உலகறிந்த இந்திய குவாண்ட இயற்பியலாளர் சி. எஸ். உன்னிகிருஷ்ணன் - World renowned Indian quantum physicist C.S.Unnikrishnan - LIGO INDIA - https://bookday.in/

உலகறிந்த இந்திய குவாண்ட இயற்பியலாளர் சி. எஸ். உன்னிகிருஷ்ணன்

தொடர் – 20: இன்றைய இந்திய விஞ்ஞானிகள் 100

உலகறிந்த இந்திய குவாண்ட இயற்பியலாளர் சி. எஸ். உன்னிகிருஷ்ணன் ( C.S. Unnikrishnan )

பூனேவிலுள்ள டிஃபென்ஸ் இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் அட்வான்ஸ்டு டெக்னாலஜி கல்வி நிறுவனத்தில் குவாண்டம் டெக்னாலஜி ஆய்வு கூடத்தில் முதன்மை விஞ்ஞானியாக பணிபுரிபவர் தான் சி.எஸ். உன்னிகிருஷ்ணன். NEW REALITY IN THE GRAVITATIONAL UNIVERSE எனும் தலைப்பில் சமீபத்தில் அவர் எழுதிய புத்தகம் ஒன்றை நான் வாசித்தேன். ஈர்ப்பு விசை குறித்த விரிவான பதிவு அந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இந்தியாவில் இருந்துகொண்டு உலக அளவில் ஈர்ப்பு விசை அறிவியலில் தனக்கென்று ஒரு முத்திரை பதித்த மாமனிதர்தான் சி. எஸ். உன்னிகிருஷ்ணன் எனும் இயற்பியல் அறிஞர்.

ஆய்வக ஈர்ப்பு விசை, வானியல், குவாண்டம் இயற்பியல், ஆகிய துறைகளிலும், ஒளி இயலிலும் தனக்கென்று முத்திரை பதித்த விஞ்ஞானி உன்னிகிருஷ்ணன். இந்தியாவில் லேசர் கூலிங் ஆய்வகத்தை அமைப்பதில் முக்கிய பங்கு வகித்தவர் அவர். முருக்கு சமநிலைகள் இன்டர் பிரோ மீட்டர்கள் என்கிற இரண்டு முக்கிய துறைகளில் ஏறக்குறைய எட்டு கண்டுபிடிப்புகளை அவர் நிகழ்த்தியுள்ளார்.

Annual Student Meet@ncl

TORSION SPRING எனப்படும் முறுக்கு சமநிலை என்பது ஒரு மீள் பொருள் முருக்கப்படும் பொழுது இயந்திர ஆற்றல் சேமிக்கப்படுவதைக் குறிக்கிறது முருக்கப்பட்ட அளவுக்கும் குணத்திற்கும் விகிதாச்சாரமாக எதிர்த்திசையில் முறுக்கு விசையை அது செலுத்துகிறது. அதில் பல்வேறு வகைகள் உள்ளன. ஒரு முறுக்குப் பட்டை என்பது உலோகம் அல்லது ரப்பரின் நேரான பட்டயாகும். இது அதன் முனைகளில் பயன்படுத்தப்படும் முறுக்கு உலோகம் மூலம் எதிர்த்திசையில் முறுக்குவதற்கு உட்பட்டது ஆகும். இரண்டாவது வகையான முறுக்கு சமநிலை முறுக்கு இழை என்று அழைக்கப்படுகிறது. பட்டு பொருள்கள் கண்ணாடி அல்லது குவாட்ஸ் போன்றவற்றின் கலவைகளை கொண்டு முறுக்கு இழை தயாரிக்கப்படுகிறது. அது ஒரு கோணத்தில் முருக்கப்படும் பொழுது இயந்திரத்தினுடைய ஆற்றலை சேமிக்க உதவுகிறது.

மூன்றாவது தான் டார்ஷன் ஸ்பிரிங் என்றழைக்கப்படும் உலோக கம்பி முறுக்கு இணை ஹெலிக்ஸ் என்கின்ற இரட்டை சுழல் தன்மை கம்பி முறை என்று இயற்பியல் இதை அழைக்கிறது. இந்த முறை சக்திகளினால் வளைக்கப்படும் தருணங்களில் சூளை இருக்கமாக முறுக்குவதன் மூலம் நாம் மின் ஆற்றலை சேமிக்க முடியும்.
ஒரு காலத்தில் கடிகாரங்கள் ஒரு சூழல் காயம் முறுக்கு நீரூற்றைப் பயன்படுத்தி இருக்கின்றன. கிம்பால் அமைப்பு என்று அந்த அமைப்பு அழைக்கப்பட்டது. அந்த சுருள்க்கு சாவி கொடுப்பதன் மூலம் கை கடிகாரங்கள் ஓடிய காலங்களை நினைத்துப் பாருங்கள். அப்படி ஒரு சுருள் முடிக்கப்பட்ட பிறகு மெல்ல அது விடுவிக்கப்படும் பொழுது அது ஆற்றலை வெளிப்படுகிறது என்பது இப்போது புரிந்திருக்கும்.

TORSION SPRING பயன்படுத்தி இயங்குகின்ற பலவகை நவீன கருவிகள் உண்டு. அவற்றினுடைய ஆற்றலை அளப்பதற்கான ஒரு முக்கிய சமன்பாடு மாற்றும் குவாண்ட இயற்பியலில் அவற்றின் பங்கு குறித்த விரிவான ஆய்வுகளை உன்னிகிருஷ்ணன் மேற்கொண்டு வருகிறார். அதே போல INTERFEROMETER என்கிற நட்சத்திர ஒளி தகவல்களை பிரித்தெடுக்க அலை இயல் ஏற்பதை பயன்படுத்துகின்றனர். மின்காந்த கருவிகள் குறித்த அறிவியலிலும் உன்னிகிருஷ்ணன் உலகறிந்த நிபுணத்துவம் மிக்கவர். இந்த துறை வானியல் ஃபைபர் ஆப்டிக்ஸ் பொறியியல் அளவியல் ஒளியியல் அளவியல் கடல் சார்பியல் நில அதிர்வு நிறமாலை, குவாண்டம் இயக்கவியல் என்று பல்வேறு துறைகளை ஒருங்கிணைகின்ற ஒரு துறையாகும். INTERFEROMETER கள் என்பவை குறுக்கிட்டு வழியில் தகவல்களை பிரித்தெடுக்கும் சாதனங்கள் ஆகும். நுண்ணிய இடப்பெயர்வுகளை ஒலி விலகல் குறியீடு மாற்றங்கள் மற்றும் மேற்பரப்பு முறைகேடுகள் ஆகியவற்றை அளவிடுவதற்கு அவை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையில் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன.

இவ்வகைக் கருவிகளை அயல் நாட்டில் இருந்து தருவிக்கப்பட்ட காலங்கள் போய் இந்தியாவிலேயே அவற்றை தயாரிக்கும் முறையை உன்னிகிருஷ்ணன் அறிமுகம் செய்தார். பெரும்பாலான INTERFEROMETER கள் ஒரு மூலத்திலிருந்து வருகின்ற ஒளியானது வெவ்வேறு ஒளியியல் பாதைகளில் பயணிக்கும். இரண்டு கற்றைகளாக பிரிக்கப்படுவதற்கு உதவுகின்றன. அவே மீண்டும் ஒன்றிணைந்து குறுக்கீடுகளை உருவாக்கிக் கொள்கின்றன. சில சூழ்நிலைகளில் இரண்டு பொருத்தமற்ற ஆதாரங்களும் தலையிடலாம். அதன் விளைவாக வருகின்ற குறுக்கிட்டு விளிம்புகள் ஆப்டிகல் பாதை நீளங்களில் உள்ள வேறுபாட்டை பற்றிய தகவலை நமக்கு அளிக்கின்றன. இந்த கருவிகளை பயன்படுத்துவதன் மூலம் வானில் நட்சத்திர கூட்டங்களின் பலவகையான ரகசியங்களை விஞ்ஞானிகளால் வரிசைப்படுத்த முடியும் தொலைநோக்கி வழியே அவற்றை காண்பதை விட அவற்றின் ஒளியை பல வகையில் ஆய்வு செய்வது உன்னிகிருஷ்ணன் சம்பந்தப்பட்ட நிபுணத்துவ ஆராய்ச்சி.

LIGO எனப்படும் ஈர்ப்பு அலைகள் கண்டறியும் ஆய்வுக்கூடம் ஒன்றை இந்தியாவில் ஏற்படுத்துவது இயற்பியலாளர் உன்னிகிருஷ்ணனின் முக்கிய கனவாகும் ஈர்ப்பு அலைகள் எனப்படும் விண்வெளி காலத்தின் சிரிய சிதைவுகளை அளவிட INTERFEROMETER என்கிற சாதனம் முக்கிய கருவியாக அமைகிறது. 2015 செப்டெம்பர் மாதத்தில் ஈர்ப்பு அலைகளின் முதல் நேரடி கண்காணிப்பு உலகளவில் வெளியிடப்பட்டது. அதில் பங்குபெற்ற விஞ்ஞானிகளின் பெயர் பட்டியலில் உன்னிகிருஷ்ணனின் பெயர் இடம் பெற்றிருப்பது நமக்கெல்லாம் பெருமையாகும்.

Image courtosy Drishti IAS

2023 ஆம் ஆண்டு நான்கு பல்சர் டைமிங் வரிசை நட்சத்திரங்களின் பற்பல ஒளியாண்டுகளில் பரவியிருக்கும் ஆலை நிலங்களில் புவி ஈர்ப்பு அலை பின்னணிக்கான முதல் வலுவான ஆதாரத்தைக் கண்டுபிடிப்பதில் உன்னி கிருஷ்ணனின் பங்களிப்பு உலகளவில் பேசப்படுகிறது.

பெரும்பாலும் மிகப் பெரிய கருந்துளைகளை ஆய்வு செய்கின்ற பைனரி நட்சத்திரங்கள் எனும் இரட்டை நட்சத்திரங்களின் உடைய ஒளியை ஆய்வு செய்ய இவர் கண்டுபிடித்த INTERFEROMETER அமைப்புகள் பயன்படுகின்றன. 1915 ஆம் வருடம் ஈர்ப்பு விசைகள் குறித்து முதலில் தன் அனுமானத்தை வெளியிட்டவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஆவார். அதற்கு 100 ஆண்டுகள் கழித்து அந்த அலைகள் இருப்பதை உலகளவில் விஞ்ஞானிகள் நிரூபித்தார்கள். 2009 ஆண்டிலிருந்து IndiGO இந்திய ஈர்ப்பு அலைகள் இயற்பியலின் முக்கிய ஆய்வகத்தை மும்பையில் உள்ள டாடா இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் ஃபண்டமெண்டல் ரிசர்ச் ஆய்வகத்தில் ஏற்படுத்திய பெருமை உன்னி கிருஷ்ணனையும் அவர் சார்ந்திருக்கும் குழுவையும் சேரும்.

மிகக் குறைந்த வெப்பநிலையில் பேணப்படும் அணுக்கள் குறித்த இயற்பியல் உன்னிகிருஷ்ணனின் ஆர்வத்திற்குரிய துறையாகும். -270 டிகிரி செல்சியஸில் பேணப்படும் அணுக்கள் குறித்த ஆராய்ச்சியில் போஸ் ஐன்ஸ்டைன் சுருக்கத்தை பல உலோகங்களுக்கு ஆய்வு செய்வதிலும் அவருடைய ஆய்வகம் தனித்துச் செயல்படுகிறது.

ஸ்வீடன் நாட்டில் இருந்து KUNGL VETENSKAPSAKADEMIEN என்னும் ராயல் கல்விக்கழகம் 2017 ஆண்டின் நோபல் பரிசு குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டது. இந்த அறிக்கையில் ஜப்பானின் டோக்கியோவிலிருந்தும் இங்கிலாந்தில் இருந்தும் அமெரிக்காவில் இருந்தும் INTERFEROMETER கள் உதவின என்பதை குறிப்பிடும் அதே சமயம் LIGO INDIA அமைப்பின் உன்னிகிருஷ்ணன் ஆய்வகத்தின் INTERFEROMETER குறித்தும் விரிவாக எழுதப்பட்டுள்ளது என்கிற விஷயம் இன்றைய நம் விஞ்ஞானியான உன்னிகிருஷ்ணன் உலக அளவில் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவர் என்பதை நமக்கு விளக்கி நிற்கிறது.

No photo description available.
உன்னிகிருஷ்ணன் 1962 ஆம் ஆண்டு கேரளத்திலுள்ள காலடியில் பிறந்தவர். சென்னை இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்தில் முதுகலை அறிவியல் பட்டம் பெற்றவர். மும்பை பல்கலைக்கழகத்தில் டாடா இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் ஃபண்டமெண்டல் ரிசர்ச் கல்வி நிறுவனத்தில் தன் முனைவர் பட்ட ஆய்வை அவர் மேற்கொண்டார். 2016 ஆண்டுக்கான வானியல் இயற்பியல் துறையின் ரூபர் பரிசு அவருக்கு ஜெர்மனியில் வழங்கப்பட்டது. பூனாவிலுள்ள இந்திய ஃடிபன்ஸ் இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் அட்வான்ஸ்டு டெக்னாலஜி நிறுவனத்தில் தற்போது முதன்மை விஞ்ஞானியாக அவர் பணியாற்றி வருகிறார். விஞ்ஞானியாக மட்டுமின்றி திரைப்படத் துறையில் தொழில்நுட்ப வல்லுனராகவும் லேசர் பட காட்சிகளை இந்தியாவில் எடுக்க பங்களித்தவராகவும் ஓரளவுக்கு அறியப்பட்ட நடிகராகவும் உன்னிகிருஷ்ணன் திகழ்கிறார் என்பது அவரது பன்முகத் திறமையை எடுத்துக்காட்டுகிறது.

கட்டுரையாளர் :

உலகம் போற்றும் இந்திய இயற்பியலாளர் அயன் பானர்ஜி | World renowned Indian Physicist Ayan Banerjee - Optical tweezers - Nano-Optics - https://bookday.in/
ஆயிஷா இரா. நடராசன்

 

 

 

 

 

 

 

 

தொடரின் முந்தய கட்டுரையை படிக்க கிளிக் செய்யவும்: இந்தியாவின் உயிரி இயற்பியலாளர் ராகவன் வரதராஜன் (Raghavan Varadarajan)

ஆயிஷா இரா. நடராசன் எழுதிய நூல்களைப் பெற கிளிக் செய்யவும்: thamizhbooks.com



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Show 3 Comments

3 Comments

  1. N. சித்து முருகானந்தம்

    ஈர்ப்பின் அடிப்படைத் துகள் (Quantum Gravity) இதுவரை எந்தப் பரிசோதனையிலும் கண்டுபிடிக்கப்படவில்லை. மின்காந்தத்தின் Electromagnet அடிப்படைத்துகள் போட்டான் (Photon) Strong force ன் அடிப்படைத்துகள் குலுவான் (Gluon) Weak force ன் அடிப்படைத் துகள் W +, W- ,Z 0. அதே போல் Gravity க்கும் இருக்க வேண்டுமல்லவா? ஆனால் இதுவரை பிடிபடவில்லை. என்னுடைய ஆய்வின்படி டி புரோக்லியின் அலைச் சமன்பாட்டின் படி லாம்டா = h/mv இங்கு நிறை 0.ஆகவே m×0 = 0. Anything divided by zero becomes infinity. இதன்படி அலை மட்டும்தான் Infinity ஆக இருக்க முடியும். இதை வைத்துப் பார்த்தால் ஈர்ப்பின் அடிப்படை அளகு The Basic Unit of Gravity துகள் அல்ல, அலையே.

    • Era natarasan

      இளம் விஞ்ஞானி சித்து முருகானந்தம் அவர்களுக்கு..

      ஈர்ப்பு அலைகள் மற்றும் ஈர்ப்பின் துகள் குறித்து உங்களுடைய கருத்துக்களை வரவேற்கிறேன் அற்புதமான பதிவு இது குறித்த செய்தியையும் நூல் வெளிவரும் பொழுது உங்கள் பெயரைக் குறிப்பிட்டு இந்த கட்டுரையில் இணைத்துக் கொள்கிறேன்

      நன்றி

      ஆயிஷா நடராஜன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *