உலகம் போற்றும் இந்திய இயற்பியலாளர் அர்ச்சனா சர்மா | World renowned Indian Physicist Archana Sharma - Ayesha Era Natarsan - https://bookday.in/

 உலகம் போற்றும் இந்திய இயற்பியலாளர் அர்ச்சனா சர்மா

 உலகம் போற்றும் இந்திய இயற்பியலாளர் அர்ச்சனா சர்மா (Archana Sharma)

தொடர் : 51 இன்றைய இந்திய விஞ்ஞானிகள் 100

 

அர்ச்சனா சர்மா (Archana Sharma) மத்திய அரசின் பிற தேசி பாரதீய சம்மான் விருது பெற்ற இந்தியாவின் பெண் விஞ்ஞானி ஆவார். அவர் ஜெனிவாவிலுள்ள CERN அறிவியல் அமைப்பில் இந்தியாவின் சார்பாக பங்குபெற்று உழைக்கும் இயற்பியலாளர் என்பது குறிப்பிடத்தக்கது. மைக்ரோ ஃபைடர் வாயு கண்டறிதல் இயற்பியல் என்னும் நுணுக்கமான புதிய துறையில் அவர் முன்னோடியாக கருதப்படுகிறார்.

அர்ச்சனா சர்மா (Archana Sharma) உத்தரப்பிரதேசத்தின் ஜான்சியில் பிறந்தவர், அவர் பிறந்த ஆண்டு 1964. அவருடைய தாயும், தந்தையும் ஆசிரியர்கள், உள்ளூரில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் அவரது தந்தை இயந்திரவியல் பொறியியலை கற்பித்தார்.. அவருடைய தாய் ஒரு பொருளாதார பேராசிரியர். பெலாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் இளங்கலை மாணவராக அர்ச்சனா சர்மா இயற்பியலை எடுத்து படித்தார்.

1982 ஆம் ஆண்டு பட்டப்படிப்பை முடித்து அதே பல்கலைக்கழகத்தில் நியூக்ளியர் ஃபிசிக்ஸ் துறையில் முதுகலை பட்டம் பெற்றார். டெல்லி பல்கலைக்கழகத்தில் துகள் இயற்பியலில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டவர். பிறகு ஜெனீவா பல்கலைக்கழகத்தில் இரண்டாவது முனைவர் பட்டம் இணைந்த பொழுது தான் தன்னுடைய உண்மையான ஆய்வுத் துறைக்குள் நுழைந்தார்.

 உலகம் போற்றும் இந்திய இயற்பியலாளர் அர்ச்சனா சர்மா | World renowned Indian Physicist Archana Sharma - Ayesha Era Natarsan - https://bookday.in/
அது என்ன ஆய்வுத்துறை. 1987 ஆம் ஆண்டு ஜார்ஜ் சார்பாக் என்னும் அறிஞரின் தலைமையிலான டிடக்டர் டெவலப்மெண்ட் குழுவில் ஆராய்ச்சி நடத்த மூன்றாண்டு கால பெல்லோஷிப் வென்ற பொழுது சர்மாவின் ஈடுபாடு CERN நோக்கி சென்றது.1989 ஆம் ஆண்டு குடும்பத்துடன் ஜெனிவாவுக்கு சென்று உலகின் பிரமாண்ட ஆய்வுக்கான அடிப்படை கருவிகள் தயாரிக்கும் குழுவில் தன்னை இணைத்துக் கொண்டார். தனக்கு கருவியாக்கத்தில் நிபுணத்துவத்தை இந்திய பல்கலைக்கழகம் வழங்காததை அப்போதுதான் உணர்ந்தார்.

இந்திய பல்கலைக்கழகங்கள் வழங்கும் இளங்கலைப் பட்டங்களும், முதுகலைப் பட்டங்களும் பெரும்பாலும் கோட்பாடுகளை அடிப்படையாக கொண்டவையாக இருக்கின்றன. புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்ப சாதனங்களை உருவாக்குகின்ற இயற்பியல் தொடர்பான கல்வி இந்தியாவில் இல்லாததை அப்போது உணர்ந்தார். அவருடைய வாழ்க்கையில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய மிக முக்கியமான இடம் இதுதான்.

