எழுத்தாளர் யெஸ். பாலபாரதிக்கு பால சாகித்ய புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. வானம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட ‘மரப்பாச்சி சொன்ன ரகசியம்’ என்ற நூலுக்காக விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
பால சாகித்ய புரஸ்கார் தாமிர விருதும், 50 ஆயிரம் ரொக்கம் பரிசு தொகை மற்றும் சான்றிதழ் எழுத்தாளர் யெஸ். பாலபாரதிக்கு வழங்கப்பட உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் சிறார் இலக்கியத்திற்காக ஒன்றிய அரசால் அளிக்கப்படும் சாகித்ய அகடாமி விருதுதான் பால சாகித்ய புரஸ்கார் விருது. இதில் 2020ம் ஆண்டுக்கான இந்த விருது தமிழ்மொழி பிரிவில் யெஸ். பாலபாரதிக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த விருது குறித்து, பேசிய எழுத்தாளர் எஸ். பாலபாரதி, “குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சுரண்டலை தடுப்பதற்காக நான் எழுதிய மரப்பாச்சி பொம்மை நூலுக்கு பால சாகித்ய புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டு இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. குழந்தை தன்னை சுற்றி நடக்கும் பாலியல் அத்துமீறல்களை கண்டு பயப்படாமல் அதை வெளியில் உடனே கத்தி சொல்ல வேண்டும் என்பதை மரப்பாச்சி பொம்மை சொல்லிக்கொடுக்கும்.
பாலியல் அத்துமீறல்களில் இருந்து தற்காத்து கொள்வதுடன், வெளியில் சொல்லி அவர்களை தண்டிக்க வைக்க முடியும் என்பதை மரப்பாச்சி பொம்மை நூலில் கூறியுள்ளேன். இந்த நூல் முதல் பதிப்பு விற்று தீர்ந்து மீண்டும் மறுமதிப்பு வெளியிடப்பட்டது. மரப்பாச்சி பொம்மை நூல் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டால் குழந்தைகளுக்கு எதிரான அநீதி தடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.
விருது பெற்ற எழுத்தாளர் யெஸ். பாலபாரதி அவர்களை, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், பதிப்பகத்தார்கள், சக எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர்கள் என பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.