உலக காதலர் தின சிறப்பு கவிதைகள் (World Valentine's Day Special Poems)| காதல் கவிதைகள் (Kadhal Kavithaikal) - Bookday Kaithaikal - https://bookday.in/

உலக காதலர் தின சிறப்பு கவிதைகள்

உலக காதலர் தின சிறப்பு கவிதைகள்

 

காமத்திப்பூ
**************

ஊமத்தம்பூ
மனசில்
ஒரு பார்வையால்
காமத்திப்பூ
பூக்கச் செய்தவள்
நீதானே!.
==================
காயங்கள்
பல கடந்தும்
துளிர்க்கும்
மலர்களில்
சிரிக்கும்
மகரந்தம்
நீ…
======================
மறுமுறை
நீ என்னைப்
பார்க்கும் போது
என்ன செய்வாய்
என்று கேட்கிறாய்
ஒன்றுமில்லை
உன் பாதங்களை
என்
உள்ளங்கையில் ஏந்தி
உயிரழுந்த
முத்தமிடுவேன்…
===================
என் எல்லா
அன்பையும்
உன்னிடம்
கொட்டிக் குவித்தேன்
மிச்சம் கிடைத்தது
கண்ணீர்…
==============
நீ
முத்தமிட்டு
எச்சில் படுத்திப் போன
ஞாபகங்களில் கசியும்
என் மீதி வாழ்வு…
===========
நித்தம் நூறு பெயர்கள்
என் காதில்
ஒலிக்கின்றன
என்றாலும்
என் காதில்
நித்தம்
ஒலிப்பது
உன் பேர் தானே
எனதன்பே..!
=====================

உனக்கென்ன
உயிர் வரை
உதடுகளால்
ஒத்தடமிட்டுச்
சென்று விடுகிறாய்
தாகத்தில்
தவிப்பதென்னவோ
நான்…
=============
உன் கண்கள்
என் ஆழக் கடலினுள்ளே
ஒளிரும் சமுத்திரம்…
====================
ஒரு
அனாதைக் குழந்தையாய்
உன்னிடம் வந்தடைகிறேன்.
உன் அன்பு முழுமைக்கும்
என்னிடம் தந்துவிடு
கடைசி வரை
உன் காதல் ஆசிரமத்தில்

தங்கிக் கொள்கிறேன்…
==========================

எழுதியவர் : 

தினேஷ் பாரதி

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Show 2 Comments

2 Comments

  1. மு.அழகர்சாமி

    அருமை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *