#WritersGallery #KottaiKalim #MaarkkamaaPesaren #BookReview
முஸ்லிம் விரோதப் போக்கு இந்திய மண்ணிலும் முளை விட்டுள்ள சூழலை முஸ்லிம்கள் எப்படி எதிர்கொள்வது என்பதைச் சொல்கிறது இந்நூல். முஸ்லிம் வெறுப்பை ரத்தத்தில் ஏந்தியவர்கள் மட்டுமின்றி நட்புடன் அணுகும் தோழர்களும்கூட பிரச்சினைகளை முழுமையாகப் புரிந்து கொள்ளாமல் வறட்டு நாத்திகம் பேசிச் சீண்டுவது உட்பட நடைமுறைப் பிரச்சினைகளை எவ்வாறு எதிர்கொள்வது என்பதைப் பல எடுத்துக்காட்டுகளுடன் விளக்கும் நூல் இது.
இந்நூல் முஸ்லிம்களுக்கானது மட்டுமல்ல, எல்லாருக்குமானது. புதுவையை அடுத்த கோட்டக்குப்பத்தில் பிறந்த திரு. கலீம், சமூக செயற்பாட்டுக் களத்தில் முப்பதாண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றி வருபவர். சமூகவியல், சமயவியல், மானுடவியல் துறைகளில் ஆர்வம் மிகுந்த ஆய்வாளர். கட்டுரையாளர், கவிஞர். சமகாலப் பிரச்சினைகளை சமூக வரலாற்றுப் பின்னணியோடு முகநூலில் தொடர்ந்து எழுதிவரும் கலீமின் ஆக்கங்கள், திறந்த உரையாடலுக்கு வழி வகுப்பவை.
பல்வேறு சமூக-இலக்கிய அமைப்புகளில் பொறுப்பு வகித்து திறம்பட செயலாற்றிவரும் கலீம், நூற்றாண்டு பழமையான அஞ்சுமன் நூலகத்தின் செயலராக இருந்து, நூலகத்தையும் அதன் பணிகளையும் பல்வேறு தளங்களுக்குக் கொண்டு செல்கிறார். தான் பிறந்து வளர்ந்த ஊர் மக்களின் வரலாற்றை `கோட்டக்குப்பம் – பேர் பெற்ற ஊர்’ என்ற தலைப்பில் வெளிக் கொணர்ந்த கலீமின் இரண்டாவது நூல் இது. இயற்பெயர் : லியாகத் அலி. இவருக்கு மனைவி, ஒரு மகன், இரு மகள்கள் உள்ளனர்.
– கோட்டை கலீம்
நூலாசிரியர்.
நேர்காணல்:
வா. அசோக்சிங்
நாடகச்செயற்பாட்டாளர்.
LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
Follow Us on:-
Facebook: https://www.facebook.com/thamizhbooks/
Twitter: https://twitter.com/Bharathi_BFC
To Buy Otrai Siragu Oviya Tamil Book. Visit Us Below
To Get to know more about tamil Books, Visit us Below,
https://bookday.in
நினைத்த நூல்கள்… நினைத்த நேரத்தில்…
பெற 044 2433 2924
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.