தொடர்- 18 : இன்றைய இந்திய விஞ்ஞானிகள் 100
உலகம் போற்றும் இந்திய இயற்பியலாளர் அயன் பானர்ஜி (Ayan Banerjee)
என்னுடைய ஆயிஷா எனும் அறிவியல் குறுநாவல் கல்கத்தா சாந்திநிகேதன் பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் வங்காள மொழியில் வெளியிடப்பட்டது. அப்போது கொல்கத்தா சென்றிருந்த பொழுது என்னை மிகவும் கவர்ந்தவை அயன் பானர்ஜி எனும் இயக்குநரின் வீதி நாடகங்கள். அறிவியல் விழிப்புணர்வு அறிவியல் மனப்பான்மை போன்றவற்றை மக்களிடையே பரப்புவதற்கு இந்த நாடகங்களை பல அமைப்புகள் வங்காளம் முழுவதும் பயன்படுத்துவதை நான் பார்த்தேன். ஆனால் அந்த நாடக இயக்குநர் அயன் பானர்ஜி என்பவர் உலகப் பிரசித்தி பெற்ற ஒரு இயற்பியல் விஞ்ஞானி என்பது அப்போது எனக்கு தெரியாது. அந்த அற்புதமான மனிதரை பற்றி இந்த தொடரில் எழுதுவதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.
கல்கத்தாவின் ஒளி மற்றும் கருப்பொருள் ஆய்வகத்தில் இந்தியன் இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் எஜுகேஷன் அண்ட் ரிசர்ச் அமைப்பில் தலைமை விஞ்ஞானியாக பொறுப்பேற்று பணியாற்றி வருபவர் தான் அயன் பானர்ஜி. இயற்கையில் ஒளி தனக்கென்று பல விஷயங்களை மறைத்து வைத்திருக்கிறது. சூரிய ஒளி இல்லாமல் தாவரங்கள் உணவு தயாரிப்பதில்லை. தாவர உணவின்றி புவியில் உயிர்கள் உயிர் இருக்க வாய்ப்பில்லை. இது ஒரு புறம், 3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் இந்த பூமியில் ஒற்றை செல்கள் கொண்ட அல்கா எனும் பூஞ்சைகள் சூரிய ஒளியை உணவாக மாற்ற கற்றுக் கொண்டன. யூக்ளிடு எனும் மாபெரும் அறிஞர் தான் கணிதத்தின் உடைய வரையறைகளைத் தொகுப்பதற்கு முன் OPTICS என்று ஒலியைப் பற்றி தனி புத்தகம் எழுதினார். IBUN AL-HAYTHAM பத்தாம் நூற்றாண்டு அரேபிய அறிஞர் KITAB AL-MANAZIR என்கிற மிகப் பிரபலமான ஒளியியல் குறித்த புத்தகத்தை 30 ஆண்டுகள் எழுதினார்.
உலகில் மாபெரும் அறிஞர்களில் ஒருவரான சர் ஐசக் நியூட்டன் வெள்ளை ஒளியின் வண்ணங்களை வெளிப்படுத்தியதோடு ஒளியின் அலை பண்புகளையும் உலகிற்கு கொண்டுவந்தார். நம் நாட்டின் மாபெரும் அறிஞர் சி வீ ராமன் 1921 ஆம் ஆண்டு ஐரோப்பாவுக்கு பயணம் செய்த பொழுது கடல் ஏன் நீல நிறமாக இருக்க வேண்டும் என்ற தன் கேள்வியை நிறமாலை ஆய்வாக மாற்றி ராமன் விளைவைக் கண்டுபிடித்தார். அதற்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.
ஒளி ஒரே சமயத்தில் அலையாகவும் துகளாகவும் நடந்து கொள்கிறது. ஒளியின் துகள்களுக்கு ஃபோட்டான்கள் என்று பெயரிட்டார்கள். ஒளி ஒரு பொருளின் மீது விழும் பொழுது அங்கே கதிர்வீச்சு அழுத்தம் என்கிற ஒன்றை ஏற்படுத்துகிறது. இந்த இடம் தான் அயன் பானர்ஜினுடைய ஆய்வு செயல்படும் மிக முக்கிய இடம். OPTICAL TWEEZERS என்று அழைக்கப்படும் ஆப்டிகல் சாமணம் தொடர்பான கண்டுபிடிப்புகளை அவர் நிகழ்த்தி இருக்கிறார். OPTICAL TWEEZERS என்றால் என்ன? இது ஒற்றை பீம் சாய்வு விசைப்பொறி அதாவது TRAP என்று அழைக்கப்படுகிறது. சாமணம் போன்ற முறையில் அணுக்கள் நேனோ துகள்கள் மற்றும் துளிகள் போன்ற நுண்ணிய மற்றும் துணை நுண்ணிய பொருட்களைப் பிடித்து நகர்த்துவதற்கு அதிகம் கவனம் செலுத்தப்பட்ட லேசர் கற்றைகளைப் பயன்படுத்தி செயல்படும் அறிவியல் கருவிகளை உருவாக்கும் துறை. அதனை ஆப்டிகல் லிமிட்டேஷன் என்றும் அழைக்கிறார்கள்.
லேசர் ஒளியானது துகள் மற்றும் சுற்றியுள்ள ஊடகத்திற்கு இடையே உள்ள ஒப்பீட்டு ஒளிவிலகல் குறியீட்டைப் பொறுத்து ஒரு கவர்ச்சியான அல்லது எதிர் கவர்ச்சி எனப்படும் விரட்டும் சக்தியை வழங்குகிறது காந்தங்களைப் போலவே ஈர்க்கவோ அல்லது விலக்கவோ அதனால் முடிகிறது. ஒளியின் விசை ஈர்ப்பு விசையை எதிர்த்தால் லிமிட்டேஷன் சாத்தியமாகும். சிக்கிய துகள்கள் பொதுவாக மைக்ரான் அளவு அல்லது அதற்கும் சிறியதாக இருக்கும் மின் கடத்தா மற்றும் உறிஞ்சும் துகள்கள் சிக்கிக்கொள்ளலாம். இதுதான் LIGHT TRAP மருத்துவத் துறையில் ஆப்டிகல் சாமணம் அதிகம் பயன்படுகிறது உதாரணமாக ஒரு பாக்டீரியத்தை பிடிக்கவோ அல்லது குழந்தை பேற்றுக்காக செயற்கை முறையில் விந்தணு தக்க வைக்கவோ ரத்த அணு அல்லது டி என் ஏ போன்ற மூலக்கூறுகளைப் பிடித்து வைக்கவோ இதுபோன்ற TRAPSகள் பயன்படுகின்றன. நானோ பொறியியல் மற்றும் நானோ வேதியியல் இவற்றில் இம்மாதிரியான அமைப்புகள் ஒற்றை மூலக்கூறுகளிலிருந்து பொருட்களைப் பிடித்து வைக்கப் பயன்படுகிறது குவாண்ட ஒளிஇயல் மற்றும் குவாண்டம் ஆட்டோ மெக்கானிக்கல் ஆகிய துறைகளும் இதில் அடங்கும்.
OPTICAL TWEEZERS மைக்ரான் அளவிலான மின் கடத்தா துகள்கள் மற்றும் தனிப்பட்ட அணுக்களைக் கூட அதிக கவனம் செலுத்தப்பட்ட லேசர் கற்றை வழியாக மிகச் சிறிய சக்திகளை செலுத்துவதன் மூலம் கையாளும் திறன் கொண்டதாகும். கதிர் ஒளியியல் என்னும் துறையில் பிரம்மாண்டமான நான்கு முக்கிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியவர் தான் அயன் பானர்ஜி எனும் உலகறிந்த இயற்பியல் அறிஞர். எலிகளைப் பிடிப்பதற்கான பொறியை அமைப்பது போல. ஒளிக்கற்றைகளைக்கொண்டு TRAPS அமைத்து மருத்துவத் துறையில் பல்வேறு சாதனைகள் இன்று நிகழ்த்தப்படுகின்றன.
அயன் பானர்ஜி அவர்களின் கண்டுபிடிப்புகளை உற்றுநோக்கும் பொழுது ஒரு விஷயம் உண்மையிலேயே ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. ஒளியின் துகள்களைக் கொண்டு அவர் கண்ணுக்குத் தெரியாத நுண்ணிய குமிழிகளை உருவாக்குகிறார். இந்த குமிழிகள் ஒரு மனிதனின் உடல் முழுவதும் பயணம் செய்து எந்த வகையான பாதிப்புகளையும் ஏற்படுத்தாமல் அதேசமயத்தில் சில வகை பாக்டீரியாக்களையும் வைரஸ்களையும் காட்டிக் கொடுக்கிறது. ALZHEMER நோய், ஃப்ளூ காய்ச்சல், COVID என பல்வேறு வைரஸ்களை மரபணு மாற்ற நோய்களைக் காட்டிக் கொடுக்கும் சக்தி இந்த குழிகளுக்கு உண்டு. இதற்காக LAB- ON CHIP எனும் சிறிய கருவியை அவர் அறிமுகம் செய்திருக்கிறார். இந்த கருவியின் மூலம் நம்முடைய சுவாச உறுப்பான மூக்கிலிருந்து எடுக்கப்படும் ஒரு மிகச் சிறிய கண்ணுக்குத் தெரியாத சளி கொண்டு நோயை கண்டறியும் முறையை இந்தியா தன் சொந்த நாட்டில் COVID 19 காலத்தில் எளிமையாகப் பயன்படுத்திக் கொண்டது அயன் பானர்ஜியின் ஒளி குமிழி முறையில் ஆகும்.
