நூல் அறிமுகம்: எழுத்தாளர் ராசி அழகப்பனின் “மேடை நாடகங்கள்” – சுப்ரபாரதிமணியன்

மேடை நாடகங்கள் : ராசி அழகப்பன்

சுப்ரபாரதிமணியன்

 

“ பள்ளி மாணவர்களுக்கு 5 நிமிட மேடை நாடகங்கள்” என்பது புத்தகத்தின் முழுத்தலைப்பாகும்.

இன்றையக்கல்வித்துறை  பலவகை நெருக்கடிகளால் நிறைந்திருக்கிறதுஆசிரியர்களுக்க்கும் இருக்கும் வேலைப்பளுவும் மன அழுத்தங்களும் அதிகம்முன்பெல்லாம் பள்ளிகளில் நடக்கும்  விழாக்களில் நாடகங்கள் ஒரு முக்கிய அம்சமாக இருக்கும். ஆசிரியர்கள் உருவாக்கும் நாடகங்களில் தனித்தன்மையும் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் செய்தி சொல்ல பல விசயங்கள் இருக்கும்.பல சமயங்களில் ஆசிரியர்கள் மாணவர்கள் இணைந்து நாடகங்களை உருக்குவர். இப்போதைய கல்விச்சூழலில் அது போல் மேடை நாடகங்கள் அவ்வளவாய் உருவாவதில்லை. புத்தகங்கள், பத்திரிக்கைகளில் வெளிவந்த மேடை நாடகங்களைப் பெரிதும் பயன்படுத்துகிறார்கள்.. அவ்வகையில் மேடை நாடகங்கள் : ராசி அழகப்பன்அவர்களின் இந்நூல் மாணவர்களுக்குப் பெரிதும் பயன்படக்கூடியது.

எளிமையான மொழியிலும் எளிமையான அரங்க அமைப்பிலும் உருவாகியுள்ளதுபொய் சொல்வது என்பது குடும்பச்சூழலில் நிகழும் மாற்றங்களை முதல் நாடகம் சொல்கிறதுஅதை  இன்னும் அழுத்தம் தராமல் நின்று விடுவது  சிறப்பல்ல பாட்டி வடைசுட்ட கதை புதிய கோணத்தில் உழைப்பின் பெருமையைச் சொன்னாலும் பிறருடய பிரதிகளாகவே அமைந்து விட்டது.இதில் நாடகத்தன்மையுடன் அமைந்துள்ளது.

 “ வாழ்ந்தால் மரம் போல் வாழ் வீழ்ந்தால் மழை போல் வீழ் “ என்ற வாசகம் ஒரு முழு நாடக அனுபவத்தை தருவது புது அனுபவம் மேடைக்கும் பார்வையாளர்களுக்கும்… பாரதி,  பாரதி தாசன்இளங்கோ கம்பன் சந்திப்பு உரையாடல் நாடகங்களில்  நவீன வாழ்வியல் சிக்கல்களும் விவாதிக்கப்பட்டிருப்பது நவீன நாடகங்கள் நிகழ்  காலத்தோடு ஒட்டி  எழுதப்படுவதின் சிறந்த உதாரணங்கள்.

 

அதுவும் இளங்கோவும் கம்பனும் தொலைக்காட்சி சந்திப்புக்காக உரையாடுவது நல்ல சர்ச்சையும் சுவாரஸ்யமும் கொண்டது. குமணனும் சேரலாதனும் மைக் வங்கிக் கொண்டு பேசுவது இன்னும் சுவாரஸ்யம்.. குழந்தைகள் பாராளுமன்றம் என்பது இன்றைக்க்குப்பல பள்ளிகளில் நடத்தப்படுவதுஅதில் உள்ள நிகழ்கால அரசியலால் அந்நாடகம் முக்கியத்துவம் பெறுகிறது

 

 எந்தையும் தாயும் என்ற நாடகம் பெற்றோர் ஆசைகள் திணிக்கப்படுவதால் குழந்தைகள் சிதைவுறுவது பற்றிய சிறந்த மையம் கொண்டது.. எமதர்மன் சித்ரகுப்தன் செய்யும் சேஷ்டைகள் குழந்தைகளுக்கு மகிழ்வு ஊட்டும், பெரியவர்களின் எண்ணங்களைத்திணிக்காமல் இயல்பான குழந்தைகளின் மன நிலையைப்பிரதிபலிப்பதால் இந்த மேடை நாடகங்கள்  பள்ளிகளில் மேடை ஏற்ற வெகு லகுவானவை. மாணவர்கள்  மற்றும் , மேடை இயல்பு கருதியே உருவாக்கப்படவை இந்நாடகங்கள்  என்பது சிறப்பு

(   ரூ 100, நிவேதிதா பதிப்பகம், சென்னை )