“காதல் சரி என்றால் சாதி தப்பு” வாசிப்பனுபவம்:
எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்கள் கல்லூரியில் பேராசிரியராக,பொறுப்பு முதல்வராக,முதல்வராக இருக்கும் போது அவருடைய கல்லூரி வாழ்விலும்,சமூகத்திலும் நடந்த நிகழ்வுகள் பற்றிய அவருடைய கருத்துக்களை கொண்ட கட்டுரைத் தொகுப்பு இது.இவை ஏற்கனவே வெவ்வேறு இணையதளங்களில் வெளிவந்தவை.
மொத்தம் 26 கட்டுரைகள்.
முதல் இரு கட்டுரைகளும் தமிழாசிரியர்கள் பற்றியவை.முன்பு தமிழாசிரியர்கள் மற்ற ஆசிரியர்களுக்கு இணையான நடத்தப்படாதது குறித்தும்,தமிழாசிரியர்களின் வரலாறு குறித்தும் பேசியிருக்கிறார்.
‘தமிழ்ச்சொல் நன்று’ என்கிற கட்டுரை,ஒரு கல்வி நிறுவனத்தில் படிப்பு முடிந்து வெளியில் செல்லும் மாணவனின் மாற்றுச் சான்றிதழில் அவனின் நடத்தை குறித்து எழுதப்படும் satisfied என்ற சொல் குறித்தும்,அதை மாற்றி தமிழ்ப்படுத்தி எழுதும்போது இருக்கும் மகிழ்ச்சி குறித்தும், தான் அப்படி செய்தது குறித்தும் இக்கட்டுரையில் விளக்கி இருக்கிறார். அதற்கு உதவி செய்த இளநிலை உதவியாளரின் நடத்தை பாராட்டுக்குரியது. அதேபோல கல்வி நிறுவனங்களில் மாற்றுச் சான்றிதழ் வாங்கும்போது ஏற்படும் பிரச்சனைகள் குறித்தும், அதை யோசித்து, எந்த ஒரு இடர்பாடும் மாணவர்களுக்கு ஏற்படாதவாறு அவர்கள் செய்த நடவடிக்கைகள் நம்மையும் அதேபோல் செயல்படத் தூண்டும்.
தொடர்ச்சியாக மாணவர் சமுதாயத்தில் நடக்கும் சாதிப்பிரச்சனை தொடர்பான சிக்கல்களுக்கான மூலத்தையும்,அதைத் தீர்க்க செய்ய வேண்டியவை குறித்தும் பேசுகிறது ‘ஆசிரியர்களின் ஆயுதம்’ என்கிற கட்டுரை.
//
சமூகத்தில் நிலவும் பாகுபாட்டின் எல்லாக் கூறுகளும் கல்வி நிறுவனங்களிலும் வெளிப்படுகின்றன.
//
உண்மையில் இந்த பிரச்சனை மாணவர்களை விடவும் ஆசிரியர்களிடமும்,படித்தவர்களிடமும் மிகத் தீவிரமாக இருப்பது உண்மையிலேயே வேதனைக்குரியது.
==========
இரண்டாயிரத்திற்கும் மேலே மாணவர்கள் படிக்கக்கூடிய ஒரு கல்வி நிறுவனத்தின் தலைவராக இருக்கக் கூடிய முதல்வருக்கு, நீதிமன்றத்தில் நடந்த நிகழ்வு குறித்து சொல்கிறது ‘வெறும் ஜடப்பொருள் தானா ? ‘ என்கிற கட்டுரை.
உண்மையில் அதிகாரம் பயன்படுத்த வேண்டிய விதத்தில் பயன்படுத்தப்படும் போது சமூகத்தில் விரும்பத்தக்க மாற்றங்கள் அநேக அளவில் நிகழும். ஆனால் அந்த அதிகாரம் மற்றவர்களை சிறுமைப்படுத்த பயன்படுத்தப்படும் போது நடப்பது குறித்து சொல்வதற்கு எதுவுமே இல்லை.இவையெல்லாம் நாம் இன்னும் சிறந்த நிலையை அடைவதை தடுக்கும் வேகத்தடைகள்.
=========
பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் மாணவர்களின் மாணவர்களுக்கு தரக்கூடிய இலவச பயண அட்டை குறித்த கட்டுரை கவனத்திற்குரிய ஒன்று.
உண்மையில் இக்கட்டுரையை சம்பந்தப்பட்ட துறைகளில் உள்ள அனைவரும் வாசிப்பது, மாணவர்களுக்கு ஏற்படுகிற இடர்பாடுகளை களையவும் ,அதற்கு பொறுப்பாக உள்ளவர்களுக்கு வேலையை எளிதாகவும் கண்டிப்பாக உதவும்.
ஆனால் ஒருவர் எழுதிய கட்டுரையை வைத்து மாற்றங்களை ஏற்படுத்தும் அளவிற்கு நம்முடைய அமைப்பு இருக்கிறதா? என்பது கேள்விக்குறியே.
//
சமூக நீதித் திட்டம் ஒன்றை ஊழலுக்கான ஓட்டைகளை அடைத்து நடைமுறைப்படுத்த முடியாதா?
ஒப்பந்த புள்ளி கூறாமல் கல்வி நிறுவன அளவிலேயே அட்டைகள் வழங்கி விடுவது எளிதானது;அடையாள அட்டையை போதுமானது. மிகச் சுவையில் தவிக்கும் அரசுக்கு சில பத்து கோடி ரூபாய்கள் என்றாலும் முக்கியம் தானே? அவை அரசியல்வாதிகள் விரும்புவார்களா ?அரசு அதிகாரிகள் ஏற்றுக் கொள்வார்களா? தன் பங்கு விட்டுக் கொடுப்பார்களா?
//
============
ஆசிரியர்கள் மாணவர்களும் நடந்து கொள்ள வேண்டிய முறைகள் குறித்தும் ஆசிரியர்களின் ஆசிரியர்கள் கையூட்டு பெறாதவர்களா? என்பது குறித்தும் இரு கட்டுரைகள் உள்ளன.
கல்வியை சரியான முறையில் உள்வாங்கி சமுதாயத்திற்கு பயன்படும் வகையில் படித்து வராதவர்கள் அதிகாரத்திற்கு வரும் பொழுது அங்கு என்ன நடக்கும் ?
அப்படியான அநேகம் பேர் நம்முடைய அரச அமைப்பில் இருக்கிறது காரணத்தினால் உரியவர்களுக்கு வேண்டிய விஷயங்கள் கிடைப்பதில் தேக்கம் ஏற்படுகிறது.அதை குறித்து சில கட்டுரைகள் இதில் பேசியிருக்கின்றன. அதாவது மாணவர்களுக்கு ஹாஸ்டல் வசதி,கல்லூரிக்கு தேவைப்படும் சீட்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துதல் இப்படியான சில விஷயங்கள் குறித்து அவை பேசுகின்றன.
பணி ஓய்வு பெறுகிற தருவாயில் மாணவர்களுடனான இவருடைய கலந்துரையாடல் குறித்த கட்டுரை நெகிழ்ச்சியான ஒன்று.
நம்மை நாம் சீர்படுத்திக்கொள்ள சில கருத்துகளை தெரியப்படுத்தும் இந்நூலை கண்டிப்பாக வாசிக்கலாம்.
=================
நூலின் விவரம்:
நூல் : காதல் சரி என்றால் சாதி தப்பு
ஆசிரியர் : பெருமாள் முருகன்
வகை : கட்டுரைத் தொகுப்பு
பக்கங்கள் : 157
வெளியீடு : காலச்சுவடு
கட்டுரையாளர்:
– R. ரமேஷ், பட்டுக்கோட்டை.
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

