உலகம் அறிந்த இந்திய நரம்பியல் நிபுணர் விஞ்ஞானி விதித்தா வைத்தியா - World renowned Indian neuroscientist - Vidita Vaidya- https://bookday.in/

 உலகம் அறிந்த இந்திய நரம்பியல் நிபுணர் விஞ்ஞானி விதித்தா வைத்தியா

 உலகம் அறிந்த இந்திய நரம்பியல் நிபுணர் விஞ்ஞானி விதித்தா வைத்தியா (Vidita Vaidya)

தொடர் 60 : இன்றைய இந்திய விஞ்ஞானிகள் 100

உலகம் போற்றும் இந்திய பெண் விஞ்ஞானி விதித்தா வைத்தியா (Vidita Vaidya) டாடா இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் ஃபண்டமெண்டல் ரிசர்ச் என்னும் மும்பையைச் சேர்ந்த நிறுவனத்தில் உயிரியல் ஆய்வகத்தின் முதன்மை விஞ்ஞானியாக செயல்பட்டு வருகிறார். மனிதனின் உணர்வுப்பூர்வ செயல்பாடுகளுக்கும் வெகுஜன உளவியலுக்குமான காரணங்கள் குறித்த நரம்பியல் கோட்பாடுகளை வெளியிட்ட பெருமை விதித்தா வைத்தியாவை சேரும்.

 உலகம் அறிந்த இந்திய நரம்பியல் நிபுணர் விஞ்ஞானி விதித்தா வைத்தியா - World renowned Indian neuroscientist - Vidita Vaidya- https://bookday.in/

இவர் சார்ந்திருக்கும் துறை மூளை நரம்பியல் மற்றும் மனநல மருத்துவமாகும். உணர்ச்சியின் நரம்பியல் சுழற்சியை ஆய்வு செய்து தரவுகளை வெளியிடுதல் மிக கடினமான ஒரு துறை இந்த துறையில் உலகளவில் பேசப்படுகின்ற கோட்பாடுகளை வெளியிடுவது சவால் நிறைந்த பணியாகும் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் உடைய நோயாளிகள் பலர் உண்டு. தங்களை தாங்களே துன்புறுத்திக்கொள்ளும் மற்றவர்களை அளவுக்கு அதிகமாக துன்புறுத்துவதில் சுகம் காணுகின்ற வகை நோய்களும் இந்த நவீன யுகத்தில் அதிகம் பரவுவதை பார்க்க முடிகிறது. வேலை இடத்தில் இருக்கின்ற மன அழுத்தம் காரணமாக ஏற்படும் தற்கொலைகள், அதீதமான வேதி உணவுகளை உட்கொள்வதன் மூலம் நரம்பியலில் ஏற்படுகின்ற கோளாறுகள் என்று பல வகையான காரணிகளோடு இந்த துறை சவால்களை சந்திக்கிறது. இந்தத் துறையில் முத்திரை பதித்த விஞ்ஞானி தான் விதித்தா வைத்தியா (Vidita Vaidya).

மனிதனின் உளவியல் நம்முடைய மூளை நரம்புகளின் சுற்றுகளில் ஏற்படும் மாற்றங்கள் மனச்சோர்வு போன்ற மனநல கோளாறுகளுக்கு எவ்வாறு அடிப்படையாக அமைகின்றன என்பதை ஆய்வுக்கு உட்படுத்துதல் அவ்வளவு எளிதல்ல நடத்தை இயல் என்பது மூளை நரம்புகளின் நியூரான்கள்யோடு சம்பந்தப்பட்டது என்பதை உலகம் ஏற்றுக் கொள்ளாத ஒரு காலகட்டம் இருந்தது. சிக்மன் ஃப்ராய்டு போன்றவர்கள் உளவியலை வேறு கோணத்தில் அணுகினார்கள். தான் என்கின்ற மனிதனின் சுய உருவாக்கம் குறித்த ஃபிராய்டின் கோட்பாடுகள் தனிமனிதரை ஆய்வு செய்தன. யங் போன்றவர்கள் வெகுஜன உளவியலை ஆய்வு செய்தனர். இவர்கள் இருவருமே மனித மூளை என்று பொதுவாக அழைக்கப்படும் நரம்பியலோடு சம்பந்தமில்லாத காகித புலிகளாக இருந்த ஆனால் கோட்பாட்டியல் விஞ்ஞானிகள்.

 உலகம் அறிந்த இந்திய நரம்பியல் நிபுணர் விஞ்ஞானி விதித்தா வைத்தியா - World renowned Indian neuroscientist - Vidita Vaidya- https://bookday.in/

இவற்றை குறித்த நரம்பியல் விஞ்ஞானிகளின் பார்வை மாறுபடுகிறது. வைத்தியா ஒரு குழந்தையின் ஆரம்ப கால வாழ்க்கை அனுபவங்கள் வழியே நடத்தையில் தொடர்ச்சியான மாற்றங்கள் எவ்வாறு நிகழ முடியும் என்பதைத்தான் முதலில் ஆய்வு செய்யத் தொடங்கினார். அப்படி ஆய்வு செய்யும் பொழுது செரோடோனின் 2A என்கிற சுரப்பியில் ஏற்படுகின்ற மாற்றங்கள் ஜெரோடோநர்ஜிக் ஸைகெடெலிக்ஸ் என்று அழைக்கப்படும் துல்லியமான தனித்துவமான ஒரு துறையை ஏற்படுத்துவது என்பது எவ்வளவு பெரிய சாதனை. சரட்டோனின் சுரப்பதால் ஏற்படுகின்ற மனநிலை தொடர்பான சக்தி வாய்ந்த நடத்தை இயல் விளைவுகள். குழந்தை பருவத்தில் ஏற்படுகின்ற ஆரம்பகால துன்பங்களின் நீண்டகால விளைவுகளை வடிவமைப்பதில் எவ்வாறு பங்காற்றுகிறது என்பதை தன் கண்டுபிடிப்பாக விதித்தா வைத்தியா (Vidita Vaidya) வெளியிட்டிருக்கிறார்.

வைத்தியா அம்மையாரின் ஆராய்ச்சியானது, மனிதர்களின் அதீத ஆசை தூண்டல்கள் குறித்து மிக விரிவான மருத்துவ அடிப்படைகளை வெளியிட்டிருப்பது உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது. உதாரணமாக இதை வாசித்துக் கொண்டிருக்கும் உங்களுக்கும் இதை எழுதிக் கொண்டிருக்கும் எனக்கும் மூளை ஒன்று போலவே இருக்கிறது. ஆனால் உங்களுக்கு காப்பி குடிப்பது என்றால் ஒருவகை வெறி உண்டு. நீங்கள் ஒரு நாளைக்கு எத்தனை கோப்பை கொடுத்தாலும் காப்பி அருந்த தயாராக இருக்கிறீர்கள் காப்பி இப்படித்தான் இருக்கவேண்டும் என்று ஒரு வகையான சுவையை நீங்கள் ஏற்படுத்தி கொண்டிருக்கிறீர்கள் காப்பி மணம் எங்கிருந்து வந்தாலும் அதை நோக்கி ஓடுகிறீர்கள்.. காப்பியின் மணம் வந்துவிட்டாலே நீங்கள் வேறு வேலைகள் எதையும் பார்க்காமல் போட்டுவிட்டு அதை உடனடியாக சுவைக்க வேண்டுமென்று துடிக்கிறீர்கள்.. நான் ஒரு குவளை தேநீருக்காக தவம் கிடக்க தயாராக இருப்பவன்.. வேறு ஒருவருக்கு இதே போல ஐஸ்க்ரீம் தூண்டுதலை ஏற்படுத்தலாம்.. வேறு ஒருவர் நம்மில் எங்காவது மதுவின் நெடி வந்துவிட்டாலே அடிமையாகிவிடுகிறார்..

 உலகம் அறிந்த இந்திய நரம்பியல் நிபுணர் விஞ்ஞானி விதித்தா வைத்தியா - World renowned Indian neuroscientist - Vidita Vaidya- https://bookday.in/

நம்முடைய நுகர்வு அமைப்பான நாசி துவாரத்துக்கும் சுவை அமைப்பான நாகின் சுவையூட்டிகளுக்கும் இந்த தூண்டலை ஏற்படுத்த விழிகளின்னுடைய பார்வைக் கோணமும் அதேசமயம் மூளை நரம்புகளில் நியூரான்களுக்கு இடையே ஏற்படுகின்ற மின்னல் போன்ற தூண்டல்களும் எப்படி ஒரு கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ள உதவ முடியும் என்பதுதான் விதித்தா வைத்யாவின் ஆராய்ச்சி ஆகும்.

இவ்வகையான தூண்டல்களுக்கு காரணமான சில வேதி பொருட்கள் நியூரான்களுக்கு இடையே அதி வேகமாக செயல்பட்டு உடலினுடைய சமதள தன்மையை இழக்க வைத்து வெறி கொண்டவராக ஒருவரை எப்படி மாற்றுகின்றது. அது காலப்போக்கில் எப்படி ஒரு மனநோயாக மாறுகின்றது என்பதை அடிப்படையாக வைத்து சரடோனின் சுரப்பதன் வேகத்தை குறைப்பதற்கான சிகிச்சை முறைகளை முன்மொழிந்தவர் விதித்தா வைத்தியா (Vidita Vaidya). சரடோனின் சுரப்பிகளை சரியாக பயன்படுத்தினால், நாம் நமக்கு சிக்கல்களை ஏற்படுத்தும் நியூரான் தூண்டுதல் வேதி அமிலங்களை கட்டுப்படுத்த முடியும் என்கிற ஆச்சரியமான முடிவையும் விதித்தா வைத்தியாவின் ஆய்வுகள் வெளியிட்டு உலகின் கவனத்தை பெற்றன.

 உலகம் அறிந்த இந்திய நரம்பியல் நிபுணர் விஞ்ஞானி விதித்தா வைத்தியா - World renowned Indian neuroscientist - Vidita Vaidya- https://bookday.in/

அவருடைய ஆய்வுகளில் மிக சிறப்பான ஒரு அம்சம் தோல்வி மனப்பான்மை அல்லது வெற்றி அடைந்துவிட வேண்டும் என்கின்ற வெறித்தனமான அச்ச உணர்வு காரணமாக ஏற்படுகின்ற தற்கொலைகள் சம்பந்தமானது ஆகும். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் வேலைக்கு போகும் இளைஞர்களுக்கு இடையே தற்போது அதிகம் காணப்படுகின்ற இந்த தூண்டலின் அடிப்படை காரணியாக நம்முடைய நவீன உணவு முறையும்.. மினரல் வாட்டர் குடிநீர். உட்பட நாம் உட்கொள்கின்ற வேதி சமநிலை அற்ற சந்தை பொருள்களும் எப்படி காரணமாக அமைகின்றன என்பதை அவருடைய ஆய்வுகள் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளன. மன அழுத்தத்துடன் தொடர்புடைய மன நோய் இயலுக்கு தனி நபர் பழக்கவழக்கங்கள் எவ்வாறு பாதிப்பை அல்லது பின்னடைவை உருவாக்க முடியும் என்பதை புரிந்து கொள்வதில் விதிதா வைத்யாவின் ஆய்வுகள் உலகிற்கு உதவுகின்றன.

தனது ஆய்வகத்தில் பல மணி நேரங்களை நியூரான்களை புரிந்து கொள்வதற்காக ஆய்வக எலிகளோடும் என்னைய ஆய்வக விலங்குகள் ஓடும் தன்னுடைய உழைப்பை செலவுசெய்து மனிதர்களை உளவியல் தீங்குகளிலிருந்தும் பின்னடைவுகளிலிருந்தும் காப்பாற்றுவதற்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர் விதித்தா வைத்தியா (Vidita Vaidya) அம்மையார் அவர்கள்..

இரண்டு மருத்துவ விஞ்ஞானிகளின் மகளாக பிறந்தவர், அவர் மும்பையில் உள்ள செயின்ட் சேவியர் கல்லூரியில் உயிர்வேதியியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். அமெரிக்காவிலுள்ள ஏல் பல்கலைக்கழகத்தில் நரம்பியல் அறிவியலில் தனது முனைவர் பட்டத்தை உலகப்பிரசித்தி பெற்ற அறிவியல் அறிஞர் பேராசிரியர் ரோனால்டு டுமண் என்பவரின் கீழே கடுமையாக உழைத்து நேரடி ஆய்வுகளின் மூலம் பெற்றவர் அவர். சுவீடனில் உள்ள கரோலின்ஸ்கா நிறுவனத்தில் பேராசிரியர் எர்னஸ்ட் அரினாஸுடன் இணைந்து பல்வேறு ஆய்வுகளை மூன்றாண்டுகள் மேற்கொண்டவர். இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பிறகு இணைந்து பேராசிரியர் டேவிட் கிரகாம் ஸ்மித்த்துடன் தன்னுடைய முதுகலைப் பணி முழுவதையும் முடித்து அற்புத நரம்பியல் விஞ்ஞானியாக உலகிற்கு அப்போதே அறிய வந்தவர் விதித்தா வைத்தியா (Vidita Vaidya).

 உலகம் அறிந்த இந்திய நரம்பியல் நிபுணர் விஞ்ஞானி விதித்தா வைத்தியா - World renowned Indian neuroscientist - Vidita Vaidya- https://bookday.in/

2000 ஆம் ஆண்டு விதித்தா வைத்தியா (Vidita Vaidya), தன்னுடைய இருபத்தி ஒன்பதாவது வயதில் மும்பையின் டாடா இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் ஃபண்டமெண்டல் ரிசர்ச் நிறுவனத்தின் உயிரியல் அறிவியல் ஆய்வகத்தில் முதன்மை ஆய்வாளராக இணைந்தார். உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் நரம்பியல் சுற்றுகள் மட்டும் வாழ்க்கை அனுபவங்கள் அத்தோடு மனச்சோர்வு மருந்துகள் ஆகியவற்றை குறித்து தீவிரமாக ஆய்வுசெய்து மனச்சோர்வுக்காக எடுத்துக் கொள்ளப்படும் மருந்துகளால் வாழ்க்கை எவ்விதம் பாதிப்பு அடைகிறது என்பதை குறித்த அவருடைய முக்கியமான புத்தகம்.. வைஸ் மைன்ட்.. பல பல்கலைக்கழகங்களில் இன்று பாடமாக வைக்கப்பட்டுள்ளது..

2015 ஆம் ஆண்டு இந்தியாவின் உயரிய அறிவியல் விருதான சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. எனக்கு மிகவும் பிடித்த விதிதா வைத்யாவின் முக்கியமான வெளிப்பாடு.. அவர் தனது ஓய்வு நேரம் முழுவதையும் தானே அவரது இல்லத்தில் உருவாக்கி வைத்திருக்கும் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் கொண்ட நூலகத்தில் தன்னுடைய மகளோடு புத்தக வாசிப்பில் அதிக நேரம் செலவிடுவார் என்பதுதான்.

கட்டுரையாளர்:

 உலகம் அறிந்த இந்திய நரம்பியல் நிபுணர் விஞ்ஞானி விதித்தா வைத்தியா - World renowned Indian neuroscientist - Vidita Vaidya- https://bookday.in/

ஆயிஷா இரா. நடராசன்

தொடரின் முந்தய கட்டுரையை படிக்க கிளிக் செய்யவும்: உலகறிந்த இந்திய வேதியியலாளர் தேவலப்பள்ளி பி ராமாச்சாரி

ஆயிஷா இரா. நடராசன் எழுதிய நூல்களைப் பெற கிளிக் செய்யவும்: thamizhbooks.com


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Show 2 Comments

2 Comments

  1. S. HariKrishnan

    மனித மனம் என்பது மூலை நரம்பியலோடு தொடர்புடையது என்பதை அனைவரும் அறிவர் என்றாலும் குழந்தை முதல் பெரியவர்கள் வரை அது எப்படி வேலை செய்கிறது என்ற நெடிய ஆராய்ச்சியை நேரடி ஆய்வு மேற்கொண்டு மன நோய்க்கான தீர்வுகளும் கண்ட மாபெரும் மருத்துவ விஞ்ஞானி விதிதா வைத்யா அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகளும், பாராட்டுகளும்.

    கூடுதல் தகவலாக தனது மகளோடு நூலகத்தில் வாசிப்பிற்கு அதிக நேரம் செலவிடுகிறார் எனும் பொழுது வாசிப்பின் முக்கியத்துவத்தை இதைவிட எப்படி உணர்த்துவது…

    முனைவர்.ஆயிஷா நடராசன் ஐயா அவர்களுக்கு உளமார்ந்த நல்வாழ்த்துக்கள்.
    நன்றி ஐயா.🙏🙏🙏

  2. Dr.P.Sasikumar

    வித்தியாசமான ஒரு ஆராய்ச்சியாளரை இந்த கட்டுரையில் தெரிந்து கொண்டேன். எதிர்காலத்தில் நுண்ணுயிரிகளைக் கொண்டு தேவையான வேதிப்பொருட்களை உருவாக்கி மனிதனின் கவலைகளை மாற்றி விடலாம் என்று சமீபத்தில் ஒரு மாநாட்டில் கேட்க நேர்ந்தது. இவருடைய ஆராய்ச்சிகளை படித்த பொழுது அது வெகு தொலைவில் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. மருத்துவத்துறை ஆராய்ச்சியில் இவ்வளவு உட்பிரிவுகள் இருக்கிறதா என்று உங்கள் கட்டுரை மூலம் அறிந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *