உலகம் அறிந்த இந்திய சூரிய நிபுணத்துவ விஞ்ஞானி சங்கரசுப்பிரமணியன் World renowned Indian solar expert scientist Sankarasubramanian - Natarasan - https://bookday.in/

உலகம் அறிந்த இந்திய சூரிய நிபுணத்துவ விஞ்ஞானி சங்கரசுப்பிரமணியன்

உலகம் அறிந்த இந்திய சூரிய நிபுணத்துவ விஞ்ஞானி சங்கரசுப்பிரமணியன் (Sankarasubramanian)

 

தொடர் : 50 இன்றைய இந்திய விஞ்ஞானிகள் 100

 

கே.சங்கரசுப்ரமணியன் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் ISRO-வில் யூ.ஆர்.ராவ் செயற்கைகோள் மையத்தில் பணிபுரியும் விஞ்ஞானி ஆவார். 2023 செப்டம்பர் 2 அன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட இந்தியாவின் முதல் சூரிய ஆய்வு கோலான ஆதித்யா- எல் 1 (Aditya-L1) என்னும் திட்டத்தின் முதன்மை விஞ்ஞானியாக அவர் பணியாற்றினார்.

SOLAR PHISICS என்று அழைக்கப்படும் சூரிய இயற்பியல் என்பது நம்முடைய பூமியின் மைய நட்சத்திரமான சூரியனைப் பற்றிய ஆய்வில் நிபுணத்துவம் பெற்ற வான் இயற்பியலின் ஒரு பிரிவாகும். இது தூய அறிவியல் மற்றும் இயற்பியல், வானியல் இயற்பியல் ஆகியவற்றுடன் தொடர்புடையது. இந்த துறையில் உலக அளவில் அறியப்பட்ட நிபுணர்கள் மிக குறைவு. இந்த துறைக்கு கண்காணிப்பு வான் இயற்பியல் என்றும் ஒரு பெயர் உண்டு. இது நம்முடைய சூரியனை மட்டுமே ஆய்வு செய்வது அல்ல தொலைதூர நட்சத்திரங்கள் அருகாமை நட்சத்திரங்கள் என்று அனைத்தையும் ஆய்வு செய்வதால் இந்த துறைக்கு பிளாஸ்மா இயற்பியல் என்றும் ஒரு பெயர் உண்டு.

சூரிய குடும்பம் மற்றும் ஹீலியோஸ் பியர் அதாவது சூரியனை அதனுடைய கிரணங்கள் சென்று சேருகின்ற எல்லை வரையிலான சூரிய குடும்பம் மற்றும் கிரகங்கள் கிரகத்தில் உள்ள வளி மண்டலங்கள்.. அனைத்து அம்சங்களையும் ஆய்வு செய்யும் இந்த துறை ஹீலியோ ஃபிசிக்ஸ் என்றும் அழைக்கப்படுகிறது.. இந்த துறையின் இந்திய வல்லுநர்தான் மதிப்புக்குரிய இஸ்ரோ விஞ்ஞானி சங்கரசுப்ரமணியன் ஆவார்.

உலகம் அறிந்த இந்திய சூரிய நிபுணத்துவ விஞ்ஞானி சங்கரசுப்பிரமணியன் World renowned Indian solar expert scientist Sankarasubramanian - Natarasan - https://bookday.in/

ஹீலியோ என்றால் சூரியன், அது குறித்த தீவிரமான ஆய்வுக்கான இயற்பியல் தான் ஹீலியோ ஃபிசிக்ஸ் என்று அழைக்கப்படுகிறது. இது சூரியனின் இயற்பியல் மற்றும் சூரிய குடும்பத்துடனான அதன் தொடர்பாகவும், இது குறித்து உலகஅளவில் இரண்டு காரணங்களுக்காக ஆய்வுகள் நடந்து வருகின்றன. ஒன்று சூரியன் மற்றும் சூரிய குடும்பம் இவற்றுக்கு இடையிலான பொது இணைப்பு, இரண்டாவது கண்டுபிடிப்பு மற்றும் புவியின் விண்வெளி சூழலை புரிந்து கொள்வதற்கான அறிவியலுக்காக விரிவாக நடத்தப்படும் ஆய்வுகள். இதைத் தவிர ஹீலியோ ஃபிசிக்ஸ் எனும் இந்த துறையில் ஒட்டுமொத்த சூரிய குடும்பத்தின் அமைப்பு என்கிற மூன்றாவது நோக்கத்தை இணைத்தவர் தான் சங்கரசுப்பிரமணியன்.

நமது சூரியனைப் போன்ற ஒரு நட்சத்திரத்தின் தாக்கத்தால் அண்டவெளியில் உள்ள அனைத்து இணைக்கப்பட்ட நிகழ்வுகளையும் ஒன்றிணைக்கும் ஒரு அறிவியலாக சூரிய இயற்பியலை எப்படி நாம் கண்டிருக்க முடியும் என்பதை இவரது ஆராய்ச்சிகள் மையமாகக் கொண்டவை. ஹீலியோ ஃபிசிக்ஸ் என்பது சூரிய இயற்பியல் என்பதிலிருந்து சற்றே மாறுபட்டது. இது சூரியனையே அதனுள்ளே சென்று அதன் உட்புறம் அதன் வளிமண்டலம் காந்தப்புலன்கள் உட்பட பலவற்றை ஆய்வு செய்கிறது. இது பூமி மற்றும் சூரிய குடும்பத்திலுள்ள பிற உறுப்பினர்களின் மீது சூரிய கதிர்கள் ஏற்படுத்தும் விளைவுகள் மற்றும் விண்வெளியில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவற்றின் மீது கவனம் செலுத்துகிறது.

சூரியனுக்கு உள்ளே நட்சத்திர காந்தப்புலங்கள் காஸ்மிக் கதிர்களை உருவாக்கி வெளியிடுகின்ற ஒரு அயனோஸ்பியர் தெர்மோஸ்பியர் மீசோஸ்பியர்.. இவை சூரியனிலும் உண்டு என்பதை ஆய்வுக்கு உட்படுத்துகின்ற ஒரு துறை இந்தத் துறை சூரியனால் ஏற்படும் துகள் முடுக்கம்.. அதன் மூலம் ஏற்படுகின்ற விண்வெளியின் விதவிதமான வானிலை அதன் கதிர்வீச்சு தூசி மற்றும் காந்த மறுஇணைப்பு சூரியனிலிருந்து வெளியேறும் அணுசக்தி ஆற்றல் உள் சூரிய அணு ஆற்றல் அது உருவாகும் விதம் இவை அனைத்தையும் ஆய்வு செய்யும் விதமாக சங்கர சுப்பிரமணியன் அவர்களின் ஆய்வுக் கட்டுரைகள் அமைந்துள்ளன.

உலகம் அறிந்த இந்திய சூரிய நிபுணத்துவ விஞ்ஞானி சங்கரசுப்பிரமணியன் World renowned Indian solar expert scientist Sankarasubramanian - Natarasan - https://bookday.in/

இந்தியாவின் ஆதித்யா- எல் 1 என்கிற செயற்கைக்கோள் சூரிய வளிமண்டலத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட கரோனா கிராஃபி விண்கலமாகும். இது பூமிக்கும் சூரியனுக்கும் இடையிலுள்ள லாக்ரேஞ்ச் புள்ளி 1(L1) என்னுமிடத்தை குறிவைத்து இயங்கியதால் ஆதித்யா விண்கலத்தில் லாங் ரேஞ்ச் 1 எனும் பதம் சேர்க்கப்பட்டுள்ளது. 2023 முதல் ஐந்தாண்டுகளுக்கு இந்த செயற்கை கோள் நமக்கு பலவகையான விவரங்களை அனுப்ப உள்ளது. சங்கர சுப்பிரமணியம் அவர்களின் மிக முக்கியமான ஆராய்ச்சி அடிக்கடி தகவல் தொடர்பு சாதனங்களை பூமியில் செயல்பட முடியாமல் தடுத்து விடுகின்ற சூரிய புயல்கள் தொடர்பானதாகும்.

சூரிய புயல் என்றால் என்ன.? அதில் சங்கர சுப்பிரமணியன் அவர்களின் கண்டுபிடிப்பு என்ன.? சூரிய புயல் என்பது சூரியனில் ஏற்படும் ஒருவகை கதிர்வீச்சு இடையூறு ஆகும். இது சூரிய மண்டலம் முழுவதும் வெளிப்புறமாக வெளிப்படுகிறது. பூமி மற்றும் அதன் காந்த மண்டலம் உட்பட முழு சூரிய குடும்பத்தையும் சூரிய புயல் பாதிக்கிறது. இது குறுகிய காலத்தில் விண்வெளியின் காலநிலையை முற்றிலும் சீர்கேடு அடைய வைக்கிறது. இதனால் நீண்டகால சிக்கல்கள் ஏற்படுகின்றன சூரிய புயல்கள் நான்கு வகையாக பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றின் வகைஈடுகளை மிக தெளிவாக உலகிற்கு அறிவித்த பெருமை சங்கர சுப்பிரமணியன் அவர்களை சாரும்.

அதில் முக்கியமானது கரோனால் மாஸ் எஜுக்ஷன் என்று அறியப்படும் CME வகையிலான பிளாஸ்மா வெடிப்பு ஆகும். இது சூரியனின் வளிமண்டலத்தில் காந்தப்புலத்தின் கோடுகளை சிக்கலாக்குகிறது. இந்த பெரிய பிளாஸ்மா வெடிப்பு சில நேரங்களில் சூரிய எரிப்பு உடனும் தொடர்புடையது. பூமியின் காந்தப்புலத்துடன் சூரியனின் வெடிப்பின் தொடர்பை இந்த CME ஏற்படுத்துகிறது. நாம் விண்ணில் அனுப்பி இருக்கிற இந்தியாவின் முதல் சூரிய செயற்கைக்கோள் ஆதித்யா.. செப்டம்பர் 2,2023 அன்று தன் பயணத்தைத் தொடங்கி.. 2024 ஜனவரி 6 அன்று.. மிகவும் பாதுகாப்பான தொலைவில் சூரியனை ஆய்வு செய்ய சுற்றி வருகிறது. இந்த விண்கலத்தின் உடைய பணி நோக்கங்களை பட்டியலிட்டவர்தான் சங்கரசுப்பிரமணியன். சூரியனின் குரோமோஸ்பியர் மற்றும் கருணாவின் இயக்கவியலை கண்காணிப்பது, ஆதித்யா விண்கலத்தின் முக்கிய நோக்கம் குறிப்பாக கரோனா வெப்பமாக்கல் சூரியனின் பகுதியளவு அணுக்களின் அயனியாக்கம் பிளாஸ்மா இயற்பியலின் அடிப்படையில் CME ஏனும் கரோனா மாஸ் எஜுக்ஷன்.. குறித்து முழுமையாக ஆராய்வது தான் இந்த ஆய்வின் நோக்கமாகும்.

நமது அது சூரியனைப் பற்றிய அடிப்படைகள் அறிந்துகொள்ளும்போது ஆச்சரியப்பட வைக்கின்றன. இது வெப்ப பிளாஸ்மாவின் மிகப் பெரிய தத்ரூப நட்சத்திரமாகும். அதன் மையத்தில் உள்ள அணுக்கரு இணைவு என்பது எதிர்வினைகளால் வெப்பமடைகிறது கேலடிக் என்கிற மையத்தை சூரியன் சுற்றி வருகிறது. நம்முடைய சூர்யன் ஜீ வகை G2V மஞ்சள் குள்ளன் என்று சங்கர சுப்பிரமணியன் போன்ற விஞ்ஞானிகளால் அழைக்கப்படுகிறது, இருப்பினும் அதன் ஒளி உண்மையில் வெண்மையானது. இது எப்படி தோன்றியது. 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் ஒரு பெரிய மூலக்கூறு வேதி மேகத்தின் ஒரு பகுதிக்குள் உள்ள பொருட்களின் ஈர்ப்பு சரிவின் காரணமாக இது உருவாகி இருக்கலாம். இந்த சூர்யன் அழிவை நோக்கி செல்கிறதா? அதற்கு இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆயுள் உள்ளது என்பதையும் சங்கரசுப்ரமணியன் ஆய்வுகள் தெளிவாக்குகின்றன. தற்போதிலிருந்து ஏறக்குறைய ஐந்து பில்லியன் ஆண்டுகளுக்கு பிறகு பூமியை வாழ தகுதியற்றதாக மாற்றும் அளவிற்கு சூரியன் பெரிதாக உள்ளது. சிவப்பு ராட்சத கட்டத்திற்கு பிறகு சூரியன் அதன் வெளிப்புற அடுக்குகளை அகற்றிக்கொள்ளும் அது ஒரு வெள்ளை குள்ளனாக மாறும் அதன் பிறகு ட்ரில்லியன் ஆண்டுகள் கழித்து அது ஒரு கருந்துளையாக அல்லது கருப்பு குள்ளன் என்னும் வகை நட்சத்திரமாக மாறும் என்பது சங்கரசுப்ரமணியனின் கோட்பாடாகும்.

உலகம் அறிந்த இந்திய சூரிய நிபுணத்துவ விஞ்ஞானி சங்கரசுப்பிரமணியன் World renowned Indian solar expert scientist Sankarasubramanian - Natarasan - https://bookday.in/

சங்கரசுப்ரமணியன் தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்தவர். அரசு பள்ளியில் கல்வி கற்று திருநெல்வேலி MDT ஹிந்து கல்லூரியில் தன்னுடைய இளம் கலை பட்ட படிப்புக்கு இயற்பியலை எடுத்துக் கொண்டார்.. பிறகு மதுரைக்கு சென்று அமெரிக்கன் கல்லூரியில் முதுகலை பட்டம் இயற்பியலில் பெற்றார். பெங்களூரிலுள்ள இந்தியன் இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் அஸ்ட்ரோ ஃபிசிக்ஸ் நிறுவனத்தில் தன்னுடைய முனைவர் பட்ட ஆய்வை சூரியனின் காந்தப்புலங்கள் எனும் தலைப்பில் மேற்கொண்டார். அவருடைய முனைவர் பட்ட ஆய்வுக்கு பிறகான அறிவியல் ஆய்வுகளை நியூ மெக்ஸிகோ எனினும் அமெரிக்கா நகரிலுள்ள நேஷனல் சோலார் அப்செர்வேடரி என்னுமிடத்தில் நிகழ்த்தப்பட்டது.

இந்தியாவின் சூரிய விஞ்ஞானியான சங்கரசுப்பிரமணியன் இஸ்ரோவில் இணைந்த பிறகு நம்முடைய விண்வெளி ஆய்வு செயற்கைகோளான அஸ்ட்ரோ சாட், சந்திரயான்1, சந்திரயான் 2, போன்றவற்றில் முக்கிய பங்காற்றினார். பெங்களூருவிலுள்ள யூ ஆர் ராவ் விண்வெளி ஆய்வு மையத்தில் இயக்குனராக தற்போது பணியாற்றி வருகிறார். 2024 ஜனவரியில் விண்ணிற்கு அனுப்பப்பட்ட இஸ்ரோவின் காஸ்மிக் எக்ஸ் கதிர்களின் துருவ முனைப்பை ஆய்வு செய்யும் எக்ஸ் ரே போலாரி மீட்டர் செயற்கைக்கோள் ஏனும் சிறு விண்வெளி ஆய்வுகூடத்தை முழுமையாக உருவாக்கி பிஎஸ்எல்வீ ராக்கெட் ஏவுவதற்கு அனைத்து வகையிலும் ஆய்வு முறையில் பிரம்மாண்ட பங்களிப்பை செய்தவர் சங்கரசுப்பிரமணியன் என்பது நமக்கெல்லாம் பெருமை.

*************************************

இன்றைய இந்தியாவின் 100 விஞ்ஞானிகள் தொடரின் 50வது வெற்றிகரமான கட்டுரை:

அறிவியல் எழுத்துக்களின் அடிப்படை நோக்கம், சமூகத்தில் புதிய கேள்விகளை விதைப்பதும், புதிய தலைமுறையை எழுச்சியூட்டும் புதிய திசையில் அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்ள வைப்பதும் தான் – ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் .

வணக்கம்

இது ஆயிஷா நடராஜன்

கவலை அளிக்கும் இந்த கல்வி சூழலை மாற்றுவதற்கு, நம்மால் முடிந்த களப்பணியாக இன்றைய இந்திய விஞ்ஞானிகள் 100 எனும் தலைப்பில் ஒரு இணையத் தொடரை தினந்தோறும் உங்கள் பெருத்த ஆதரவோடு எழுதி வருகிறேன். ஆகஸ்ட் இரண்டாம் நாள் நம்முடைய பயணம் தொடங்கியது.

நம் தொடரில் 50வது விஞ்ஞானியை அறிமுகம் செய்யும் நாள் இது. அறிவியல் வட்டாரத்திலும், கல்லூரி மாணவர்கள் மத்தியிலும், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மேல்நிலை கல்வி கற்கும் மாணவர்கள் மத்தியிலும், இந்த அறிவியல் தொடர் மிகப் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்னால் உணர முடிகிறது.

நான் பயணிக்கும் இடங்களில் எல்லாம் இது குறித்து கேட்கப்படுகிறது பேசப்படுகிறது விவாதிக்கப்படுகிறது. பொறியியல், மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மத்தியிலும் கூட இந்தத் தொடர் ஆதரவு பெறும் என்பது நானே எதிர்பாராத ஒன்று.

நம் எதிர்கால சந்ததிகளை அறிவியலின் அடிப்படை துறைகளை நோக்கியும் ஆராய்ச்சி கல்வியை நோக்கியும் அறிவியல் மனப்பான்மை மற்றும் சிந்தனை நோக்கி செலுத்துவது இந்தத் தொடரின் நோக்கம் என்பதை நான் நினைவு படுத்த வேண்டிய அவசியம் இல்லை.

இத்தனை ஆண்டு காலம் இருளில் இருந்த பல இன்றைய இந்திய விஞ்ஞானிகளை நம்முடைய தொடர் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. இன்னும் நாம் நிறைய தூரம் பயணிக்க வேண்டி இருக்கிறது என்றாலும், அறிவியலுக்கு எதிராக, இந்தியாவின் அறிவியல் சரித்திரத்தையே மாற்றி எழுத துடிக்கின்ற புராதன அறிவியல் புரட்டுவாதிகளின் ஆட்சியோடு, போராட நாம் இன்னும் நிறைய செய்ய வேண்டி இருக்கிறது என்பதுதான் இன்றைய சூழல்.

இன்று 50ஆவது விஞ்ஞானியை அறிமுகம் செய்திருக்கிறோம் என்கிற நிலையில் உங்களுடைய கருத்துக்களை நான் அறிய விரும்புகின்றேன்.

இந்தத் தொடரில் எழுதப்பட்ட பல விஞ்ஞானிகள், தான் எழுதப்பட்ட பிறகு தன் சம்பந்தப்பட்ட துறையின் கட்டுரையை, எக்ஸ் வலைதளம் உட்பட பல்வேறு இணைய இணைப்புகளில் பகிர்ந்து என்னை ஆச்சரியப்படுத்தி வருகிறார்கள்.

நாள்தோறும் காத்திருந்து, இந்தத் தொடரை லட்சக்கணக்கான மாணவர்களோடு, அறிவியல் ஆர்வலர்களோடு, பகிர்ந்து உதவுவதை ஒரு கடமையாகவே கருதும், உங்களுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியை இந்த தருணத்தில் தெரிவித்துக் கொண்டு அடுத்த ஐம்பதை நோக்கி எட்டு எடுத்து வைக்கிறேன்..

வாழ்க புக் டே டாட் இன் (https://bookday.in/)

வளர்க இந்திய அறிவியல்.

உங்கள் உற்சாக பங்களிப்போடும், உணர்வு பூர்வமான வாழ்த்துக்களோடும்..

இன்றைய இந்திய விஞ்ஞானிகள் 100 தொடரும்..

கட்டுரையாளர் :
உலகம் அறிந்த இந்திய சூரிய நிபுணத்துவ விஞ்ஞானி சங்கரசுப்பிரமணியன் World renowned Indian solar expert scientist Sankarasubramanian - Natarasan - https://bookday.in/
ஆயிஷா இரா. நடராசன்

 

 

 

 

 

 

 

 

 

தொடரின் முந்தய கட்டுரையை படிக்க கிளிக் செய்யவும் : உலகம் அறிந்த இந்திய வானிலை ஆய்வாளர் உமா சரண் மொஹந்தி (Uma charan mohanty)

ஆயிஷா இரா. நடராசன் எழுதிய நூல்களைப் பெற கிளிக் செய்யவும்: thamizhbooks.com



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Show 1 Comment

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *