உலகறிந்த இந்திய பாலிமர் வேதியியலாளர் சுப்ரமணியம் ராமகிருஷ்ணன் (Subramaniam Ramakrishnan)
தொடர் : 31 இன்றைய இந்திய விஞ்ஞானிகள் 100
சுப்ரமணியம் ராமகிருஷ்ணன் கனிம மற்றும் இயற்பியல் வேதியியல் துறையில் உலக பிரசித்திபெற்ற இந்திய விஞ்ஞானி ஆவார். TH3 மைக்ரோ பாலிமர் டிசைன் மற்றும் சிந்தஸிஸ் ஆய்வுக்குழுவை தலைமையேற்று நடத்தியவர். இந்திய அறிவியல் கழகத்தின் கட்டுப்படுத்தப்பட்ட பாலிமர் வேதியியலில் (Polymer chemistry ) வடிவமைப்பு மற்றும் தொகுப்பு பற்றிய ஆராய்ச்சிக்காக அறியப்பட்டவர். வேதியல் துறையில் பேராசிரியராகவும் இருக்கிறார்.
பாலிமர் வேதியல் என்னும் துறை இன்றைய நான்காம் தொழில் புரட்சிக்கு அத்தியாவசியமான அறிவியல் துறைகளில் ஒன்று. சுப்ரமணியம் ராமகிருஷ்ணன் இந்த துறையில் செய்திருக்கும் ஆராய்ச்சியானது மூலக்கூற்று வடிவிலான பாலிமெரிக் பொருட்களின் பிரித்தெடுக்கப்பட்ட பாலி எத்திலின் ஆக்ஸைடு தொடர்பான ப்ரான்ஸ் தெரிசிகேஷன் எனும் செயற்கை வழியை உருவாக்கியது தொடர்பானதாகும். பாலிமர் எலெக்ட்ரோலைட் களை உருவாக்குவது என்பது இன்றைய மிகப்பெரிய சவால்.
இது மருத்துவத்துறை சார்ந்த தொழில்துறைக்கு மிகவும் அவசியமான அன்றாட வாழ்க்கை பொருட்களை உருவாக்குவதற்கான மாற்றத்தை அடிப்படையாகக் கொண்டது. பாலிமர்கள் என்றால் என்ன? பாலிமர் வேதியியல் எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது? சுப்ரமணியம் ராம கிருஷ்ணனின் ஆய்வுப் பகுதியான பாலி எத்திலின் ஆக்சைடு என்பதை குறித்தும் நாம் அறிய வேண்டும். பாலி எத்திலீன் கிளைகோல் என்கிற வேதிப்பொருள் தொழில் துறையின் உற்பத்தி மற்றும் மருத்துவத்துறையின் கருவிகள் மருந்துகள் செய்வதற்குப் பயன்படுகிறது. மிக முக்கியமான ஒருவகை பாலிமர் ஆகும் பாலி எத்திலீன் கிளைகோல் பெட்ரோலிய துறையின் தொழில்துறை உற்பத்தியோடு தொடர்புடையது PEG என்பதுதான் பாலி எத்திலின் கிளைகோல் என்பதற்கான சுருக்கம். இந்த PEG இரண்டு வகையாக அறியப்படுகிறது. ஒன்று பாலி எத்திலின் ஆக்ஸைடு, அதாவது PEO. மற்றொன்று பாலி ஆக்ஸி எத்திலின். அதாவது POE.
இவற்றை குறித்த ராமகிருஷ்ணனின் ஆய்வு என்பது மருத்துவ இயலில் மருந்து தயாரிப்புகளில் வாய்வழி மேற்பூச்சு மற்றும் பிரதான மருந்தளவு வடிவங்களில் ஒரு துணைப் பொருளாக அதை பயன்படுத்துவது தொடர்பானது. பொதுவாக நாம் அழைக்கின்ற குழாய் மாத்திரை என்பவற்றை பொறுத்தவரையில் மேற்பூச்சில் உள்ள உடலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத பிளாஸ்டிக் போன்ற அந்த பாலிமர் மருந்தை சரியான விகிதத்தில் உடலுக்குள் செலுத்துவதற்கான முக்கியமான கண்டெய்னர்ராக பயன்படுகிறது. PEG என்பது பல விதமான LAXATIVES எனப்படும் மலமிளக்கி மற்றும் சுத்தகரிப்பு சம்மந்தமான குடல் நோய்களுக்கு பயன்படுகின்ற ஒருவகை வேதிப்பொருள் ஆகவும் உள்ளது. இது மனிதனின் மலச்சிக்கலுக்கு பெரிய அளவில் தீர்வாக அமைகிறது. மலத்தை இளக வைத்து வெளியிட கிளிசரின் சப்போசிக்டர் என்னும் வகை மருந்தியலில் ராமகிருஷ்ணன் கண்டுபிடித்து கொடுத்த PEG மிகவும் பயன்படுகிறது.
பாலி எத்திலீன் கிளைக்கால் என்கிற PEG வேதியியல் துறையில் தொழில்துறை தொடர்பான பயன்பாடுகள் கொண்டது ஆகும். சோதனையாளர்களின் வெப்பப் பரிமாற்ற திரவமாக இது பயன்படுகிறது. போர்க்கப்பல்களில் நீர்மூழ்கிகள் செய்வதற்கு நீர் தேங்கிய மரம் மற்றும் பிற கரிமக் கலைப் பொருட்களை பாதுகாக்கவும் PEG யை பயன்படுத்துகிறார்கள். மாஸ் ஸ்பெக்ட்ரோமெட்ரி சோதனைகளில் இந்த PEG உள் அளவுதிருத்த கலவையாக பெரும்பாலும் பயன்படுகிறது. துல்லியமான மற்றும் மறு உருவாக்கம் செய்யக்கூடிய சரிபார்ப்பை டியூனிங்காக அனுமதிக்கும் அதன் சிறப்பியல்பு ராமகிருஷ்ணனால் பல முறை சோதிக்கப்பட்டு நிரூபிக்கப்பட்ட ஒன்றாகும். சில பாலிமர் சேர்மங்களை உருவாக்குவதற்கு பயன்படுகின்றன. அம்பி சிலிக் பிளாக்கோ பாலிமர்கள் என்னும் வகையீட்டை ராமகிருஷ்ணன் தொழில் துறையில் அறிமுகம் செய்துள்ளார். இது கப்பல் கட்டுமானத்தில் மற்றும் விமானத்தை கட்டுவதற்கும் பயன்படு கின்ற முக்கியமான அடிப்படைப் பொருளாக பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
PEG என்கிற ராமகிருஷ்ணனுடைய வேதியியல் ஆய்வு கண்டுபிடிப்புகள் மருத்துவ அறுவை சிகிச்சைகளின்போது எந்தோ டெலியல் செல்கள் மற்றும் மைக்ரோ வேதி பூச்சுகளை இணைத்து செல்களை இணைக்கும் குழல்களை மீண்டும் உருவாக்க பயன்படுத்தப்படுகிறது. உடலிலுள்ள இரண்டு வெவ்வேறு செல்களுக்கு இடையே தொடர்பு அறுபட்டு போகும் பொழுது ஏற்படுகின்ற நோய்களை தீர்ப்பதற்கு PEG ஒரு இணைப்பு குழாய் ஆக பயன்படுகிறது.
சுப்ரமணியம் ராம கிருஷ்ணனின் கண்டுபிடிப்புகள் வடிவமைப்பு வேதியியலில் உலகளவில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை ஆகும். முன்னரே தீர்மானிக்கப்பட்ட பண்புகளுடன் கட்டுப்படுத்தப்பட்ட பாலிமர் கட்டமைப்புகளை வடிவமைத்து ஒருங்கிணைப்பதில் அவர் பெரும் வெற்றி அடைந்தார். சராசரி மூலக்கூறு இணைவு பூலத்தை சரி செய்வதன் மூலம் இந்த பாலிமர்ங்களின் இயற்பியல் பண்புகளை மாற்றி அமைக்க முடியும் என்பது அவரது மிக முக்கியமான கண்டுபிடிப்புகளில் ஒன்று.
மற்றவர்களால் இத்தனை தூரம் பாலிமர் வேதியியலில் பயணிக்க முடியவில்லை அவருடைய மதிப்பாய்வு செய்யப்பட்ட பல கட்டுரைகள் தனித்துவமானவை பலவகையான அவருடைய கட்டுரைகள் மிக அற்புதமாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. சுப்ரமணியம் ராமகிருஷ்ணன் 1960 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27 ஆம் நாள் பிறந்தார். இவர் மும்பையில் உள்ள பல்கலைக்கழகத்தில் SIES கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பட்டப் படிப்புக்காக வேதியியல் பாடத்தை எடுத்து படித்தார். முதுகலை பட்டப்படிப்பை முடிப்பதற்காக 1982 ஆம் ஆண்டு மும்பையில் உள்ள ஐஐடியில் இணைந்தார். அமெரிக்காவில் மாசச்சூசெட்ஸ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். நியூ ஜெர்சியில் உள்ள எக்ஸ் ஜோன் ஆராய்ச்சி மற்றும் பொறியியல் நிறுவனத்தில் கார்பரேட் ஆராய்ச்சி ஆய்வகத்தில் மீண்டும் ஒரு முதுகலை பட்டப்படிப்பை மேற்கொண்டார். 1990 ஆம் ஆண்டு இந்தியா திரும்பிய அவர் பெங்களூரிலுள்ள இந்திய அறிவியல் கழகத்தில் ஒரு விரிவுரையாளராகவும் ஆராய்ச்சியாளர் ஆகும் தன்னுடைய அடுத்த படிநிலை வாழ்க்கையைத் தொடங்கினார்.
தற்போது கனிம மற்றும் இயற்பியல் வேதியல் துறையின் தலைமை விஞ்ஞானியாக பணிபுரிகிறார். புளோரிடா பல்கலைக்கழகத்தின் வருகைதரும் விஞ்ஞானியாகவும் ஐந்தோவன் பல்கலைக்கழகத்தில் பிலிப்ஸ் இருக்கையினுடைய விஞ்ஞானியாகவும் தேர்வு செய்யப்பட்டவர் இவர். இந்திய அறிவியல் கழகத்தின் துணை இயக்குனராக தற்போது பணியாற்றி வரும் சுப்ரமணியம் ராமகிருஷ்ணன் இந்தியாவின் உயரிய அறிவியல் விருதான சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருதை 2005 ஆம் ஆண்டு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கட்டுரையாளர் :
தொடரின் முந்தய கட்டுரையை படிக்க கிளிக் செய்யவும்: உலகறிந்த இந்திய மாற்று எரிசக்தி துறை விஞ்ஞானி கனிஷ்கா பிஸ்வாஸ் (Kanishka Biswas)
ஆயிஷா இரா. நடராசன் எழுதிய நூல்களைப் பெற கிளிக் செய்யவும்: thamizhbooks.com
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
Pingback: நாபா குமார் மொண்டல் - Naba Kumar Mondal
வேதியியலில் பாலிமர் குறித்த இவரது ஆராய்ச்சிகள் அறிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி. மருத்துவத்துறைக்கு வேதியல் எவ்வளவு பக்கபலமாக இருக்கிறது என்பதை இந்த கட்டுரையில் புரிந்து கொண்டேன்