எழுத்தாளர் முகம்மது யூசுப் (Writer Mohammad Yousuf) எழுதி யாவரும் பப்ளிஷர்ஸ் வெளியீட்ட கொத்தாளி நாவல் (Kothaali Tamil Novel)

“கொத்தாளி” நாவல் – நூல் அறிமுகம்

“கொத்தாளி” என்ற உண்மை தூவிப் புரட்டி எடுத்த புத்தகம் படித்தேன். அதனைப் பற்றிய பதிவு இது..

புத்தகத்தை வாங்கும்போதே
இது என்ன கொத்தாளி
என்று பெயர் என நினைத்தேன்.

ஆனால் மகன் ஈரோடு கார்த்தி
என்னும் செகா, அம்மா
இதனை நீங்கள் கட்டாயம்
படிக்க வேண்டும் என்று
அவர் வாழ்வில்
முதல் முறையாக
என்னிடம், மனசு வந்து
ஒரு புத்தகம் கொடுத்தார்.

அதுதான் கொத்தாளி.
அது மட்டுமல்ல,
அன்புள்ள கொத்தாளிக்கு,
என என்னையும் கொத்தாளியாக்கி
புத்தகம் தந்துள்ளார்.

அதனை படித்து முடித்த
பின்னரே அதன்
சூட்சுமம் விளங்கியது.

என்னய்யா மனுஷன் இவர்.
எப்படி இப்படியெல்லாம்
யோசித்து யோசித்து
எழுதியுள்ளார் என
ஆசிரியர் முகம்மது யூசுப் (Mohammad Yousuf)
பற்றி எண்ணினேன்.

புத்தகம் படிக்கப் படிக்கப்
பிரமித்துப் போனேன்.

இப்படியும் கூட ஒருவர்
உண்மையை கற்பனையுடன்
கலந்து தருவாரா என்று
பயந்தே போனேன்.

புத்தகம் படிக்க படிக்க,
ஒரு thriller movie பார்த்தது
போன்ற உணர்வுதான் ஏற்பட்டது.

என்னையா இது
இப்படியெல்லாம் கூட
மனம் பதை பதைக்க
எழுத முடியுமா?
ஆச்சரியத்தில்
விக்கித்துப் போனேன்.

நான் நிறைய படிப்பவள்தான்.
அதுவும் பள்ளி, கல்லூரி காலங்களில் உணவையும் மறந்து
படிப்பில் மூழ்கிப் போவேன்.
கதைப் புத்தகங்கள்,
துப்பறியும் நாவல்கள்,
பாட புத்தகமும் கூடவே.

நான் புகுமுக வகுப்புக்கு
கும்பகோணம் கல்லூரியில்
விடுதியில் தங்கி படித்துவிட்டு
விடுப்புக்கு
, விடுமுறைக்கு எங்கள் சோழம்பேட்டை கிராமத்துக்குச்
செல்லும் பேருந்துக்கு,
குத்தாலம் பேருந்து நிலையத்தில் காத்து கிடப்பேன், இரவிலும் கூட

நிற்கும்போது, இரவு 8.௦௦ மணிக்கு
அங்கிருக்கும் கடையில்
துப்பறியும் நாவல்கள் வாங்குவேன்.

அதனை வீட்டுக்கு
எடுத்துப் போய் அன்று இரவே, மண்ணெண்ணெய் விளக்கின்
ஒளியில் படித்து
முடித்து விடுவேன்.

ஆனால் படிக்கும்போது
மிகவும் பயமாக இருக்கும்,
படிக்காமல் இருக்கவும்
மனசு கேட்காது.
எப்படியும் பயந்துகொண்டே
படித்துவிடுவேன்.

படித்து முடித்ததும்
பயத்தில் தூக்கம் வராது.

அப்படிப்பட்ட ஒரு நிலையை
கொத்தாளி படிக்கும்போது
உணர்ந்தேன்.உருவாகியது.

இந்த கொத்தாளி புத்தகத்தை
இரவு 10.௦௦ மணிக்கு மேல்
படிக்க பயமாக இருந்தது.
பின்னர் இரவில் படிப்பதைத்
தவிர்த்து பகலில்
படித்து முடித்தேன்
இரு நாட்களில்.

முகம்மது சாரே..
என்ன ஒரு லாவகமான நடை.
புத்தகத்தை கையில் எடுத்தால்,
கீழே வைக்க விடாத அளவுக்கு
உயிரோட்டமான எழுத்துக்களும்,
வார்த்தை வடிவமைப்பும், சொல் பிரவாகங்களும், வர்ணனைகளும்,
பிரமாதம் சார்.

ஒரு வார்த்தைக்கு
இத்தனை சொற்கள் உள்ளனா?
வியப்பாகவே உள்ளது.
எவ்வளவு படித்து இருந்தால்,
தேடல் இருந்திருப்பின்

இவற்றை இவ்வளவு
தெளிவாக, வாசிப்பவரின்
மனதில் விதைத்து
அருமையாக எழுத முடியும்,
சூப்பர் சார்.

இவை வெறும் வார்த்தைகள் இல்லை, நெஞ்சிலிருந்து வரும் உணர்வுகள்.
இயற்கையை ஒன்றிய வர்ணனை, அங்குள்ள வாழிடம்,
மக்கள், பறவைகள்,
விலங்குகள் என எதனையும்
விட்டு வைக்காமல்,
ஏதே நேரே பார்ப்பது
போன்ற உணர்வு புத்தகம்
படித்து முடிக்கும் வரை
. இருந்தது என்பதே உண்மை…

ஆனால் இது ஒரு உண்மைக்கதை,,,தூத்துக்குடிக்கு
அருகில் உள்ள கிராமத்தில் நடந்தது
என்று கூறியிருக்கிறீர்கள்.

முதல் அத்தியாயம் போலீஸ்காரர் மாடசாமி வந்தாலும்,
அது கிராமத்து நாடக கொட்டகையில் வரும் கட்டியங்காரர் போல்தான்
. கதையின் முன்னோட்டம் அது.

இரண்டாம் அத்தியாயம்தான்
கதை துவக்கம்,
செந்தட்டி அய்யனாருடன்
துவங்கி, அவரின்
காகித கட்டோடுதான்
கதை முடிகிறது ..

அவரின் கதை,
அவரின் நேர்மை, அவரின் கஷ்டம், அவாது பரபரப்பு,
மருதன் அருகிருந்தும்,
அவரைத் தெரியா நிலை ,

மருதனுக்கும் செந்தட்டியை
தெரியாமல் இருந்தது.

Classic கதை யோட்டம் ஐயா..

நாவலில் வரும்
ஒவ்வொரு கதை மாந்தரும்
மனதில் நிற்கின்றனர். ஓடி வருகின்றனர் ஒட்டிக்கொள்கின்றனர்.
கூப்பிட்ட குரலுக்கு
ஓடி வரும் குழந்தை போல,
அற்புதமான கதை வடிவமைப்பு.

இதற்கு ஏன் சாகித்ய அகாடமி
விருதுக்கு பரிந்துரைக்க வில்லை யாரும்?.

மருத்துவமனையிலிருந்து
ஆட்டோவில் வந்த மருதனை, மாயப்பெருமாளின் ரவுடிக்கும்பல்,
நாலு துண்டாக வெட்டியதும்,
அவர் துடிதுடித்து இறந்ததும்
இரத்த வெள்ளமும்
நான் பயத்தில்
மிரண்டே போனேன்.

தொடர்ந்து படிக்க
முடியவில்லை.
வாசிப்பாளர்களை
மனதளவில் பாதிக்கும்
தொந்தரவு செய்யும்
பு த்தகம் கொத்தாளி.
இது நாவலாசிரியருக்கு
வெற்றிதானே..! ..

மருதன் கொலை என்ற
இரையைப் போட்டு
வேம்பனை தூண்டில் போட
திட்டமிட்ட போலீஸ்..

அவர் கடைசி வரை
வராதது.
வேம்பனின் தாத்தா வெங்காளி
, அதன் பின்னணி. அற்புதம் போங்கையா//

அந்த நல்ல ASP கொல்கொத்தா கோகுல்..

அவரின் அணுகுமுறை.
போலீஸ் நிலையத்தின்
அட்டகாசங்கள், ஏமாற்று செயல்கள்
எல்லாம் பிரமாதம் ஐயா.

அந்த நல்லவர் வேம்பனுக்காக,
அவர் போலவே, ஊரில் ஏராளமாக கொத்தாளிகள்,
அவர் பின்னால் நிற்கும்
கொத்தாளி ஊர்.
கொத்தாளி சாமி.
போலீஸ் துறையிலும் கொத்தாளி.
என்ன இது ?

வேம்பனின் தாத்தா வெங்காளி, கொல்கொத்தாவிலிருந்து வந்த வங்காளி.
கொதுளி குப்தா சட்டர்ஜி

தாழ்ந்த சாதிப்பெண்ணை
தென்னிந்தியாவில் மணந்து, தனது வீட்டாரால் மறக்கப்பட்டவர்,

அவரது தந்தைதான் கோகுலுக்கு
படிக்க உதவியவர்.

வேம்பனின் தாத்தா.
கதையை எப்படி
முடிச்சுப் போட்டுப்
பின்னிப் பிணைத்திருக்கிறீர்கள்
முகம்மது யூசுப் சாரே.

இதனை கோகுலின்
கண்டுபிடிப்பு
அவரின் போலீஸ் மூளை மீட்டது.

வேம்பன் பற்றிய உண்மைகள்
வள்ளுவர் மூலம் கோகுலுக்கு…
, போலீஸ் கயவாளிக்கு பயந்து
பணியாற்றும் DSP.போலீஸ்
கொத்தாளி, நந்தினி.
கழுவடியான், இஸ்மாயில், ரஹ்மான், வழக்குரைஞர் கில்பர்ட், குறி சொல்லும் கொத்தாளி..கொத்தாளி பெயர்கள் ஒவ்வொன்றிலும்,

.அட்டைப்படத்தில் உள்ள கழுதை
ஊடுபாவாக நாவலுக்குள்
நடமாடுகிறது. ..
உள்ளே ஓரிரு அத்தியாயங்களில்
புதிரை வண்ணார் என்பவர்கள் தலித் மக்களுக்கும் கீழே என்பதையும்
அவர்களுக்கு துணி துவைப்பார்கள்
என்ற உண்மையையும்
காட்டுகிறது.

அமைதியான ஆசிரியர் கொத்தாளி வேம்பனை உருவாக்குவது நியாயம்தான்.

கதை களத்தின் கடைசி கட்டத்தில் முற்றுப்பெறுகையில்
உதவி காவல் ஆணையாளர்
திருமிகு கோகுல் அவர்கள்
மறைமுகமாக ஆசிரியர்
சொல்லாமலேயே
நாம் உணரும் விதமாக
கொத்தாளி ஆகியிருப்பது,
ஆக்கி இருப்பது
Mysterious Turning point

முடிவில் ASP கையால் கொத்தாளி வேம்பன் துப்பாக்கி பெறுவது marvelous..

வேம்பன் முகத்தை
காற்றின்
உதவியால்
கோகுல் பார்ப்பது
ஒரு திருப்பு முனை..
wonderful idea

வழக்கமாக ரஞ்சனி கோகுல்
காதலைத்தான் மக்கள்
எதிர்பார்ப்பார்கள்.

அப்படி இன்றி
, ஒரு போராளியின் கரத்தில்
துப்பாக்கியுடன் நாவல்
முடிவது பிரமாதம்.

இந்த கதை/நாவல்
அடித்தட்டு மக்களுக்குக்காக,
தலித் சமூகத்தினருக்காகவே…அவர்களின் பிரச்சினைகள், வாழ்நாள் போராட்டங்கள், அவமானங்கள், தொடர்பாகவே..மனத்தைக் கனக்க வைக்கும் பதிவுகள்

அவர்களை இந்த சமூகம்
மோசமாக நடத்துவதை
வெளிச்சம் போட்டுக்க்காட்ட
அவர்களின் வாழ்வாதார போராட்டத்தில் விளைந்த உண்மைக்கதை நாவல் இது.

இதில் முகம்மது யூசுப்
அவர்களின்
எழுத்து வன்மைதான்
வாசிப்பாளரை வசப்படுத்தி
கட்டிப் போடுகிறது.
வாழ்த்துகள் சார்.
நெஞ்சம் நிறைந்த
அன்பு தோய்ந்த வாழ்த்துக்கள்.

இன்னும் இது போல பல புத்தகங்கள் தாழ்த்தப்பட்ட மனிதம்களுக்காக எழுதுங்கள் நிறைய..

இருப்பினும் இந்த சமூகம் மாற 50 ஆண்டுகள் ஆகுமோ இன்னும் கூட அதிக ஆண்டுகள் ஆகலாம் என மனக்் கணக்கு இந்த சமூக நிலை எண்ணி/

நூலின் விவரம்:

நூல்: கொத்தாளி நாவல் (Kothaali Novel)
ஆசிரியர்: எழுத்தாளர் முகம்மது யூசுப் (Writer Mohammad Yousuf)
வெளியீடு: யாவரும் பப்ளிஷர்ஸ்
விலை: ரூ.290
புத்தகம் வாங்க: thamizhbooks.com

நூல் அறிமுகம் எழுதியவர்:

பேரா. சோ. மோகனா


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *