மிகப்பெரிய மூழ்குக் குழி - Yercaud Elango - இது உலகின் மிக ஆழமான மற்றும் மிகப்பெரிய மூழ்குக் குழி (World's Biggest Sinkhole) ஆகும்- https://bookday.in/

மிகப்பெரிய மூழ்குக் குழி(World’s Biggest Sinkhole)

மிகப்பெரிய மூழ்குக் குழி (World’s Biggest Sinkhole)

– ஏற்காடு இளங்கோ

பூமியின் மேற்பரப்பில் நூற்றுக்கும் மேற்பட்ட மூழ்குக் குழிகள் உள்ளன. இவற்றில் ஒன்று தென்மேற்கு சீனாவில் சோங்கிங் மாநகராட்சியின் ஃபெங்ஜி கவுண்டி என்ற இடத்தில் உள்ளது. இது உலகின் மிக ஆழமான மற்றும் மிகப்பெரிய மூழ்குக் குழி (World’s Biggest Sinkhole) ஆகும். இது சொர்க்கத்தின் கிணறு (Well of heaven) என்றும், சியோழி பரலோக குழி (Xiaozhai Heaven Pit) என்றும் அழைக்கப்படுகிறது.

மிகப்பெரிய மூழ்குக் குழி - Yercaud Elango - இது உலகின் மிக ஆழமான மற்றும் மிகப்பெரிய மூழ்குக் குழி (World's Biggest Sinkhole) ஆகும்- https://bookday.in/

 

இது சீனாவில் சியோழி டியான்கெங் (Xiaozhai Tiankeng) என மக்களால் அழைக்கப்படுகிறது. இது பண்டைய காலம் முதலே உள்ளூர் மக்களுக்கு நன்குத் தெரிந்த ஒரு மூழ்குக் குழியாகும். சியோழி என்பது ஒரு கைவிடப்பட்ட கிராமத்தின் பெயர் மற்றும் சிறிய கிராமம் என்பதைக் குறிக்கிறது. டியான்கெங் என்றால் பரலோக குழி என்று பொருள்படும். இது பிரிட்டிஷ் ஆய்வாளர்களால் 1994 ஆம் ஆண்டில் ஆய்வு மேற்கொண்ட போதுதான் இதன் பிரமாண்டம் வெளி உலகத்திற்குத் தெரிய வந்தது.

இது 626 மீட்டர் (2,054 அடி) நீளமும், 537 மீட்டர் (1,762 அடி) அகலமும், 511 முதல் 662 மீட்டர் (1,677 – 2,172 அடி) ஆழமும் கொண்டது. இது ஒரு வட்ட வடிவமான குழி ஆகும். இது 130 மில்லியன் கன மீட்டர் கொள்ளவைக் கொண்டுள்ளது. மேலும் இந்தக் குழி செங்குத்துச் சுவர்களால் ஆனது. இது இரட்டிப்பாக உள்ளமைக்கப்பட்ட ஒரு கிண்ண அமைப்பாகும். இதன் மேல் கிண்ணம் 1,050 அடி ஆழமும், கீழ் கிண்ணம் 1,122 அடி ஆழமும் இருக்கும்.

மிகப்பெரிய மூழ்குக் குழி - Yercaud Elango - இது உலகின் மிக ஆழமான மற்றும் மிகப்பெரிய மூழ்குக் குழி (World's Biggest Sinkhole) ஆகும்- https://bookday.in/

 

இது கார்ஸ்ட் செயல்பாட்டினால் (Karst Process) ஏற்பட்டது. அதாவது நிலத்தின் மேற்பரப்பில் இருந்து உருவாகின்ற நீர் அடியில் சென்று அங்குள்ள சுண்ணாம்புக்கல் போன்ற கார்பனேட் பாறை அடுக்குகளைக் கரைத்தது. அது சுரங்கம் மற்றும் குகைகளாக விரிபடுத்தியது. இறுதியில் பாறை உச்சவரம்பு இதற்கு முட்டுக்கட்டை போட முடியவில்லை. இதனால் கூரைகள் கீழே சரிந்து, மிகப்பெரிய மூழ்குக் குழி திறந்துவிட்டது. இது சுமார் 1,28,000 ஆண்டுகளில் படிப்படியாக உருவானது ஆகும்.

இந்தக் குழி ஒரு சக்தி வாய்ந்த நிலத்தடி நதியால் உருவாக்கப்பட்டது. இது டிஃபெங் குகையின் (Difeng Cave) மீது உள்ளது. இந்த நிலத்தடி ஆறு சுமார் 8.5 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. மழைக்காலத்தில் குழியின் வாயிலிருந்து ஒரு நீர்வீழ்ச்சி விழுகிறது. இது நிலத்தடி ஆறு மற்றும் குகை வலையமைப்புக்கு நீரை வழங்குகிறது. இதனால் ஒரு ஆழமான இருண்ட பாதாள உலகம் உருவாகி உள்ளது. இந்த மிகப்பெரிய மூழ்குக் குழியானது உலகின் புவியியல் அற்புதங்களில் ஒன்றாக விளங்குகிறது.

கட்டுரையாளர் : 

மிகப்பெரிய மூழ்குக் குழி - Yercaud Elango - இது உலகின் மிக ஆழமான மற்றும் மிகப்பெரிய மூழ்குக் குழி (World's Biggest Sinkhole) ஆகும்- https://bookday.in/

– ஏற்காடு இளங்கோ
அறிவியல் எழுத்தாளர்.

 


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *