அமைப்புதான் நசிருதீன் எனும் இந்திய விஞ்ஞானியின் அற்புதமான பங்களிப்பு.

ஆக்ஸைடு குறைக்கடத்திகளின் உயர் மேற்பரப்பு நானோ கிரிஸ்டலின் படங்களின் மூலம் சூரிய ஆற்றலை மின்னாற்றலாக மாற்றும் ருத்தேனியம் உணர்திறன்ங்களின் கனிம வேதியியலில் அவரது குழு தற்போதும் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது. பல ருத்தேனியம் உணர்திறன் மிக்க போர்பிரின் என்று அழைக்கப்படும் உணர்த்திராணிகளை டிஜிட்டல் டிஸ்ப்ளே என்றழைக்கப்படுகின்ற OLED என்று அழைக்கப்படும் ஆர்கானிக் LED களை தொடர்ந்து தயாரித்தும் வருகின்ற ஆய்வில் அவர் ஈடுபட்டு வருகின்றார்.

உலகில் மிகவும் செல்வாக்குமிக்க அறிவியல் அறிஞர்கள் எனும் பட்டியலில் தாம்சன் ரைட்டர்ஸ் எனும் விஞ்ஞானியால் இவர் சேர்க்கப்பட்டார். உலகிலேயே அதிகம் மேற்கோள் காட்டப்பட்ட விஞ்ஞானிகளின் முதல் இரண்டு சதவிகித பட்டியலில் நசிருதீன் இடம் பெற்றிருக்கிறார். ஐரோப்பிய அறிவியல் அகாடமியின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராக உள்ளார். லண்டனின் ராயல் சொசைட்டி ஆஃப் கெமிஸ்ட்ரி-ன் நிரந்தர உறுப்பினராக சேர்க்கப்பட்டிருக்கும் முதல் இந்தியர் என்கிற பெருமையை நசிருதீன் கொண்டுள்ளார். இந்தியாவின் உயரிய அறிவியல் விருதான சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது இவருக்கு வழங்கப்பட்டது. உலகில் வெளிவந்து கொண்டிருக்கும் வேதியியல் தொடர்பான நான்கு மிக முக்கியமான ஆய்வு இதழ்களின் ஆசிரியர் குழுக்களில் இவர் இருக்கிறார். ஆற்றல் கெமிக்கல் இதழ் என்றழைக்கப்படும் ஆய்வறிக்கைகளின் இதழொன்றில் தலையங்க ஆலோசனை குழுவிலும் நசிருதீன் தொடர்கிறார். உலக அளவில் புகழ்பெற்ற இரண்டு அற்புத கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய நசிருதீன் உலகின் ஆறு பல்கலைக்கழகங்களில் விஜயம் செய்யும் பேராசிரியராக நிபுணத்துவம் பெற்று இருப்பது நமக்கெல்லாம் பெருமை.
கட்டுரையாளர் :
தொடரின் முந்தய கட்டுரையை படிக்க கிளிக் செய்யவும்: உலகறிந்த இந்திய காந்தப்புல இயற்பியலாளர் ஈ.வி.சம்பத் குமரன்
ஆயிஷா இரா. நடராசன் எழுதிய நூல்களைப் பெற கிளிக் செய்யவும்: thamizhbooks.com
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


அன்றாட வாழ்வில் அறிவியலாக சூரிய ஆற்றலில் ஆராய்ச்சி மேற்கொண்டு பல்வேறு நாட்டினர் தீவிர ஆராய்ச்சியில் உள்ளனர். ஆனாலும் நம் நாட்டு விஞ்ஞானி நஸ்ருதீன் அவர்கள் மெல்லிய படல சூரிய மின்கலன் கண்டுபிடித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல்
LED-யின் தலைகீழ் மின்னழுத்தம் முன்னோக்கிய மின்னழுத்தத்தை விட அதிகமாக இருந்தால் அது உடனடியாக தானே சேதமடைந்து மின்சாரத்தை மிச்சப்படுத்தும் என்ற அரிய கண்டுபிடிப்பும் உலகிற்கான அற்புதமான பங்களிப்பை வழங்கினார்.
இந்த அரிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி நம் நாட்டிற்கு பெருமை சேர்த்த முகமது காஜா நஸ்ருதீன் அவர்களுக்கு உளமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவரை அறிமுகம் செய்த முனைவர். திரு. ஆயிஷா நடராசன் ஐயா அவர்களை வாழ்த்தி வணங்குகிறேன்.🙏🏻👏🏼👏🏼👏🏼💐💐💐