நானோ லேசர் முறையில் உருவாக்கப்பட்ட இது போன்ற பல கருவிகளை அறிமுகம் செய்த பெருமை அயன் பானர்ஜிக்கு உண்டு. கல்கத்தாவில் பிறந்தவர். பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் அணு இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்றவர். தான் சார்ந்திருக்கும் அணு இயலில் இருந்து விலகி 2009 ஆம் ஆண்டு நானோ ஒளியிலுக்குள் நுழைந்தார். ஒளியை நுண் துகள்கள் ஆக்கி நானோ அறிவியலுக்கு ஏற்ப பயன்படுத்துகின்ற பயன்பாட்டு ஒளி இயல் உலக வித்தகர் அயன் பானர்ஜி என்பதில் நமக்கெல்லாம் பெருமை.
கட்டுரையாளர் :
தொடரின் முந்தய கட்டுரையை படிக்க கிளிக் செய்யவும்: மூலக்கூறு உயிரியல் ,மரபியல் ஆகியவற்றின் இந்திய பெண் விஞ்ஞானி பரம்ஜித் குரானா.
ஆயிஷா இரா. நடராசன் எழுதிய நூல்களைப் பெற கிளிக் செய்யவும்: thamizhbooks.com
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
அயன் பானர்ஜி அவர்களின் ஒளி குமிழிகள் குறித்த ஆய்வு முறை நாட்டின் பெருந்தொற்று காலத்தில் பேருதவியாக இருந்திருக்கின்றது. தற்போதும் இருக்கிறது.
இது போன்ற அறிவியல் சமூக பங்களிப்பு செய்தவர்களை மருந்துக்கும் வெளி உலகத்தில் அறிய முடிவதில்லை.
தங்களால் இந்த மாமனிதரை அறிய முடிந்தது. சிறப்பான கட்டுரை. மக்கள் பணியில் அறிவியல் தொழில்நுட்ப சேவை செய்யும் மாமனிதர்களை அறிந்து அவர்களை கொண்டாடுவோம்
மிக்க நன்றி சார் 🙏🙏🙏
Pingback: ராகவன் வரதராஜன் (Raghavan Varadarajan)
மிகப்பெரும் ஆராய்ச்சியாளராக இருக்கும் இவர் நாடகங்கள் மூலம் பொது மக்களுக்கு கருத்துக்களை தெரிவிப்பதை அறிந்து மகிழ்ச்சி கொள்கிறேன். ஒளியை நுண் துகளாக மாற்றி நேனோ அறிவியலுக்குப் பயன்படுத்தும் ஆராய்ச்சி பற்றி அறிந்ததில் மிக்க மகிழ்ச்சி. சமகால ஆராய்ச்சியாளர்களை இந்த தொடர் வெளிக் கொணர்வது அனைவருக்கும் நன்மை பயக்கும்
வைர நிபுணர்கள் சாமணத்தால் எடுத்துப்பற்றி வைரக் கற்களை ஆராய்வார்கள். அதுபோல நீங்களும் வைரங்களை நிகர்த்த நம்நாட்டு அறிவியலாளர்களை தேர்ந்தெடுத்து அறிமுகப் படுத்துகிறீர்கள்! ‘ஒளியியல் சாமணத்தை’க் கொண்டு சாதனைகள் படைத்த விஞ்ஞானி அயன் பானர்ஜி தன்னுடைய திறமைகளை தெரு நாடகங்களின் மூலம் மக்களுக்கு அறிவியல் போதிக்க பயன் படுத்து கிறார் என்பதும் வியப்பை அளிக்கிறது. Optical Tweezer தொழில்நுட்பத்தல் இயங்கும் இன்னும் பல கருவிகளும் சிகிச்சை முறைகளும் விரைவில் பழக்கத்துக்கு வரும் என எதிர் பார்க்கலாம். “ஆயிஷா” கதை வங்க மொழியிலும் பிரபல ம்அடைந்து வருவதைக் கண்டு மகிழ்ச்சியடைகிறோம்.