ஆனால் அதற்காக ஏனைய விஞ்ஞானிகள் அவரை ஒதுக்கி வைத்த பொழுது, அவர் அச்சோ என்று இந்தியா திரும்பிவிடவில்லை.. சராசரி இந்திய மனம் அல்லது ஒரு பெண்ணின் உயர்ந்தபட்ச போராட்டம் இவற்றை அவருடைய வாழ்க்கை புறந்தள்ளியது. பிரம்மாண்டமான அந்த போராட்டத்தில் GSI-DRAMSTADT மற்றும் மேரிலாந்து பல்கலைக்கழகம் போன்றவற்றிற்கு சென்று இரண்டாவது முனைவர் பட்டத்தை மேற்கொண்டு போராட்டத்தை தொடர்ந்தார்.

 உலகம் போற்றும் இந்திய இயற்பியலாளர் அர்ச்சனா சர்மா | World renowned Indian Physicist Archana Sharma - Ayesha Era Natarsan - https://bookday.in/
அதன் பிறகு ஒரு நிபுணத்துவம் பெற்ற விஞ்ஞானியாக CERN ஆய்வகத்தில் காம்பெக்ட் மியூன் சொல்லநாய்ட் என்கிற CMS பரிசோதனையில் இணைந்தார். ஹிக்ஸ் போசான் துகள்கள் ஐக் கண்டறிவதற்கு வசதியாக உயர் திறனுள்ள கண்டுபிடிப்பு கருவிகளை வடிவமைத்தவர் அவர்.

ஒரு பரு பொருளில் வாயுக்களின் உள்ளடக்கம் உள்ளதா என்பதை கண்டறியும் கருவிகளை கண்டுபிடித்ததற்காக இன்று உலகம் முழுவதும் அவர் அறியப்படுகிறார். இதன் மூலம் தான் அவர்கள் ஹிக்ஸ் போஸானை கண்டுபிடித்தார்கள் அவர் LARGE HADRON COLLIDER எனும் அந்த பிரம்மாண்ட பரிசோதனையில் ஒரு அங்கமாக இருந்த CMS பரிசோதனைக்கு தலைமை வகித்தவர். அங்கு GAS ELECTRON MULTIPLIER என்கிற GEM எனப்படும் புதிய மியூன் அடிப்படைத் துகள் கண்டறியும் அமைப்பை உருவாக்குகிறார்.

மியூன் என்பது என்ன? கிரேக்க எழுத்தான mu என்பதன் அடிப்படையில் எலெக்ட்ரானை போன்ற ஒரு அடிப்படைத் துகள் மியூன் என்று அழைக்கப்படுகிறது.. இது -1 இன்னும் மின் ஆற்றல் கொண்டது இதை நிறை விஷயத்தில் லிப்டோன் என்று வகைப்படுத்துகிறார்கள். சந்திரனில் இருந்து வரும் காஸ்மிக் கதிர்களின் நிழல் வளிமண்டலத்தில் உள்ள காஸ்மிக் கதிர்களால் ஒன்றிணைக்கப்படும் பொழுது இரண்டாம் நிலை மியுன்கள் உருவாகின்றன என்பது அர்ச்சனா சர்மாவின் அரிய கண்டுபிடிப்பாகும். மியூன் என்பது ஒரு நிலையற்ற துணை அணுத்துகள் என்று அறியப்படுகின்றது. மியூனின் சிதைவு மிக மெதுவாக நடக்கிறது. ஏனெனில் இந்த சிதைவு பலவீனமான தொடர்புகளால் மட்டுமே ஊக்கப்படுத்தப்படுகிறது. ஏனைய துகள்களின் சிதைவு என்பது அதிகம் சக்தி வாய்ந்த வலுவான மின்காந்த தொடர்புகளால் ஆனது ஆனால் மியுன் அப்படி செயல்படுவதில்லை. குவாண்டம் இயற்பியலில் இதுபோன்ற கண்டுபிடிப்புகள் மிக முக்கியமான சேவையை ஆற்றுகின்றன. இப்படி ஏராளமான விஷயங்களை உள்ளடக்கியது அர்ச்சனா சர்மாவின் ஆய்வுகள்.

 உலகம் போற்றும் இந்திய இயற்பியலாளர் அர்ச்சனா சர்மா | World renowned Indian Physicist Archana Sharma - Ayesha Era Natarsan - https://bookday.in/

ஒரு மியுன் துகளை கண்டறிவது என்பது ஹிக்ஸ் போஸான்னின் உற்பத்தியை உறுதிபடுத்த பயன்படுகிறது. அதனால் தான் அர்ச்சனா சர்மாவின் CMS பங்களிப்பு உலக அளவில் முக்கியத்துவம் பெறுகிறது இதன் மற்ற பரிமாணங்கள் பின்னணி கதிர்வீச்சு மற்றும் இருண்ட பொருள் என்று அழைக்கப்படும் டார்க் மேட்டர் கூறுகளை புரிந்து கொள்வதில் பயன்படுத்துவதால் அர்ச்சனா சர்மா உலகத்தின் மிக முக்கிய விஞ்ஞானியாக கருதப்படுகிறார். குவாண்டம் இயற்பியலின் மிக முக்கிய முன்னோடியாக இன்று பல ஆய்வாளர்களால் அவருடைய கட்டுரைகளிலிருந்து மேற்கோள்கள் காட்டப்படுகின்றன.

1989 ஆம் ஆண்டு CERN ஆய்வகத்தில் அர்ச்சனா சர்மா (Archana Sharma) இணைந்த பொழுது அவர் மட்டுமே இந்திய விஞ்ஞானியாக இருந்தார். ஆனால் விரைவில் அவர் இந்தியாவினுடைய ஏனைய விஞ்ஞானிகளை அதில் இணைத்தார். தற்பொழுது அர்ச்சனா சர்மாவின் அயராத உழைப்பினாலும் ஈடுபாட்டினாலும் நம் நாட்டின் விஞ்ஞானிகளை சர்வதேச அளவிலான ஒரு முக்கியமான ஐ வில் இணைக்க வேண்டும் என்கிற அவருடைய முனைப்பின் ஆளும் இன்று 400 இந்திய விஞ்ஞானிகள். CERN அமைப்பில் இணைந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 உலகம் போற்றும் இந்திய இயற்பியலாளர் அர்ச்சனா சர்மா | World renowned Indian Physicist Archana Sharma - Ayesha Era Natarsan - https://bookday.in/

இந்தியா STEM அறிவியல் பங்களிப்பில் மேலும் லட்சக்கணக்கான தன்னுடைய மாணவர்களை இணைக்க வேண்டும் என்பது அர்ச்சனா சர்மாவின் நியாயமான கோரிக்கையாகும். 50 சதவீதத்தை பெண்களுக்கு விட்டுக் கொடுக்க வேண்டும் என்பது அவருடைய தார்மீக குரல். ஸ்பூர்தி ராமன் எனும் இன்னொரு விஞ்ஞானியோடு இணைந்து அர்ச்சனா சர்மா (Archana Sharma) சமீபத்தில் இந்தியாவினுடைய அறிவியல் அறிஞர்கள் குறித்த தற்கால மிக முக்கிய புத்தகம் ஒன்றை எழுதி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

அயல்நாடுகளில் அயராது உழைக்கும் இந்தியாவைச் சேர்ந்த விஞ்ஞானிகளுக்கான பிரவேசி பாரதீய சம்மான் விருதை மத்திய அரசு அவருக்கு 2023 ஆம் ஆண்டு வழங்கி சிறப்பித்தது. விரைவில் நோபல் பரிசு பெறப்போகும் உலக அளவிலான இயற்பியலாளர்களின் பட்டியலில் எப்போதும் அவர் இடம் பெற்றிருக்கிறார். ஜூலை 2023 கோயம்புத்தூரில் நடைபெற்ற G20 அறிவியல் உச்சி மாநாட்டில் அர்ச்சனா சர்மாவின் உரை மிகப்பெரிய எழுச்சியை என் போன்றவர்களுக்குள் ஏற்படுத்தியது என்ற முத்தாய்ப்பான செய்தியோடு இந்த கட்டுரையை முடிக்கலாம்.

கட்டுரையாளர் :
உலகம் அறிந்த இந்திய சூரிய நிபுணத்துவ விஞ்ஞானி சங்கரசுப்பிரமணியன் World renowned Indian solar expert scientist Sankarasubramanian - Natarasan - https://bookday.in/
ஆயிஷா இரா. நடராசன்

 

 

 

 

 

 

 

 

 

தொடரின் முந்தய கட்டுரையை படிக்க கிளிக் செய்யவும் : உலகம் அறிந்த இந்திய சூரிய நிபுணத்துவ விஞ்ஞானி சங்கரசுப்பிரமணியன் (#Sankarasubramanian) 

ஆயிஷா இரா. நடராசன் எழுதிய நூல்களைப் பெற கிளிக் செய்யவும்: thamizhbooks.com



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *