உலகம் அறிந்த இந்திய மின் வேதியியலாளர் நல்லதம்பி கலைச்செல்வி -World renowned Indian Electrochemical Engineer Nallathamby Kalaiselvi - https://bookday.in/

உலகம் அறிந்த இந்திய மின் வேதியியலாளர் நல்லதம்பி கலைச்செல்வி

உலகம் அறிந்த இந்திய மின் வேதியியலாளர் நல்லதம்பி கலைச்செல்வி

தொடர் 70 : இன்றைய இந்திய விஞ்ஞானிகள் 100

நல்லதம்பி கலைச் செல்வி இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றம் CSIR நிறுவனத்தின தற்போதைய தலைமை இயக்குநராக உள்ளார். இந்த பதவியை வகிக்கும் முதல் பெண் என்கிற பெருமையைப் பெற்றவர் அவர். இது ஒரு வரலாற்றுச் சாதனையாகும். மத்திய மின் வேதியியல் ஆய்வு மையம் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அமைந்துள்ளது. மத்திய அரசின் இந்த ஆய்வு நிறுவனத்தில் மூன்று பத்தாண்டுகள் அவர் முதன்மை விஞ்ஞானியாகச் செயல்பட்டு வந்தார். லித்தியம் அயினியாக்க பேட்டரிகளின் கண்டுபிடிப்புகளுடன் எப்போதும் அவரது பெயர் சர்வதேச அளவில் பேசப்படுகிறது.

CSIR உலகம் அறிந்த அறிவியல் தொழில் துறை கண்டுபிடிப்பு கேந்திரம் ஆகும். 1944 இல் மாபெரும் அறிஞர் சாந்தி சொரூப பட்நாகர் தலைமையில் உருவாக்கப்பட்ட இந்தியாவின் பிரம்மாண்ட அறிவியல் ஆய்வக குழுமம் தற்போது 39 ஆய்வகங்கள் இந்தியா முழுவதும் செயல்பட்டு வருகின்றன. இவை அனைத்திற்கும் டைரக்டர் ஜெனரல் என்பதுதான் தலைமைப் பதவியாகும். சாந்தி ஸ்வரூப் பட்நாகர் எனும் அந்த மாபெரும் அறிஞர் வகித்த பதவியை தற்போது வகித்து வருபவர் தான் நல்ல தம்பி கலைச்செல்வி ஆவார்.

உலகம் அறிந்த இந்திய மின் வேதி இயலாளர் நல்லதம்பி கலைச் செல்வி -World renowned Indian Electrochemical Engineer Nallathamby Kalaiselvi - https://bookday.in/
நல்ல தம்பி கலைச்செல்வி அவர்கள் சார்ந்திருக்கும் அறிவியல் துறை குறித்து முதலில் பார்ப்போம் லித்தியம் அயனியாக்கம் என்பது மின் வேதியியலின்  நவீன துறைகளில் ஒன்று எலக்ட்ரோ கெமிக்கல் பவர் சிஸ்டம்ஸ் மற்றும் எலெக்ட்ரோட் பொருட்களின் மேம்பாட்டில் ஒரு பெண் விஞ்ஞானியாக அறிமுகமானவர் அவர். நடைமுறையில் சாத்தியமான சோடியம் அயனிகளை பயன்படுத்துகின்ற லித்தியம் சல்ஃபர் பேட்டரிக்களை உருவாக்குவதுதான் அவர்களுடைய மிக முக்கிய பணியாகும். இவை சூப்பர் கப்பாசிட்டர்கள் என்று அழைக்கப்படுகின்றன இந்த துறையில் எலெக்ட்ரிக் மொபிலிட்டி என்கிற முக்கியமான சாதனையை எட்டியவர் நல்லதம்பி கலைச் செல்வி.

எலெக்ட்ரிக் மொபிலிட்டி என்பதை நான் மின் இயக்கம் என்று அழைக்கலாம். அவற்றைச் சுருக்கமாக விளக்குவது என்றால் மின்னியக்கம் என்பது சார்ஜ் செய்யப்பட்ட துகள்கள் அவற்றை இழுக்கின்ற மின்சார புலத்திற்கு விடையளிக்கும் வகையில் ஒரு ஊடகத்தின் வழியாக நகரும் திறன் ஆகும். வாயு கட்டத்தில் அயினிகளை அவற்றின் இயக்கத்தின்படி பிரிப்பது அயன் மொபிலிட்டி ஸ்பெக்ட்ரோமெட்ரி என்று அழைக்கப்படுகிறது. திரவத்தில் இதுவே எலெக்ட்ரோ போர்ரெசிஸ் என்று அழைக்கப்படும். மனிதர்களில் தற்போது பயன்படுத்தும் போக்குவரத்து வாகனங்கள் அனைத்துமே பெட்ரோல் அல்லது டீசல் சார்ந்தவையாக உள்ளன.

உலகம் அறிந்த இந்திய மின் வேதி இயலாளர் நல்லதம்பி கலைச் செல்வி -World renowned Indian Electrochemical Engineer Nallathamby Kalaiselvi - https://bookday.in/

இதற்கான மாற்று வழியைத் தேடுவது தான் மின்சார இயக்கம் என்கிற புதிய அறிவியல். மின்சார இயக்கம் என்பது மக்களையும் பொருட்களையும் நகர்த்துவதற்கு மின்சார வாகனங்களைப் பயன்படுத்துகின்ற மின் மயமாக்கப்பட்ட போக்குவரத்துத் துறை ஆகும். இந்த துறையில் இந்தியாவின் மூன்று முக்கிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்திக் கொடுத்தவர் தான் நம்முடைய நல்ல தம்பி கலைச் செல்வி. கார்கள் பேருந்துகள் டிரக்குகள் மற்றும் e – பைக்குகள் போன்ற மின்சார வாகனங்களைப் போக்குவரத்துக்கு அறிமுகம் செய்தவர்களில் அவர் முதன்மையானவர். தூய மின்சார வாகனங்கள் கலப்பின மின்சார வாகனங்கள் வரம்பு நீட்டிக்கப்பட்ட மின்சாரம் மற்றும் மின்சார மோட்டார் பைக்குக்கள் என்று அனைத்து வகையான மின் வாகனங்களிலும் லித்தியம் அயனி பேட்டரிகள் பயன்படுத்துகின்ற முறையை அவர் அறிமுகம் செய்தார்.

மின்சாரம் மற்றும் சார்ஜிங் மையங்களை ஏற்படுத்துகின்ற மின் உள்கட்டமைப்புகளை இந்தியாவுக்கு வழங்கினார். இதன்மூலம் கார்பன் தடத்தைக் குறைத்து பூமி வெப்பமயமாதல் பிரச்சனைக்கு சூழலியல் தீர்வாக இதனை அவர் முன்வைத்தார். புதைப்படிவ எரிபொருட்களான பெட்ரோல் அல்லது டீசல் போன்றவற்றிற்கு மாற்றாக மின்சாரத்தைப் பயன்படுத்த கின்ற இந்த முறை பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த துறையின் மிகப்பெரிய சவால் நாம் மின் ஆற்றலை சேமிக்கும் வழிமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும் இதைத் தான் தன்னுடைய கண்டுபிடிப்புகளின் மூலம் விஞ்ஞானி நல்லதம்பி கலைச்செல்வி சாதித்துக் காட்டினார்.

உலகம் அறிந்த இந்திய மின் வேதி இயலாளர் நல்லதம்பி கலைச் செல்வி -World renowned Indian Electrochemical Engineer Nallathamby Kalaiselvi - https://bookday.in/

அவர் இலித்தியம் அயனியை தேர்ந்தெடுத்தது ஏன்..? லித்தியம் அயன் பேட்டரி என்பது ஒரு வகையான ரீசார்ஜ்பில் மின்கலத்தைக் குறிக்கிறது மற்ற வணிக ரீதியிலான ரீசார்ஜ் செய்யக்கூடிய பேட்டரிகள் உடன் ஒப்பிடுகையில் லி- அயன் பேட்டரிகள் அதிக குறிப்பிட்ட ஆற்றல், அதிக ஆற்றல் அடர்த்தி, அதிக ஆற்றல் திறன், நீண்ட சுழற்சி ஆயுள் மற்றும் நீண்ட நாட்களுக்கு வருகின்ற நிலையான பேட்டரிகளாக வகைப்படுத்தப்படுகின்றன. இலித்தியம் அயனிகளின் மீளக்கூடிய இடைக்கணிப்பு என்பது எலக்ட்ரானைக் கடத்துகின்ற வாயுவாகவும் திரவமாகவும் இல்லாத ஒரு இடை திட பொருள். ஆகவே ஆற்றலைச் சேமிக்க பயன்படும் அதனுடைய சிறப்புப் பண்பில் உள்ளது. இதை விட முக்கியமான ஒரு பண்பை 1991 நல்ல தம்பி கலைச்செல்வி கண்டுபிடித்தார்.

லித்தியம் அயன் பேட்டரி பண்புகள்ல் வியக்கத்தகுந்த விஷயம் என்னவென்றால் 30 ஆண்டுகளில் அவற்றின் அளவு ஆற்றல் அடர்த்தி மெல்ல மெல்ல மூன்று மடங்காக அதிகரிக்கிறது. இதைவிட மிக முக்கியமான அம்சம் கடந்த 20 ஆண்டுகளில் லித்தியம் பேட்டரிகளின் விலையோ 10 மடங்கு குறைந்துள்ளது. காரணம் இந்தியாவில் லித்தியம் எளிதாகக் கிடைக்கிறது. நுகர்வோர் எலெக்ட்ரானிக்ஸ் எனும் துறையில் நம்முடைய மடிக்கணினிகள் நாம் கையில் வைத்திருக்கக்கூடிய திறன் பேசிகள் மின்சார கார்கள் அல்லது இருசக்கர வாகனங்கள் இவற்றோடு விண்வெளிக்கு நாம் அனுப்பும் என்ற செயற்கைக்கோள்கள் என்று அனைத்திலும் கலைச் செல்வி அவர்களின் கண்டுபிடிப்பான லித்தியம் பேட்டரிகள் தான் இன்று பயன்படுத்தப்படுகின்றன.

நல்லதம்பி கலைச்செல்வி தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள விக்கிரமசிங்கபுரத்தில் 1967 ஆம் ஆண்டு பிறந்தவர். அங்குள்ள புனித ஜோசப் நடுநிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு வரையில் படித்து விட்டு பாளையங்கோட்டை காந்திமதி அம்பாள் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம்  வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்தார்.. திருநெல்வேலியில் பள்ளிக் கல்வியினை முடித்த இவர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு வந்து மின்னியல் பொறியாளர் துறையில் இளங்கலை பட்டமும் முதுகலை மற்றும் முனைவர் பட்டங்களையும் பெற்றவர்.

உலகம் அறிந்த இந்திய மின் வேதி இயலாளர் நல்லதம்பி கலைச் செல்வி -World renowned Indian Electrochemical Engineer Nallathamby Kalaiselvi - https://bookday.in/

1999 ஆம் ஆண்டு CSIR ஆய்வு நிறுவனத்தில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அமைந்துள்ள மத்திய மின் வேதியியல் ஆய்வு மையத்தில் இளம் விஞ்ஞானியாக இணைந்தவர். தென்கொரியாவுக்கு வருகை தரும் விஞ்ஞானியாக இந்திய தேசிய அறிவியல் கழக பரிமாற்ற திட்டத்தின் படி ஆய்வுக்கு அனுப்பப்பட்டவர். இளம் விஞ்ஞானி கருத்தரங்க விருதை மூன்று முறை பெற்றவர்.

கொரியா நாட்டின் பிரைம் ஃபூல் என்று அழைக்கப்படும் முக்கிய ஆய்வு விருதை 2003 ஆண்டு பெற்றவர் நல்லதம்பி கலைச் செல்வி. அமெரிக்காவின் ஆஸ்டின் நகரில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் உயர் ஆய்வுக்காக வழங்கப்படும் ராமன் விருதை பெற்றவர் அவர். கௌரவமிக்க CSIR என்கிற இந்தியப் பிரமாண்டத்தின் டைரக்டர் ஜெனரலாக தமிழகத்தைச் சேர்ந்த ஒரு பெண் விஞ்ஞானி நியமிக்கப்பட்டு இருப்பது நமக்கெல்லாம் பெருமை.

கட்டுரையாளர்:

உலகம் அறிந்த இந்திய மின் வேதி இயலாளர் நல்லதம்பி கலைச் செல்வி -World renowned Indian Electrochemical Engineer Nallathamby Kalaiselvi - https://bookday.in/

ஆயிஷா இரா. நடராசன்

தொடரின் முந்தய கட்டுரையை படிக்க கிளிக் செய்யவும் :  உலகம் அறிந்த இந்திய உயிர் அணு உயிரியலாளர் சஞ்சீவ் கலண்டே

ஆயிஷா இரா. நடராசன் எழுதிய நூல்களைப் பெற கிளிக் செய்யவும்: thamizhbooks.com


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *