ச.தமிழ்செல்வன் - பேசாம பேச்செல்லாம் | Writer Tamilselvan - Pesatha pechellam
தோழர் தமிழ்ச்செல்வனின் நூல்கள் எல்லாம் படிப்பதற்கு எளிமையானவை, ஆனால் கருத்துகள் வலிமையானவை. மென்மையாகத் தொடங்கும் வாசிப்பு நம்மை உள்ளே இழுத்துச் சென்று ,இழுத்துச் சென்று வெளியே செல்ல மனம் இல்லாமல் தத்தளிக்க வைக்கும்.
கிட்டத்தட்ட அவரின் வாழ்க்கை வரலாறு போலவே இருக்கக்கூடிய இந்தக்கட்டுரை நூல் அடர்த்தியானதும் ,அழகானதும் நேர்த்தியானது ஆகும்.
எத்தனை சந்திப்புகள், எத்தனை விதமான மனிதர்கள் எத்தனை விதமான நூல்கள் எத்தனை விதமான பயணங்கள் இப்படி ஒரு வாழ்க்கை அனைவருக்கும் அமைந்துவிட்டால் அதைவிட சிறப்பு வேறு என்ன வேண்டும்.
தான் சந்தித்த ,தான் சிந்தித்த தான் வாசித்த ,தான் பயணித்த அத்தனை விஷயங்களையும் பிறருக்கு அழகாக எடுத்துச் சொல்வதற்கு எழுத்து வன்மையை மிக முக்கியமானது ஒன்று. அது அவரிடம் கைகட்டி வேலை பார்க்கிறது என்று சொல்லலாம்.
பேச்சாளராக, எழுத்தாளராக ,தமிழ்நாடு முற்போக்குகலைஞர் சங்கத்தின் செயல்பாட்டாளராக பல்வேறு பணிகளில் தன்னை கரைத்துக் கொண்ட ஒரு மாமனிதனின் மிக நீண்ட பயணத்தின்
சில பக்கங்கள் இந்த புத்தகம் எனலாம்.
எதை எழுதினாலும், எதை பேசினாலும் முற்போக்கு தளத்தில் நின்று கொண்ட கொள்கை மாறாமல் எழுதுவது பேசுவது என்பது சாதாரணமானது அல்ல.
தன் பிறந்த மதம் கடந்து ,தான் பிறந்த சாதி கடந்து அனைத்தையும் ஒருங்கிணைக்க கூடிய நியாயம் அவரிடம் உண்டு .  வன்மைமிகு கருத்தாடலை சொல்லோவியமாக ஆக்கித் தருவது என்பது சமுதாயத்திற்கு நன்மை விளைவிக்கக்கூடிய கடப்பாடாக இவரின் எழுத்து அமைந்தமை  நற்பேறு எனலாம்.
கிராமம் ,நகரம் ,மாநகரம் என்று இந்த நூல் பல்வேறு அடுக்குகளில் பயணிக்கிறது. ச தமிழ்ச்செல்வனின் பால்யம் இளமை நடுவயது தற்போது உள்ள வயது என்ற ஒவ்வொரு வயதை க்கடக்கும் மேலும் அவர் பார்த்த பழகிய மனிதர்களின் ஊடாக சமூகத்தை சல்லடை போட்டு காட்டுவதில் அவரின் அக்கறை மேலோங்கி உள்ளது.
காதல் ,காமம் ,நேர்மை ,உண்மை ,உணர்ச்சி இரக்கம் உதவி செய்த சமமாக பாவித்தல் எல்லாவிதமான மனித பண்புகளும் எப்படி ஒரு மனிதம் இருக்க வேண்டும் என்பதை கதையின் ஊடாக, சம்பவங்களின் ஊடாக அவர் அன்பொழுக பாடம் நடத்தி காட்டி இருக்கிறார்.
சாத்தூர் ,கோவில்பட்டி ,பத்தமடை போன்ற ஊர்களைப் பற்றியும் வாழ மக்களை பற்றியும் எழுதியுள்ளார்.இந்தியாவின் வட மாநிலங்களில் அவர் ராணுவத்தில் பணியாற்றிய அங்குள்ள சம்பவங்களையும் இந்தியா பாகிஸ்தான் பிரிவினைகளில் 1947 இஸ்லாமியர்கள் உள்ளத்தில் ஏற்படுத்திய மன விகாரங்களையும், ஆழ்ந்த அறிவோடும் கூர்மையான சிந்தனையோடும் மனிதாபிமானமற்ற நிலையை அவர் பதிவு செய்திருப்பது கனமான பகுதி.
ஆன்மீகம் எது? நாத்திகம் எது? காந்தியம் எது ?மிகவும் கடினமான கொள்கை சார்ந்த உரைகளைக்கூட நகைச்சுவை கலந்து இந்த ப்புத்தகத்தில் எழுதி உள்ளார்.
சமயம் ,சமூகம் ,சாதி ,அரசியல் தனி மனித நிலைப்பாடு ஆண், பெண் பாகுபாடு அறிவியல் இயக்கம் சார்ந்த சிந்தனைகள் எனக்கு எந்த துறையை எடுத்துக் கொண்டாலும் அதில் எள்ளல் தொனியில் எழுதுவது என்பது அவ்வளவு எளிமையானது அல்ல.
அறிவியல் இயக்கம் சார்ந்து ஒரு நீண்ட நெடிய பயணம் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் சிறு சிறு கிராமங்களில் நிகழ்த்திய பல பேர்களில் தோழர் தமிழ்ச்செல்வனும்ஒருவர் .அந்த நிகழ்வுகளை பற்றி தனியாக ஒரு புத்தகம் எழுதி இருந்தாலும் இந்த நூலிலும் அத னுடைய செய்திகள் பலவற்றை நயத்துடன் சொல்லி இருக்கிறார் ‌
பள்ளிக்காலம் கல்லூரி காலம் ராணுவத்தில் அவர் பணியாற்றிய காலம் ஆகிய பகுதிகள் வரும் கட்டுரைகள் எல்லாம் சுவையின் உச்சம்.
எழுத்து நடையில் நிறைய இடங்களில் கவிதை தன்மையும் மிகுந்து இருக்கின்றன.
சாதிய சண்டை நடைபெற்ற 90களில் காலகட்டத்தை படிக்கின்ற பொழுது கோபம் ஏற்படுகிறது.
கவிதை என்ற பெயரில் எண்ணற்றவற்றை எழுதி குவித்து அவற்றை புத்தகமாக்க முடியாமல் எத்தனையோ மனிதர்கள் இவளை சந்தித்தது இவர் சொல்லுகின்ற விதத்தில் நகைச்சுவையும்  வருத்தமும் அளிக்கிறது .
காதல் பற்றி வருகின்ற கட்டுரையெல்லாம் கவிதை போலவே இருக்கிறது.
அம்மாவின்  மரணம் பற்றிய கட்டுரையில் அம்மாவின் நினைவுகளை அசைந்து அவர் சொல்லுகின்ற விதம் கண்ணீர் இல்லாமல் கடக்க முடியவில்லை.
திருநெல்வேலி பேருந்து மொட்டை மாடியில் ஒரு ரூபாய் கொடுத்த பாய் வாங்கி படுத்துக்கொண்டு அந்த பேருந்து வருணிக்கிற பொழுது நாமும் அங்கே படுக்ககூடிய நினைவு வருகிறது .
மஞ்சள் காமாலை நோய் விட்டு உணவு முறைகள் பற்றியும் ஆண்கள் சமைப்பது பற்றியும் வர்ணிக்கிறார்கள் அழகு சிறப்பு
இந்தியாவின் பல மாநிலங்களில் நடக்கும் பல அவலங்களை எடுத்துக்காட்டும் ரசனைமிகுந்த நூல் என்று சொன்னால் அனைவருக்கும் வாழ்த்துக்கள் தோழர்
நூலின் தகவல்கள் 
நூலாசிரியர் : ச.தமிழ்செல்வன்
பக்கம் 172
விலை : ரூ.170

நூலைப் பெற : 44 2433 2924

 

எழுதியவர் 

யாழ் ராகவன்

 இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *