உலகம் அறிந்த இந்தியப் பறவையியல் விஞ்ஞானி சுஷ்மா (Dr. Sushma)
தொடர் : 61 இன்றைய இந்திய விஞ்ஞானிகள் 100
மேற்குத் தொடர்ச்சி மலைகளில் பல ஆண்டுகள் கடுமையாக பணிபுரிந்து ஒரு புதிய பறவை இனத்தையே கண்டுபிடித்தவர் விஞ்ஞானி சுஷ்மா ரெட்டி. உயிரியல் பன்முகத் தன்மையின் தோற்றம் மற்றும் தங்களை தாங்களே சுயமாகப் பராமரித்து கொள்ளுதல் என்று பறந்து விரிந்த பறவையியல் துறையில் பறவைகளின் பரிணாம வரலாறு என்கிற ஒரு கிளைத் துறையில் தனக்கென்று ஒரு முத்திரை பதித்த டார்வினியவாதி சுஷ்மா ரெட்டி (Dr. Sushma Reddy).
உயிரியல் பன்முகத்தன்மையை முதல் தரவாகக் கொண்டு பறவைகளின் பரிணாம வரலாற்றை ஆராய்வதே சுஷ்மா ரெட்டியின் துறை ஆகும். இந்த ஆராய்ச்சியின் ஒருங்கிணைந்த கருப்பொருள் பழமை வாய்ந்த அறிவியல் என்றாலும் இந்த நவீன தட்ப வெட்ப மாறுதல் யுகத்தில் பறவைகள் தங்களை தாங்களே எப்படி பராமரித்து கொள்கின்றன, பேரழிவுகளின் பொழுது தங்களை எப்படி தாங்களே மீட்டுக் கொள்கின்றன என்கின்ற பறவை சமூக இயல் என்பது ஒரு புதிய துறையாகும். பழைய உலக வெப்ப மண்டலத்தில் உள்ள பறவைகளின் ஹாலோ ஜெனெடிக்ஸ் மற்றும் உயிர் புவியியல் சார்ந்து சுஷ்மா ரெட்டி வெளியிட்டிருக்கும் ஆய்வுக் கட்டுரைகள் உலக பிரசித்தி பெற்றவை.

பறவை வாழ்க்கை மரங்களின் ஊடாக அவை கொண்டிருக்கும் ஆழமான உறவுகள் அவற்றின் மரபணு உருவாக்கத்தின் ஜெனெடிக்கல் பார்வையோடு அணுகப்படுவது இப்போது மிகச் சமீப காலமாகத்தான் சாத்தியமாகி இருக்கிறது. உயிரி தொழில் நுட்பத்தை சார்ந்து பலவகையான சுய கற்றல்களில் ஈடுபட்ட சுஷ்மா ரெட்டி ஏனைய பறவையியல் நிபுணர்கள் ஒரு குறிப்பிட்ட பறவை இனத்தை மட்டுமே தேர்வு செய்து அதன் வாழ்நாள் முழுவதும் அதனோடு பயணித்து தரவுகள் சேகரிப்பது போல ஒரு காலத்தில் செய்து கொண்டிருந்தார்.
ஆனால் அவருடைய பார்வை சமீப காலமாக மாற்றத்தைக் கண்டது ஒரு பறவை நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்கள் பயணம் செய்து அங்கிருந்து மீண்டும் இடம்பெயர்வு அடைவதற்கான மரபணுக்களைத் தேடிச்சென்று அடிப்படை பறவையியலை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டிய உலக விஞ்ஞானிகளில் ஒருவர் இந்தியாவைச் சேர்ந்த சுஷ்மா ரெட்டி (Dr. Sushma Reddy) ஆவார். தனக்கென்று ஒரு உயிரியல் ஆய்வகத்தைக் கொண்டுள்ள சுஷ்மா ரெட்டி மரபணு வினோடாபிக் என்றழைக்கப்படுகின்ற உயிரி அடிப்படை மற்றும் புவியியல் தரவுகளை இணைப்பதன் மூலம் ஒரு பறவை இனத்தின் வரம்புகள் மற்றும் ஃபைலோஜெனடிக் உறவுகள் போன்ற அடிப்படை கேள்விகளுக்கு விடைகளை தேடுகின்ற கடுமையான ஆராய்ச்சியில் ஈடுபடுகிறார்.
அமெரிக்காவின் வினோசேட்டா பல்கலைக்கழகத்தின் லயோலா கல்வியாக உயிரியல் துறையில் இணைப் பேராசிரியராக பணியாற்றிக் கொண்டிருந்த சுஷ்மா ரெட்டி (Dr. Sushma Reddy) 2012 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வந்து, தான் ஏற்கனவே பாதியில் விட்டிருந்த மேற்குத் தொடர்ச்சி மலையின் தான் தேர்வு செய்த பகுதியில் தேடலைத் தொடர்ந்தார். மிகக் கடுமையான ஐந்து மாதங்கள் அவர் முற்றிலும் காணாமல் போனார். பறவைகளின் பரிணாம வரலாறு தொடர்பான சாத்தியமான ஆராய்ச்சி திட்டங்களோடு அவர் வந்திருந்தார். நீண்ட காலமாக விஞ்ஞானிகள் மற்றும் ஆர்வலர்களை ஒரே மாதிரியாக வசீகரித்த உயிரினங்களின் தோற்றம் குறித்த புதிய மரபணு பரிணாமவியல் என்கிற கலப்பு துறைக்குள் அவர் நுழைந்தார்.

மேற்குத் தொடர்ச்சி மலை என்பது தென்மேற்கு இந்தியாவில் உள்ள ஒரு தனிப்பட்ட மலைத்தொடர் ஒரு புதிய பறவை இனம் மற்றும் இரண்டு புதிய வகைகளை அவருடைய தேடல்கள் கடுமையான பகல் இரவு உழைப்பை உள்வாங்கிக்கொண்டு கண்டுபிடிக்கப்பட்டன. சமீபத்தில் இரண்டு புதிய பறவை இனங்கள் மற்றும் ஒரு புதிய பறவையினத்தின் அற்புதமான கண்டுபிடிப்பில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட அவர் பூமியின் பரிணாமத்தோடு பறவைகளினுடைய தோற்றம் தீவிர தொடர்புடையது என்று விவரிக்கிறார்.
பறவைகளின் தோற்றத்திற்கும், அவை பறக்கும் டைனோசர்களிடமிருந்து பரிணாம வளர்ச்சி பெற்று வந்த பிறகான புவி வேறு அதற்கு முந்திய பூமி வேறு என்று அவருடைய கோட்பாடு சொல்கிறது.. முந்தைய பூமியில் வனங்களையும் காடுகளையும் வளர்ப்பதை விடப் பறவை இனம் தோன்றிய பிந்தைய புவியில் பறவைகள் தங்களுக்கான காடுகளை தாங்கள் இட்ட எச்சங்களின் வழியாக விதைகளை பரப்பி புதிய புவியை எப்படி வளர்த்தன என்பது குறித்த அவருடைய ஆய்வுகள் டார்வினிய கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்தவை ஆகும்.
பறவை இயலில் 3D ஸ்கேனிங் என்கின்ற புதிய அறிவியலை அறிமுகம் செய்தவர் சுஷ்மா ரெட்டி (Dr. Sushma Reddy). முற்போக்கான ஆய்வக தொழில்நுட்பங்களைக் கையாள்வதில் எந்த அளவுக்கு நான் நாம் தேர்ச்சி பெற்று இருக்கிறோம் என்பதும் தற்போதைய பறவையியலின் மிக முக்கிய பகுதி என்று அவர் விவரிக்கிறார். சுஷ்மா ரெட்டியும் அவரது ஆய்வக மாணவர்களும் இணைந்து ஆப்பிரிக்காவின் தென்கிழக்கு கடற்கரையில் உள்ள ஒரு தீவு நாடான மடகாஸ்கரில் பறவைகளின் பல் வகைப்படுத்தலுக்கு இந்தியாவிலிருந்து தங்கள் கவனத்தைத் திருப்பினர்.

நேஷனல் செயன்ஸ் பவுண்டேஷனின் மூன்று வருட மானியம் அவர்களுக்குக் கிடைத்தது. நூற்றுக்கணக்கான பறவை இனங்களைக் குறிக்கும் ஆயிரக்கணக்கான தனிப்பட்ட பறவைகளின் மாதிரிகளை திரட்டி சேகரித்து இந்த இனங்களின் உருவ மாறுபாடு இந்தியாவில் உள்ள அதே இனங்களுக்கும் ஆப்பிரிக்காவில் உள்ள அதே பறவை இனத்திற்கும் இடையிலான வடிவ அடிப்படையிலான புவியியல் வரம்பு மாறுபாடு மற்றும் அவற்றின் பரிணாம உறவுகளைத் துல்லியமாக கணித்து வெளியிட்ட பெருமை சுஷ்மா ரெட்டியைச் சாரும்.
பெங்களூரிலுள்ள நேஷனல் சென்டர் ஃபார் பயோலாஜிக்கல் சயின்சஸ் நிறுவனத்தால் இந்த ஒப்பற்ற அறிஞர் கண்டுபிடிக்கப்பட்டார். NCBS பலவகையான அவருடைய கண்டுபிடிப்புகளுக்கு உறுதுணையாக இருந்துள்ளது. சாத்பூரா மலைகளின் தொடரில் அவர் மேற்கொண்ட பறவையியல் ஆய்வுகள் முதல் முறையாக மனிதர்களுக்கு இருப்பது போலவே ஒரு பறவையின் சந்ததி குறித்த பரம்பரை மரம் என்கிற மனோவியல் வரைபட முறையை அறிமுகம் செய்து உலகிற்கு புதிய திருப்புமுனையை வழங்கியது.
ஆந்திராவில் பிறந்து சூழலியலில் இளம் அறிவியல் பட்டத்தை1996 ஆம் ஆண்டு பெர்னாடு கல்லூரியில் முடித்தார். பிறகு முதுகலை அறிவியல் கற்பதற்கு நியூயார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக் கழகத்திற்குத் தேர்வு பெற்றார். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பறவைகளின் சூழலியல் குறித்த ஆராய்ச்சியில் ஒரு சான்றிதழ் பெற்ற பிறகு நியூயார்க் சென்று அங்கு பறவையியல் சூழலியலில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டு 2005 ஆம் ஆண்டு பறவைகளின் பரிணாமவியல் எனும் புதிய துறையில் முனைவர் பட்டம் பெற்றார் சுஷ்மா ரெட்டி (Dr. Sushma Reddy).
அமெரிக்காவினுடைய பறவையியல் கழகத்தில் கௌரவ உறுப்பினராக இணைக்கப்பட்டிருக்கும் இந்திய பறவையியல் நிபுணர் சுஷ்மா ரெட்டி தனக்கென்று ஒரு பறவையியல் ஆய்வகத்தோடு தற்போது இந்தியாவிலும் அமெரிக்காவிலுமாக பணிபுரிந்து வருகிறார். அமெரிக்காவின் பெல் மியூசியம் ஆஃப் நேச்சுரல் ஹிஸ்டரி எனும் ஆய்வகத்தில் பறவைகளின் தலைமை விஞ்ஞானி எனும் பொறுப்பை ஏற்றிருக்கிறார் சுஷ்மா ரெட்டி. இன்றைக்கும் கள ஆய்வுகளுக்காக ஒரு வருடத்திற்கு ஆறு மாதங்கள் விந்திய சாத்பூரா மலைகளில் சுற்றித்திரியும் இந்த மாமேதை உலகம் போற்றும் பறவையியல் நிபுணர் என்பதில் நமக்கு பெருமை.
கட்டுரையாளர்:

தொடரின் முந்தய கட்டுரையை படிக்க கிளிக் செய்யவும்: உலகம் அறிந்த இந்திய நரம்பியல் நிபுணர் விஞ்ஞானி விதித்தா வைத்தியா (Vidita Vaidya)
ஆயிஷா இரா. நடராசன் எழுதிய நூல்களைப் பெற கிளிக் செய்யவும்: thamizhbooks.com
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


எண்ணற்ற பறவை இனங்கள் என்னும் அடையாளம் காணப்படவில்லை என்று அறிந்திருக்கிறேன். ஒரு பறவையின் புதியது என்று கண்டறிய கானகத்திற்கு சென்று பல நாட்கள் காத்திருந்து அதை அடையாளம் காண்பது எவ்வளவு சிரமமான ஒன்று . சலீம் அலி பற்றி கேட்டிருந்தாலும் அவரை போல் பறவைய ஆராய்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் இவரை உங்கள் கட்டுரையின் மூலம் எடுத்துக்காட்டியதற்கு எனது மனமார்ந்த நன்றிகள். கண்டுபிடிப்பாளர்கள் மட்டும் ஆராய்ச்சியாளர்கள் என்று இல்லாமல் பல் துரை வித்தகர்களை உங்கள் தினம் கட்டுரை மூலம் உலகிற்கு அறிமுகப்படுத்தும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன்.