தொடர்-16 : இன்றைய இந்திய விஞ்ஞானிகள் 100
உலகம் அறிந்த இந்திய நுண்ணுயிரியாளர் ஆசாத் உல்லா கான்( Azad Ullah Khan)
ஆசாத் கான் அலிகார் இசுலாமிய பல்கலைக்கழகத்தின் இடைநிலை உயிரித் தொழினுட்பப் பிரிவில் முதன்மை விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார். இவர் மல்டி DRUG ரெஸிஸ்டன்ட் மருத்துவ ஆய்வுகள் விஷயத்தில் உலக அளவில் நன்கு அறியப்பட்டவர் ஆவார். NEW DELHI METALLO-BETA-LACTAMASE1 என்கிற பாக்டீரியாக்கள் தாக்குதலுக்கு எதிரான சிகிச்சை முறைகளை கண்டு பிடித்ததற்காக பிரபலமாக பேசப்படுகிறார். லண்டன் ராயல் சொசைட்டி ஆஃப் கெமிஸ்ட்ரி ஆஸ்திரேலியாவின் பயோடெக் ரிசர்ச் சொசைட்டி இந்தியாவின் இந்தியன் அகாடமி ஆஃப் மைக்ரோபயாலஜிகல் செயன்ஸ் ஆகியவற்றில் கௌரவ உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆசாத் கான் அவர்கள்.
இவருடைய கண்டுபிடிப்பு என்ன, எப்படி நாம் புரிந்து கொள்வது? மனிதனைத் தாக்கும் பாக்டீரியாக்களும் வைரஸ்களும் பல வகைப்படும். அவற்றில் மருத்துவத்துறை சிலவற்றை சூப்பர்பக் என்று அழைக்கிறது. இந்த வகை பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்கள் தாக்கப்படும் பொழுது ஆன்டிபயாட்டிக் மருந்துகள் கூட வேலை செய்யாது. MULTIPLE DRUG RESISTANCE (MDR) எனும் விஷயம் பொது ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆபத்தாக இருக்கும் ஒருவகை நோய் சூழல் ஆகும். பலோ வகையான மருந்து எதிர்ப்பு என்கிற இந்த நோய்நிலை எத்தகைய மருந்துகள் கொடுக்கப்பட்டாலும் உயிர்வாழும் நோய் பாக்டீரியாக்களை பற்றியது ஆகும். எந்த வகைஎதிர்ப்பு மருந்துக்கும் கட்டுப்படாத இவ்வகை பக்டீரியாக்களும் வைரஸ்களும் தாக்கப்படும் பொழுது மரணத்தைத் தவிர வேறு வழியே இல்லை. இத்தகைய பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்களை சில வகையினதாகப் பிரித்து அறிகிறார்கள்.
எந்த மருந்து கொடுத்தாலும் எப்படிப்பட்ட சிகிச்சை முறைக்கும் கட்டுப்படாத மருந்து எதிர்ப்பு உயிரினங்கள் பல. உதாரணமாக வான்கோமைசின் எதிர்ப்பு எண்டுரோகி மெத்திசிலின் எதிர்ப்பு பிளாகாசஸ் ஈ கோலி வகை மல்டி ரெஸிஸ்டன்ட் எதிர் பாக்டீரியாக்கள் இவை அனைத்துமே காசநோய் தொடர்பான கொடிய நுண்ணுயிரிகள் ஆகும்.
PSEUGINOSAS இனங்கள் என்று அழைக்கப்படும் மருந்து எதிர்ப்பு நுண்ணுயிரிகள் மிகவும் ஆபத்தானவை. பல மருந்து எதிர்ப்பு காசநோய் என்பது அனைத்துவகை சிகிச்சைகளையும் எதிர்க்கும் காச நோய், நோய்த் தொற்று வடிவமாகும் மைக்கோபாக்டீரியம் டியூபர்குளோசிஸ் என்கிற பாக்டீரியா தொற்று காரணமாக காச நோய் ஏற்படுகிறது. இந்தTB நோயால் பாதிக்கப்பட்டவர் விரைவில் HIV எனப்படும் எய்ட்ஸ் நோய் கிருமிகளால் தாக்கப்படுவார். ஹியூமன் இம்மியூனோ டெபிசியென்சி வைரஸ் எனும் HIV எதிர்ப்பு நுண்ணுயிரிக்கான ஒரு முக்கிய உதாரணம். ஃப்ளூ காய்ச்சல் வைரஸ் காலப்போக்கில் பல மருந்து எதிர்ப்பு வைரசாக மாறி இருக்கிறது என்பதை ஆசாத் கான் கண்டுபிடித்திருக்கிறார்.
ஃபுட் டெல்லி மெட்ரோ பீட்டா வைரஸ் ஒரு மாறுபட்ட வைரஸ் ஆகும். பாதாளச் சாக்கடைகளின் வழியே தலை நகரத்தைத் தாக்கிய ஒரு நுண்ணுயிரி. மிக வேகமாக ரயில் நிலையங்களிலும் விமான நிலையங்களிலும் கூடிய கூட்டத்தின் வழியே தீவிரமாக பரவியது. இது பல மருந்து எதிர்ப்பு வைரஸ் ஆகும். இது வைரஸ் அல்ல இது ஒரு வகை என்சைம் என்று முதலில் ஆசாத் கான் கண்டுபிடித்தார். கண்களில் கடுமையான எரிச்சலோடு ஏற்படும் கடும் காய்ச்சலுக்கான காரணிகளை தன்னுடைய ஆய்வகத்தில் தீவிரமாக முயற்சித்து விடை கண்டார். NDM-1 என்று அழைக்கப்பட்ட சூப்பர்பக் நோய்களால் பரவும் நுண்ணுயிரி தாக்குதலுக்கு எதிராக சிகிச்சை முறைகளையும் மருந்துகளையும் அறிமுகப்படுத்திய பெருமை ஆசாத் கானை சேரும்.
NDM-1 கிருமிக்கான மரபணு ஒரு பெரிய மரபணு குடும்பத்தின் ஒரே ஒரு அங்கத்தினர். இது கார்பன் இ மேஸ்ட்வங்கள் எனப்படும் பீட்டா லாக்டமேசு என்சைம்களை குறியாக்குகிறது. கார்பன் ஏக்களை உருவாக்கும் பாக்டீரியாக்கள் பெரும்பாலும் செய்தி ஊடகங்களில் சூப்பர்பக்ஸ் என்றே குறிப்பிடப்படுகின்றன. ஏனென்றால் அவற்றால் ஏற்படும் தொற்றுகளுக்கு சிகிச்சை அளிப்பது மிக கடினம். இத்தகைய பாக்டீரியாக்கள் பொதுவாக பாலி மைக்சிங்கள் மற்றும் டெஜி சைக்கிளின் ஆகியவற்றிற்கு மட்டுமே உணர்திறன் கொண்டவை என்பதை ஆசாத் கான் கண்டுபிடித்து அதற்கான சிகிச்சை முறையை அறிவித்தார். ஆசாத் கான் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் தன்னுடைய ஆய்வுகளை மேற்கொண்டதால் இந்த பாக்டீரியாக்களுக்கு உலக அளவில் அலிகார் சூப்பர் பக்ஸ் என்ற பெயர் ஏற்பட்டுவிட்டது என்றால் எந்த அளவிற்கு ஆசாத் கான்னின் புகழ் உலகெங்கும் பரவி உள்ளது என்பது விளங்கும்.
ஆசாத் கான் தன்னுடைய இளம் கலை அறிவியல் பட்டத்திற்கு வேதியியல் பாடத்தை எடுத்து அலிகார் இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் பயின்றார். அதே பல்கலைக்கழகத்தில் உயிரித் தொழில்நுட்பத்தில் முதுகலை அறிவியல் பட்டம் பெற்றார். தன் முனைவர் பட்ட ஆய்வுக்காக புதுடெல்லியிலுள்ள சர்வதேச மரபணு மாற்ற பொறியியல் உயிரி தொழில்நுட்ப கல்வியகத்தில் இணைந்தார். 1997 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நியூ செர்சி மாகாணத்தில் அமைந்துள்ள ரட்கர்சு பல்கலைக்கழகத்தில் மருத்துவசிகிச்சைக்கு எதிரான பாக்டீரியாக்கள் குறித்த விரிவான தீவிர ஆராய்ச்சியை மேற்கொண்டார்.
EXTENDED SPECTRUM BETA LACTAMASES (ESBL) என்று வகைப்படுத்தப்பட்டு இருக்கும் நுண்ணுயிரிகள் சார்ந்த அவருடைய கண்டுபிடிப்புகள் அசாத்தியமான அர்ப்பணிப்பு மிக்க ஆய்வுகள் என்று உலகம் அவரைப் போற்றுகிறது. இந்தியாவில் காச நோய் எதிர்ப்பிற்கான மிக முக்கிய மருத்துவ விஞ்ஞானியாக அவர் போற்றப்படுகிறார். அலிகாரில் உள்ள ஜவஹர்லால் நேரு மருத்துவ கல்லூரியில் ஆய்வகத்தில் அவருடைய தீவிர ஆய்வுகள் தொடர்கின்றன.
2019 ஆண்டின் ஸ்ரீ ஓம் பிரகாஷ் பாசின் விருது, மத்திய அரசின் உயிரித் தொழில்நுட்பத் துறை வழங்கும் நேஷனல் பயோசைன்ஸ் ஆண்டு விருது, உட்பட பல்வேறு விருதுகளும் இந்திய தேசிய அறிவியல் அகாடமியின் ஃபெலோஷிப் விருதும், பெற்றுள்ள ஆசாத் கான் இந்தியாவின் தலைசிறந்த நுண்ணுயிரி மருந்தியல் நிபுணர் என்பதில் நமக்கெல்லாம் பெருமை….
கட்டுரையாளர் :
தொடரின் முந்தய கட்டுரையை படிக்க கிளிக் செய்யவும்: மீக்கடத்துதிறன் இயற்பியலின் உலகறிந்த இந்திய விஞ்ஞானி ஸ்ரீநிவாசன் ராமகிருஷ்ணன்.
ஆயிஷா இரா. நடராசன் எழுதிய நூல்களைப் பெற கிளிக் செய்யவும்: thamizhbooks.com
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
உயிரியலாளர் திரு.ஆசாத் உல்லா கான் அவர்களின் ஆராய்ச்சிகளும் கண்டுபிடிப்புகளும் நுண்ணுயிரிகளிடமிருந்து நம்மைக் காக்கிறது என அறிகிறேன். புவி வெப்பமாதல் காரணமாக இமயமலை போன்ற பனிப் பிரதேசங்களில் நீண்டகாலமாக உறங்கிக் கிடந்த வைரஸ் போன்ற நுண்ணுயிரிகள் புத்துயிர் பெற்று இனிவரும் காலங்களில் மனித குலத்தைச் தாக்கும் அபாயம் உள்ளது. திரு.ஆசாத் உல்லா கான் அவர்களின் ஆராய்ச்சி இந்த வைரஸ்களை அழிக்க உதவும் என நம்புகிறேன். நன்றி.
நல்ல நல்ல தகவல்கள் அடங்கிய கட்டுரை… நன்றி… சார்
Pingback: பரம்ஜித் குரானா - Paramjit Khurana
நாசாவில் நுண்ணுயிரி விஞ்ஞானி ஆன கஸ்தூரி வெங்கடேஸ்வரன் அவர்கள் சுயசரிதையை எழுதிய பொழுது நுண்ணுயிரி குறித்து அறிந்து ஆச்சரியப்பட்டேன். கண்ணுக்குத் தெரியாமல் ஆராய்ச்சியின் போது நம் உடலில் புகுந்து விடக்கூடிய இவற்றைப் பற்றி ஆசாத் அவர்களின் ஆராய்ச்சி மெய்சிலிர்க்க வைக்கிறது. இவரைப் போன்ற ஆராய்ச்சியாளர்களால் தான் கொரோனா காலத்திலும் இந்தியா தலைநிமிர்ந்து நின்றது என்றால் மிகை அல்ல